மீண்டும் உன்னோடு நான் – 10 (Meendum Unnodu Naan 10)

This story is part of the மீண்டும் உன்னோடு நான் series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    தொடர்ந்து கோமதியின் பார்வையிலிருந்து…

    நான் அவரை நினைத்தபடியே கௌரிக்கு தெரியாமல் கலங்கிய கண்களுடனே வீட்டுக்குள் நுழைந்தேன். பின் சிறிது நேரம் அவரை நினைத்தபடியே அமைதியாக உட்கார்ந்துக் கொண்டே இருந்தேன். அந்த சமயம் பார்த்து என் மொபைல் சிணுங்கியது. யார் என எடுத்து பார்த்தேன். என் மகள் நந்தனா தான் பண்ணியிருந்தாள்.. காலை அட்டன் செய்து மறுமுனையில் அவள் தான்

    “ஹலோ மம்மி ஒரு குட்நியூஸ்” என்றாள்..

    “என்ன குட் நியூஸ்?” கேட்க

    “டு நா ரொம்ப சீக்கிரமாக வீட்டுக்கு வந்திடுவேன்.. சோ நீ கொஞ்சம் குவிக்கா டின்னர் ரெடி பண்ணிடேன்..”

    “ஓ.. இதான் அந்த குட் நியூஸ்ஸா?”

    “ம்ம். எஸ் எஸ்.” மறுமுனையில் வேகமாக சொல்ல

    “இத சொல்லவா போன் பண்ண?”

    “ம்ம். எஸ் மம்மி.. வீட்டுக்கு இயர்லியா வந்தா அது உனக்கு குட்நியூஸ் தான.. அதான் சொன்னேன்.. சரி டோன்ட் பர்கெட் டின்னர் இஸ் இம்பார்டென்ட் ஓகே.” இழுத்துக் கொண்டே சொல்ல எனக்கு சிரிப்பு தான் வந்தது.

    “சரி.. சரி மறக்காம பண்ணிடுறேன்.. ஆனா நைட் டின்னர்க்கு என்ன பண்ண?”

    “சப்பாத்தி பண்ணிடு மம்மி?”

    “சப்பாத்தியா? நீயா இதலாம் கேக்கற? ஆச்சரியமா இருக்கு..”

    “மம்மி… ரொம்ப கிண்டல் பண்ணத.? சப்பாத்தி பண்ணி தர சொன்ன அத மட்டும் செய்.. டோன்ட் டாக் ஆன்நெஸ்ஸரி.” சொல்ல

    “சரிங்க மேடம்.. உங்கள் உத்தரவுபடியே நடக்கிறேன்.” பதிலுக்கு சொல்ல

    “அய்யோ மம்மி.. என் ப்ரண்ட்ஸ் வெயிட் போட்டேன் சொன்னாளுங்க.. அதான் சப்பாத்தி கேட்டேன். போதுமா? உன் டவுட் கிளியரா?”

    “நா உன்ட்ட எதுவும் கேக்கலயே.? நீயா தான சொன்ன?” வாய்க்குள்ளே சிரித்தேன்.

    “சரி நான் தான் சொன்னேன்.. போதுமா? சப்பாத்தி மட்டும் ஆயில் கம்மியா ஊத்தி பண்ணிக்குடு.”

    “ம்ம். சரி.. அவ எப்போ வருவா தெரியுமா?”

    “அவளா தெரியல.. நீ கால் பண்ணி கேட்டுக்கோ.”

    “ஏன்டி.. ரெண்டு பேரும் ஓரே ஆபிஸில தான இருக்கீங்க.. கொஞ்சம் கேட்டு சொன்னா என்ன கெறஞ்சு போய்டுவியா?”

    “அய்யோ மம்மி.. சரி கொஞ்சம் லைன்ல வெயிட் பண்ணு கேட்டு சொல்றேன்..” சொல்லிவிட்டு அவளே

    “ஏய் நந்தி, உனக்கு இம்பார்டென்ட் வொர்க் எதுவும் இருக்கா?”

    “நோ.. ஒய் ஆர் யூ ஆஸ்க்கிங்?”

    “நா கொஞ்சம் இயர்லியரா கிளம்புறேன். சோ ஐயம் ஆக்ஸிங் ஆல்சோ யூ டு.”

    “ம்ம்” நந்திதா யோசித்துக் கொண்டே இருக்க

    “ஏய்.. வரியா? இல்லையா? டக்கனு சொல்லு.”

