This story is part of the அவளும் பெண் தானே series
சென்ற பகுதியின் தொடர்ச்சி…
அன்று இரவு அகல்யாவை நினைத்துக் கொண்டே ஹாலில் தரையில் படுத்து விட்டத்தை பார்த்தபடி இருந்தேன். என் மனதில் மீண்டும் மீண்டும் அவள் ‘ஐ லவ் யூ’ சொன்ன விதம் தான் வந்துக் தோன்றிக் கொண்டே இருந்தது. அவள் சொன்னது மாதிரி நானும் சொல்லி சொல்லி முயற்சி செய்து பார்த்தேன்.
ஆனால் அவள் சொன்னது அழகாக நளினமாக என்னால் சொல்ல முடியவில்லை. அப்போது தான் இந்த விசயத்தில் பெண்கள் தான் சிறந்தவர்கள் என புரிந்தது. அந்த சமயம் பார்த்து என் மொபைலில் ஏதோ நேட்டிபிகேசன் வர அதை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் மீண்டும் அகல்யாவை நினைத்தபடி விட்டத்தை பார்க்க துவங்கிவிட்டேன்.
அடுத்த ஓன்றிரண்டு நிமிடங்களில் என் மொபைல் சிணுங்க எடுத்து பார்த்தேன். அந்த நம்பரை பார்க்கும் போது கம்பெனி நம்பர் போலவும் தெரியவில்லை. சரி யார் என பார்ப்போம் நினைத்து கால் அட்டன் செய்வதற்குள் கட் ஆனது. “அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அட்டன் பண்றதுக்குள்ள கட் பண்ணிட்டான்” மனதில் நினைத்தபடி மீண்டும் என் மனம் அகல்யாவை நோக்கி செல்ல என் மொபைல் மீண்டும் சிணுங்க எனக்கு எரிச்சலாக இருந்தது.
“யார்ரா இந்த நேரத்துல வந்து கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கிறது” மனம் நொந்தபடி காலை அட்டன் செய்ய மனுமுனையில் ‘ஹலோ’ என பெண்குரல். அதுவும் அந்த குரல் அவ்வளவு மென்மையாக இருந்தது.. பதிலுக்கு நானும்
“ஹலோ யாருங்க வேணும்?” கேட்க
“ம்ம்.. நீங்க தா வேணும்.. கிடைப்பீங்களா?” என அந்த பெண் வில்லங்கமாக பேச
“என்னடா இந்த நேரத்துல நமக்கு வந்த சோதனை.. எல்லாத்தையும் விட்டுட்டு இப்ப தான் நல்லபடியா வாழலாம் என நினைச்சு எல்லாம் நல்லா போகுதே அப்படியே போகட்டும் நெனச்சேன்.. இப்ப அது முடியாது போல தெரியுது. இது யாரு தெரியல..
இவள்ட்ட என்ன என்ன சொல்லி வச்சியிருக்கேன் வேற தெரியல. ஏதாவது கேட்ட என்னத்த சொல்லி சமாளிக்க தெரியலே.. சரி ஏதாவது சொல்லி சமாளிப்போம்.. நமக்கா வழி கிடைக்காம போய்டும்” மனதில் கொஞ்சம் நிதானத்தையும் உறுதியையும் வரவழைத்துக் கொண்டு
“ஹலோ யாரு நீ உனக்கு என்ன வேணும். ?” மறுபடியும் கேட்க
“ம்ம்.. அதான் சொன்னேன்ல நீங்க தான் வேணும்” அவளும் சொல்ல
இவள் யார் கண்டுபிடிக்க வேண்டும் என மொபைலில் நெட் ஆன் செய்து ட்ரூ காலரில் இந்த நம்பரை டைப் செய்ய அது லோட் ஆகி இறுதியில் ‘அகல்யா சிஸ்டர்’ என காட்டியது.
