இதயப் பூவும் இளமை வண்டும் – 90 (IDHAYAPOOVUM ILAMAIVANDUM 90)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    அடுத்த நாள்.. காலையில் சசி தூங்கி எழுந்தபோது.. இருமியவாறு சமையல் செய்து கொண்டிருந்தாள் குமுதா.
    காபிக்காக அவளிடம் போன சசி கேட்டான்.tamil kamakathaikal new 2015
    ”என்னாச்சு.. ஏன் இப்படி இருமிட்டிருக்க..?”

    ”தெரியலடா..” என இருமினாள் ”ஒரே இருமலா இருக்கு..?”

    Story : Mukilan

    ”காச்சலடிக்குதா என்ன..?”

    ”ம்கூம்.. அதெல்லாம் இல்ல. வெறும் இருமல்தான்.. சளி புடிச்சிருக்கும் போல..” என்று விட்டு காபி கலந்து கொடுத்தாள்.

    காபியை வாங்கி.. அங்கேயே சாய்ந்து நின்று.. உறிஞ்சினான்.

    குமுதா ”அப்றம்.. நேத்து சினிமால்லாம்.. எப்படி இருந்துச்சு..?” என லேசான இருமல் குரலில் கேட்டாள்.

    ”ம்..ம்ம்..! ஆமா.. என்ன..திடீர்னு கேக்ற..?”

    ”நேத்தே கேக்லாம்னு நெனச்சேன்.. உங்க மச்சான் இருந்தாரு.. அதான் கேக்கல..!”

    ”ஓ..!!”

    ”படம் நல்லாருந்துச்சா..?” அவனைப் பார்த்துச் சிரித்தவாறு கேட்டாள்.

    ”ம்..ஏதோ தேவலை..! பாக்கலாம்..!”

    ”அதவிடு.. தேட்டர்ல.. ஜாலியா இருந்துச்சா..?”

    ”ஏய்..!!” என்று சிரித்தான்.

    ”அவ எப்படி.. கம்பெனி குடுத்தாளா..?”

    ”ஏய்.. அடங்க மாட்ட.. நீ.?”

    இருமிக்கொண்டே சிரித்தாள்.
    ”ஏன்டா.. இதக்கூட கேக்கக்கூடாதா..?”

    ”போடீ..” என்றுவிட்டு காபியுடன் நடந்து சமையலறையை விட்டு வெளியேறி.. சோபாவுக்குப் போனான் சசி..!

    அப்பறம்.. அவன் குளிக்கும்முன்.. பிரஷ்ஷில் பேஸ்டைப் பிதுக்கிப் பல் தேய்த்தான் சசி.
    ஒரு குட்டி பிரஷ்ஷை பற்களிடையே வைத்து மென்றுகொண்டிருந்த மது..
    சசியின் கையைச் சுரண்டினாள்.

    குணிந்து பார்த்தான் சசி.
    ”என்னடா..?”

    வாயில் இருந்த பிரஷ்ஷை கையில் தூக்கிப் பிடித்துக் காட்டினாள்.
    ”இத்து.. என்ன..?”

    ”பிரஷ்டா குட்டி..” என்றான் ”பல் தேய்க்கறது..”

    ”ம்கூம்..” வேகமாகத் தலையாட்டினாள் ”வாயில வருதே அது..?”

    ”வாய்ல வருதா.. என்ன. .?” அவள் சிப்பி வாயைப் பார்த்தான்.

    ‘ஈ..’ எனப் பற்களைக் காண்பித்தாள். பின் எச்சிலை துப்பி ”இது..” என்றாள்.

    ”ஹா..” வெனச் சிரித்தான் ”எச்சி..”

    மறுபடி தலையாட்டினாள்
    ”ம்கூம்.. உன் வாயில பாரு..” அவனை நோக்கி கை நீட்டினாள்.

    ”என்னடா.. தங்கம்..?” எனக் கேட்டவாறு பார்த்தான் ”நொறையா..?”

    ”ம்..!!” என்று தலையாட்டினாள்.

    ”அட.. அறிவே..” எனச் சிரித்தான்.

    மறுபடி.. ”அது.. ஏ மாமா வருது..?” என்று கேட்டாள்.

    ”ம்.. வேலையில்லாம வருது.” என்றான்.

    விடாமல் ”ஏன் வருது.. சொல்லு..” என்றாள்.

