இதயப் பூவும் இளமை வண்டும் – 102 (Idhayapoovum Ilamaivandum 102)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    tamil kama kathai new இரண்டாவது நாள்.. இரவில்..
    இருதயாவுடன் போனில் பேசும்போது சொன்னாள்.
    ”அப்பா ஒரு முடிவு பண்ணிட்டாரு ”

    ”என்ன..?”

    Story : Mukilan

    ”எங்கள மறுபடி ஊட்டிக்கே வந்துட சொல்லிட்டாரு. அவரால இனி தனியா இருக்க முடியாது. அம்மாவும் சரினு சொல்லிட்டாங்க..” அவள் சொன்னதைக் கேட்ட சசிக்கு திகைப்பாகத்தான் இருந்தது.

    ” ஏய்..என்ன சொல்ற.? ஏன்..?” திடுக்கிடலுடன் கேட்டான்.

    ” அப்பாக்கு அட்டாக் வந்ததால.. அவர நல்லா பாத்துக்க வேண்டியிருக்கு… என்னால எதுவும் பேச முடியாது..”

    ”அது சரி.. உன் படிப்பு..?”

    ”அதுக்கும் அப்பா ஏற்பாடு பண்ணிட்டாரு.. மறுபடி நான்.. ஊட்டிலயே ஜாயின் பண்றமாதிரி..”

    ”ஓ…” அவனுக்கு தொண்டைக்குள் எதுவோ அடைத்தது.

    ”ஸாரி… ஆனா என்னால.. உங்கள பாக்காம எப்படி இருக்க முடியும்னு தெரியல.. அத நெனச்சா… ரொம்ப கஷ்டமா இருக்கு..” வருந்தும் குரலில் பேசினாள் இருதயா.

    ”அப்ப… கன்பார்மா..?”

    ”ம்..ம்ம்..”

    ” வீடு… காலி பண்றது..?”

    ”பேசிட்டிருக்காங்க… ” என்றாள்.

    அடுத்தது மேலே என்ன பேசுவதென சிறிது நேரம் அவனுக்குப் புரியவில்லை.
    எதுவும் பேச முடியாத மனநிலையில் அமைதி காத்தான்.!

    இருதயாவும் அவனைப் போலவே சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு..
    ”அலோ…” என்றாள்.

    ”ம்.. ம்ம்.. சொல்லு..”

    ”ஏன்.. சைலண்டாகிட்டிங்க..?”

    ”ஸாரி.. ம்.. நீ வருவ இல்ல.. இங்க..?”

    ”ஏன்ப்பா.. இப்படி கேக்கறீங்க..?”

    ”உன்ன.. ரொம்ப மிஸ் பண்ணுவேன்…”

    ”நீங்க சொல்லிட்டிங்க… நான் டெய்லி அழறேன் தெரியுமா..? நேத்து நைட் பூரா தூங்கவே இல்ல.. எனக்கு.. என்னென்னமோ நெனைக்க தோணுது.. அழுகை அழுகையா வருது… ”

    ”ஏய்ய்… எதுக்கு அழற.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. என்ன ஆகிடப்போகுது.. நீ நல்லா படி.. நல்ல.. லைஃப்ல செட்டிலாகு. . ஓகே..?”

    ”ஏன்.. இப்படி பேசறீங்க.. ப்ளீஸ்.. நான் இங்க வந்தாலும்.. உங்களதான் லவ் பண்ணுவேன்.. ப்ராமிஸ்.. என் உயிர் இருக்கறவரை.. நீங்க மட்டும்….”

    ”ஹேய்.. ஹேய்.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. உன்ன எனக்கு தெரியாதா..? நீ சொல்லித்தான்.. நான் தெரிஞ்சுக்கனுமா..? ம்ம்..? டோண்ட் வொர்ரி… நல்லதே நினை.. நல்லதே நடக்கும்…” சசிக்கு இருதயாவைப் பற்றித் தெரியும். அவள் மீது சந்தேகமில்லை.
    ஆனால் அவனது விதிமேல்தான் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
    ‘ நடப்பது நடக்கட்டும் ‘ என மனதை தேற்றிக்கொண்டு மறுபக்கத்தில் அழுத.. இருதயாவுக்கு ஆறுதல் சொன்னான்.!

