This story is part of the அவளும் பெண் தானே series
அவளும் பெண் தானே – 14
சென்ற பகுதியின் தொடர்ச்சி…
அகல்யாவின் பார்வையிலே கதை தொடர்கிறது…
அன்று புதிதாக கட்டிய கட்டிடத்தை திறந்து வைக்க சில முக்கிய நபர்களை ஹோமிலிருந்து அழைத்திருந்தனர். அதில் அரசியல் பிரமுகர்களும் இருந்தனர். ஒரு ஓரமாக இந்த கட்டிடத்தை கட்டி கொடுத்த அவருடைய ஆட்களும் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களையும் அழைத்திருந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு காரணம் இவர்களை அழைத்திருந்தால் கண்டிப்பாக அவரையும் அழைத்திருப்பார்கள் என என் மனம் வேகமாக சிந்தித்து செயல்பட்டு கண்கள் அவர் எங்கு நிற்கிறார் என சுற்றிலும் தேடியது.
அந்த சமயம் பார்த்து மதர் என்னை கூப்பிட முதல் முறையாக அவர்கள மீது கொஞ்சம் எரிச்சல் வந்தது. என் மனநிலை புரியாமல் கூப்பிடுகிறார்களே என நொந்துக் கொண்டேன். இருந்தாலும் அவர்களின் மீது வைத்திருந்த மரியாதைக்காக மதர் இருக்கும் இடத்தில் போய் நிற்க அவரை அங்கிருந்த ஒரு முக்கிய அரசியல்வாதியிடம்
“இது அகல்யா.. இங்க தான் வளந்தா.. இப்ப இவளும் இந்த ஹோமை பொறுப்பா பாத்துக்கிறா.. எனக்கு பிறகு இவ தான் பாத்துக்கிற மாதிரி வரும்.. உங்க சைடுல இருந்து ஏதாவது பண உதவி பண்ணினா நல்லா இருக்கும்.” சொல்ல
அந்த அரசியல்வாதி என்னை காம பார்வையுடன் பார்த்துக் கொண்டே
“இங்க வந்தது மனசுக்கு நிம்மதியா இருக்கு.. மனசுக்கு பிடிச்ச ஆட்களாக இருக்காங்க. அதுக்காகவே பெருசா செஞ்சிடுறேன்.” என்றார்.
எனக்கு அவரின் பார்வையும், பேச்சும் சுத்தமாக பிடிக்கவில்லை. அதனாலே அந்த அரசியல்வாதியை பார்க்க பிடிக்காமல் தலையை குனிந்தபடி நின்றுக் கொண்டிருந்தேன். எப்போது அந்த இடத்தை விட்டு நகருவேன் என்றிருந்தது. நல்ல வேளை சிறிது நேரத்தில் அந்த அரசியல்வாதி நகர்ந்து செல்ல அப்போது தான் எனக்கு நிம்மதியை வந்தது. அவர் என்னை கடந்து செல்லும் போதும் அதே காம பார்வையுடனே கடந்து சென்றார்.. இந்த அரசியல்வாதிகளுக்கு இது வேலை தான் போல் என நானாக மனதில் நினைத்துக் கொண்டேன்..
அந்த அரசியல்வாதி சென்றதும் மீண்டும் என் கண்கள் அவரை தேட ஆரம்பித்தன. அவர் கூட்டி வந்து வேலையாட்கள் எல்லோரும் இருந்தனர். ஆனால் அவரை மட்டும் காணவில்லை. நான் பேசியது பிடிக்காமல் தான் வராமல் இருக்கிறாரோ என தோன்றியது. அது தான் காரணமாக இருக்கும் என மனது கிட்டதட்ட முடிவே பண்ணிவிட்டது. இருந்தாலும் கடைசியாக அந்த வேலையாட்களிடம் வேண்டுமானால் கேட்டு பார்க்கலாம் தோன்றியது.. என் கால்கள் வேகமாக அந்த வேலையாட்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தது. அவர்கள் அனைவரும் என்னை பார்த்ததும் மரியாதைக்காக எழுந்து நின்றனர்..
“அந்த சார் ஃபங்க்சனுக்கு வரலியா?” கேட்க அங்கிருந்தவர்களில் ஒருவர்
“எந்த சார் மேடம் கேட்க?”
