This story is part of the வன்மம் series
இவ்வுலகை படைத்தது நாம் நிம்மதியாக வாழ்வதற்க்காக அல்ல. நம்மை துன்புறுத்தி அதில் மகிழ்வுறும் மானங்கெட்டவன் தான் அந்த . ஒரு Sadist. மற்றவர் துன்பத்தில் துவழும் போதும் மேலும் துன்பத்தை தூக்கித்தருபவன் தான் இந்த இரக்கமில்லாத .
நல்லவன் என்ற போர்வையில் நம்மை இந்த நரகத்தில் நசுக்கிக்கொண்டிருக்கின்றான். கொடியவன், சாத்தான் இறைவனை காட்டிலும் மேன்மையுடவன். இந்த நரகத்தில் வாழ மிருகமானால் தான் முடியும் என்பதை நிமிடத்திற்க்கு ஒரு முறை நினைவூட்டபவனே சாத்தான்.
இந்த மானங்கெட்ட மனிதக்கூட்டம் தித்திக்கும் விஷம் கலந்த இனிப்பையே விரும்பும். கசப்பான மருந்து என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.
தித்திக்கும் விஷம், அரக்கன் கசப்பான மருந்து. இந்த உலகத்தில் பேரழிவு நடத்தி பேரானந்தம் அடைபவன் தான். இருள் என்பது நிஜம் வெளிச்சம் என்பது ஒரு மாயை. இந்த பிரபஞ்சம் முழுவதும் இருளால் சூழப்பட்டது தான். இந்த பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்ட அனாதை ஆன்மாக்கள் தான் நாம். இந்த அர்த்தமற்ற வாழ்விற்க்கு அர்த்தம் தேடி அலையும் அனாதைக்கூட்டம் தான் இந்த மனித இனம்.
சுற்றிலும் இருள் சூழ்ந்த வானம். இருள் வானை இருள் மேகங்கள் அடைத்து கரிய இருளாக காட்சியளிக்கின்றது. வெளிச்சம் என்ற சொல்லுக்கு கூட இடமில்லை. கண்ணை மூடினால் கூட இப்படி ஒரு இருளை பார்க்கமுடியாது. கடவுளின் மனம் இப்படித்தான் இருக்கும் போல. திடீரென்று ஒரு தீப்பொறி மட்டும் தெரிகிறது. இது ஏதோ லைட்டரில் இருந்து வருகிறது.
அந்த சிறிய வெளிச்சம் ஒரு ஆணின் முகத்தை ஒரு நிமிடம் பிரதிபலித்தது. பாக்ஸ் கட்டிங் வெட்டப்பட்ட ஹேர் கட். சற்று ஒட்டிய கன்னங்கள். சாத்தானிடம் சரணடைந்த சிவந்த கண்கள். உணர்ச்சியற்ற முகம். அவன் மாநிற உடலுக்கும் அவன் கரிய உதடுகளுக்கும் சம்பந்தமே இல்லை. ஆயினும்,பார்ப்பதற்கு சற்று வசீகரமாகவே இருந்தது அந்த முகம். வாயில் கஞ்சா சுற்றி வைக்கப்பட்ட RAW OCB. அது மிகவும் தடிமனாகவும், சற்று வழக்கத்தை விட பெரிய சிகரெட் போன்றும் காட்சி அளித்தது.
மெதுவாக மீண்டும் தனது கேஸ் லைட்டரில் நெருப்பை பற்ற வைத்தான். அதில் அவனது அழகிய அரக்க முகம் நன்றாக காட்சியளித்தது. அந்த கஞ்சா சுருளில் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது. நெருப்பு லவகமாக பற்றிக்கொண்டது. கஞ்சாவின் மீது நெருப்பிற்க்கு அவ்வளவு காதல் போல. தனது கரிய இதழ்களால் மெல்ல அந்த கஞ்சா சுருளை மெல்ல ஒரு இழு இழுத்தான்.