என் மனதில் “ஓ.. இது நீ தான.. சரி சரி.. உன்னைய ஒரு வழி பண்றேன்” மனதிற்குள் சொல்லிக் கொண்டு அவளிடம்
“என்ன மேடம் கேட்டீங்க?” மறுபடியும் நான் கேட்க
“ஏன் காது கேட்கலையா?”
“ஆமா காதுல கொஞ்சம் சரியா கேட்கல.. ஓன் மோர் டைம் சொன்னிங்கனா நல்லா இருக்கும்.” சொல்ல
“ம்ம்.. நீங்க தான்ன்ன் வேணும்ம்ம்” முன்பை விட கொஞ்சம் சத்தமாக சொல்ல
“அப்படியா நா ரெடி மேடம்.. அட்ரெஸ் சென்ட் பண்றேன்.. வந்தீங்கனா எடுத்துக்கலாம்” சொல்ல
அகல்யா மறுமுனையில் பதறி போய் “ஹலோ சார் நா அகல்யா பேசுறேன்” என்றாள்..
“ம்ம் அதான் தெரியுமே.. தெரிஞ்சு தான் அப்படி சொன்னேன்.”
“அப்படியா.? இப்படி சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” அவள் கேட்க
“நீ அப்படி கேட்க எவ்வளவு தைரியமோ அதை விட தைரியம் கொஞ்சம் கூட தான் இத சொல்ல” பதிலளித்தேன்.
“அய்யோ.. உங்கள பாக்கும் போது வச்சுக்கிறேன்..”
“ஏன் இப்ப கூட வச்சுக்கோ யார் வேணா சொன்னா?”
“பிளீஸ் பிளீஸ் ஸ்டாப் இட். பிளீஸ் இனி நானும் இந்த மாதிரி பேசல.. நீங்களும் பேச வேணாம் பிளீஸ்.”
“ஏன் என்ன ஆச்சு.?”
“இல்ல ஒன்னும் ஆகல.” சொன்னாலும் அவள் சொல்வதில் இருந்தே அவளின் மனதில் காதல் உணர்ச்சிகளோடு காம உணர்ச்சிகளும் தூண்டிவிடபட்டு அவளை நிலை குலைய செய்திருக்கின்றன என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
பின் அகல்யா “சரிப்பா கால் கட் பண்றேன். நா வாட்ஸ்ஆப்ல மெசேஜ் பண்றேன்.” என சொல்லிவிட்டு கால் கட் செய்தாள்..
வாட்ஸ்ஆப்பில் “நீங்க இப்ப ஃபிரியா தான இருக்கீங்க.? இல்ல ஒர்க் எதும் இருக்கா உங்களுக்கு. நா எதுமே கேட்காம கால் பண்ணி பேசி இப்ப மெசைஜ் பண்ணியும் டிஸ்டர்ட் பண்ணிட போறேன்.” என அடுக்கடுக்கா விடாமல் மெசேஜ் செய்தாள்.
உடனே நான் “ஹேய் அதலாம் எந்த ஓர்க் இல்ல அம்மு. நா ஃபிரியா தா இருக்கேன்.” பதில் அனுப்பினேன். நான் பதில் அனுப்பிவிட்டு அவளின் வாட்ஸ்அப் டிபி பார்த்தேன். அதில் இன்று கட்டியிருந்த புடவையில் எடுத்த ஃபோட்டாவை வைத்திருந்தாள்.
“ம்ம்.. சரிப்பா சாப்டிங்களா?” அவள் கேட்க
“இல்ல சாப்பிடல.”
“ஏன்ப்பா சாப்பிடல.?”
“எனக்கு செஞ்சு தர ஆளில்ல. அதுமட்டும் இல்ல இப்ப மனசு சந்தோஷமா இருக்கு. சாப்பிடவே தோணல.. அப்படியே ஹால்ல ஹாயா படுத்திட்டேன்.”
“ஏன் உங்க வீட்டுல ஆள் யாரும் இல்லையா?”
“ம்ம்.. ஆமா இந்த வீட்டுல நீ மட்டும் தா இருக்கேன்.”