“உங்கள எல்லாம் இங்க வேலை பாக்க சொன்ன இன்ஜினியர் சார் தா கேக்குறேன்.”
“தெரியல மேடம்.. நாளைக்கு இங்க பங்க்சன் எல்லாரும் போய்டுங்க மட்டும் அவரிட்ட இருந்து தகவல் வந்துச்சு.. மத்தபடி என்ன விவரம் எங்களுக்கு தெரியல.. அப்படி தானப்பா” மற்ற எல்லோரையும் கேட்க அவர்களும் ‘ஆமா’ என ஆமேத்தினர்..
“சரி அந்த சார் நம்பர் இருக்கா?” கேட்டேன்..
“இருக்கு மேடம்.” சொல்லிட்டு அந்த ஆள்
“எதுக்கு கேக்குறீங்க மேடம்?” கேட்க ஒருவினாடி சப்தநாடியும் நின்று போனது போல் ஆகிவிட்டது.. பின் நானே சுதாரித்து
“அடுத்த கான்ட்ராக்ட் பத்தி மதர் பேச கூப்பிட்டு வர சொன்னாங்க.. இங்க தான் அந்த சார் இல்லீயே.. அதான் நம்பர் இருந்தா குடுங்க.. நானே கால் பண்ணி பேசிக்கிறேன்.” என்றேன்.
முதன்முறையாக அந்த ஒற்றை ஆணுக்காக என் வாயில் இருந்து பொய் வந்திருக்கிறது. ம்ம்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ யாருக்கு தெரியும் என மனதில் நினைத்துக் கொண்டேன்.
அதற்குள் அங்கிருந்த ஒருத்தர் அவரின் நம்பரை சொல்ல படபடவென மொபைலை ஆன்லாக் செய்து அவர் சொன்ன நம்பரை டைப் செய்து டயல் செய்ய ரிங் ஆனது.. நம்பர் சொன்ன நபரிடம் “ரொம்ப தாங்க்ஸ்” சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
மறுமுனையில் கால் அட்டன் செய்ததும் என் இதயம் படபடவென அடித்தது. அவரிடம் என்ன பேசுவது எதை பற்றி பேசுவது என ஒன்றும் தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். ஏதோ ஒரு வேகத்தில் நம்பரை வாங்கி காலும் பண்ணிவிட்டேன். இப்போது அவர் காலையும் அட்டன் செய்தும் விட்டார் என மனதிற்குள் இந்த சில வினாடிகளில் போராட்டம் நடந்துவிட்டது. அவரிடமிருந்து ‘ஹலோ’ என்ற வார்த்தை என் காதில் வந்து விழுந்தது. அவரின் இந்த மென்னையான குரலை இரண்டு நாட்கள் கேட்காமல் இழந்து விட்டேனே என்ற வருத்தம் வந்து எட்டி பார்த்தது.
மறுபடியும் அவரிடமிருந்து,
“ஹலோ யார் பேசுறீங்க.? என்ன வேணும் டக்குனு சொல்லுங்க டிராபிக் சிக்னல் நிக்குறேன்” என்றார்.. ஒருவேளை இங்கு தான் வந்து கொண்டிருப்பாரோ என்று கூட தோன்றியது. நான் எந்த பதிலும் பேசாததால் அவரே அதற்குள் “நா அப்பறம் கூப்பிடுறேன்” என சொல்லி காலை கட் செய்தார். அவராக கூப்பிடுகிறேன் சொன்னதால் அதற்கு மேல் நான் கால் பண்ணவில்லை. அவரின் போன் காலோடு வருக்கைக்கும் சேர்த்து காத்திருந்தேன். அந்த காத்திருப்பில் அவரை பற்றிய நினைவுகளில் மூழ்கி போனேன். அதில் அவர் உள்ளே நுழைந்து வருவதை கூட கவனிக்காமல் அவரை பற்றிய மயக்கத்திலே இருந்திருக்கிறேன் என்றால் இந்த இரண்டு நாட்களில் அவர் என் மனதை எவ்வளவு தூரம் மாற்றி இருக்கிறார் என பார்த்துக் கொள்ளுங்கள்.
