கனா கண்டேனடா 4 (Kana Kandenada 4)

This story is part of the கனா கண்டேனடா series

    கனா கண்டேனடா நான்கு

    அறைக்குள் அவர் தந்த கவரோடு நுழைந்த போது என் இதயம் என்னிடமிருந்து பறிபோனதை உணரவில்லை. அவரை பார்த்தால் தான் நான் முழுமை பெற்றவளாக இருப்பதாகவே உணர்ந்தேன். அதற்குள்ளாகவே என்னில் ஒரு பாதியாகியிருந்தான்.

    அவன் எனக்காக வாங்கி வந்த பரிசை பார்க்கவேண்டும் என்றல் ஆசை மேலோங்கியிருந்தது. கவரில் இருந்து சேலையை வெளியே எடுத்தேன். மிக அழகாக இருந்தது. செல்போன் பாக்ஸ் ஐ எடுத்து பார்த்தேன். நோக்கியா என்று எழுதியிருந்தது. உள்ளே இன்னொரு கவர் இருந்தது. மாடியில் வைத்து பார்த்தபோது, இந்த கவர் இருந்த ஞாபகம் இல்லை. என்னவாக இருக்கும் என்ற ஆவல் தொற்றிக்கொள்ளவே.. வேகமாக பிரித்தேன்…

    உள்ளே ஒரு greeting கார்டு இருந்தது. சிகப்பு வண்ணத்தில் அழகாக இருந்த greeting கார்டு ஐ தொட்டு வருட.. அவனை தொடுவதை போலவே இருந்தது. மனம் சிறு பிள்ளை போல் துள்ளியது. இதுவரை யாரும் எனக்கு greeting கார்டு பரிசளித்ததில்லை. முதன் முதலாக நான் விரும்பும் ஒருவனிடமிருந்து, இவ்வளவு அழகான greeting கார்டு.

    எவ்வளவு நேரம் ரசித்தேன் என்று தெரியவில்லை. சரி, உள்ளே என்ன எழுதியிருப்பான் என்று பார்க்க ஆசை வர, greeting ஐ பிரிக்க பிரிக்க… ஹார்ட் ஹார்ட் ஆக மலர்ந்து, ஒரு ஹார்ட் பொக்கே போல மாறியிருந்தது. என் மனசெல்லாம் மத்தாப்பு கொளுத்தியதை போன்று உணர்ச்சிகள். வெட்கத்தில் முகம் சிவந்திருந்தாலும், அன்பின் குளிர்ச்சியும், காதலின் சூடும் கலந்து மனம் பாரமானது. கட்டிலில் படுத்துக்கொண்டே greeting ஐ கண் விரிய பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்போது தான் கீழே எழுதியிருந்ததை கவனித்தேன்.

    “என் சிரிப்பழகி காவ்யா, உன்னை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், பூப்பது இந்த ஹார்டின்கள் மட்டுமல்ல, என் ஹார்ட் ம் தான்… ” அவ்வளவு நேரம் கனத்திருந்த இதயம், காதலால் வெடித்து என் மேனியெங்கும் மணம் வீசியது. ‘நாம் நேசிக்கும் இதயம், அதை விட பல மடங்கு நம்மை நேசிக்கும்போது கிடைக்கும் சுகத்தை அன்று தான் அறிந்தேன்’. இப்போது அவனை பிரிந்திருக்கும் ஒவ்வொரு கணமும் ஒரு மணிநேரம் போல் தோன்றியது. அவனை உடனே பார்க்க வேண்டும் போல் தோன்றியது.

    அறைக்கு வெளியே வந்தேன். அவனைக்காணவில்லை. திரும்ப மாடிக்கு சென்றிருக்கலாம். அம்மாவும் அப்பாவும் ஹால் ல் coffee அருந்திக்கொண்டிருந்தனர். இவர்களிடம் எப்படி டா கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே அம்மா கேட்டாள், “என்னடி…”
    “ஒண்ணுமில்லியே” என்றேன்.