    “சரி வரேன்.. போலாம்.” நந்திதா சொல்ல

    “ஹலோ மம்மி இருக்கியா?” மீண்டும் நந்தனா கேட்க

    “ம்ம்.. இருக்கேன் சொல்லு.”

    “அவளும் வந்துடுவா. சோ சேத்தே பண்ணிடு.” சொல்ல

    “ம்ம்.. சரி” சொல்ல கால் கட் ஆனது.. கால் கட் ஆனதும் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. என் காதல் மற்றும் காதலனுடன் சேர முடியவில்லை என்ற வருத்தம் ஒரு காதலியாக எனக்குள் இருந்தாலும் இப்போது என் மகள்கள் இருவரும் இன்று சீக்கிரம் வந்துவிடுவார்கள் என சொன்னது ஒரு தாயாக இருக்கும் எனக்கு மகிழ்ச்சியை தந்தது..

    அவர்கள் இருவரும் வீட்டிற்க்கு எப்போது வந்து சேருவார்கள் என பலநாட்கள் அவர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்கள் சாப்பிட கூட பிடிக்காமல் அவர்களுக்காக வாசலியே வெறித்து பார்த்த கொண்டிருந்த காலம் எல்லாம் இருக்கிறது..

    அப்படி இருக்கையில் இன்று அவர்களே போன் செய்து வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடுவோம் சொன்னால் ஒரு தாயாக என் மனதிற்குள் மகிழ்ச்சி இருக்க தானே செய்யும்.. அந்த மகிழ்ச்சியுடேன அவர்களுக்காக டின்னர் ரெடி பண்ண சென்றேன்..

    வெங்கடேசன் பார்வையிலிருந்து…

    நான் மதியை திரும்பி பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் பிளாட்டிலிருந்து கீழே இறங்கி செல்லும் போது அவள் மீது மோதியவுடன் எனக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. வாயில் இருந்து எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை.

    அந்த தயக்கம் அவளை பார்த்த அந்த தருணத்திலிருந்து இருக்க தான் செய்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. புரியவில்லை.. இந்த புரியாத தயக்கத்துடன் உட்காந்திருக்க என்னுடைய மொபைல் சிணுங்கியது..

    மொபைலை பார்க்க பெயர் இல்லாமல் வெறும் எண் மட்டும் டிஸ்ப்ளேயில் தெரிந்தது. அது ஏதாவது கம்பெனி காலாக இருக்கும் என நினைத்து கட் செய்துவிட்டேன். கட் செய்த சில வினாடிகளிலே திரும்பி அதே எண்ணிலிருந்து வந்ததும் காலை அட்டன் செய்து

    “ஹலோ” என்றேன்..

    “ஹலோ வெங்கடேசன் சார் இருக்காரா?” கேட்க

    “நா வெங்கடேசன் தா பேசுறேன்.. நீ யாரு?” கொஞ்சம் அதிகாரமாக கேட்க

    “சார் நா சந்திரன்.. சாந்தமங்களத்துல இருந்து பேசுறேன்.. வீடு வெலக்கி கேட்டிருந்தீங்க விசயம் காதுக்கு வந்துச்சு. அதான் போன் பண்ணி கேட்கலாம் பண்ணேன்..”

    “ஆமா கேட்டு இருந்தேன். ஆனா இப்ப சென்னையில ஒரு பிளாட் வாங்கிட்டேன்” சொல்ல

    “ஓ.. அப்படியா? சார்.. வீடு எதுவும் வேணும்னா இதான் என் நம்பர். இதுக்கு கால் பண்ணுங்க சார்.. நா பாத்து நீங்க கேக்குற முடிச்சு தர முடிஞ்சா முடிச்சு தரேன்..

    கமிஷன் கூட நீங்க பாத்து குடுக்குறத குடுங்க சார் போதும்” அந்த லேன்ட் ப்ரோக்கர் அவன் தரப்பு நியாயத்தை சொல்லிக் கொண்டே இருக்க எனக்குள் இதற்கு முன் அந்த ஊரில் இந்த குரலே ஏற்கெனவே கேட்டது போல் இருந்தது. பலமுறை கேட்டு பழக்கப்பட்ட குரலாக தெரிந்தது. ஆனால்

    “சந்திரன் சொல்றான். அதான் யார்?” என தெரியவில்லை என யோசித்துக் கொண்டே இருக்க மறுமுனையில் இருந்து

    “சார் லைன்ல இருக்கீங்களா?” கேட்க

    “ம்ம்.. இருக்கேன்.. நா வீடு வேணும்னா சொல்றேன்..”

