“ஸாரிலாம் ஒன்னும் வேணாம்.. சாப்பிடலாம் வா..!! அவங்க காரணமே இல்லாம சண்டை போட்டாங்கன்னா.. அதுக்கெதுக்கு நீ வயித்தை காயப்போடுற..? ம்ம்..? இப்டி பட்டினி கெடந்தா.. உடம்பு என்னத்துக்கு ஆகும்..? படிக்கிற பையன் நீ..!! உடம்பு நல்லா இருந்தாத்தான.. ஒழுங்கா படிக்க முடியும்..? இனிமே சாப்பாட்டு விஷயத்துல பொய் சொல்லிட்டு.. பட்டினி கெடந்த.. எனக்கு கெட்ட கோபம் வரும் பாத்துக்கோ..!! புரிஞ்சதா..?” அவள் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
“ஓகே டீச்சர்.. இனிமே பொய் சொல்ல மாட்டேன்..!!”
“சரி வா.. கொஞ்ச நேரம் இப்படி உக்காரு.. நான் ஏதாவது பண்ணி எடுத்துட்டு வர்றேன்..!!”
நான் அங்கே கிடந்த சேர் ஒன்றில் அமர்ந்து கொண்டேன். டீச்சர் கிச்சனுக்குள் புகுந்துகொண்டாள். பத்தே நிமிடத்தில், ஒரு தட்டில் ஆவி பறக்க உணவுடன் வந்தாள். நான் அந்த ஒற்றை தட்டை பார்த்தவாறு, குழப்பமாக கேட்டேன்.
“நீ..நீங்க சாப்பிடலையா..?”
“நான் அப்போவே சாப்பிட்டேன்.. நீ சாப்பிடு..!! ம்ம்ம்..” சொல்லிக்கொண்டே தட்டை நீட்டினாள்.
நான் சாப்பிட ஆரம்பித்தேன். கொஞ்சமாய் ரவை, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு உப்புமாதான் கிண்டியிருந்தாள். அதை எதோ தேவாமிர்தம் மாதிரி நான் ரசித்து, ருசித்து சாப்பிட்டேன். டீச்சர் எனக்கு எதிரே அமர்ந்தவாறு, நான் சாப்பிடுவதையே கண்களை விரித்து, ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். நிறைய அன்பும், கொஞ்சம் கோபமும் கலந்த குரலில் கடிந்து கொண்டாள்.
“ம்ம்.. இவ்வளவு பசி இருந்திருக்கு..!! நீ என்னடான்னா.. சாப்பிட்டேன்னு பொய் சொல்ற..?”
சாப்பிட்டு முடிந்ததும், அவளே தட்டை எடுத்துக் கொண்டாள். வாஷ் பேசின் சென்று நான் கைகழுவ, அவள் தட்டை கழுவி வைத்தாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். என்ன சண்டை என்று விசாரித்து தெரிந்துகொண்டாள்.
டீச்சருடைய வீடு ரொம்பவே குட்டியான வீடு. ஒற்றை பெட்ரூம். ஹாலில் ஃபேன் கிடையாது. கொசு கடிக்கும். அதனால் அவளுடைய பெட்ரூமிலேயே என்னையும் படுத்துக் கொள்ள சொல்வாள். அவள் மேலே கட்டிலில் படுத்துக்கொள்ள, கட்டிலை ஒட்டி கீழே கிடக்கும் பாயில் நான் படுத்துக் கொள்வேன். எனக்காகவே வீட்டில் ஒரு நைட்லேம்ப் வாங்கி வைத்திருக்கிறாள். இப்போதும் அப்படித்தான். அவள் மேலே படுத்திருக்க, நான் கீழே பாயில், அந்த நைட் லேம்ப் வெளிச்சத்தில் புத்தகத்தை விரித்து வைத்திருந்தேன். படித்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து என் பார்வை எதேச்சையாக திரும்பியபோது, டீச்சர் கட்டில் விளிம்பில் படுத்துக் கொண்டு, என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. எனக்கு அது வித்தியாசமாக பட்டது. புன்னகைத்தவாறு கேட்டேன்.
“தூங்கலையா டீச்சர்..?”