மதர் வந்து “ஹே அகல்யா என்ன ஆச்சு?” என் தோளை தட்டி கூப்பிட்டதும் தான் இந்த உலகத்திற்கு வந்தேன்.. எனக்கு முன்னால் தான் அவர் மதருடன் சென்றுக் கொண்டிருக்கிறார்.. இந்த சமயம் அவரை தனியாக கூப்பிட்டு எப்படி பேசுவது என யோசிக்க ஆரம்பித்தேன். அந்த ஹோமில் சாப்பிடுவதற்கு முன் பிரேயர் அதாவது சாமி கும்பிட்ட பின் சாப்பிடுவது தான் வழக்கம்.. இப்போது அதற்கு தான் அந்த இருவரும் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களின் பின்னால் தொடர்ந்து சென்றேன். எல்லோரும் சாமி கும்பிடும் சமயத்தில் அவரிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என என் மனம் துடித்துக் கொண்டிருந்தது.
இதோ எல்லோரும் சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அதை முடிப்பதற்குள் நான் இதை சொல்லி முடிக்க வேண்டும்.. ஆனால் எப்படி அவரை பார்த்து யாருக்கும் தெரியாமல் பேசி புரிய வைப்பது என ஒரு குழப்பமும் இருந்தது.. இருந்தாலும் அதனுடன் ஒரு சிறு நம்பிக்கையும் கூடவே இருந்தது. அந்த நம்பிக்கை காப்பாற்றும் என நம்பினேன். எப்படியோ அவரின் பக்கத்தில் வந்து நின்றுவிட்டேன். என் தலையில் இருந்த மல்லிகை பூவின் மணம் அவரை என் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. நானும் அவரை பார்த்து கை காட்டி புன்னகைத்து ஹாய் என யாருக்கும் தெரியாமல் மெதுவாக வாயை மட்டும் அசைத்து சொன்னேன்.. ஆனால் அவரிடம் இருந்து புன்னகையோ பதிலோ வரவில்லை.. அதிலிருந்து இன்னும் அவரின் மனநிலை மாறவில்லை என்பது புரிந்தது.
அவர் என்னை பார்க்கும் போதெல்லாம் அவரது டிரஸ், ஹேர்ஸ்டைல் என இப்படி ஏதாவது பற்றி சைகையில் அல்லது வாயை மட்டும் அசைத்து சொல்லிக் கொண்டேயிருந்தேன்.. நான் இப்படி தொடர்ந்து பேசியதற்கு பலனும் கிடைத்தது. அவரின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. இது தான் தக்க சமயம் என முடிவு செய்து என்னை சுட்டிக்காட்டி (ஐ) பின் இரு விரலை சேர்த்து விரித்தபடி (லவ்) அவரை பார்த்து அந்த ஒற்றை விரலை நீட்டினேன் (யூ). இதற்கு பதிலாக அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் சந்தோஷத்தில் கண் விரிய விழித்துக் கொண்டிருந்தார். என் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.
என்னுடைய பார்வையில் இருந்து…
இருவரின் காதல் சொல்லும் படலத்தை இப்போதும் நினைத்து பார்க்க அதே சந்தோஷத்தை தந்தது.. அன்று அகல்யா என் காதலை ஏற்றுக் கொண்டு அவளும் தன்னை காதலிப்பதாக சொன்ன நிமிடத்தில் இருந்து நான் இந்த உலகத்தில் இல்லை.. பின் அவள் வந்து என் முன்னால் தன் அழகிய கை விரல்களை சேர்த்து சுடக்கை போட்டு “ஹலோ சார் என்ன டீரிமா? பகல்ல கனவு கண்டா பலிக்காது சொல்வாங்க” சொல்லி இந்த உலகத்திற்கு கொண்டு வந்தாள்.
இந்த கனவு சந்தோஷ கனவு. அதனால பலிக்கும். சொல்லி அவளின் இடுப்பில் கை வைத்து என்னை நோக்கி இழுக்க அவளும் எனக்கு எதிரில் வந்து நின்றாள்.
“அப்ப என்னமோ சொன்னியே. அத திரும்ப இப்ப சத்தமா சொல்லு” என்றேன்.
“ஏன் அப்ப சொன்னது புரியலையா? இல்ல கேக்கலையா?”
“ரெண்டும் தான்.. அதனால திரும்பி சொல்ல சொல்றேன்.”
“அப்படியா ஓகே.” சொல்லிவிட்டு மீண்டும் அதே போல் சைகையிலே சொன்னாள். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் அப்போது சொல்லும போது முகத்தில் வெட்கமில்லை. இப்போது அது இருந்தது.
