This story is part of the மீண்டும் உன்னோடு நான் series
சென்ற பகுதியின் தொடர்ச்சி…
ஒரு நாள் இரவு என் ப்ளாட்டின் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே போய் கதவை திறப்பதற்குள் இரண்டு மூன்று முறை காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டுவிட்டது.
இந்த நேரத்தில் அதுவும் இவ்வளவு அவசரமாக யார் வந்து இருக்க போகிறார்கள் என யோசித்துக் கொண்டே கதவை திறக்க அங்கு மதி ஒரு பயம் மற்றும் பதற்றம் நிறைந்த முகத்துடன் வியர்த்து விறுவிறுத்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.. அவளை பார்த்ததும்,
“என்ன மதி இந்த நேரத்துல வந்திருக்க?” கேட்க அவள்
“கொஞ்சம் உள்ள வரலாமா?” கேட்டதும் தான் நானும் சுதாரித்து
“ம்ம்.. உள்ளாற வா மதி.. இதுவும் உன் வீடு தான்.” சொல்ல அவளும் உள்ளே வந்தாள்.. உள்ளே வந்தாலும் அவளிடம் ஒரு தயக்கம், பயம், பதற்றம் இதெல்லாம் இருக்க தான் செய்தது.. அவளை பார்க்கும் போது ஏதோ உதவி மட்டும் கேட்க வந்திருக்கிறாள் என தெரிந்தது.
ஆனால் எந்த மாதிரி உதவி என தெரியாமல் நானாக எதுவும் கேட்டு சங்கடபடுத்திட கூடாது என உறுதியாக இருந்தேன். அவளை
“உட்காரு மதி. தண்ணீ கொண்டு வரேன்” சொல்லிட்டு உள்ளே வந்து ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து குடுத்தேன்..
“குடுத்ததற்காக கொஞ்சம் குடித்துவிட்டு எப்படி ஆரம்பிப்பது?” என தெரியாமல் ஒரு தவிப்புடனே உட்கார முடியாமல் உட்காந்திருந்தாள்..
“என்ன மதி. ஏதாவது உதவி வேணுமா?”
“ம்ம்.. ஆமாங்க ஆனா உதவி பண்ணா முடியாது மட்டும் சொல்லிராதிங்க.” என டமார் காலில் விழுந்து விட்டாள்.
“ஏய் என்ன மதி.? என் கால்ல போய் விழுந்திட்டு இருக்க எந்திரி முதல்ல.”
“இல்லைங்க கடைசியா உங்கள நம்பி தான் வந்திருக்கேன்.. நீங்க தான் எப்படியாவது இந்த ஒரு உதவிய பண்ணியே ஆகனும்.” காலில் விழுந்தபடி அழுதிட்டே கேட்க எனக்கும் மனம் தாங்காமல்
“முதல்ல எந்திரி.” சொன்னதும் எந்திரித்துவிட்டாள்.. அவள் எந்திரித்தாலும் அவளின் படபடப்பு இன்னும் குறையாமல் தான் இருந்தது. அவளை உட்கார வைத்து
“இந்தா தண்ணி குடி முதல்ல” டம்ளரை எடுத்து குடுக்க அவளும் குடித்தாள்.
“என்ன உதவி வேணும் கேளு?”
“இல்ல உதவி கேட்ட பிறகு முடியாது மட்டும் சொல்லிடாதிங்க” என்றாள்..
“நீ கேக்குற உதவிய கண்டிப்பா செய்றேன் மதி. முதல்ல என்ன உதவி சொல்லு.”
“என் பொண்ணுங்கள போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க.. நீங்க தான் எப்படியாவது என் பொண்ணுங்கள காப்பாத்தி குடுக்கனும் பிளீஸ்” கை கூப்பி அழுதாள்.
“பொண்ணுங்கள போலீஸ் புடிச்சிட்டு போய்டுச்சா? ஏன்? எதுக்காக புடிச்சாங்க?”
“அதலாம் தெரியலிங்க.. இன்னிக்கு அவளோட ப்ரண்டுக்கு பர்த்டே பார்ட்டி இருக்கு முடிச்சி வர லேட்டாகும் மட்டும் தான் சொல்லிட்டு போனாங்க.. அதனால நானும் கால் பண்ணி எதும் கேட்கல.. இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஸ்டேஷன்ல இருந்து அரெஸ்ட் பண்ண விசயத்த கால் பண்ணி சொன்னாங்க..