    பேசாமல் வெட்கத்தை விட்டு கேட்டுவிடலாமோ என்று தோன்றியது.
    அப்போது தான் பொறி தட்டியது, அறைக்குள் சென்று அவன் பரிசளித்த செல்போன் ஐ எடுத்து ஆன் செய்தேன்.. நோக்கியா லோகோ வந்தது. எனக்கு பொறுமை இல்லை. எப்போதுடா ஸ்க்ரீன் தெரியும் என்று காத்திருந்தேன். ஸ்க்ரீன் வந்தது.. contacts ல் பார்க்க இரண்டு நம்பர் மட்டுமே இருந்தது. ஒன்று ‘ராஜா’, இன்னொன்று ‘காவ்யா ராஜா’. என் மனதில் ஒரு பெருமை தொற்றிக்கொண்டது. நான் ராஜாவுக்கு உரியவள் என்ற பெருமை.
    ராஜா என்ற நம்பர் க்கு டயல் செய்தேன். அவருடன் பேச வேண்டும் என்று மனம் நிறைய ஆசையோடு காத்திருந்தேன்.

    full ரிங் அடித்து முடித்தும் எடுக்கவில்லை.
    மனம் ஏனோ பதைபதைத்தது.
    திரும்ப டயல் செய்தேன்.. எடுக்கவில்லை.. அவர் அறைக்கு சென்று பார்க்கலாமா? என்று தோன்றியது.
    அம்மா கேட்பாள்… என்ன காரணம் சொல்லுவது… திரும்ப அழைத்தேன்.. எடுக்கவில்லை..
    முடிவெடுத்தேன்… மேலே சென்று பார்ப்பது என்று.. கொடியில் கிடந்த வெள்ளை shawl எடுத்து மார்பை மறைத்து, அறையை விட்டு வெளியே வர எத்தனித்த போது. செல்போன் அழைத்தது.
    ‘ராஜா calling’ கோபமும் அழுகையுமாக வந்தது.

    ஆன் செய்து காதில் வைத்தேன் “ஹலோ”.. கிசுகிசுத்தேன்
    “ஹாய் பொண்டாட்டி..” சிரித்துக்கொண்டே சொல்ல.. எனக்கு வந்த கோபமும் அழுகையும், சந்தோஷமும் சிரிப்புமாக மாறியது. கண நேரத்தில் என் அழுகையை சிரிப்பாக மாற்றிவிட்டானே…
    “எங்க போனீங்க” கண்ணோரங்களில் நீர் சுரந்திருந்தது.
    “தூங்கிட்டிருந்தேன் மா”
    “ஹ்ம்ம்”

    ‘உங்களை பார்க்க வேண்டும், பேச வேண்டும், உன் கூடவே இருக்க வேண்டும்’ என்று சொல்ல கூச்சமாய் இருந்தது.
    “கொஞ்சம் பொருள் வாங்கணும். வெளிய போலாமா?” இதை விட உன்கூட இருக்கணும் என்று நாசுக்காய் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. “ஆனா அப்பா கிட்ட உங்களுக்கு பொருள் வாங்கணும் ன்னு சொல்லுங்க, ஊர் தெரியாது, காவ்யா வ கூப்டுக்கவா னு கேளுங்க”
    “ஏன் காவ்யா”

    என்ன சொல்வதென்று தெரியவில்லை “லேடீஸ் விஷயம்”.. கிசுகிசுப்பாக சொன்னேன்.
    “ஹான் ஓகே ஓகே…, 5 mins காவ்யா”
    நான் முகம் கழுவி, பவுடர் போட்டு தயாராக இருந்தேன்.. ஐந்து நிமிடம், ஐந்து மணி நேரம் போல் இருந்தது.
    அவர் இறங்கி வரும் சத்தம் கேட்டது.
    எட்டிப்பார்த்தேன்.. ஓரக்கண்ணால் என்னை தீண்டிச்சென்றார்.
    “மாமா…”

    “சொல்லுங்க மாப்ள…”
    “கொஞ்சம் பொருள் வாங்கணும், டவுன் வரைக்கும் போகணும், போயிட்டு வரட்டுங்களா ”
    “போயிட்டு வாங்க மாப்ளே”
    “ஊர் புதுசு.. அதான்..”