டெட்ரோஹைட்ரோகேனாபினாய்ட்ஸ் மற்றும் நிக்கோட்டின் இரண்டும் சம அளவு கலந்த புகை அவன் நுரையீரல்களுக்குள் புகுந்தது. அவனது மூளையின் நியூரான்களை சற்று சாந்தப்படுத்தியது. அந்த நியூரான் அவனுக்கு எதையோ நியாபகப்படுத்தியது.
வேகமாக தனது கரிய இதழ்கள் கொண்ட வாயை ஹாஆஆ…. என்று மெல்ல திறந்தான். 10 சிகரெட்டை ஒரே நேரத்தில் புதைத்தார் போல் அவன் வாயிலிருந்து புகை கிளம்பியது. அவன் மூளையின் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களில் வழியாக தகவல் எல்க்ட்ரான் மூலமாக ஒவ்வொரு நியூரான் செல்லுக்கும் கடத்தப்படும் வேலையில். என்றோ நடந்த ஒரு சமபவத்தை திடீரென்று அவனுடைய நியூரான் செல் ஒன்று அவனுக்கு நினைவூட்டியது.
ஹா… ஹா…. ஹா…. என்று அரக்கன் போல தன்னந்தனியாக சிரித்துக் கொண்டிருந்தான். உணர்வுகளளல்வாத ஒரு சிரிப்பு.மீண்டும் ஒரு முறை அந்த கஞ்சா சுருளை வாயில் வைத்து ஒரு இழு இழுத்து விட்டு சுற்றும் முற்றும் தனது சிவந்த விழிகளால் பார்த்தான்.
அவன் மேலே தனது வாடிய இலைகளை பொழிந்து கொண்டிருந்தது வாடிப்போன வேப்பமரம் மரம். பராமரிப்பிற்க்கு ஆள்இல்லாமல் வாடிப்போய் தனியாக தனது வாழ்க்கை வெறுத்தது போல் நின்று கொண்டிருந்தது. சுற்றிலும் புற்கள் ஆனால் அதன்மேல் பிளாஸ்டிக் திண்பண்டங்களின் கவர்கள். வண்ண வண்ண சாராய பாட்டில்கள்.
கிங் ஃபிஷ்ஷர் பீர் பாட்டில் சிவப்பு நிற லேபில் உடன் அதிலே அழகிய மீன்கொத்தி பறவையின் முகம். அதனருகே பக்கார்டி குவாட்டர் பாட்டில் மஞ்சள் நிற மூடியுடன் சரியாக மூடப்படாமல் காலியாக கிடந்தது.
அதனருகே ஓல்ட் மாங்க் பாட்டில் மிகச்சிறிதாக இருந்தாலும் பார்க்க பாம்பின் தோல் போர்த்தப்பட்டிருப்பது போலிருந்தது. விலைஅதிகமாகான வகைகள் தான் அவன் சிவந்த கண்களுக்கு பார்ப்பதற்க்கு ஏதுவாக தெரிந்தது. விலை மலிவாக மானிட்டர் மற்றும் Xo, Royal palace போன்ற வகை பாட்டில்கள் அவனுக்கு எந்த ஒரு ஈர்ப்பையும் தரவில்லை ஒரு வித சலிப்பையே ஏற்படுத்தின.
சில பாட்டில்கள் ஒடைக்கபட்டு கண்ணாடி சில்லுகள் மட்டும் தெரிந்தது. குர்க்குரே, லேஸ், ஊறுகாய், மிக்சர் கவர்கள் என்று குடித்து விட்டு அப்படியே போட்டு சென்ற பல திண்டபண்டங்களின் கவர்கள். ஆங்காங்கே மாட்டுச்சாணங்கள். இடமே பார்ப்பதற்க்கு சற்று அறுவறுப்பாக இருந்தது. அவன் அந்த வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்தான். அவனது வெள்ளையும் நீலமும் கலந்த Flip flop செருப்புகளை ஒரு துண்டு போல் போட்டு அதன் மீது அமர்ந்திருந்தான்.