    ”ஆ.. நம்மள தேய்க்கறது யாருனு பாக்க வருது..” என்று சிரித்தவாறு.. அவள் பாணியிலேயே சொன்னான் சசி.

    ”அப்பன்னா.. இது என்னை பாக்குமா..?” பிரஷ்ஷை திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

    ”பிரஷ் பாக்காதுடா மயிலு.. நொறைதான் பாக்கும்..” என்றான் சிரித்தவாறு.

    உடனே ‘தூ..!’ எனத் துப்பி விட்டாள் மது.
    பயந்து விட்டாளோ..?

    சசி குளித்து சாப்பிட்டுக் கிளம்பும்வரை.. குமுதா இருமிக்கொண்டேதான் இருந்தாள்.
    போகும் போது ”மாத்திரை ஏதாவது வேனுமா.?” என்று கேட்டான்.

    ”இல்ல.. நானே வாங்கிக்கறேன்.. போ..” என இருமிக் கொண்டே சொன்னாள்.

    ”மறக்காம வாங்கி.. சாப்பிடு..” என்று விட்டுப் போனான்..!!

    அன்று மதியம்.. சசி மதிய உணவிற்கு வீட்டிற்குப் போனபோது.. கட்டிலில் போர்த்திப் படுத்திருந்தாள் குமுதா.

    ”என்னாச்சு..?” அவள் அருகில் போய்க் கேட்டான்.

    ”காச்சால் வந்துருச்சு..” என்றாள்.

    கட்டிலில் உட்கார்ந்து.. அவளைத் தொட்டுப் பார்த்தான்.
    ”ஆமா.. சுடுது..! ஆஸ்பத்ரி போனியா..?”

    ”இல்ல.. மெடிக்கல்ல.. சொல்லி.. மாத்திரை வாங்கி சாப்பிட்டேன்..” இருமல் நிற்கவில்லை.

    ”சரி.. நீ எந்திரி.. ஆஸ்பத்ரி போலாம்..”

    ”மொதல்ல நீ போய் சாப்பிடு.. எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன்..”

    ”நீ சாப்பிட்டியா..?”

    ”ம்.. காலைல கொஞ்சம் சாப்பிட்டேன்.”

    ”சரி.. நீ எந்திரிச்சு பொறப்படு.. ஆஸ்பத்ரி கூட்டிட்டு போறேன்..” என்றுவிட்டு சாப்பிடப் போனான்.

    மது தூங்கிக்கொண்டிருந்தாள்.
    சசி சாப்பிட்டு முடித்தபோது குமுதா எழுந்து புடவை கட்டியிருந்தாள்.
    மதுவையும் எழுப்பி.. உடை மாற்றிவிட்டாள்.

    பைக்கில் உட்காரவைத்துக் கூட்டிப் போனான் சசி.

    டாக்டர் இருந்தார்..!!
    டாக்டர் மதிய உணவுக்குப் போகும் நேரம் என்பதால்.. கூட்டம் இல்லை.
    ஒரே ஒரு பெண் மட்டும் வெய்ட்டிங்கில் இருந்தாள்.
    குமுதாவும் உட்கார்ந்தாள.

    உள்ளிருந்து ஒரு குண்டான நர்ஸ் வெளியே வந்தாள்.
    யாருக்கு என்ன என விசாரித்தாள்.

    அந்த கிளினிக்கில் மூன்று நர்ஸ்கள் இருந்தனர். ஆனால் அதில் ஒருத்திகூட ரசிக்கும்படியாக இல்லை என நினைத்தான் சசி.

    அடுத்த பத்தாவது நிமிசம் உள்ளே போனாள் குமுதா.
    மதுவை வைத்தபடி சசி வெளியிலேயே நின்றுவிட்டான்.

    குமுதா மருந்து சீட்டுடன்.. தன் பின்பக்கத்தைத் தேய்த்துக் கொண்டே வந்தாள்.

    ”என்ன சொன்னாரு..?” சசி கேட்டான்.

    ”ஊசி போட்றுக்கு..” என மருந்து சீட்டை அவனிடம் கொடுத்தாள்.
    வெளியே வந்தார்கள்.
    முன்புறமே மெடிக்கல் இருந்தது.
    மருந்து.. மாத்திரைகள் வாங்கி வந்தான்.

    மறுபடி அவளை வீட்டில் கொண்டு போய் விட்டு..விட்டு கடைக்குப் போனான் சசி.
    குமுதாவின் கணவனிடம் விபரமாகச் சொன்னான்.