எனக்கு கையும் காலும் ஓடல.. இங்க பக்கத்து பிளாட் இருக்குறவங்க உதவி கேட்டேன்.. போலீஸ் சமாச்சாரம் சொல்லி யாரும் வர முடியாது சொல்லிட்டாங்க.. கடைசியா உங்கள நம்பி தான் வந்திருக்கேன்.. முடியாது மட்டும் சொல்லிடாதிங்க” அழுதாள்..
“சரி.. சரி அழாத.. முதல்ல விஷயம் என்னானு தெரியாம ஒன்னும் பண்ண முடியாது. எந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கால் பண்ணாங்க..”
“திருவான்மியூர் ஸ்டேஷன்ல இருந்து.”
“சரி இரு.. வரேன் போலாம்” சொல்லிட்டு வேகமாக வேட்டியிலிருந்து பேண்ட்க்கு மாறி என் ஐடி மற்றும் பாதுகாப்புக்காக குடுத்த பிஸ்டலை எடுத்துக் கொண்டு
“வா மதி போலாம்” என்றேன்..
“என்னங்க பணம் ஏதாவது கொண்டு போகனுமா?”
“பணமா அது எதுக்கு? இல்ல அங்க கேட்பாங்களா?”
“உன் பொண்ணு தப்பு பண்ணியிருப்பாங்களா?”
“அய்யோ அதலாம் இல்லிங்க.”
“பின்ன என்ன? அதலாம் வேணாம்.. வா போலாம்.” என்றேன்.
ப்ளாட்டை விட்டு இறக்கி செல்லும் போதே கால்டாக்ஸி கால் செய்துவிட்டேன். அபார்மெண்ட் வாசலில் நிற்க சிறிது நேரத்தில் கால்டாக்ஸியும் வந்தது. இருவரும் ஏறி திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷன்க்கு சென்றோம்..
மதி டாக்ஸியில் செல்லும் போதே மிகவும் பயத்துடன் பதற்றத்துடன் இருந்தாள்..
அவளை தைரியம் படுவதற்காக
“மதி அதலாம் ஒன்னும் ஆகாது. நீ முதல்ல பயப்படாம வா..?”
“இல்லிங்க.. மனசு அடிச்சிட்டே இருக்கு.. என்னானு தெரியல? அங்க என் பொண்ணுங்களுக்கு எதும் ஆகியிருக்காதுல.”
“ஏய்.. அதலாம் நீ நெனக்கிற மாதிரி எதும் நடந்திருக்காது.. பாசிட்டிவ் திங் பண்ணு.”
“என்னால முடியலைங்க.. படபடப்பாவே இருக்கு” சொல்ல
“டிரைவர் தண்ணி இருக்கா?” கேட்க
“இருக்கு சார்.. இந்தாங்க” சொல்லி குடுக்க
“இந்தா மதி தண்ணி குடி.” சொல்லி குடுக்க அவளும் குடித்தாள்..
“கொஞ்சம் ரிலாக்ஸா இரு.. என்னா நடந்திருக்கு அங்க போன தான் தெரியும்..” என அவளை அமைதிப்படுத்தினேன்..
திருவான்மியூர் ஸ்டேஷனில் போய் பார்க்க மதியோட பொண்ணுங்களோட இன்னும் சில பெண்களும் இருந்தனர்.. அங்கிருந்த இஸ்பெக்டரிடம் என்னானு கேட்க அவர்
“இவங்க எல்லாம் குடிச்சி கூத்தடிச்சிட்டு அந்த ஹோட்டலுக்கு வந்த ஆம்பளைங்ககிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்காங்க ஹோட்டல் மேனேஜர் கால் பண்ணி சொன்னதுனால அரெஸ்ட் பண்ணியிருக்கேன்” சொன்னதும்
மதி “அதலாம் இருக்காதுங்க.. இவர் பொய் சொல்லார்.. என்னானு நல்லா விசாரிக்க சொல்லுங்க” சொன்னதும்
இன்ஸ்பெக்டர் “இந்தா பாரும்மா நல்லா விசாரிச்சு தான் கேஸ் பைல் பண்ணியிருக்கோம்.” சொல்ல ஸ்டேஷனில் சுற்றி பார்க்க அங்கு எந்த ஒரு லேடிஸ் கான்ஸ்டபிள் இருப்பது போல தெரியவில்லை..
“ஓகே சார்.. பட் இத்தனை பொண்ணுங்கள அரெஸ்ட் பண்ணியிருக்கீங்க.. இவங்க பாதுக்காப்புக்கு ஒரு லேடி போலீஸ் கூட இல்ல.”
“சொல்லியிருக்கோம் சார்.. வருவாங்க.”