அவனது இடது பக்கத்தில் ஒரு லிட்டர் பிஸ்லெரி வாட்டர் பாட்டில் இருந்தது. தனது ஜீன்ஸ் அரக்கால் ட்ரவுசர் பாக்கெட்டிற்க்குள் கைவிட்டான். அதிலிருந்து ஒரு மாத்திரை அட்டையை வெளியே எடுத்தான். அதில் நீல நிறத்தில் ஒரு கண்ணின் படம் தெளிவாக சிறிதாக பொரிக்கப்பட்டிருந்தது. அவ்விரிட்டிலும் அவனது சிவந்த விழிகளுக்கு அந்த படம் தெளிவாக தெரிந்ததில் ஆச்சரியம் இல்லை.
அந்த மாத்திரை அட்டையில் கண்ணின் மேல் புருவம் படம் தெளிவாக இருந்தது. நைட்ரோவெட் 10 எம்ஜி என்று பெயர் கருப்பு நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. Don’t consume without doctors prescription என்று அபாயகரமான சிவப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.
அந்த டோன்ட் என்ற வார்த்தை பொறிக்கப்ட்டிருந்த அடியில் இருந்த மாத்திரையை தனது வலது கை ஆள்காட்டி விரலால் கீழிருந்து மேலே அமுக்கினான். அது டோன்ட் என்ற வார்த்தை இருந்த மெல்லிய அலுமினியத்தை கிழித்துக்கொண்டு வெளியே வந்தது. அதில் மொத்தம் பத்து மாத்திரைகள் இருந்தது. அதில் ஒன்றை எடுத்தவுடன் அதன் எண்ணிக்கை ஒன்பதானது.
அந்த மாத்திரை அட்டையை தனது வலப்பக்க ஜீன்ஸ் ட்ரவுசர் பாக்கெட்டினுள் வைத்தான். வாயில் இருந்த கஞ்சா சுருளை ஒரு இழு இழுத்தான். மீண்டும் ஹாஆஆ… என்று தனது கரிய இதழ்களை மெல்ல விரித்தான். புகை வானை நோக்கி சென்றது அப்படியே மெதுவாக தனது தூங்கி எழுந்த அதிரும் கட்டை குரலால் “ஓம் நமச்சிவாய”… என்று கூறினான்.
மெதுவாக தனது இடது கையில் நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் அந்த கஞ்சா சுருள் கச்சிதமாக பொருந்திக்கொண்டது. தனது வலக்கையில் வைத்திருந்த அந்த மாத்திரையை அப்படியே தனது வரண்டு கடந்த வாயில் போட்டான். அந்த பிஸ்லெரி வாட்டர் கேனின் மூடி ஏற்கனவே திறக்கப்பட்டிருந்ததால் சிரமம் இல்லாமல் சுலபமாக அந்த பாட்டிலின் மூடியை திறந்து அப்படியே மெல்ல தனது வரண்டு கிடந்த நாக்கிற்க்கு தண்ணீர் பாய்ச்சினான்.
அந்த தண்ணீர் அவன் நாக்கில் இருந்த வட்ட வடிவ வெள்ளை மாத்திரையையும் அவன் உடலுக்குள் அடித்து சென்றது. மெதுவாக எச்சிலை வெளியே துப்பினான். இப்பொழுது அவன் நாக்கு சற்று ஈரப்பதம் பெற்று விட்டது என்பதை உறுதிசெய்தான்.