“ஏன்ப்பா அப்படி உங்க அப்பா அம்மா இல்லையா? எங்க இருக்காங்க? ”
“தெரியல.. ஆனா இருக்காங்க.” மட்டும் சொன்னேன். அதன் பிறகு அவளும் அதை பற்றி எதுவும் கேட்கவில்லை.
நானும் அதை பற்றி வேறு எதும் சொல்லாமல் டாப்பிக்கை மாற்றினேன்.
“உன் டிபில ரொம்ப அழகா இருக்க அம்மு?”
“அப்படியா. தேங்க்ஸ்.”
“உங்க டிபில உங்களோட ஃபோட்டா வைங்க. நானும் உங்கள பாத்துக்கிறேன்.”
“நா உன்ன மாதிரி அழகாக இல்ல அம்மு..”
“அட யாரு சொன்னா நீங்க அழகு இல்லைனு. அதலாம் நீங்க அழகாக தான் இருக்கீங்க.”
“நீங்க டிபில வைங்க. நா பாக்கனும்.”
“கண்டிப்பா வைக்கனுமா?” அவளிடம் கேட்க
“ஏன்பா அப்படி கேக்குறீங்க?”
“இல்ல என் மூஞ்சிய நானே பாக்கிற மாதிரி இருக்குமே அதான் கொஞ்சும் யோசிக்கிறேன்.”
“அதலாம் ஒன்னுமில்ல. நீங்க வைங்க. நா பாக்கனும். உங்களுக்கு பிடிக்கலைனா புரோப்ஃபைல் பாக்காதீங்க.” சொல்ல அகல்யாவிற்காக முதன்முறையாக டிபியில் செல்பி எடுத்து அப்படியே வைத்தேன்.
அவள் அதை பார்த்துவிட்டு என்னிடம் “கொஞ்சம் சிரிச்சபடி எடுத்தா என்னவாம்.. இப்படியா உர்னு இருக்குற மாதிரி எடுபபாங்க.” கேட்டாள்.
“எனக்கு அழகாக இருக்கவறவங்கள தான் அழகாக எடுக்க தெரியும். என்னை நானே அழகாக எடுத்ததில்ல.” என்றேன்..
“அதலாம் முடியும் எடுங்க.. கொஞ்சம் ஃபேஸ் சிரிச்ச மாதிரி எடுங்க.”
“சிரிச்ச மாதிரியா? எனக்கு சிரிப்பு வரலையே” சொல்ல
“என்னைய பிடிக்கும்ல?” அவள் கேட்க
“ம்ம் ரொம்ப பிடிக்கும்.. ஏன் கேக்குற?”
“அப்போ என்னைய உங்க மனசுல நெனச்சா சிரிப்பு தான வரும்.. அப்படியே ஒரு செல்பி எடுங்க..”
“அப்படியா சொல்ற. இது ஒர்க் அவுட் ஆகுமா?” என நான் கேட்க
“அதலாம் ஆகும்.. ஆகலனா கூட ட்ரை பண்ணுங்க.. கண்டிப்பா ஒர்க்அவுட் ஆகும்.” அவள் சொல்ல
அவள் சொன்ன மாதிரியே அவளை என் மனதில் நினைக்க என் உதடுகள் என்னையும் அறியாமல் விரிந்தன. அப்படியே ஒரு செல்பி எடுத்து டீபியில் வைக்க உடனே பார்த்துவிட்டாள் போல அதை வைத்த அடுத்த நிமிடமே அவளிடமிருந்து
“இப்ப எப்படி கியூட்டா சூப்பரா இருக்கு. நீங்க சிரிச்சா உங்கள் கன்னத்துல அழகா குழி விழுக்குது.” என்றாள்..
அதற்கு “ம்ம்.. ஆமா விழும்” மட்டும் பதில் அனுப்பினேன்..
அடுத்த இரண்டு நிமிடத்தில் நான் டீபியாக வைத்திருந்த ஃபோட்டாவை டவுட்லோட் செய்து அந்த கன்னக்குழி இருக்கும் இடத்தில் ‘💋’ ஸ்மைலி வைத்து அனுப்பினாள். இப்படியெல்லாம் அவள் செய்வாள் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. உண்மையில் இது ஆச்சரியமாக தான் இருந்தது..
