அவளும் பெண் தானே – 19 (Avalum Pen Thane 19)

This story is part of the அவளும் பெண் தானே series

    சென்ற பகுதியின் தொடர்ச்சி…

    அகல்யாவின் நினைவுகள் மாறி மாறி வந்து மனதை ஆக்கிரமைத்து கொண்டிருந்ததால் அந்த கான்வென்ட் விட்டு வெகு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு வெளியே வந்து காரை எடுத்தவன் நேராக என் அபார்மெண்ட்டில் வந்து தான் நிறுத்தினேன். வீட்டிற்கு படியேறி செல்லும் போது தான் தாமரை நினைவு வந்தது. அப்போது தான் வரும் போது அவளுக்கு சாப்பாடு வாங்கி வருவதாக சொன்னது நியாபகம் வர மீண்டும் படி இறங்கி காரை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் அவளுக்கு மட்டும் சிக்கன் பிரியாணியும் கிரில் சிக்கனும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.

    வீட்டின் காலிங் பெல் அடித்ததும் தாமரை வந்து திறந்தாள். அப்போது அவளின் முகத்தில் அப்படியொரு ஒரு மலர்ச்சி தெரிந்தது. வீட்டின் உள்ளே வந்ததும்,

    “சீக்கிரமே வந்திட்டிங்க போல” தாமரை சிரித்த முகத்துடன் கேட்டதும் அதுவரை மனதில் இருந்த அகல்யாவை பற்றி கவலைப்பட்டு நினைத்துக் கொண்டிருந்த நினைவுகள் எல்லாம் மறைய தொடங்கின.

    “ஆமா தாமரை வேலை சீக்கிரம் முடிஞ்சது. அங்க இருக்கவும் பிடிக்கல. அதான் கிளம்பி வந்துட்டேன்.”

    “ஏங்க என்ன ஆச்சு.?”

    “அது அகல்யா இருந்த கான்வொன்ட். அங்க தான் அவள முதல்ல பாத்தேன். அதான் அங்க போனதும் அவளோட நெனப்பு வந்துடுச்சு.” சொன்னதும்

    “இருங்க வரேன்” சொல்லி கிச்சன் உள்ளே சென்று ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

    “இது எதுக்கு தாமரை.?” கேட்க

    “இல்லங்க வெளியில போய் அலைஞ்சிட்டு வந்திருப்பீங்க. தாகமா இருக்கும். அதான் சொல்ல” அது சிட்டில் வளர்ந்த எனக்கு புதிதாக இருந்தது. இருந்தாலும் அவளை மனதை கஷ்படுத்த வேண்டாம் எனபதற்காக கொஞ்சமாக குடித்துவிட்டு மீதியை அவளிடமே குடுத்து விட்டேன்.

    நான் தண்ணீர் குடிக்கும் சமயத்தில் அவளாகவே என் சட்டை பட்டன்களை கலட்டினாள். நானும் அவளை தடுக்கவில்லை. அவளுக்காக வாங்கி வந்த பிரியாணி அவளிடம் குடுத்தேன். ஒரே ஒரு பார்சல் இருப்பதை பார்த்துவிட்டு,

    “உங்களுக்கு சாப்பாடுங்க.”

    “நான் கான்வென்ட்ல சாப்பிட சொல்லி கம்பல் பண்ணாங்க. அதான் அங்க சாப்பிட வேண்டிதா போச்சு. நீ சாப்பிடு தாமரை.”

    “சரிங்க. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. இதோ அஞ்சு நிமிஷத்துல அள்ளி போட்டு வந்திடுறேன்” என்றாள்..

    “ஹேய் ஒன்னும் அவசரமில்ல தாமரை. பொறுமையா வந்தா போதும்” என நான் சொன்னாலும் அவளின் சாப்பிடும் செய்கைகள் எல்லாம் கொஞ்சம் வேகத்துடன் தான் இருந்தன. அவள் வேகம் வேகமாக சாப்பிட்டு வந்து என் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டாள்..

    “என்ன தாமரை அதுக்குள்ள சாப்பிட்ட?”

    “ஆமாங்க.. சாப்பிட்டேன்.”

    “பிரியாணி போதுமா?”

    “அதெல்லாம் தாராளமா போதுங்க. இங்க பாருங்க வயிறு எப்படி உப்பி இருக்கு” அவள் போட்டியிருந்த பழைய சுடிதார் டாப்பை தூக்கி காட்டினாள்.