    அவளுடன் நீண்ட நேரம் பேசினான் சசி. அவளுடன் பேசி முடித்து.. அவன் காலை கட் செய்தபோது அவனது மனசு மிகவுமே கணத்துப்போயிருந்தது.

    காதல் என்கிற உணர்ச்சி ஏற்கனவே ஒரு முறை அவன் இதயத்தை உடைத்து எறிந்துவிட்டது.
    அவன் இதயத்தில் பட்ட அடியால்.. காதலைக் கண்டு மிரண்டு போயிருந்தான்..!
    அதனால்தான் இருதயா அவனை விரும்பியபோதும்.. அவன்.. அவளை விரும்பாமல் தவிர்த்து வந்தான்.!
    ஆனால் விதி அதிலேயும் அவனை சிக்க வைத்துவிட்டது.

    ஒரு இரவு.. ஒரு சம்பவம்.. ஓரு உடற்கலப்பு.. அவனை மீண்டும் காதல் என்கிற படுகுழிக்குள் தள்ளிவிட்டது.!
    இப்போது அந்த காதலுக்கும் வாழ்வில்லை போல் இருக்கிறது.

    அவன் ஆசைப்பட்ட காரணத்தாலோ என்னவோ.. இருதயாவும் இப்போது அவனைவிட்டு விலகிப்போகிறாள்..!

    இறுதியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தான் சசி.
    அது….
    ‘எங்கிருந்தாலும் வாழ்க…’

    தவிர்க்க முடியாமல்.. சாத்தப்படும் நேரத்தில் பாருக்குப் போனான் சசி..!
    அவனது மனதை சாந்தப்படுத்த அவனுக்கு போதை தேவைப்பட்டது..!!

    அடுத்த ஒருவார இடைவெளியில் இருதயா குடும்பத்தினருடன் வந்தாள்.!
    இரண்டு நாட்கள் அங்கு தங்கிவிட்டு.. மூன்றாவது நாள் வீட்டைக் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள்..!

    அவர்கள் போவதற்கு முதல்நாள் இரவு… இருதயா.. சசியிடம் முத்தம் கொடுத்து.. முத்தம் வாங்கினாள்.!
    ஆனால் அந்த முத்தம் சசியின் மனதில் சுத்தமாக ஒட்டவே இல்லை. !

    அதை ஒரு நட்பின் முத்தமாக எண்ணினானே தவிற காதலின் முத்தமாக அவனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை..!

    அவள் போகும்வரை.. அவளிடம் இயல்பாகத்தான் நடந்து கொண்டான் சசி.
    அவன் மனதில் இருக்கும் எதையும் அவளிடம் துளிகூட காண்பிக்கவில்லை..!

    அவள் கண்ணீருடன் விடைபெற்ற போது… சசி புன்னகையுடன் விடை கொடுத்தான்..!!

    ஊட்டி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்ததின் அடையாளமாக.. பவானி ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடியது.
    தண்ணீர் சுத்தமாக இல்லை. சேறு கலந்து செந்தண்ணியாக ஓடிக்கொண்டிருந்தது.!

    ஆனாலும் அதில் போய் முங்கி எழுந்து வந்தான் சசி.
    ஈரம் சொட்டச் சொட்ட மேடேறி வந்தான்.

    சரக்கு.. இத்யாதி சகிதமாக கரையில்.. புல் மேட்டில் உட்கார்ந்திருந்த தன் நண்பர்கள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.
    ” இன்னும் ஓபன் பண்லயா..?” சசி கேட்க…

    காத்து பாட்டிலைக் கையில் எடுத்தான். மேலேயும்.. கீழேயும் உள்ளங்கையில் வைத்துத் தட்டிவிட்டு பாட்டில் மூடியை திருகினான்.!
    ”எல்லாம் சரிதான்டா.. ஆனாஎதுக்கு இந்த பார்ட்டினு சொல்லவே இல்லையே..?”

    லேசான புன்னகையுடன்
    ”ஏன் சொல்லலேன்னா குடிக்க மாட்டிங்களோ..?” எனக் கேட்டான்.