“ஹலோ என்ன இப்பவும் அதே மாதிரி சொல்ற.. பின்ன ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி சொல்ல முடியும்.”
“சரி சரி.. என்ன திடீர்னு இவ்வளவு பெரிய மனமாற்றம்.”
“ஆமா என்னமோ எனக்கே தெரியல.
வந்துடுச்சு.”
“அந்த மாற்றம் உண்மை தான?” கேட்டேன்
“ம்ம்.. ஆமா..”
“நிஜமாவா?”
“ம்ம்” வெட்கபட்டு தலையை குனிந்தபடி ஆட்ட
“அப்ப உனக்கு ஓகே வா?” கேட்க அதற்கும் அதே வெட்கத்துடன் தலையாட்ட அவளே எதிர்பாக்காத தருணத்தில் அவளின் உதட்டுடன் உதட்டை பொறுத்தி அகல்யாவிற்கு என்னுடைய முதல் காதல் முத்தத்தை பரிசாக குடுத்தேன். அவளாக உதட்டை விலக்கி கொள்ளும் வரை என் உதடு அந்த அழகிய உதட்டின் மேல் தான் இருந்தது. இந்த முத்தம் இருவருக்குமே ஒருவித திருப்தியை தந்ததோடு மட்டுமல்லாமல் உடலினில் சிலிர்ப்பையும் ஏற்படுத்திவிட்டது.
அவள் ஆசுவாசமான பின்,
“நீங்க பெரிய ஆள் தான். ஆள் அசந்த நேரத்தில பிடிச்சு இப்படியா பண்ணுவீங்க..” என்றாள் செல்ல கோபத்துடன்
“அது என்னமோ தெரியல அம்மு.. நீ ஓகே சொன்னதும் ஒரு வேகத்துல அப்படி பண்ணிட்டேன்.” என்றேன். (அகல்யாவை அம்மு கூப்பிட்டது இதான் முதல்முறை)
“இப்ப ஓகே. இனி நா சொல்லாம என்னைய எதுவும் பண்ண கூடாது.. சரியா?”
“சரிங்க மேடம்.. உங்கள கேட்காம எதுவும் பண்ணமாட்டேன்.”
“ம்ம்.. குட் பாய்.” என்றாள்.
“சரி வாங்க சாப்பிட போகலாம்.” கூப்பிட
“மேடம் உங்க கூடவே வரலமா?” பாவமாக முகத்தை வைத்து கேட்க அவள் சிரித்துவிட்டாள்.
தலையை ஆட்டியபடி “ம்ம்.. அதலாம் வரலாம்ப்பா வாங்க.. ரொம்ப பண்ணாதீங்க” சொல்லி அவளே என் கை விரல்களுக்குள் விரல் கோர்த்து நடந்து வந்தாள்..
அந்த பெரிய ஹாலில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதனால் நான் ஒரு ஓரமாக நின்றுவிட்டேன். அகல்யா அங்கு உட்காந்திருப்பவர்களுக்கு சாப்பாடு பரிமாற ஆரம்பித்தாள். அவள் அந்த சிகப்பு நிற பூ போட்ட புடவையில் அழகாக தேவதை போல் இருந்தாள். அவளின் அழகையும் சாப்பாடு பரிமாறும் அழகையும் ஒரு சேர பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்..
ஒவ்வொருக்கும் குனிந்து பரிமாறும் போது அவளின் அழகிய இடுப்பு தெரிந்தது. அதில் வியர்வை துளிகள் வழிந்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வியர்வை துளியாக நான் இருக்க கூடாதா நினைத்து ஏக்கத்தில் பெருமூச்சு விட்டேன். நான் அவளின் இடுப்பை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்துவிட்டாள். என்னை முறைத்தபடி ‘கொன்றுவேன்’ என சத்தம் வராமல் வாயை மட்டும் அசைத்து ஒற்றை விரலை காட்டியபடி செல்லமாக எச்சரிக்கை விடுத்தாள்.