“ஹேய் அம்மு என்ன இப்படி சொல்லாம ஷாக் அன்ட் சர்பைஸ் எல்லாம் தர்ற”
“ஆமா அந்த ஃபோட்டா பாத்ததும் தோணுச்சு.. அதான் இப்படி.”
“ம்ம்.. டு டே எனக்கு ரொம்ப லக்கிடே போல நா நினைக்காது எல்லாம் தானா அதுவா நடக்குது.”
“ம்ம்.. அப்படியா சரி.. ஏதாவது சாப்பிட்டு தூங்குங்க குட் நைட்” என்றாள்..
“என்ன அம்மு அதுக்குள்ள குட் நைட் சொல்லிட்ட” கேட்க
“ஹலோ சார் மணிய பாருங்க.” என்றதும் மணி இரவு 10.30 ஆகியிருந்தது.
“நாம ஓன் ஹவரா பேசியிருக்கோம்.. டு டே போதும்.. நாளைக்கு ஃபிரிடைம்ல மெசேஜ் பண்றேன்.. இப்போ டின்னர் சாப்பிட்டு தூங்குங்க.. குட் நைட் ஸ்வீட் டிரிம்ஸ்” என அனுப்பிவிட்டு ஆப்லைன் சென்றுவிட்டாள்.
அவள் சென்றாலும் அவள் ஏற்படுத்தி விட்டு சென்ற சுக நினைவுகள் இன்னும் மனதை நீங்காமல் தான் இருந்தது. அதையே மீண்டும் மீண்டும் அசை போட்டபடி படுத்திருந்தேன். அந்த நினைவிலே மிதந்து கொண்டிருந்த நான் சாப்பிடாமல் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை.
காலையில் நோட்டிபிகேஷன் சத்தம் கேட்டு தான் முழிப்பு வர வாட்ஸ்அப்பில் அகல்யா ஒரு அழகான ரோஜா பூ படத்துடன் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பியிருந்தாள். எனக்கு இருந்த தூக்கத்தில் வெறும் குட் மார்னிங் மட்டும் அனுப்பிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தேன்.
அன்றையில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகல்யா வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தாள். எனக்கும் பெரிய அளவில் வேலை இல்லாததால் அகல்யாவுடன் சாட் செய்ய முடிந்தது. அகல்யா அவள் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களை பற்றி பேசினாள்..
பின் அவளுக்கு பிடித்த விசயங்கள் என அவளுக்கு தோன்றியதை எல்லாம் பேசினாள். இதனால் அந்த ஒரு வாரத்தில் பேசியதில் இருந்து இருவருக்குமிடையே ஒரு புரிதல் ஏற்பட்டு இருந்தது.
ஒரு நாளையில் காலையில் அகல்யா குட்மார்னிங் வித் ஓன் குட் நியூஸ் என அனுப்பியிருந்தாள். அவள் எப்போதும் போல காலையில் அனுப்பிவிட்டாள். ஆனால் நான் கொஞ்சம் தலைவலி, காய்ச்சலாக இருந்ததால் அதை நேரம் கழித்து பார்த்திருக்கிறேன்..
அந்த மெசேஜ் பார்த்த உடனே அவளுக்கு ரியலி என மட்டும் அனுப்பிவிட்டு படுக்கையிலே படுத்திருந்தேன். சில நிமிடங்கள் கழித்து அகல்யா கால் செய்தாள். நான் சோர்வுடனே ஹலோ என சொல்ல அவள் மறுமுனையில் இருந்து
“என்னப்பா ஆச்சு.. உங்க வாய்ஸ் ஒரு மாதிரி டல்லா இருக்கு?”
“கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான். வேற ஒன்னுமில்ல.”
“ஏன் என்ன ஆச்சு?”
“தலைவலி” சொன்னேன்.