“ம்ஹூம்.. தூக்கம் வரலை அசோக்..!!”
“நான் வேணா லைட்டை ஆஃப் பண்ணிறவா..?”
“ச்சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நீ படி..!! நான் சும்மா பாத்துக்கிட்டு இருக்குறேன்..!!”
“ஸாரி டீச்சர்.. தேவையில்லாம உங்களை டிஸ்டர்ப் பண்றேன்.. இல்லை..?”
“அசோக்..!!! அந்த மாதிரிலாம் பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..? ஒரு டிஸ்டர்பன்சும் இல்லை..!! உனக்கு எவ்வளவு நேரம் வேணும்னாலும் படி..!! டீச்சர் ஜஸ்ட் பாத்துக்கிட்டு இருக்குறேன்.. எனக்கு தூக்கம் வந்தா.. தூங்கிருவேன்.. போதுமா..?”
நான் கொஞ்சநேரம் அமைதியாக அவளுடைய முகத்தையே பார்த்தேன். அப்புறம் தலையை கவிழ்ந்து கொண்டு சீரியசாக படிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு ஒரு அரை மணிநேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் படித்திருப்பேன். புத்தகத்தை மூடிவிட்டு, பாயில் படுத்துக்கொண்டேன். நிமிர்ந்து பார்த்தால், டீச்சர் இன்னும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடல் கட்டிலில் படர்ந்திருக்க, முகம் மட்டும் தனியே வெளியே வந்து, என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.
“இன்னும் நீங்க தூங்கலையா டீச்சர்..?” என்றேன்.
“ம்ம்.. இப்போ லைட்டா வருது..!! நீ தூங்கு..!!”
“சரி டீச்சர்..!!”
“அசோக்..!!”
“ம்ம்..”
“நீ.. நீ ரொம்ப நல்ல பையன்டா..!!”
நான் டீச்சரை பார்த்து புன்னகைத்தேன். அவளும் அழகாக புன்னகைத்தாள். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. ஒருவர் முகத்தை அடுத்தவர் பார்த்துக்கொண்டே உறங்கிப் போனோம்.
அடுத்த நாள் வழக்கத்துக்கு சீக்கிரமாகவே எழுந்து கொண்டேன். டீச்சர் எனக்கும் முன்பாக எழுந்து, காபி போட்டு ரெடியாக வைத்திருந்தாள். அதை குடித்துவிட்டு, பேகை தோளில் மாட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினேன். என்னுடைய வீட்டுக்குள் நுழைந்தபோது, நேற்றைய கலவரத்திற்கான அறிகுறி எதுவும் இல்லாமல் வீடே அமைதியாக இருந்தது. அம்மா ஹாலில் அமர்ந்து ந்யூஸ் பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தாள். நான் அவளை கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைய முயல, அம்மா பின்னால் இருந்து கத்தினாள்.
“அசோக்..!! கொஞ்சம் நில்லுடா..!!”
“என்ன..?” நான் திரும்பி பார்த்து சற்றே எரிச்சலாக கேட்டேன்.
“நைட்லாம்.. எங்க போய் ஊர் சுத்திட்டு வர்ற..?”
“ஊர்லாம் சுத்தலை.. டீச்சர் வீட்டுக்கு போயிருந்தேன்..!!”
“ஓ..!! அந்த ஜெனிஃபர் வீட்டுக்கா..?” அம்மாவின் குரலில் இப்போது ஒரு ஏளனம் வழிந்தது.
“ஆமாம்..!!”
“ஏண்டா.. கடல் மாதிரி நமக்கு இவ்வளவு பெரிய வீடு இருக்குது.. அதை விட்டுட்டு அந்த ஓட்டு குடிசைல போய் படுத்துட்டு வந்திருக்கியே..? உனக்கு வெக்கமா இல்ல..?” அவள் எகத்தாளமாக கேட்க,
“ஆமாம்.. நம்ம வீடு கடல் மாதிரிதான் இருக்கு.. ஆனா சந்தோஷந்தான் கடுகு மாதிரி கூட கிடையாது..!!” நானும் காட்டமாகவே பதில் சொன்னேன்.