    “சரி நீ என்ன பண்ண போற தாமரை?”

    “தெரியலிங்க.”

    “டிவி பாக்குறதுனா பாரு. நா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்” என்றேன்..

    “நீங்க தூங்குங்க. நா வேணா பக்கத்தில இருக்கேன். நீ தூங்கினதும் போய் டிவி பாத்துக்கிறேன்.”

    “அப்படியா சொல்ற.?”

    “ஆமாங்க. நீங்க தூங்குங்க” என்றதும் நான் கண்ணை மூட ஆரம்பித்தேன். தாமரையின் கைகள் என் நெஞ்சை தொட்டு தடவ ஆரம்பித்தன. அவளின் கைகள் அவ்வப்போது கூலி வேலை செய்ததால் உள்ளங்கை தோல்கள் எல்லாம் கொஞ்சம் காய்ந்த மாதிரி தான் இருந்தது. அப்படி இருந்தாலும் அவளின் அந்த தடவல்கள் என் நெஞ்சிற்கு இதமாக தான் இருந்தது. அந்த இதமான தடவலிலே கண்கள் சொருக வெகு சீக்கிரமே தூங்க ஆரம்பித்துவிட்டேன்.

    நான் கண்விழித்து பார்க்கும் போது தாமரை கட்டிலை விட்டு இறங்கி கீழே உட்கார்ந்தபடி டிவியை சத்தம் குறைவாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை என் தூக்கம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக கூட இப்படி சத்தத்தை குறைத்து வைத்து பார்த்திருக்கலாம். என் தூக்கம் முழுமையாக கலைந்து விட்டதால் நான் எழுந்துவிட்டேன். நான் எழுந்ததை பார்த்ததும்,

    “எந்திரிச்சிட்டிங்களா?”

    “ம்ம் ஆமா தாமரை. ரொம்ப நேரமா தூங்கிட்டேன் போல.”

    “அப்படியெல்லாம் இல்லீங்க. கொஞ்சம் நேரம் தான் தூங்கியிருக்கீங்க”

    “அப்படியா? மணி என்ன ஆகுது?”

    “அஞ்சுக்கு மேல ஆகுதுங்க.”

    “நீயும் வந்ததுல இருந்தே வீட்டுக்குள்ளே இருக்க. கொஞ்சம் வெளியில போய்ட்டு வரலாமா தாமரை?”

    “எனக்காக எதுவும் போக வேண்டாம்ங்க.”

    “உனக்காக மட்டும் இல்ல தாமரை. எனக்காவும் தான். எனக்கு கொஞ்சம் வெளியில போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் தோணுது. நீயும் வந்ததுல இருந்து வீட்டுலே தான இருக்க. அதான் உன்னையும் கூட்டிட்டு போலாம் கேட்டேன். என் கூட வருவில?”

    “அய்யோ அதெல்லாம் கண்டிப்பா வரேன்ங்க. நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன்ங்க.”

    “சரி அப்ப கிளம்பு போய்ட்டு வரலாம்” சொல்ல அவளும் உற்சாகத்துடன் எழுந்து டிவியை ஆப் செய்துவிட்டு முகம் கழுவி பவுடர் மட்டும் அடித்து அலட்டல் இல்லாமல் தயாரானாள். நானும் ஒரு குளியலை போட்டுவிட்டு கிளம்பினேன்..

    “தாமரை” என்றதும் ஹாலில் இருந்தவள் ரூமிற்குள் வந்து

    “என்னங்க?”

    “நீ அபார்ட்மெண்ட் மெயின் கேட் தாண்டி வெளியில நில்லு. நா வந்து கூப்பிட்டுகிறேன்.” என்றேன்

    “சரிங்க” சொல்லி கிளம்பி சென்ற சில நிமிடங்களில் நானும் வீட்டை பூட்டிவிட்டு கீழே இறங்கி சென்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

    நான் அபார்மெண்ட் மெயின் கேட் தாண்டியதும் வலது பக்கத்தில் தாமரை நின்று அந்த ரோட்டில் செல்லும் வாகனங்களை ஏதோ அதிசயப் பொருள் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். நாங்கள் செல்ல வேண்டியது ரோட்டின் இடதுபக்கம் என்பதால் தாமைரயை காரில் இருந்தபடியே தாமரை பெயர் சொல்லி கூப்பிட அவளும் கூப்பிட்டதும் சுதாரித்து என் சத்தம் கேட்கும் பக்கம் உடனே திரும்பி பார்த்து காரை நோக்கி ஓட்டமும் நடையுமாக வேகமாக வந்தாள்.

    தாமரை காரின் உள்ளே ஏறி உட்கார்ந்ததும் ஏதோ தேவலோகத்தில் இருப்பது போல தன்னையும் மறந்து சுற்றி ஒரு பார்வை பார்த்தாள். அவளிடம்
    “தாமரை அந்த விண்டோ கிளாஸ் மேல ஏத்தி விடு” சொல்ல அதை எப்படி செய்ய வேண்டும் என அவளுக்கு தெரியவில்லை. அதனால் நானே இருக்கும் இடத்தில் இருந்து இடுப்பை தூக்கி எழுந்தபடி அவளை நெருங்கி சென்று அந்த விண்டோ கிளாஸை ஏற்றிவிட்டேன்.

    “சரி கிளம்பலாமா தாமரை?”

    “ம்ம்.. கிளம்பலாம்ங்க.” சொன்னதும் காரை ஸ்டார் பண்ணி கிளப்பினேன். சிறிது தூரம் சென்றதும் தாமரை

    “கார் உங்களுதாங்க.?” கேட்க

    “ஆமா தாமரை. ஏன் கேட்குற?”

    “நா சும்மா தாங்க கேட்டேன். தப்புனா மன்னிச்சிடுங்க.”

    “ஹேய் இதுல என்ன இருக்கு. இதுக்குலாம் போய் சாரி கேட்டுட்டு இருக்க.”

    “இல்லீங்க. நீ ஏதும் தப்பா நெனச்சிட்டிங்களோ தான் கேட்டேன்.”

    “இதுல என்ன தப்பு இருக்கு எனக்கு தெரியல. இது என்னோட சொந்த கார் தான் போதுமா.”

    “ம்ம். சரிங்க. கார் கூட உங்கள மாதிரியே அழகா இருக்குங்க.”

    “கார் அழகு சொன்ன ஓகே. நா எங்க அழகா இருக்கேன்.?”

    “ஏங்க நீங்க நல்லா செகப்பா கொஞ்சம் தாடியோட அழகாதாங்க இருக்கீங்க.”

    “ம்ம்.. நீ சொன்ன சரி தான் இருக்கும்.”

    “அப்படி எல்லாம் இல்லீங்க.”

    “அப்போ நா அழகா இல்லீயா?”

    “அய்யோ யாருங்க சொன்னது நீங்க அழகு இல்லைனு.”

    “நீ தான இப்ப சொன்ன அப்படி எல்லாம் இல்லைனு?”

    “அய்யோ நா அதுக்கு சொல்லலீங்க. நா சொன்னா சரி இருக்கும் சொன்னீங்கள அதுக்கு சொன்னேன்ங்க.”

    “ஹேல் கூல்.. சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.”

    “ம்ம். சரிங்க. கார் எப்பவுமே இப்படிதா ஜில்லனு இருக்குமாங்க?” கேட்டதும் படக்கென்று எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

    நான் சிரித்தபடியே “அப்படியெல்லாம் இல்ல தாமரை. ஏசி போட்ட தான் ஜில்லனு இருக்கும். இல்லைனா சாதாரணமா தான் இருக்கும்.”

    “ஓ.. அப்படியாங்க. இதுல ஏசி எங்க இருக்குங்க” பின் சீட்டை திரும்பி பார்த்தாள்.

    “ஏய் தாமரை என்ன பாக்குற?”

    “ஒன்னுமில்லீங்க ஏசிய எங்க வைச்சு இருக்கீங்க பாக்குறேன்.” சொன்னதும் அவளை ஆச்சரியமாக பார்த்தேன். காரில் ஏசி எங்கே இருக்கும் என கூட தெரியாமல் இவ்வளவு வெகுளியாக இருக்கிறாள்.

    “ஏய் இங்க பாரு” கார் ஓட்டியபடி அவளின் கையை பிடித்து காற்று வரும் இடத்தை காட்டினேன்.

    “அட ஆமாங்க. நல்ல ஜில்லுனு வருதுங்க. கார்க்குள்ள வெயிலே தெரியலீங்க.”

    “சரி தாமரை நீ கார்ல முன்ன பின்ன போய் இருக்கியா?”

    “ம்ம். ஒரே ஒரு தரம் போய் இருக்கேங்க.”

    “அப்படியா சூப்பர்”

    “அது சூப்பர்லா இல்லீங்க. கஸ்டமர் ஒருத்தர் தான் கார்ல வந்து இருக்கேன். என் கூட நைட்டுக்கு வரியா. நிறைய பணம் தரேன் சொன்னான். நானும் அவன நம்பி போனேங்க. கார்க்குள்ள போனதும் தாங்க தெரிஞ்சுது. அவன் மட்டும் இல்ல. இன்னும் நாலு பேர் இருக்குறது. அன்னிக்கு நைட் நரக வேதனைங்க.” என்றதும் என் மனதில் சுருக்கென்று ஒரு வலி என்னையும் அறியாமல் உண்டானது.

    உடனே தாமரையிடம் “தேவையில்லாத கேட்டேன் போல சாரி தாமரை.” சொன்னதும்

    அவள் பதறி “என்னங்க நீ போய் என்கிட்டலா மன்னிப்பு கேட்டுட்டு. நீங்க கேட்டதுக்கு நா எதுவும் நெனக்கலீங்க.”

    “நீ எதும் நெனைக்கமாட்ட தெரியும். இருந்தாலும் கேட்காம இருந்து இருந்தா இப்ப நீ அத பத்தி நெனச்சு இருக்க மாட்டில.”

    “அட அதெல்லாம் இல்லீங்க. அத மறக்குறதுக்கு தான் இப்ப உங்க கூட கார்ல போய்ட்டு இருக்கேன்ல. எனக்குலா இதுவே அதிகம்ங்க. நா இப்படி உங்க பக்கத்துல கார்ல உட்காந்திட்டு போவேன் கனவுல கூட நெனக்கலீங்க.. நீ எனக்கு நெறைய செய்றீங்க. எனக்கு நீங்க தெய்வம் மாதிரிங்க.”

    “இந்தா மறுபடியும் தெய்வம் சொல்லி புலம்ப ஆரம்பிச்சிட்டியா.”

    “இது உண்மைதாங்க. உங்களுக்காக வேணா இனி இப்படி சொல்லலீங்க.”

    “ம்ம். தட்ஸ் குட்” என அடுத்து பொதுவாக சிலவற்றை பேசிக் கொண்டே வர வேண்டிய அந்த பிரம்மாண்டமான துணிக்கடைக்கு வந்துவிட்டோம். காரை நேராக பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு கடைக்குள் செல்வதற்குள் தாமரை என் கையை பிடித்து நிறுத்தி

    “என்னங்க இவ்வளவு பெரிய கடையா இருக்குங்க. நா வேற இந்த மாதிரி டிரஸ் போட்டு இருக்கேன். ஏதாவது சொல்லிட போறாங்க. நா வேணா இப்படி ஒரு ஓரமா நிக்கிறேன்ங்க. நீங்க போய் உங்களுக்கு தேவையானத வாங்கிட்டு வாங்க” என்றாள் தாமரை..

    “ஹேய் அதலாம் ஒன்னும் சொல்லமாட்டங்க. உன் கூட நா வரேன்ல. எனக்கு மட்டும் இல்ல. உனக்கும் சேத்து தான் வாங்கனும் பேசாம என் கூட வா” சொல்லி விட்டு நான் முன்னே நடக்க தாமரை வேறு எதுவும் பேச முடியாததால் மெதுவாக என் பின்னாலே தலையை குனிந்தபடியே நடந்து வந்தாள்.

    நான் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் சுடிதார் செக்சன் எங்க இருக்கு கேட்க

    அந்த பெண்ணும் “பர்ஸ்ட் ஃப்ளோர் சார்” சொல்ல அங்கிருந்த எஸ்க்லேட்டரில் ஏறுவதற்கு முன் தாமரை திரும்பி பார்க்க என் பார்வைக்கு அர்த்தம் புரிந்து என் பக்கத்தில் வந்து அவளின் கையை பிடித்தபடி அதில் காலை வைக்க தாமரையும் சேர்ந்து காலை வைக்க முதன் முறையாக என்பதால் அவள் சற்று தடுமாறும் போது கண்ணை மூடி என் கையை இறுக்க பிடித்துக் கொள்ள அப்படியே பர்ஸ்ட் ஃப்ளோருக்கு சென்றோம்.