    “அய்யயோ காலிலேயே சொல்லியிருந்த யாரையாவது தொணைக்கு ஏற்பாடு பண்ணி இருப்பனே…”
    “காவ்யா வ கூட்டிட்டு போகட்டும்களா” அப்பா என்ன சொல்லபோகிறார் என்று கூர்ந்து கவனித்தேன்.
    “காவ்யா வா…. சரி மாப்ள.. கவனமா போயிட்டு வாங்க” கொஞ்சம் யோசனையோடேயே சொன்னார்.
    ஆனால், அவர் சம்மதித்ததே போதும்.

    “அம்மா காவ்யா..”
    ஹால் க்கு விரைந்தேன் “சொல்லுங்கப்பா..”
    “மாப்ளைக்கு ஏதோ பொருள் வாங்கணுமாம், டவுன் க்கு கூட்டிட்டு போயி கடை எதாவது காமி மா…”
    “ஹ்ம்ம்.. சரிப்பா..”

    “பங்காளிங்க யாராவது கேட்டா, அப்பா கூட்டிட்டு வர சொன்னாரு ன்னு சொல்லு.”
    “சரிங்கப்பா”
    “பைக் எடுத்துக்கோங்க மாப்ளே..” ஆணியில் மாட்டியிருந்த சாவியை அவர் கையில் தந்தார்.
    எனக்கு மனதெல்லாம் மகிழ்ச்சி. ஆனால் வெளியில் காட்டக்கூடாது.

    “ஒரு நிமிஷம் வந்திடுறேன் பா” ஓடிசென்று முகத்தை கண்ணாடியில் பார்த்து, சாமி பக்கத்தில் இருந்த செந்தூரத்தை வைத்துக்கொண்டேன். போட்டு வைத்து. அம்மா வாங்கி வைத்திருந்த பூவை சூடிக்கொண்டேன்.
    அவர் முன்னே நடக்க, நான் பவ்யமாக பின்னே நடந்தேன்.

    பைக் ஐ ஸ்டார்ட் பண்ணி என் கண்ணை பார்த்தார், அவர் பார்வையிலேயே செத்துபோய் மறுஜென்மம் எடுத்தது போல் இருந்தது. purse ஐ மடியில் வைத்து, ஒருபக்கமாக அமர்ந்து, எங்கே பிடிப்பது என்று பார்த்தேன். அவர் இடுப்பிலேயே வளைத்து பிடிக்கலாமா என்று தோன்றியது. இல்லை தோளில் பிடிக்கலாமா. இறுதியில் பைக் பிடியிலேயே பிடித்துக்கொண்டேன்.

    ஊர் எல்லையை தாண்டியதும், மெல்ல அவர் தோளில் கை வைத்தேன். ‘மனுஷன் எப்டி பீல் பண்றார்’ என்று கண்ணாடி வழியாக பார்த்தேன். முகமெல்லாம் சந்தோஷமும் வெட்கமும். ‘தன்னை பார்த்து சந்தோஷமும் வெட்கமும் படும் கணவர் இருக்கும் எந்த பெண்ணுமே பாக்யசாலி தான்’. ஒரு கர்வம் தோன்றி மறைந்தது.
    ஆண்களுக்கான துணிக்கடைக்கு அழைத்து சென்றேன். அவர் எனக்கு வாங்கித்தந்த பட்டு சேலைக்கு matching ஆக ஒரு பட்டு சட்டை வாங்கினேன்.. “பிடிச்சிருக்கா?” அவர் கண்களை பார்த்து கேட்டேன். அவர் முகத்தில் சிரிப்பு. “பிடிச்சிருக்கு”.. சிரித்தார்.. “இதுக்குதான் கூட்டிட்டு வந்தியா?”

    நான் புன்னகையே பதிலாக தந்தேன்.
    திரும்பி வந்துகொண்டிருந்தோம்
    “உனக்கு எதுவுமே வாங்கலையே” என்றார்.
    “அதான், saree வாங்கி தந்தீங்களே…”
    புன்னகைத்தார்..
    “நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க” ….”அப்பப்போ சிரிங்க”
    “ஹா…” என்று வாய் விட்டு சிரித்தார்..