“ஓ…ஹோ…!! அவ வீட்லதான் உனக்கு சந்தோஷம் கெடைக்குதா..?”
“ஆமாம்..!!” நான் அழுத்தமாக சொன்னேன்.
“அந்த ஜெனிஃபர்.. இப்போ டீச்சர் வேலையை விட்டுட்டு.. அடுத்தவங்களுக்கு சந்தோஷம் கொடுக்குற வேலையை ஆரம்பிச்சுட்டாளா..?”
அம்மாவின் குத்தலான இரட்டை அர்த்த பேச்சு என் மூளையில் சுரீர்ர்ர் என்று உறைத்தது. இன்ஸ்டன்டாய் ஒரு கோபம் எனக்குள் கொப்பளிக்க ஆரம்பித்தது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அம்மாவிடம் சொன்னேன்.
“அம்மா.. அப்டிலாம் பேசாத.. அவங்க ரொம்ப நல்லவங்க..!!”
“என்னடா.. அவளை சொன்னா உனக்கு கோவம் பொத்துக்கிட்டு வருது..? அப்டி என்ன சொக்குப்பொடி போட்டு உன்னை மயக்குனா..? ம்ம்ம்..?”
“அம்மா.. ப்ளீஸ்மா..!!”
“சொல்லுடா..!! எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்.. எதைக்காட்டி எம்புள்ளையை அவ சந்தோஷப்படுத்தினான்னு.. எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்.. சொல்லு..!!”
அம்மா விகாரமாக முகத்தை வைத்துக் கொண்டு, கண்களை உருட்டிக் கேட்டாள். அவள் வாயில் இருந்து விழுந்த விஷ வார்த்தைகளில் நான் உஷ்ணமானேன். ஆத்திரத்துடன் ஒற்றை விரலை நீட்டி, அம்மாவை எச்சரித்தேன்.
“போதும்மா.. இத்தோட நிறுத்திக்கோ.. இதுதான் உன் லிமிட்..!! இதுக்கு மேல டீச்சரை பத்தி தப்பா பேசுன..?”
நான் என் அம்மா முன்பு அந்த அளவுக்கு குரலை உயர்த்தி பேசியதே கிடையாது. டீச்சரை பற்றி அவள் தப்பாக பேச, எங்கிருந்துதான் வந்தது என்று தெரியாமலே அப்படி ஒரு துணிச்சல் எனக்குள் வந்திருந்தது. அம்மாவும் அதை பார்த்து அதிர்ந்து போயிருந்தாள். ஆனால் கொஞ்சம் கூட அறிவில்லாமல், தன் வக்கிரப் பேச்சை தொடர்ந்தாள்.
“என்னடா.. அம்மா முன்னாடி கையை நீட்டி பேசுற..? அந்த அளவுக்கு உனக்கு திமிராயிடுச்சா..? அவதான் எல்லாம் தூண்டி விடுறாளா..? காசுக்காக கண்டவன்கிட்டலாம் பல்லை காட்ற சிறுக்கி.. அவளுக்காக பெத்த அம்மாவையே எதுத்து பேச துணிஞ்சிட்டியா..?”
“அம்மா.. போதும்…!!”
“என்னடா போதும்..? அப்டித்தாண்டா பேசுவேன்..!! அவ காசுக்காக பல்லை மட்டுந்தான் காட்றாளோ.. இல்லை.. வேற என்னல்லாம் காட்றாளோ..?”
அவ்வளவுதான்..!! என்னால் அதற்குமேலும் பொங்கிவந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘போளேர்ர்ர்…’ என்று அம்மாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். அவள் பொறி கலங்கிப் போனாள். அடிவிழுந்த கன்னத்தை அழுத்தி பிடித்தவாறு, என்னையே அதிர்ச்சியாய் பார்த்தாள். நான் அம்மாவை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்து, அவளை எச்சரிக்கும் குரலில் சொன்னேன்.
“உன் அசிங்கம் புடிச்ச பேச்செல்லாம்.. அப்பாவோட வச்சிக்கோ..!! இனிமே டீச்சரை பத்தி தப்பா பேசுன.. பெத்த அம்மான்னு கூட பாக்க மாட்டேன்.. கழுத்தை நெறிச்சு கொன்னுருவேன்..!!”