    “சரி சார்.. நா வேணா உங்களுக்கு வீட்டோட சில ஃபோட்டாவ அனுப்பட்டுமா சார்” கொஞ்சம் தயங்கிக் கொண்டே கேட்க

    நானும் நல்ல வீடாக இருந்து குறைந்த விலையில் இருந்தால் வாங்கலாம் என முடிவு செய்து அவனிடம்

    “சரி அனுப்பு.. நா பாத்திட்டு வேணும்னா கண்டிப்பா கால் பண்றேன்.” சொல்ல

    “சரி சார்.. ரொம்ப சந்தோஷம்.. அப்பறம்” தயங்கி கொண்டே ஏதோ கேட்க வந்தான்.

    “என்ன?” கேட்க

    “நீங்க இந்த ஊர்க்காரரா சார்?” கேட்க

    “ம்ம்.. ஆமா.. நா அந்த ஊர விட்டு முப்பது வருசம் ஆச்சு.. கடைசில காலத்துல சொந்த ஊருல செட்டில் ஆகலாம் நெனச்சேன்.. ஆனா அங்க வீடு அமையல.”

    “ஓ.. அப்படியா சார்.. இப்ப அனுப்புறேன் சார்.. புடிச்சிருக்கா பாருங்க சார்.. ஓகே சொன்ன பாத்து முடிச்சு தரேன்” சொல்லிட்டு அடுத்து நீங்க இந்த ஊர்ல எங்க இருந்தீங்க கேட்க அதற்குள் இன்னொரு கால் வர அவனிடம்

    “சரி நீ வீட்டோட ஃபோட்டா அனுப்பு” சொல்லிட்டு அவனுடைய பதிலுக்கு கூட காத்திருக்காமல் கால் கட் செய்தேன். இன்னொரு கால் யார் என பார்க்க என் மகள் தான் பண்ணியிருக்கிறாள்..

    மீண்டும் அவளுக்கு கால் செய்ய எடுத்தவுடனே

    “என்னப்பா அபார்மெண்ட்ல புது ப்ரண்ட் எதுவும் பிடிச்சிட்டிங்களா.? போன் லைன்லாம் பிசியா இருக்கு வரது” கிண்டல் பண்ண

    “அட நீ வேற ஏன்ம்மா.. அதலாம் எதும் இல்ல.. ப்ரண்ட் பிடிச்சா உன்கிட்ட சொல்லமா இருப்பனா?”

    “ம்ம். பட் லைன் பிசியா இருந்துச்சே. அதான் கேட்டேன்..”

    “ஓ.. அதுவாம்மா அது ஒன்னுமில்ல.. இந்த பிளாட் வாங்குறதுக்கு முன்ன நா பிறந்து வளந்த கிராமத்துலே செட்டில் ஆகலாம் முடிவு பண்ணியிருந்தேன். ஆனா வீடு எதும் அங்க அமையல. அதனால அங்க போய் செட்டில் ஆக முடியல” சொல்ல

    “ம்ம். இதலாம் தெரிஞ்ச மேட்டர் தானப்பா.”

    “ஆமா.. இப்ப வந்திட்டு அந்த ஊர்ல இருந்து ஏதோ லேண்ட் புரோக்கர் கால் பண்ணி வீடு இருக்கு பாக்கிறிங்களா கேக்குறான்.”

    “ஓ.. ஐ.. சி.. நீங்க என்ன சொன்னிங்க.?”

    “நா என்ன சொல்ல.. சென்னையில பிளாட் வாங்கினத சொல்லிட்டேன்.. இருந்தாலும் அவன் வீடு சேல்ஸ் பண்ணா கமிஷன் கிடைக்கும்னு ஃபோட்டா வாட்ஸ்ஆப் பண்றேன் சொன்னான்.”

    “நானும் அந்த ஊருல ஃபிளாட், வீடு எப்படி தான் இருக்கு பாக்கலாம் ஆசையில ஃபோட்டாவ அனுப்ப சொல்லிட்டேன்.”

    “ம்ம்.. சரிப்பா.. ஃபோட்டா பாருங்க.” என் மகள் சொல்ல

    “சரிம்மா.. வீடு நல்லா இருந்து சீப் இருந்தா என்ன பண்ணலாம்.. உன் ஐடியா என்னனு சொல்லு.”

