அன்பு அதிகாலை நான்கு மணிக்கே விழிப்பு தட்டி எழுந்து கண்களை தனது கைகளால் தேய்த்து முகத்தில் ஒற்றிக்கொண்டு தனது படுக்கையின் தலைப் பக்கம் இருக்கும் சுவாமி படத்தை பார்த்துவணங்கினான்.
இன்று சென்னையில் ஒரு நிறுவனத்தில் நேர்காணல் அதற்காக ஐந்து மணிக்கு பேருந்து.
அவசரம் இல்லாமல் நிதானமாக தனது காலைக் கடன்களை முடித்து குளித்து உடையனிந்து. தனது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்றதற்கான சான்றிதழ்களை ஒருமுறை சரிபார்த்து பையில் வைத்தான்.
இவனது அறைக் கதவை தட்டி. அன்பு என்று அம்மா அழைக்க.
ரெடியாகிட்டேன்மா இதொ ஒரு நிமிடம் வந்துட்டேன்.
இம் சரி சீக்கிரம் வாடா அப்பா வெய்ட் பன்றாங்க.
அன்பு அறையை விட்டு வெளியில் வந்து அப்பா குட்மார்னிங் பா என்று சொல்லிவிட்டு அவசரமாக பூஜையறைக்கு சென்று வந்தான்.
அம்மா அவனது நெற்றியில் விபூதியை தடவி விட. அம்மாவிடமும். அப்பாவிடமும் தனித் தனியாக ஆசியை வாங்கிவிட்டு அப்பாவின் அருகே ஸோபாவில் அமர்ந்தான்.
அப்பா. அன்பு பேப்பரஸ் எல்லாம் சரியா எடுத்து வெச்சிருக்கியா.
இம். எடுத்துட்டேன்பா.
சரி சரி இந்தா இந்த பணத்தை வெச்சிக்க போகலாம் வா. நான் சீக்கிரமா வந்து வயலுக்கு போகனும்.
அப்பா எதுக்குப்பா இவ்ளோ பணம். எனக்கு இரண்டாயிம் போதும்பா. இடையில் அம்மா குறுக்கிட்டு
டேய் வயசு புள்ள நீ. நல்ல டிரெஸ்ஸா பார்த்து ரெண்டு மூணு வாங்கிக்க இன்னும் கிராமத்து வாசனையிலே இருப்ப போல. என்று சொல்லி அவனின் கையில் இன்னும் ஒரு மூவாயிரம் ரூபாயை அப்பாவுக்கு தெரியாமல் அம்மாவும் அவள் பங்கிற்கு தினிக்க.
அப்பா அங்கே தெருவில் யமாஹா 100 ஆர் எகஸ் ஐ உரும விட்டுக் கொண்டிருந்தார்.
பிள்ளையும். தாயும் பேசிக்கொண்டே வெளியில் வர.
ஏய் விடுடி அவனை சும்மா பஜனை பாடிட்டு இருப்ப போல. பஸ்ஸுக்கு டைம் ஆச்சு என்று சூடாகினார்.
இம் சும்மாருங்க. அன்பு கவனமா நல்ல ஹோட்டல் பார்த்து சாப்பிடு. ஜுஸ் எதுனாலும் குடிச்சுக்க என்று சொல்லி அவனை வழியனுப்பி வைத்த மரகதத்தின் கண்கள் குளமானது. ஒரே மகன் தனது கையை விட்டு தூரமாக போவது பற்றிய வருத்தம்.
பேருந்து நிலையத்தில் இருவரும் நின்றிருந்தனர். அங்கு வந்த தாய் மாமன் அருணாசலம். என்ன மாப்பிள்ளை சென்னைக்கு கிளம்பிட்டீங்களா. பார்த்து சூதானமா போய்ட்டு வாங்க.
வாங்க மச்சான் என்று அன்புவின் அப்பா ரகுபதி அழைக்க.
அருணாசலம் தனது சட்டை பையில் இருந்து ஒரு ஐந்தாயிரம் ரூபாயை அனபுவின் சட்டை பையில் தினிக்க.
ரகுபதி. எதுக்கு மச்சான் இதெல்லாம். நான் குடுத்து விட்டிருக்கேன். அதுவுமில்லாம எனக்கு தெரியாம உன் தங்கச்சியும் குடுத்திருப்பா.
ஆமா மாமா எங்கிட்ட பணம் இருக்கு மாமா இதுவே போதும் என்று சொல்ல.
ஏன்யா ரெண்டு பேரும் என்னைய அன்னியமா பாக்கறீங்க. நான் எந்த ஆம்பிள பிள்ளைக்கு செலவு செய்ய போறேன் எனக்கு மாப்பிள்ளையும். புள்ளையும் இவர் ஒருத்தர் தானே இருக்கட்டும்யா. என்று தனது பாசத்தை கொட்ட.
ரகுபதி சற்று நெஞ்சுருகித்தான் போனார்.
அப்போது அங்கே. அருணாசலத்தின் இளைய மகள். சற்று களைந்த தலையுடன் கையில் ஒரு கவரோடு வந்து நிற்க.
அருணாசலம். என்னமா சரண்யா இப்படி மூச்சு வாங்க வந்து இருக்க.
அடடெய் சரண்யா என்னமா கையில என்று ரகுபதி கேட்க.
ஏன்டி வாலு இப்படி வேகமா வந்திருக்க என்னாச்சு என்று அன்பு விசாரிக்க.
சரண்யா தன் கையில் இருந்த கவரை அன்புவிடம் நீட்டியவாறு. மாம் அம்மா இதுல தக்காளி சாதம் வெச்சி இருக்காங்க காலையில இதை சாப்டுவீங்கலாம்.
ரகுபதி. எதுக்கு மா இதெல்லாம். அன்பு ஹோட்டல் ல சாப்பிட மாட்டானா.
அருணாசலம். இருக்கட்டும் யா. காலை ஒரு வேளையாவது வீட்டு சாப்பாடு சாப்பிடட்டுமே. என்றதும். அனைவரும் அமைதியாகினர்.
சரண்யா அன்புவை தனியே அழைக்க. அன்பு தனது அப்பா மாமன் இருவரையும் பார்க்க. சரியா போ என்னன்னு கேளு போ என்றனர்.
அன்பு சற்று தூரத்தில் நின்றிருந்த சரண்யா விடம் வந்து ஏய் என்ன ஆச்சு வாலு என்க.
மாம் அம்மா இந்த கவர்ல பத்தாயிரம் ரூபாய் வெச்சி இருக்காங்க நீங்க சென்னையில எதாவது பெரிய ஜவுளி கடையில சூப்பர் டிசைன் ல டிரெஸ் எடுத்துக்க சொல்ல சொன்னுச்சி.
இம் அக்கா இத உங்கிட்ட குடுக்க சொன்னா இந்தாங்க என்று அவன் கையை பிடித்து இழுத்து தினித்து விட்டு. சற்று திரும்பி தனது தாவணியை ஒதுக்கி உள்ளிருந்து எடுத்த ஆயிரம் ரூபாயை அவன் பாக்கெட்டில் சொருகிவிட்டாள். மாம் டேக் கேர் மாம் நீங்க வேலையில சேர்ந்தாதான் உங்க தயுவுல சென்னைய சுத்தி பார்க்கனும் ஞாபகம் வச்சுக்க. என்க அன்பு சிரித்தவாறு
சரிடி வாலு. ஆமா உனக்கு எதுக்குடி இந்த பணம் குடுக்கற வேலையெல்லாம் என்க
அப்படிதான் நீங்க அதெல்லாம் கேட்க கூடாது. ஒரு பெரிய மனுசி கொடுக்கறத வேண்டாம்னு சொல்லலாமா.
ரகுபதி காதில் இந்த வார்த்தை மட்டும் கேட்டு
ஏய் வாலு என்ன எம்புள்ளைகிட்ட வம்பிழுக்கறவ என்றார்.
அதெல்லாம் ரகசியம் மாமா நீங்க கண்டுக்காதீங்க என்றதும் அனைவரும் சிரித்தனர். அன்பு சரண்யாவின் ஒரு கையை பிடித்து இழுத்துவந்து அனைவரும் ஒன்றாக நிற்க. சிறிது நேரத்திலேயே பேருந்து வந்தது. அதில் ஏறிச் சென்று இடம் பிடித்து அமர்ந்து அனைவருக்கும் கையசைத்து விடைபெற்றான் அன்பு.
அன்பு பேருந்தில் சரியாக அமர்ந்து தனது டிராவல் பேக் ஜ சரியான ஓர் இடத்தில் வைத்துவிட்டு. காவியா கொடுத்து விட்டிருந்த கவரை பிரித்தான்.
அதில். புதிய அச்சிட்டு வந்த இரண்டாயிரம் நோட்டுகள் ஐந்து இருந்தது. உடனே ஒரு வெள்ளை பேப்பரில் எதோ எழுதப்பட்டிருப்பதை பிரித்து பார்க்க.
மாம். லவ் யூ. ஒரு வார்த்தை நான் இன்டர்வியூ போறேன்டினு எங்கிட்ட சொல்ல முடியல இல்ல. அதனால எனக்கொன்றும் கஸ்டம் இல்ல. நீங்க நான் கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லாம இருக்கீங்க. அந்த பதிலில் தான் என் வாழ்க்கையே இருக்கு. உனக்காக நான் எதையும் செய்வேன் மாம். புரிஞ்சுக்கோங்க. என்னோட தேர்ட் இயர் ஃபைனல் இன்னும் மூன்று மாதங்களில் முடிஞ்சுடும். அதற்கு பிறகு நான் என்ன செய்யனும் நீங்களே முடிவு பண்ணுங்க.
இன்டர்வியூ நல்லபடியா அட்டென் பன்னுங்க ஆல் தி பெஸ்ட். லவ் யூ டேக் கேர் மாம் பை.