அங்கு உட்கார்ந்து சாப்பிட்ட எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்துவிட நான் போய் உட்கார்ந்தேன்.. எனக்கு அகல்யா இலையில் வந்து ஜிலேபி வைக்க அதை எடுத்து ஒரு கடி கடித்துவிட்டு மீண்டும் அவளின் கையில் யாருக்கும் தெரியாமல் குடுத்துவிட்டேன். அவள் அதை வேண்டாம் என மறுத்துவிட்டாள்.. நான் தான் பிடிவாதமாக அவளின் கையில் திணித்தேன். அந்த சமயம் பார்த்து அந்த ஹோமின் சிஸ்டர் என்னிடம்
“என்ன சார் ஆச்சு. எதுவும் பிடிக்கலையா?”
“அதலாம் இல்ல மேடம்.. இந்த ஜிலேபி கீழ விழுந்து மண்ணு ஓட்டியிருச்சு. அதான் கீழே போட சொல்லி குடுத்தேன் மேடம்” சொல்ல
“சரி சரி.. அகல்யா அத வாங்கி போட்டுரும்மா” சிஸ்டர் சொல்லிட்டு போக அவளும் முறைப்புடன்(செல்லமாக) கையில் வாங்கினாள்.
நான் “வேஸ்ட் பண்ணாம சாப்றனும்” அவளுக்கு மட்டும் கேட்பது போல் சொன்னேன்.
“பேசாம சாப்பிடுங்க.”
“நா சாப்பிடனும்னா நீ அத சாப்பிட்டு ஆகனும்.” என்றேன்.
“சரி சரி சாப்பிடுறேன்.. நீங்க வம்பு பண்ணாம சாப்பிடுங்க..”
“இப்ப என் கண் முன்னால சாப்பிடு” சொல்ல நான் குடுத்த ஜிலேபி அந்த அழகிய வாயின் இடையில் வைத்து கடித்து சாப்பிட்டாள். அந்த ஜிலேபியில் இருந்து ஒரு துளி எண்ணெய் அவளின் வாயில் இருந்து வெளியே வடிந்தது. அதே பார்க்கும் போது என்னால் அங்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார முடியாமல் உட்கார்ந்திருந்தேன். பின் ஒருவழியாக சாப்பிட்டு முடித்து வெளியே வர எனக்கு கீழ் வேலை செய்யும் ஆட்கள் வந்து அகல்யா என்னை பற்றி விசாரித்ததை சொல்ல அவர்களிடம் சரி நா பாத்திக்கிறேன் என சொல்லி அனுப்பிவைத்தேன்.
அகல்யாவை பார்த்து கூப்பிட அவள் சில்மிஷம் செய்ய தான் கூப்பிடுகிறேன் என நினைத்துக் கொண்டு நாக்கை வெளியே துருத்தி வர முடியாது என பாசாங்கு காட்டினாள்.. நான் மீண்டும் முக்கியமான விசயம் சொல்ல சில வினாடிகள் யோசித்தவள் பின் வருகிறேன் என சைகை காட்டினாள்.
அகல்யா வந்தவுடன் “என்ன சார் ஏதோ முக்கியமான விசயம் பேசனும் சொன்னீங்க.. என்ன விசயம்?” கேட்க
“ஏதோ அடுத்த கான்ட்ராக்ட் எனக்கே தர போறாதா சொன்னியாமே” கேட்டவுடன் அவளின் முகத்தில் வெட்கம் தான் இருந்தது.. எனக்கோ இதில் வெட்கபட என்ன இருக்கிறது என யோசித்தேன். பின் அவளிடமே
“ஏய் அம்மு இப்ப என்ன சொல்லிட்டேன்.. இப்படி வெட்கபடுற.”
“அது வந்து.. உங்கள பாத்து பேசனும் நம்பர் கேட்டேன். அவங்க எதுக்காக நம்பர்னு கேட்டாங்க.. அப்ப இந்த பொய்ய சொல்ல வேண்டியதா போச்சு” என்றாள்..
“அப்போ அது பொய்யா?” என நான் கேட்க
“ஆமா.. ஏன்பா?”
“இல்ல உண்மையா இருந்தா உன்னைய டெய்லி பாக்கலாம்ல” சொல்ல
அவள் உடனே “அட ஆமால.. இருங்க மதர்ட்ட பேசிட்டு சொல்றேன்” என்றாள்.. அதற்குள் அவளை கூப்பிட பை என கையில் டாடா காட்டிவிட்டு போனாள்..
அவள் இனியும் வருவாள்…
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.