    ”எவன் சொன்னான் அப்படி..?” என்ற பிரகாஷ்.. தன் உள்ளங்கையில் கஞ்சாவை வைத்து உருட்டிக் கொண்டிருந்தான்.
    அதை உருட்டி.. அடுத்தது ஒரு சிகரெட்டில் போட்டு அடைப்பான்.
    பிரான்டியும்.. கஞ்சாவும் கலந்து அடித்தபின் இந்த உலகத்தையே மறந்து விடுவான் பிரகாஷ்.

    சசிதான் இந்த பிளான் போட்டவன். இருதயா போனபின் அவனுக்கு மிகவும் மன உளைச்சலாகிவிட்டது.
    அதிலிருந்து அவன் வெளியே வரவிரும்பினான். அதற்கு போதைதான் அவனுக்கு உதவியாக இருந்தது.!

    சம்சு வேலை இருந்ததால் வரவில்லை. சசிக்கு அப்போதைக்கு கிடைத்தவர்கள் இவர்கள் இரண்டு பேர் மட்டும்தான். !

    வழக்கமாக பீர் குடிப்பவன் இப்போது பிரான்டி குடிக்க விரும்பினான்.

    மூடியைத் திறந்து ஒன் யூஸ் டம்ளரில் பிரான்டியை ஊற்றினான் காத்து.
    சோடா ஊற்றி கலந்து
    ”ம்.. எடுத்துக்கங்கடா..” என்றான்.

    ”சியர்ஸ்..”பண்ணி.. மூவரும் டம்ளரைக் காலி செய்தனர்.!

    சரக்கு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போக.. போதையில் மிதக்கத் தொடங்கினான் சசி..!
    அவன் மனதில் இருந்த பாரமங்கள் எல்லாம் அவனை விட்டு நீங்கிப் போய்விட்டது போல் இருந்தது. !

    அன்று மாலைவரை.. ஆற்றில் நீராடி.. ஆத்தங்கரையில் போதையில் மிதந்தார்கள்…!!

    சசி மிகவும் டல்லாக இருந்துகொண்டிருந்ததைப் பார்த்து குமுதா கேட்டாள்.
    ”என்னடா.. ரொம்ப டல்லாருக்க போலருக்கு..?”

    ”யாரு.. நானா..? இல்லயே..” என்றான்.

    ”டேய்…பொய் சொல்லாத..” என அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

    ”ஆமா.. அப்படியே.. உன்கிட்ட பொய் சொல்லி.. நான் பெரிய்ய்யயய….”

    சிரித்தாள்.
    ”இருதயா போனதுலருந்தே.. நீ நார்மலா இல்லயே..? உண்மையா இல்லையா..?”

    ”ஏய்.. பேசாம இருக்க மாட்ட நீ.. தேவையில்லாம சம்பந்தமில்லாத எதையாவது கேட்டுட்டு இருக்காத..”

    ”உங்களுக்குள்ள.. ஏதாவது.. இருந்துச்சாடா..?”

    ”ஏய்.. லூசு.. நீயா எதையாவது கற்பனை பண்ணிட்டு.. தத்து பித்துனு ஒளறாத..” எனச் சொன்னாலும்.. அவன் மனதுக்குள் அந்த வருத்தம் இருக்கவே செய்தது.

    ”என்னமோடா.. நான் நம்பல..” என்றவளின் மண்டையில் கொட்டினான் சசி.

    ”நீ நம்பலேன்னா பரவால்ல.. வாய மூடிட்டு இரு..!!”

    ”எது சொன்னாலும் என் வாய அடைக்கறதுலயே இருடா.. ஒன்னும் பேச விட்றாத..”

    ”இப்ப என்ன பேசனுங்கற..?”

    ”உனக்கு என்ன வயசு ஆசசு தெரியுமா இப்ப..?” என குமுதா கேட்க.. அவளை முறைத்தான் சசி.
    ஆனால் ஒன்றும் பேசவில்லை.

    ”சொல்லுடா ” என்றாள்.

    கடுப்பாகி ”ஏய்.. இந்த.. ஒனனுந்தெரியாதவாளட்ட கேக்காத.. இப்ப உன் பிரச்சினை என்ன..? அத சொல்லு..” என்றான்.

    அவனது கோபத்தை அவள் லட்சியம் பண்ணியதாகத் தெரியவில்லை.
    உதட்டில் தவழ்ந்த குறுஞ்சிரிப்புடன் சொன்னாள்.
    ”உன் செட்ல எல்லாருக்கும் கல்யாணமாகிருச்சு தெரியுமா..?”