“ஃபீவர் இருக்கா?” அவள் கேட்க
“இருக்கு தான் நெனக்கிறேன்.”
“என்னது நெனக்கிறிங்களா? நெத்தி கழுத்துல எல்லாம் தொட்டு சூடா இருக்கா பாருங்க.”
“ம்ம்.. கொஞ்சம் சூடா தான் இருக்கு..”
“சரி டேப்லட் எதும் போட்டிங்களா?” கேட்டாள்.
“இல்ல அம்மு. ரொம்ப டயர்ட் இருக்கு. இப்ப தான் கண் முழிச்சேன். பட் எந்திரிக்க முடியல.” என்றேன்.
“அப்படியா. பக்கத்துல கெல்ப்க்கு யாராவது கூப்பிடலாம்ல.”
“பச்.. வேணாமா அம்மு நா பாத்துக்கிறேன். சரி குட் நியூஸ் மெசேஜ் பண்ணியிருந்த என்ன குட் நியூஸ்?”
“ஹோம்ல இன்னும் கொஞ்சம் ஓர்க் இருக்கு. அதையும் உங்ககிட்ட குடுக்கலாம் இருக்காங்க. மதர் கால் பண்ணி சொல்வாங்க.”
“ஓ.. ஓகே.. அம்மு.”
“சரிப்பா உடம்ப பாத்துக்கோங்க.. நா கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்றேன்.” என சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
அதன் பின்னும் எனக்கு மிகவும் சோர்வாக இருந்ததால் என்னால் படுக்கை விட்டு எழுந்தரிக்க முடியவில்லை. அப்படியே மீண்டும் கண்ணை மூடி படுத்துவிட்டேன். சிறிது நேரம் மீண்டும் தூங்கிவிட்டேன். ஆனால் அப்படியே மீண்டும் எவ்வளவு நேரம் தூங்கினேன் என தெரியவில்லை. என் மொபைல் சத்தம் கேட்டு கண்ணை விழித்து பார்த்தேன். மீண்டும் அகல்யா தான் கால் பண்ணியிருக்கிறாள். அப்போது காலை 10மணி..
கால் அட்டன் செய்ததும் அகல்யா “என்னப்பா எழுந்து ஏதாவது சாப்பிட்டிங்களா?” தான் முதலில் கேட்டாள்.
“இல்ல அம்மு.. இன்னும் எந்திரிக்கவே இல்ல. டயர்ட்டா தான் இருக்கு. அப்படியே தான் படுத்திருக்கேன்.. நீ கால் கட் பண்ணதும் திரும்பி தூங்கிட்டேன்.. இப்ப கால் பண்ண சத்தம் கேட்டு தான் முழிச்சேன்.” என்றேன்
“அப்படியா? சரி உங்க அட்ரெஸ் சொல்லுங்க. நா வேணா வரேன்..”
“இல்ல அம்மு. உன்னால எப்படி வர முடியும்.. நீ என்னனு ஹோம்ல சொல்லிட்ட வருவ.?” நான் கேட்க
அவள் “நா ஹோம்க்கு தேவையான சில திங்க்ஸ் வாங்க டிபார்மெண்டல் ஸ்டோர்க்கு வந்திருக்கேன். சோ ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க அட்ரெஸ் சொல்லுங்க. நா வரேன்.”
“சரி எப்டி வருவ?”
“இது என்ன கேள்வி? உபர் புக் பண்ணினா அவனே உங்க வீட்டுல கொண்டு வந்து விட போறான்.”
“சரி.. அப்போ வரேன் சொல்றியா?”
“ம்ம்.. உங்களுக்கு தான் முடியலைல. சோ வரேன்..” அவள் சொல்ல
“சரி அட்ரெஸ் அனுப்புறேன்.” என நானும் என் வீட்டு அட்ரெஸ் அவளுக்கு வாட்ஸ்அப் செய்து விட்டு மீண்டும் கண்ணை மூடினேன்..
அவள் இனியும் வருவாள்…
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.