“வருவாங்களா? எப்ப? அரெஸ்ட் பண்ணி எவ்வளவு நேரம் ஆச்சு?” கேட்க அந்த இன்ஸ்பெக்டர்
“இப்ப தான் சார் அரெஸ்ட் பண்ணோம்” சொன்னான்..
“சார் பொய் சொல்றார்.. அரெஸ்ட் பண்ணி 30மினிடிஸ் மேல ஆச்சு.” சொல்ல
“ஓகோ.. சரி சரி” சொல்லிட்டு
“சார் எந்த ஹோட்டல்ல வச்சு அரெஸ்ட் பண்ணிங்க?” கேட்க அவர்
“எதுக்கு சார் அதெல்லாம் கேட்கிறிங்க?”
“சார் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..”
“ஓ.. நீ அவ்வளோ பெரிய ஆளா நீ.. அதெல்லாம் சொல்ல முடியாது.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” சொல்ல
மதியோட பொண்ணில் ஒருத்தி தைரியமாக ஹோட்டல் பெயரை சொல்ல
அந்த இன்ஸ்பெக்டர் எழுந்து அடிக்க செல்ல நான் மொபைலில் கேமாராவை ஆன் செய்து வீடியோ மோடில் வைத்துக் கொண்டு
“இன்ஸ் எங்க அடிடா பாப்போம்” சொல்ல
“என்னது டாவா? ஏய் பெருசு.. என்ன திமிரா? உன்னையும் இந்த கேஸ்ல கோர்த்துவிட்டு சேத்து உள்ள தள்ளிவிடுவேன் பாத்துக்கோ..” என்றான்.
“அப்படியா? டே.. முதல்ல என் மேல் ஒரு சார்ஜ்சீட் ஃபைல் பண்ணு பாக்கலாம்..” சொல்ல
“ஓ.. நீ அவ்ளோ பெரிய ஆளா?”
“ஆமா.. இந்த நீ வேணா நா யாருனு பாரு? “சொல்லி ஐடி கார்ட்டை காட்ட அந்த இன்ஸ்பெக்டர் கொஞ்சம் பதற்றத்துடன்
“சார் ஆர்மியா?”
“ஆமா.. ரிட்டையர்ட் சுபேதார் மேஜர்” சொல்லிட்டு
“இங்க இருக்கிற ஒரு பொண்ணுக்கு கூட உடம்புல சின்ன கீறல் கூட விழுந்திருக்க கூடாது. நா வக்கிலோட வரேன்” சொல்லிட்டு வெளியே வந்து அந்த ஹோட்டலுக்கு சென்றேன்..
அந்த ஹோட்டல் மேனேஜரிடம் கொஞ்ச நேரத்திற்கு முன் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும். அதை காட்ட சொன்னேன்.. அவன் உடனே சுதாரித்து,
“சார் அதலாம் ப்ராப்பர் பெர்மிஷன் இல்லாம காட்ட முடியாது. காட்டவும் கூடாது.” சொல்ல எனக்கு வந்த கோவத்தில் இடுப்பில் சொறுகி வைத்திருந்த பிஸ்டலையும் ஐடி கார்ட்டையும் எடுத்து அவன் முன்னால் வைக்க ஐடியை பார்த்துவிட்டு அவனே
“வாங்க சார் காட்டுறேன்” என்றான்…
அந்த ரூம்க்குள் சென்றதும் அங்கிருந்த ஆப்ரேட்டரை எந்திரிக்க சொல்லிவிட்டு
“சார் எத்தன மணியிலிருந்து ப்ளே பண்ண?”
“இங்க பொண்ணுங்க அரெஸ்ட் ஆனாங்கள. அதுக்கு ஒன் ஹவர் முன்னாடி இருந்து ப்ளே பண்ணு.” சொல்ல
“சார் அது வந்து இழுக்க.”
“என்னடா வந்து போய் இழுத்து இருக்க?”
“இல்ல சார். அந்த ஃபோட்டோஜ் மட்டும் டெலிட் ஆயிடுச்சு” சொல்ல
“ஏய் என்ன கத விடுறியா?”
“இல்ல உண்மைய தான் சொல்றேன்.”
“அது எப்படி அதுவா டெலிட் ஆகும்? நீ தான் டெலிட் பண்ணியிருக்க? அப்படிதான” அவனை உச்சகட்ட குரலில் அதட்ட அவனும் ஆமா என ஒத்துக் கொண்டான்..
“எதுக்காக டெலிட் பண்ண?”
“போலிஸ் தான் டெலிட் பண்ணாங்க?”