அப்பொழுது திடீரென்று
பொங்கும் புகையிலே
சொர்க்கம் மதியிலே…
பொங்கும் புகையிலே
சொர்க்கம் மதியிலே…
ஒரு பக்கம் உதடு
மறுபக்கம் நெருப்பு
சொர்க்கம் நடுவினிலே…
என்ற பாடல் அவனது ஓப்போ எஃப் 11 ப்ரோ செல்போனில் ஒளிக்கத்தொடங்கியது. அவன் தனது வலது பக்கத்தில் பார்த்தான் சிவப்பு நிற குர்க்குரே பாக்கெட்டின் மீதிருந்த அவனது செல்போனில் ஒலித்தது. அதனுடன் சேர்த்து அந்த ஸ்மார்ட்போனின் ஃப்ளாஷ் லைட்டும் ஒளித்தது. அந்த மின்னும் ஒளியில் அந்த செல்போனின் பேக் கவர் நன்றாக தெரிந்தது. அதில் அமைதிக்கான குறியீடு காணப்பட்டது அதனை பீஸ் என்று சொல்லுவார்கள்.
பச்சை,மஞ்சள்,சிவப்பு என்ற மூன்று வர்ணங்களாலும் அந்த பீஸ் சிம்பிள் மின்னியது அதனிடையே கஞ்சா இலைகளும் அழகாக அமைந்திருந்தது. அவனது காலர் டோன் தான் அது என்பதையும் மறந்து அந்த பாட்டின் இன்னிசையிலும், போதையின் மயக்கத்திலும் தன்னிலை மறந்து அப்பாடலை ரசிக்க ஆரம்பித்தான்.
தனது தலையை மெல்ல மெல்ல அப்பாடலுக்கு ஏற்றார் போல் அசைத்து கொண்டிருந்தான். திடீரென்று பாட்டு நின்றது அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது அது அவனுடைய ரிங்டோன் என்று.
மெதுவாக அவனுடைய ஸ்மார்ட் ஃபோனை எடுத்து பார்த்தான். அதில் இருந்து வெளிவந்த சிறதளவு பிரெய்ட்னஸ் அவனை அரக்கன் போலவே சித்தரித்தது. அந்த ஃபோனில் கன்னங்கள் ஒட்டிப்போய் தலையில் த்ரெட்லாக் போட்டுக்கொண்டு தன்னை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற சுயநல எண்ணம் இல்லாத பாப் மார்லி புன்னைகையோடு சிரித்து கொண்டிருந்தார்.
பச்சை, மஞ்சள், சிவப்பு வர்ணங்களில் One love என்ற வாக்கியம் அதில் இடம்பெற்றிருந்தது. கஞ்சா சுருளை வாயில் வைத்து புகைத்தான். அதன் சாம்பல் மெதுவாக அந்த ஸ்மார்ட்போனின் மீது விழுந்தது. அதை அப்படியே வாயில் இருந்த புகையோடு ஊதினான். மிஸ்டு கால் என்று வந்திருந்தது. ரேகா அக்கா என்ற பெயரில் மீண்டும் ஃபோன் வந்தது. உடனே அதை அட்டன் செய்தான். லவுட் ஸ்பீக்கரில் போட்டான்.
ரேகா: ஹலோ? பைரவ்.
அன்பிற்க்கு ஏங்கும் ஒரு பெண்ணின் குரல் சோகத்தால் சூழப்பட்டிருந்தது.
பைரவ்: ம்ம்ம்… சொல்லுங்க.
விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஒருவனின் தூங்கி எழுந்த கரகரப்பான குரல்.
ரேகா: ஏன்டா? சந்தோசமாவே பேச மாட்டியா டா?
என்றால் கொஞ்சலில் அதட்டும் தோரணையில்.
பைரவ்: வாழ்க்க வாயில செய்யுதுன்னு கிட்ட போனா காதுல செஞ்சாறாம். இதுல நான் எங்க ஹாப்பியா இருக்க?
ரேகாவின் கவலைகள் பறந்து அந்த வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்தவள் போல் சிரிக்க ஆரம்பித்தாள்.
ரேகா: கிட்ட உன்ன யாருடா காத காட்ட சொன்னது?
-தொடரும்…
காமக்கலை பற்றி ஆராய்ந்தும், அனுபவத்திலும் எழுதிய இ-புத்தகம் வேண்டுமென்றாலும், என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றாலும்
இந்த இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது கூகுள் சேட்டிலும் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி.