“நீங்க போய் குளிச்சுட்டு ரெடியா இருங்க. நான் அம்மாவை கூட்டிட்டு வர்றேன்”
நான் பெட்ரூமுக்கு சென்றேன். அதிசயித்தேன். கட்டிலில் மெத்தை மேல் புதிய பட்டு விரிப்பு. அதன் மேல் கொள்ளை மல்லிகைப்பூ தூவப்பட்டு நிறைந்து இருந்தது. கட்டிலுக்கு மேலே இருந்தும் கொத்து கொத்தாய் மல்லிகைச்சரங்கள் தொங்கிக் கொண்டு இருந்தன. கீழே இருந்த சின்ன டேபிளில், ஒரு தட்டில் பழங்கள். இன்னொரு தட்டில் இனிப்பு வகைகள். வாழைப்பழத்தில் குத்தி வைக்கப் பட்டு இருந்த ஊதுவத்தி, அறையை மணங்கமழச் செய்தது. கட்டில் மேல் பட்டுச் சட்டையும், வேட்டியும் மடித்து வைக்கப் பட்டு இருந்தன.