“போலிஸ்ஸா எதுக்கு?”
“அது என்னானு தெரியல? அவங்க வந்து பண்ணாங்க?”
அங்கு நின்றுக் கொண்டிருந்த ஆப்ரேட்டரிடம் “அத ரெக்கவர் பண்ண முடியுமா?” கேட்க அவன் ஹேட்டல் மேனேஜரை பார்க்க
“நீ உண்மைய சொல்லேனா உன் மேனேஜர் உயிர் ஊசலாடிடும்” சொல்ல
மேனேஜர் “டே சொல்லி தொலைடா” என்றான்..
அந்த ஆப்ரேட்டர் “பண்ணலாம் சார்.”
“வேகமா பண்ணி குடு..”
“சரி சார்.” சொல்லி அதற்காக சாப்வேர் டவுன்லோட் செய்து அந்த டெலிட் ஆன வீடியோவை மீண்டும் எடுத்து பிறகு ப்ளே செய்தான்..
அந்த வீடியோ ஆரம்பித்த 15நிமிடத்தில் அங்கிருந்த வேறொரு கும்பல் தான் போதை பொருளை பயன்படுத்தி விட்டு அங்கிருந்த ஆண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தனர்..
அந்த ஆண்கள் தான் போலீஸ் கால் செய்து விட்டு போலீஸ் வந்ததும் கும்பலை கையை காட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அதன் பின் அந்த போலீஸ் மேனேஜரிடம் பேசியிருக்கிறான். அந்த கும்பலுக்கு பதிலாக இவர்களை அரெஸ்ட் செய்திருக்கிறான்.. ப்ளடி பிட்ச்..
மேனேஜரை பார்த்து “டே அந்த போலிஸ்ட்ட என்னடா பேசினான்?”
“இல்ல சார் அது வந்து”
“இப்ப நீ உண்மைய சொல்லலேனா உன் தலை செதறிடும்” சொல்லி அவன் தலையில் பிஸ்டலை வைக்க அவன் உடனே பதறி
“சார் சார் உண்மைய சொல்லிடுறேன்.. அந்த பொண்ணுங்க எல்லாம் பெரிய இடத்து பொண்ணுங்க அதான் அவங்க பேரன்ஸ் கால் பண்ணி சொன்னேன். அவங்க தான் இந்த இன்பெக்டர் பேசிட்டு அவங்களுக்கு பதிலாக வேற பொண்ணுங்கள அரெஸ்ட் பண்ணார் சார். இதுக்கு எனக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்ல சார்.. என்னைய விட்டுருங்க சார். குடுமஸ்தன் சார்.”
“சரி போய் தொலை.” என அவனை விட்டுவிட்டு ரெக்கவர் பண்ண வீடீயோவை மொபைலில் காபி பண்ணிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.
அங்கிருந்து கிளம்பும் போதே ஆர்மி பேஸில் பேசி எனக்கான ஒரு வக்கிலையும் ஏற்பாடு செய்துக் கொண்டேன். பின் அவரையும் தொடர்பு கொண்டு அவரை திருவான்மியூர் ஸ்டேஷனுக்கு வர சொல்லிவிட்டேன்.. நான் ஸ்டேஷன் போய் ஓரிரு நிமிடத்திலே அவரும் வந்து சேர்ந்தார்..
நானும் அவரும் உள்ளே சென்று,
“ஹலோ இன்ஸ்பெக்டர் நீங்க பொண்ணுங்கள மாத்தி அரெஸ்ட் பண்ணிட்டு வந்திருக்கிங்க”
“சார் அதலாம் இல்ல.. நாங்க ஸ்பாட்ல வச்சு தான் அரெஸ்ட் பண்ணியிருக்கோம்..”
“நீங்க ஸ்டாப்ல பண்ணின கூத்த கொஞ்சம் பாருங்க” சொல்லி என்னிடம் இருந்த அந்த வீடியோவை போட்டு காட்ட அந்த இன்ஸ்பெக்டர் முகம் பயத்தில் வெளிறி போனது..
“என்ன இன்ஸ்.. உங்க ஸ்பாட் அரெஸ்ட் இப்படி தான?” கிண்டலாக கேட்க
“நீ இப்ப இந்த பொண்ணுங்கள ரிலீஸ் பண்ணலேனா உனக்கு மெமோ குடுக்க ஏற்பாடு பண்ணிடுவேன்.. அதுக்கு அப்பறம் என்ன நடக்கும் உனக்கு தெரியும்.. விசாரணை கமிஷன் வச்சு பண்ணி உன்ன டி புரோமோட் கூட பண்ண சான்ஸஸ் இருக்கு”
“இல்ல சார் எப். ஐ. ஆர் போட்டாச்சு.”