    “ஏய் தாமரை நாம வந்தாச்சு.” கண்ண தொற சொன்னதும் கண்ணை திறந்து பார்த்தாள். அவளை நேராக சுடிதார் செக்சனுக்கு கூட்டி சென்று அங்கு நின்றுக் கொண்டிருந்த பெண்ணிடம்

    “லேட்டஸ்ட் மாடல் சுடிதார் எடும்மா” சொல்ல

    அந்த பொண்ணும் “யாருக்கு சார்?” கேட்க

    “இதோ இவங்களுக்கு தான்” தாமரையை கை காட்ட

    “மேடம் சைஸ் சொல்லுங்க” அந்த பெண் கேட்க

    தாமரை “தெரியல” என்னை பார்க்க

    நான் அந்த பெண்ணிடம் “நீயே அளவு எடுத்துக்கோ” சொல்ல அந்த பெண்ணும் தாமரையின் கையை தூக்க சொல்லி அளவு எடுத்தாள்.

    “சார் ஃபிட்டா எடுத்துக்காட்டவா இல்ல கொஞ்சம் லூஸ் இருக்கனுமா சார்?” கேட்க

    “ரொம்ப லூஸ் வேணாம்” சொல்ல அதற்கேற்ப சுடிதாரை எடுத்து போட்டாள்.

    “இதெல்லாம் இப்ப வந்த மாடல் தான் சார்..” சொல்ல

    “உனக்கு எது வேணுமோ அத எடுத்துக்கோ தாமரை” சொல்ல

    “எனக்கு தெரியலீங்க. நீங்களே எடுத்துடுங்க” சொல்ல வேறு வழியில்லாமல் அந்த சுடிதாரில் இருந்து தாமரையின் கலருக்கேற்ப மூன்று சுடிதாரை எடுத்துக் கொடுத்தேன். அவளும் வாங்கி கொண்டாள்.

    அடுத்து அங்கிருந்த பெண்ணிடம் இன்னர்ஸ் செக்ஸன் கேட்டு தாமரையை அங்கு கூட்டிட்டு சென்றேன். இப்போது தாமரையிடம் “உன் பாடி அளவாது தெரியுமா?” கேட்க

    “அது தெரியும்ங்க” என்றாள் பாவமாக

    “சரி வா”

    “இப்ப அதான் வாங்க போறாமாங்க.?”

    “ம்ம்.. ஆமா பேசாம வா” சொல்லி விட்டு நடந்து சென்று அங்கிருந்த பெண்ணிடம் தாமரையின் அளவை சொல்லி அவளுக்கு தேவையான உள்ளாடை வாங்கி கொண்டு அதோடு எனக்கு தேவையான துணியையும் எடுத்துக் கொண்டு அந்த கடையை விட்டு வெளியே வந்து நேராக ஒரு ஹோட்டலுக்கு சென்றோம்.

    “நீ என்ன சாப்பிடுற தாமரை.?”

    “இங்க என்ன இருக்கும்ங்க?”

    “டிபன் பிரெஞ்சு ஃரைடு ரெஸ், புரோட்டா எல்லாமே இருக்கும்”

    “இட்லி இருக்குமாங்க?” அவள் கேட்க

    “இட்லியா?” ஆச்சரியமாக பார்த்தேன்.

    அங்கிருந்த பேரரரை கூப்பிட்டு “இட்லி இருக்கா” கேட்க அவனும் “இருக்கு” சொல்ல

    தாமரை “ரெண்டு போதுங்க” என்றாள். அதோடு சேர்த்து எனக்கு தேவையானதை ஆடர் குடுத்துவிட்டு இருந்தேன்.

    “உனக்கு ரெண்டு இட்லி போதுமா?” தாமரை.

    “போதுங்க. மதியம் சாப்பிட பிரியாணி இன்னும் வயித்துல இருக்குங்க. பசி இல்ல.”

    “என்னமோ போ. இப்படி சாப்பிட்டா ஒல்லியா தான் இருப்ப.”

    “அட அது பரவா இல்லீங்க” சொல்லிட்டு இருக்க அதற்குள் ஆடர் பண்ண எல்லாம் வந்துவிட சாப்பிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வரும் வழியில் இரண்டு பீர் வாங்கி கொண்டு வந்தேன்.. வீட்டிற்குள் வந்ததும் தாமரை என் காலில் படக்கென்று விழுந்து விட்டாள்.

    அவள் இனியும் வருவாள்…

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

    Leave a Comment