காவியா எழுதிய கடிதத்தை படித்த அன்பு சற்று மன இறுக்கம் பெற்ற நிலையில் தனது கண்களை மூடிக் கொண்டு சீட்டின் பின் புறம் சாய்ந்தான்.
அவனது. சிந்தனைகள் சிதறி சந்தியாவிடமே சுற்றியது. சந்தியா காவியாவின் தோழி. ஒரு முறை ஊர் திருவிழாவிற்கு வந்திருந்தால். அப்போது இரண்டாவது திருவிழாவில் அன்புவை தனியே அழைத்து தனது காதலை வெளிப்படுத்த. அன்பு சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்று கூறிவிட்டான்.
சரியாக ஒரு வாரம் கழித்து காவியாவின் கல்லூரியில் சந்தித்து பேசமுடிவு செய்து. காவியாவிடம் இன்று மாலை நானே உன்னைய பிக் அப் பன்றேன் காவியா நீ எங்கயும் போய்டாத என்றான்.
சரிங்க மாம். நான் வெய்ட் பன்றேன்.
அன்பு. அன்று மாலை காவியாவின் கல்லூரிக்கு நான்கு மணிக்கே சென்றான். சந்தியாவை வரவழைத்து அவளிடம் தனது குடும்பம் சூழ்நிலை மற்றும். அன்புவின் மீதான காவியாவின் நம்பிக்கை. எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல.
சந்தியா அன்புவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஏன் எனக்கு என்ன கொரச்சல். ஏன் என்னை இப்படி ஒதுக்கறீங்க. எனக்கு நீங்க வேணும் அதற்காக நான் எந்த எக்ஸ்ட்ரீம் வேணா போவேன். ஞாபகம் வச்சுக்கங்க. இனி என்னோட ஆட்டம் வேற மாதிரி இருக்கும்அதையும் நீங்க பார்ப்பீங்க பை. அதோ சரண்யா வரா வாரி அனைச்சிக்கிட்டு போங்க. என்று சொல்லி கண் சிமிட்டி கிரக்கமான ஒரு பார்வையை வீசிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்து. எதிரில் வந்த காவியாவிடம் எதோ சொல்லிவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டாள்.
இப்போது. அன்பு சந்தியாவிடம் என்ன சொல்லி எப்படி புரிய வைப்பது. என்ற சிந்தனைகள் அவனை ஆட்கொண்டிருந்தது.
ஒரு வழியாக எதுவாகினும் இந்த இன்டர்வியூ நல்லபடியாக முடியட்டும் பிறகு யோசிப்போம்.
பேருந்து ஒரு மோட்டலில் நின்றது. அங்கு பேருந்து பதினைந்து நிமிடங்கள் நிற்கும் என்பதால் ஒரு இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்கி அத்தை பார்வதி கொடுத்து விட்டபார்சல் பிரித்து சாப்பிட்டான்.
மிகச் சரியாக ஒன்பது மணிக்கு வந்து ஹன்டே வாகன தயாரிப்பு நிறுவனத்தின் முகப்பு வாயிலில் தனது நேர்முக அழைப்பு கடிதத்தை காவலரிடம் காண்பித்து. நேர்முகத் தேர்வு நடைபெறும் சரியான இடம் கேட்டுஉள்ளே சென்றான்.
அங்கு சென்று பார்த்தவுடன் தான் தெரிந்தது ஐம்பது பேருக்கு மேல் இருந்தனர்.
அரைமணி நேரம் கடந்து ஐந்தாவது நபராக அன்புக்கு அழைப்பு வந்தது உள்ளே புகும் முன் அனுமதி கேட்டு போனான்.
அவனது படிப்பு சம்பந்தமான அனைத்து சான்றுகள். மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தையும் சரிபார்த்து அவனிடம் கொடுத்து விட்டு.
உங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் இருக்கும். அதற்கு முன்னால் நீங்க எங்களோட ஸ்டாப் கூட போய்ட்டு அஸெம்லி கன்வேயர்ல ஒரு அஸைன்மன்ட் அட்டென் பன்னுங்க ஆல் தி பெஸ்ட் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.
அங்கே அவர்கள் கொடுத்த அஸைன்மன்ட் அவனால் நிதானமாக சரியாக செய்ய முடிந்தது. பார்த்தவர்கள் பாராட்டிய பிறகு அவனை நேர்முக தேர்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.
அன்புவின் செயல்முறை பயிற்சி நல்லபடியாக இருந்ததற்கு பாராட்டுகள் கிடைத்தது. உடனே சென்னையில் பிரபலமான ஒரு மருத்தவமனைக்கு கடிதம் கொடுத்தனர்.
அங்கு சென்று டெஸ்ட் எல்லாம் முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லுங்கள். விரைவில் உங்களுக்கு அப்பாய்ன்மென்ட் ஆர்டர் வரும். ஆல் த பெஸ்ட் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
அன்பு மிக சந்தோஷமா உணர்ந்தான். விரைவில் எல்லாம் நல்லபடியா நடக்கும் என நம்பிக்கை பிறந்தது அவனுக்கு.
தொடரும்.