“அதலாம் எனக்கு தெரியாது. நீ என்ன பண்ணிவியோ எனக்கு தெரியாது.. இந்த பொண்ணுங்க வீட்டுக்கு போகனும்.”
“வீடியோல இருக்குற பொண்ணுங்கள அரெஸ்ட் பண்ணி மறுபடியும் எப் ஐ ஆர் போட்டு கோர்ட்ல புரெடியூஸ் பண்ணிக்கோ.”
“இல்ல.. அதலாம் பெரிய இடம்.”
“ஓ.. மாமா வேலையா.? உனக்கு எல்லாம் வெட்காமா இல்ல.. யாரோ பண்ண தப்புக்கு இவங்கள அரெஸ்ட் பண்ணிட்டு வந்திருக்க.. அவங்க லைப் பத்தி நெனச்சி பாத்தியா..? காசு குடுத்தா பேதும்.. கால விரிச்சு படுத்தாளுங்க கூட கேஸ் ஃபைல் பண்ணுவ அப்படிதான.. ஒழுங்கு மரியாதையா அவங்கள ரிலீஸ் பண்ற வழியா பாரு.. இல்ல உன் தலையில நீயே மண்ண அள்ளி போடுற மாதிரி பண்ணிடுவேன்.” சொல்ல
அந்த இன்ஸ்பெக்டர் வேறு வழியில்லாமல் அவன் அரெஸ்ட் செய்த எல்லா பொண்ணுங்களையும் ரிலீஸ் செய்தான்.. மதி பொண்ணுங்க கூட இருந்த மத்த பொண்ணுங்களோட பேரன்ஸ் நன்றி சொல்லி அவர்களின் குழந்தைகளை அழைத்து சென்றனர்.
மதியும் அவளின் இரு பொண்ணுங்களும் கை எடுத்து கும்பிட்டு நன்றி சொல்லி ஆனந்த கண்ணீர் வடித்தனர். அதன் பின் அங்கிருந்த சில பார்மாலிட்டிஸ் முடித்து கொண்டு கால்டாக்ஸி புக் செய்து ப்ளாட்டிற்கு வந்தோம்.. வரும் வழியில் மதியோட பொண்ணுங்க ரெண்டு பேரும் தனக்கு நடந்ததை நினைத்து அழுதுக் கொண்டே தான் வந்தனர்..
மதி என்னதான் தட்டி குடுத்து ஆறுதலாக சொன்னாலும் அவர்களால் அதில் இருந்து மீள முடியாமல் அழுதுக் கொண்டே தான் இருந்தனர்..
ப்ளாட்டிற்கு செல்லும் முன் மூவரும் மற்றொரு முறை முழுமனதுடன் நன்றி சொல்லிவிட்டு சென்றனர்..
மதிக்கு செய்த இந்த உதவி என் மனதுக்கு நிறைவாக இருந்தது. அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. ஏதோ வார்த்தையில் சொல்லி விவரித்திட முடியாத அளவிற்கு எனக்கு மகிழ்ச்சியை தந்தது.. அப்போது தான் அவர்கள் மூவரும் இருக்கும் நிலையில் எதுவும் சாப்பிட்டு இருக்கமாட்டார்கள் என்பதால் நானே அவர்களுக்கு ஆளுக்கு மூன்று தோசை சுட்டு பிரிட்டிஜ் இருந்த தக்காளி சட்னி எடுத்து பாக்ஸில் வைத்து எடுத்துக் கொண்டு சென்றேன்.
மதி ப்ளாட்டின் காலிங்பெல் அடித்ததும் மதி தான் வந்து கதவை திறந்தாள்..
“ரொம்ப தாங்க்ஸ்ங்க.. நீங்க பண்ணின உதவிக்கு என்ன பண்றது தெரியல..”
அதலாம் பரவாயில்ல இருக்கட்டும். உனக்கு தான பண்ணேன்.. நீங்க சாப்பிட்டு இருக்கமாட்டிங்க தெரியும்.. அதான் தோசை சுட்டு கொண்டு வந்தேன் சொல்லி பாக்ஸை குடுக்க அதை மறுக்காமல் வாங்கி கொண்டு தனக்கு இருபக்கமும் பார்த்துவிட்டு என் உதட்டில் அவளை உதட்டில் பொறுத்தி முத்தமிட்டாள்..
மீண்டும் அவளுடான காதல் நினைவலைகளோடு காதல் புரிவேன்..