    ”காலைலயே சொல்லிட்டுதான் வந்தேன் அவகிட்ட.. முடியலேன்னா ஒரு போன் பண்ணுனு..” என குமுதாவின் கணவன் சொன்னான்.

    ”எதுக்கு தொந்தரவுனு நெனச்சிருப்பா..” என்றான் சசி..!!

    ராமுவின் கல்யாணம் முடிந்துவிட்டது..!
    சசி போகவும் இல்லை அதைப் பற்றி தெரிந்து கொளளவும் இல்லை..!

    ராமு கல்யாணம் முடிந்தபிறகு.. முதன்முறையாக சம்சுவைப் பார்த்தபோது கேட்டான்.
    ”கல்யாணத்துக்கு நீ ஏன்டா வரல..?”

    ”வரல..” என அலட்சியாகச் சொன்னான் சசி.

    ”நீ வரலேனு ரொம்ப பீல் பண்ணான். நீ வந்துருக்கலான்டா.. ஆனா ஒரு வாரமாவே செம ஜாலிதான்டா.. எந்த நேரம் பாரு சரக்குதான். நல்லா செலவு பண்ணான். தண்ணினால வீட்ல சண்டையே வந்துருச்சு..” என கூடவே நிறையக் கதைகளையும் சொன்னான்.

    அதிலெல்லாம் சசிக்கு சுத்தமாகவே ஆர்வம் இல்லை.
    ஆர்வமின்றியே இருந்தான்.
    பிறகு கேட்டான்.
    ”காத்து எப்படி இருக்கான்.?”

    ”ஆ.. நல்லாருக்கான்டா இப்பெல்லாம் ஆளே மாறிட்டான். பொண்டாட்டி முனனால அனியாயத்துக்கு நல்ல பையனா நடந்துக்கறான்னா பாரேன். அவனுக்கு இப்ப முன்னைக்கு இப்ப நல்லா ஒடம்பு வந்துருச்சுடா..”

    ”ஓ.. அவன நானும் இப்ப பாத்தே கொஞ்ச நாள் ஆச்சு..”

    ”கல்யாணத்துக்கு வந்துருக்கலான்டா நீ..”என மீண்டும் ஆரம்பித்தான் சம்சு ”அப்படி என்னதான்டா நடந்துச்சு..?”

    ”அத விட்றா..” என அலட்சியமாக ஒதுக்கினான் சசி.

    அவனையே உற்றுப் பார்த்தான் சம்சு
    ”நெஜமாவே புரியலடா எனக்கு.. இந்த அண்ணாச்சியம்மா மேட்டர்தான உங்களுக்குள்ள வந்த மனஸ்தாபம்..?”

    சட்டென..” சரி.. நா கெளம்பறன்டா..”என்றான் சசி.

    ”இருடா..!” எனத் தடுத்தான் சம்சு ”சரி பேசல விடு.. இன்னொரு மேட்டர் தெரியுமா உனக்கு..?”

    ”என்ன..?”

    ”மஞ்சு மேட்டர். .?”

    ”அவளே ஒரு மேட்டர்தான..?” என்றான் சசி.

    சிரித்தான் சம்சு ”ஆனா.. அவ கல்யாணம் பண்ணிட்டா..”

    திகைப்பானான் சசி.
    ”என்னடா சொல்ற.. மஞ்சு கல்யாணம் பண்ணிட்டாளா..?”

    ”அதும் லவ் மேரேஜ்..”

    ”யாரைடா..?”

    ”பையன் மார்க்கெட்ல காய்கறி கடை போட்றுக்கான். எத்தனை நாள் லவ்னு தெரியல.. ரெண்டு பேரும் எஸ்கேப்.. கல்யாணமும் முடிஞ்சுது..”

    ”எப்படா இது நடந்துச்சு..?”

    ”நாலு நாள் ஆச்சுடா..”

    ”பிரகாஷ் என்ன பண்ணான்..?”

    ”அவன் அதப்பத்தி கேர் பண்ணிக்கவே இல்ல. ஓடிப்போனது அவன் தங்கச்சி மாதிரியே அவன் நெனைக்கல.. வேற யாரோ மாதிரி விட்டுட்டான். பெரியவ இப்படி போனப்ப வேனா.. கொஞ்சம் பிரச்சினை பண்ணான்.! இவ விசயத்துல ஒன்னுமே கண்டுக்கல..”