    ”ஆ.. அப்படியா…?” என இழுத்தான்.

    ”காத்தும் பெத்துருவான் இன்னும் கொஞ்ச நாள்ள..”

    ”அவன் பெக்கறதுல்ல.. அவன் பொண்டாட்டி பெப்பா…”

    ”நெக்கலு..?”

    ”பின்ன.. நீ பேசறது மட்டும் என்னவாம்.. நான் என்ன உன் புருஷன்னு நெனச்சியா.. நீ எப்படி பேசினாலும் பொருமையா பதில் சொல்றதுக்கு..?”

    ”இப்ப அந்தாள ஏன்டா உள்ள இழுக்கற..?”

    ”எவன் எவனையோ நீ இழுக்கறது இல்ல..? இப்ப புரியுதா.. பொழுது போகாம பேசினா இப்படித்தான் வந்து சேரும்..”

    ”டேய்.. நான் ஒன்னும் பொழுது போகாம பேசல..”

    ”ஆ.. அப்படியா..?” என அவன் கிண்டலாகச் சிரித்தான்.

    அவன் தோளில் அடித்தாள்.
    ”எகத்தாளன்டா உனக்கு..”

    ”சரி.. அந்த முக்கியமான விசயத்த சொல்லு… பாக்கலாம்..”

    ”உனக்கு கல்யாணம் பண்ணனும்னு எண்ணமே இல்லையா..?”

    ”இல்ல.. போய் உன் வேலைய பாரு..”

    ”அதில்லடா.. பொண்ணு இப்பக்கூட ரெடியா இருக்கு.. நீ ஓகே சொன்னா போதும்.. நாளைக்கே போயிடலாம்..”

    ”எங்க போற..?”

    ”பொண்ணு பாக்க…! பொண்ணு யாரு தெரியுமா..? உங்க மச்சானோட ஒன்னுவிட்ட அக்கா பொண்ணு.. நானும் பாத்தேன். ஆள் சூப்பரா இருக்காடா.. வீடு.. வாசல்னு.. எல்லாம் நல்லா வசதியாத்தான் இருக்காங்க.. உனக்கு நல்லா ஜோடி பொருத்தமும் இருக்கும்..”என அவள் மூச்சுவிடாமல் சொல்ல…

    சிரித்தவாறு கேட்டான் சசி.
    ”அவ்வளவுதானா..?”

    ”வெளையாடாதடா.. கொஞ்சம் ஒழுக்கமா பதில் சொல்லு.. போய் பாக்கலாமா.?”

    ”ம்கூம்.. வேண்டாம்..”

    ”ஏன்டா…?”

    ”இப்ப வேண்டாம்..”

    ”அதான்.. ஏன்..?”

    ”விட்றுன்னா.. பேசாம விட்றேன்.. அத விட்டுட்டு.. ஏன் எதுக்குனுட்டு..” அவன் கோபப்பட…

    அவன் தோளில் கை வைத்து..
    ”அதுக்குத்தான் கேட்டேன்.. இருதயாள ஏதாவது..லவ் பண்றியா.. ஏதாவது பிளான்ல இருக்கியானு..? அப்படி இருந்தா ஆமானு சொல்லிரு.. அவ படிச்சு முடிக்கறவரை வெய்ட் பண்ணலாம்.. என்ன சொல்ற..?”

    ”ம்.. மூடிட்டு எந்திரிச்சு போ னு சொல்றேன்..!” என்றான் கடுப்புடன்.

    ஆனால் குமுதா அவ்வளவு சுலபத்தில் அவனை விட்டுவிடுபவளாக இல்லை.
    அவனை மேலும் கேள்விகள் கேட்டுக் குடைய…
    டென்ஷனாகி எழுந்து வெளியே போனான்.!

    உண்மையில் அவனுக்கே இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.
    இருதயாவுடனான அவன் காதல் எதுவரை நீடிக்கும்.. எவ்வளவு காலம் தொடரும் எனப் புரியாத நிலையில் அவன் எதையும் சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளத் தயாராக இல்லை. !

    ஆக மொத்தம்.. இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வராமல் இருப்பதே அவனுக்கு நல்லது என தீர்மானித்தான் சசி…..!!!!!!

    -வளரும். …….!!!!!!!

    Leave a Comment