    “உங்களுக்கு ஓகேனா வாங்குங்கப்பா.. அங்க தெரிஞ்ச ஆட்கள் யாராவது இருந்தா உங்களுக்கு கொஞ்சம் யூஸ்ஃபுல் இருக்கும்ல.. முக்கியமா டைம்பாஸ் ஆகும்” சிரித்துக் கொண்டே சொல்ல

    “சரி அந்த புரோக்கர் ஃபோட்டா அனுப்பியிருந்தா உனக்கு அனுப்புறேன். நீயும் பாத்து சொல்லு.”

    “யா.. ஷியர்ப்பா.. டின்னர் சாப்டாச்சா.”

    “இன்னும் இல்ல.. இனி தான் பண்ணி சாப்பிடனும்.” கொஞ்சம் சலிப்பாக சொல்ல

    “குக் பண்ண முடியலனா குக்கிங்க வேணா ஆள் வச்சுக்க வேண்டி தான.. ஏன் இப்படி தனிஆளா இருந்து கஷ்படனும்.?” ஒரு அக்கறையில் மகள் சொல்ல

    “அட அதலாம் ஒன்னுமில்லம்மா.. என் ஒரு ஆளுக்காக வேலைக்காரிலா எதுக்கு? நானே என் வேலைய பாத்துப்பேன்.. ஏற்கெனவே டைம்பாஸ் ஆக மாட்டிகுது.. இதுல குக்கிங்க்கு ஆள் போட்டா சுத்தம்.. டைம் நகரவே நகராது..” சொல்ல

    “சரிப்பா.. சாப்பிட்டு தூங்குங்க.. பை டேக் கேர்” சொல்லி என் மகள் காலை கட் செய்தாள்.

    அதன் பின் மாலையில் வாங்கிய தோசை மாவு இருக்க அதில் தோசை சுட்டு சாப்பிட்டு மீதி மாவை பிரிட்ஜில் எடுத்து வைத்து வந்து ஹாலில் உட்கார்ந்தேன். அந்த புரோக்கர் எதும் வீட்டினுடைய ஃபோட்டா அனுப்பியிருக்கானா என பார்த்தேன்.

    நான் நினைத்த போலவே சில வீட்டினுடைய ஃபோட்டாக்கள் மற்றும் அதனுடன் வீடியோவும் அனுப்பி இருந்தான். நான் பிறந்து வளர்ந்த அந்த கிராமம் இந்த முப்பது வருடத்தில் நிறைய விசயங்கள் மாறியிருந்தன. வீடுகள் நெருக்கம் நெருக்கமாக அமைந்திருந்தன.

    காலத்திற்கு ஏற்ப நிறைய வசதிகளும் அந்த கிராமத்தில் வந்திருந்தன. அந்த புரோக்கர் அனுப்பிய ஃபோட்டா, வீடியோவை மகளுக்கு அனுப்பிவிட்டு ஃபோனை எதிரே இருந்த டேபிளில் வைக்க போகும் போது அங்கிருந்த டப்பாவை பார்த்ததும் தான் மதியின் நியாபகம் வந்தது.

    நாளை காலை இந்த டப்பாவை திரும்ப கொடுத்து சந்திக்க போகிறேன் என நினைத்து பார்க்கும் போதே மனதிற்குள் ஒரு சந்தோஷம். ஆனால் அவள் சொன்னதை மீறி அடுத்த நாளிலே அவளை சந்திக்க வந்ததற்கு ஏதாவது சொல்வாளோ என்ற சிறு அச்சமும் கூடவே இருந்தது.

    அவள் என்ன தான் என் இளமை கால காதலியாக இருந்தாலும் இப்போது வயதுக்கு வந்த இரு பெண் குழந்தைகளுக்கு தாய்.

    அதனாலே என்னுடான சந்திப்பை தவிர்க்கலாம் என எனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் என் தனிமையை போக்க அவளை சந்தித்து சாதாரணமான பேச்சுகளையாவது பேச வேண்டும் என்ற எண்ணமும் கூடவே எழுகிறது. எந்தன் எண்ணம் செயலாக மாறும் என்ற நம்பிக்கையில் படுக்க சென்றேன்.. ஆனால்

    மறுநாள் காலையில் எழுந்திருக்கும் முன்பே என் மொபைல் அடித்தது. இந்த நேரத்தில் யார் என பார்த்தேன். மீண்டும் என் மகள் தான் கூப்பிட்டு இருந்தாள். இவள் எதற்கு இந்நேரமே கூப்பிட்டு இருக்கிறாள். சரி என்ன தான் சொல்கிறாள் என பார்ப்போம் என எடுத்து பேச ஆரம்பித்தேன்..