    ”ஹா.. நல்ல அண்ணன்டா..”

    ”நாம ஏதாவது கேட்டாக்கூட தங்கச்சினு பாக்காம.. தேவடியா அவ.. இவனு.. பச்சை பச்சையா பேசறான்..”

    ”அதுசரி.. இப்ப எங்கருக்கா மஞ்சு..?”

    ”புருஷன் வீட்ல.. இதுலயும் ஒரு ஹைலைட் என்ன தெரியுமா..? அவன் மொதவே கல்யாணமானவன்..!”

    ”என்னடா சொல்ற..?”

    ”அவனுக்கு கல்யாணமாகி ரெண்டு கொழந்தை இருக்குடா..”

    ”அடப் பாவமே.. ஏனாடா இப்படி பண்ணா..? கல்யாணம் பண்றதுக்கு அவளுக்கு பசங்க யாருமே கெடைக்கலியா.?”

    ”அதெல்லாம் பேசி பிரயோஜனம் இல்லடா.. அவ விதி அப்படி..”

    ”அதுக்குனு இப்படியமாடா போய் விழுவா..?” என அங்கலாய்த்தான் சசி..!!

    காலையில் டிபன் சாப்பிடும்போது குமுதா கேட்டாள்.
    ”அப்பாவ நீ பாக்கறதே இல்லயாடா..?”

    ”ஏன்..?”

    ”உன்ன வரச்சொன்னாரு..”

    ”எதுக்கு..?”

    ”உனக்கு பைக் வாங்கி தரேன்னாரு..”

    ”பைக்கா…?”

    ”ம்..ம்ம்.!!” சிரித்தாள்.

    ”என்ன திடீர்னு..?”

    ”உன்ன லைப்ல செட்டில் பண்ணனும் இல்ல..?”

    ”புரியல..”

    ” உன்ன இப்படியே விட்ற முடியுமா.. உனக்கும் கல்யாணம் பண்ணனுமில்ல..? அதான்.. அதுக்கு மொத பைக் வாங்கி குடுத்துருலாம்னு சொல்றாரு..”

    ”ஓ..!!”

    ”இப்ப அப்பா வீட்லதான் இருக்காரு போய் பாரு..” என்றாள் குமுதா.

    டிபன் சாப்பிட்டபின்பு வெளியே கிளம்பினான் சசி.
    அவன் கதவுக்கு வெளியே போனபோது.. வெராண்டாவில் நின்று ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள் இருதயா.

    அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்
    ”குட் மார்னிங்..”

    ”குட் மார்னிங்..!!” என்றான் சசி ”என்னது புக்ஸ்..?”

    ”வீக்லி..” நேராக நின்றாள்.

    ”டிபன் சாப்பிட்டாச்சா..?”

    ”ம்..ம்ம்..! நீங்க..?”

    ”இப்பதான்..!!”

    ”கெளம்பிட்டிங்க..?”

    ”வீட்டுக்கு..”

    ”உங்க வீட்டுக்கா..?”

    ”ம்..ம்ம்..!”

    ”உங்க வீட்டெல்லாம் வந்து பாக்கனும்னு.. ரொம்ப ஆசை எனக்கு. .” என சிரித்தாள்.

    ”ஓ..! வாயேன்..!”

    ”எப்ப கூட்டிட்டு போறீங்க..?”

    ” இப்பக்கூட.. வாயேன்..!!” என அவன் சொல்ல..

    உடனே மறுத்தாள் ”இப்படியேவா..? நோ..!”

    ”ஹேய்.. ஏன்..? இதுலென்ன இருக்கு.. இப்படியே வாயேன்..!”

    ”போங்க.. நா குளிக்கக்கூட இல்ல.. இன்னொரு நாள்.. வரேன்.. ஓகேவா..? இப்ப வேண்டாம்.. ப்ளீஸ்..!!” எனக் கொஞ்சலாகச் சிரித்தாள்.

    ”ஓகே..! பை..!!”

    கையசைத்தாள் ”பை.. பை..!!”

    கீழே இறங்கிப் போய்.. அவன் சைக்கிளை எடுத்து அன்னாந்து பார்க்க…. மேலிருந்து அவனைப் பார்த்துச் சிரித்து மீண்டும் கையசைத்தாள் இருதயா….!!!!

    -வளரும்….!!!!

    இதயப் பூவும் இளமை வண்டும் – 90