சொல்லிவிட்டு நான் திரும்பி, விடுவிடுவென உள்ளே நடந்தேன். அம்மா மீது கோபம், மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ச்சே..!! எப்படியெல்லாம் வக்கிரமாக பேசுகிறாள்..? இவளும் ஒரு பொம்பளைதானே..? இன்னொரு பெண்ணை பற்றி தப்பாக பேச எப்படித்தான் இவளுக்கு நாக்கு வளைகிறதோ..?
அப்புறம் நான் அவசரமாக குளித்து ஸ்கூல் கிளம்பினேன். ஹாலை கடந்தபோது, அம்மா இன்னும் பிரம்மை பிடித்தவள் மாதிரி அமர்ந்திருந்ததை பார்த்தேன். அவள் மேல எனக்கு இரக்கம் வரவில்லை. அந்த மாதிரி அறை அவளுக்கு தேவைதான் என்று தோன்றியது. அப்பா இந்த மாதிரி நாலு அறை விட்டிருந்தால், அம்மா எப்போதோ திருந்தியிருப்பாள் என்று தோன்றியது. ஆனால், அவள் எந்த காலத்திலும் திருந்தாத ஒரு ஜென்மம் என்று, அன்றே எனக்கு காட்டிவிட்டாள்.
அன்று பிற்பகல் பதினோரு மணி இருக்கும். நான் வாலிபால் கிரவுண்டில் இருந்தேன். பாலை எடுத்துக் கொண்டு சர்வீஸ் போடுவதற்காக கார்னர் சென்ற நான், தூரத்தில் முரளி ஓடிவருவதை பார்த்தேன். முரளி என்னுடைய க்ளாஸ்மேட். அவன் என்னை நோக்கித்தான் வருவது மாதிரி தெரிய, சர்வீஸ் போடாமல் அவனையே குழப்பமாக பார்த்தபடி நின்றிருந்தேன். அவன் மூச்சிரைக்க என் முன்னால் வந்து நின்றபடி சொன்னான்.
“அசோக்.. உன் அம்மா அங்க வந்து பிரச்னை பண்ணிட்டு இருக்காங்கடா..!!”
“எ..என்னடா சொல்ற..? எங்க..?”
“ஸ்டாஃப் ரூம் முன்னால.. ஜெனிஃபர் டீச்சரை.. அசிங்க அசிங்கமா திட்டிட்டு இருக்காங்க..!!”
எனக்குள் உடனே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. வாலிபாலை தூக்கி எறிந்துவிட்டு, ஸ்டாஃப் ரூம் நோக்கி ஓடினேன். முரளி என் பின்னால் ஓடிவந்தான். ஸ்டாஃப் ரூம் முன்னால் ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. கூட்டத்தை விலக்கிக்கொண்டு நான் உள்ளே நுழைய நுழைய, அம்மாவின் அசிங்கம் பிடித்த பேச்சு, காற்றில் நாராசமாக ஒலித்தது. ஜெனிஃபர் டீச்சர் அவமானத்தில் கூனிக்குறுகிப் போய் நின்றிருக்க, அவள் மீது அமிலத்தில் தோய்த்த வார்த்தைகளை, அம்மா அள்ளி வீசிக் கொண்டிருந்தாள்.
“அரிப்பெடுத்த சிறுக்கி..!! உனக்கு கூடப் படுத்துக்க ஆள் வேணும்னா.. தெருவுல போற எவனையாவது கூப்பிட்டு படுத்துக்க வேண்டியதுதானடி..? உன் அரிப்புக்கு எம்புள்ளைதான் கெடைச்சானா..? வசதியான வீட்டுப் பையன்.. வளைச்சுப் போட்டுக்கலாம்னு பாக்குறியா..?”
“உங்களை கையெடுத்து கும்பிடுறேங்க.. தயவு செஞ்சு அப்டிலாம் பேசாதீங்க.. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை..!!” டீச்சர் கண்ணீருடன் அம்மாவை கையெடுத்து கும்பிட்டாள்.
– தொடரும்
ஜெனிஃபர் பாவம்