    “ஹலோ என்னம்மா? இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க” கேட்க

    “நீங்க அனுப்பின வீட்டோ ஃபோட்டோஸ் எல்லாம் பாத்தேன்.. நல்லா தான் இருக்கு.. ஏதாவது ஒன்ன வாங்கின உங்களுக்கு யூஸ்ஃபுல் இருக்குமே சொல்ல தான் கால் பண்ணேன்.”

    “சென்னையில இப்ப தான்ம்மா வாங்கியிருக்கோம்.. இனி அங்க வேற எதுக்கு? பாக்குறேன்.”

    “இது சிட்டி.. கொஞ்சம் எல்லாரும் ரிசர்வ்டு டைப்பா இருப்பாங்க.. அது வில்லேஜ்.. உங்களுக்கும் பேச ஆள் கிடைக்கும். டைமும் நல்லா பாஸ் ஆகும்.. அதான் சொன்னேன்.” அக்கறையில் சொல்ல

    “ஓ.. இப்போ என்னைய என்னதான் பண்ண சொல்றம்மா?” கேட்க

    “டு டே எதும் வொர்க் இருக்கா?”

    “எனக்கு என்னம்மா வொர்க் அதலாம் பெருசா எதும் இல்ல..ஃபிரி தான்..”

    “சூப்பர். அப்போ டுடே கிளம்பி போய் உங்க வில்லேஜ் விசிட் அடிச்சிட்டு அங்க இருக்குற வீட்ட பாத்திட்டு வாங்க.” சொன்னதும் பக்கென்று இருந்தது.

    “என்னடா இன்னிக்கு மதி பாக்க போலாம் இருந்தா இப்படி நடக்குது” யோசிச்சிட்டே இருக்க

    “என்னப்பா சத்தத காணோம்.. சைலண்ட் ஆகிட்டிங்க. இப்பவே திங்கிஙா?” என் மகள் அங்கிருந்து கேட்க

    “எனக்கும் என் காதலுக்கும் எமன் என் மக ரூபத்துலயா வரனும். ம்ம்.. நாம நெனச்சதா நடக்கும். நடக்குறது தானே நடக்கும்.” மனதிற்குள் நானாக நினைத்துக் கொண்டேன்..

    “சரி.. நா பாத்து போய்ட்டு வரேன்.” சொல்ல

    “ஓகேப்பா.. அப்படியே அங்க சும்மா இருக்குற லேண்ட் எதாவது பண்ண முடியுமா?” பாருங்க..

    “சரி பாக்குறேன்” சொல்லிட்டு காலை கட் செய்தேன்..

    நான் என்ன செய்வதென்று தெரியாமலும் புரியாமலும் குழப்பத்துடன் உட்காந்திருக்க அந்த சமயம் பார்த்து என் மனசாட்சி என் முன்னால் வந்து நின்று நானிருக்கும் நிலையை பார்த்து சிரித்தது..

    இதிலிருந்து மீண்டு வருவேன்..

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்…

    தமிழ்காமவெறி சொந்தங்களே இதுவரை நான் எழுதிய கதைக்கு ஆதரவு குடுத்திருக்கீங்க.. அதற்கு நன்றிகள். இப்போது முழு காம கதையாக எழுதாமல் ஒரு மாறுதலுக்காக நிறைய காதல் விசயங்கள், வயதானவர்களின் அன்றாட வாழ்க்கை என சிலவற்றை கலந்து எழுதுவதால் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

    காமகதை தளத்தில் இது மாதிரி எழுதினால் நினைத்த அளவிற்கு ஆதரவு கிடைக்காது என தெரியும். அதனாலே இதுவரை யாரும் எழுதிடாத வகையில் புதுமையான முறையில் கதை எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் எல்லாம் சென்ற வருடம் இறுதியில் வந்த மாநாடு படம் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் டைம்லூப் வைத்து கதை எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன்..

    உங்கள் ஆதரவு கிடைத்தால் கண்டிப்பாக இந்த தொடரோடு சேர்த்து எழுதுவேன்.. இது மாதிரியான புதுமையான கதைகள் பற்றி உங்கள் கருத்துக்களை நேரடியாகவோ அல்லது மேலே குறிப்பிட்ட மெயில் ஐடி மூலம் சொல்லலாம்..