    “ஹே சத்தம் போடாதீங்க…” என்று தோளில் பிடித்திருந்த கையாலேயே தோளில் கிள்ள..
    “ஆ…” என்றார்.
    “ஹே sorry pa sorry pa” என்றேன்.

    திரும்ப பவ்யமாக… பூனைக்குட்டி போல் அவர் பின்னாலேயே நடந்தேன்… இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் கிண்டலாக பார்வை வீச.. நான் விட்டதில் ஓடிய fan ஐ பார்த்து சிரிக்க. இருவரும் மகிழ்ச்சியாக. அவரவர் அறைக்குள் சென்றோம்.
    ஆனந்தமாக ஒரு குளியல் போட bathroom க்குள் சென்றேன்..

    உடைகளை களைந்து, வெற்றுடம்புடன் குளிர்ந்த shower ல் நிற்க.. என் மேனி பூ போல் பூத்துக்குலுங்கியது போல் உணர்ந்தேன். பூவில் விழும் பனித்துளி போல், என் மேனியில் விழுந்த நீர்த்துளிகள், விழ மனமில்லாமல் ஒட்டி இருந்தன.

    புது nighty ம் உள்ளாடைகளும் அணிந்து கொண்டு. இரவு உணவு சாப்பிட போனோம். அவர் track pants அணிந்திருந்தார். எதேச்சையாக அமர்வதுபோல், பேசிக்கொண்டே அவர் அருகில் அமர்ந்துகொண்டேன். குளிர்ந்த நீரில் குளித்ததாலோ இல்லை அவர் அருகில் அமர்ந்திருப்பதாலோ, என் மேனியெங்கும் மயிர் கூச்செறிந்தது. அவ்வப்போது என்ன சாப்பிடுகிறார் எப்படி சாப்பிடுகிறார் என்ன்று அவர் தட்டையும் பார்த்துக்கொள்வேன். அப்படியாக சாப்பிட்டு கை கழுவி முடித்தும் அவர் பக்கத்திலிருந்து எழும்ப மனமில்லை.

    இந்த சம்ப்ரதாயம் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால், எங்களை யாராலும் பிரித்து வைத்திருக்க முடியாதே என்று தோன்றியது.

    எல்லாரும் தூங்க செல்லலாம் என்று எழும்ப, குட் நைட் காவ்யா என்று சொல்லி கையில் ஒரு பாக்ஸ் ஐ திணித்து செய்கை காட்டினான். நானும் கையில் மூடி வைத்துக்கொண்டு அறைக்குள் சென்று பார்த்தேன். ஒரு அழகான வெள்ளிக்கொலுசு. ‘இப்போதே காலில் அணிந்து கொள்ளலாமா’ என்று யோசித்தேன்… ‘அம்மா ஏதென்று கேட்பாள், இப்போ வேண்டாம்’ என்று தோன்றியது.

    செல்போன் ல் மெசேஜ் வந்தது. “குட் நைட் சிரிப்பழகி” வெட்கம் என்னை பிடுங்கி தின்றது.
    “குட் நைட் சிரிப்பழகா” என்று பதில் அனுப்பினேன்.
    “ஐ லவ் யு சிரிப்பழகி ”… பார்த்ததும்.. மனசுக்குள் ஆயிரம் கலர் கலர் பட்டாம்பூச்சிகள்… வெட்கத்தில் கன்னம் பெரிதாகி வலித்தது…

    பக்கத்தில் படுத்திருந்த அம்மா முகத்தில் வெளிச்சம் விழாமலிருக்க. ஒருக்களித்து படுத்தேன்.
    nighty க்குள் மார்பை குத்திய தாலியை வெளியே எடுத்து போட்டேன். தாலியை பார்க்க பார்க்க எனக்கு அவன் மேல் அன்பு பெருக்கெடுத்து. தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
    அவர் அனுப்பிய மெசேஜ் வந்து மூன்று நிமிடங்கள் ஆகியிருந்தன.
    சந்தோஷமாக பதில் அனுப்பினேன், “ஐ லவ் யு சிரிப்பழகா”…
    “தூங்கிட்டியா” என்றார்.

    “இல்லை படுத்திருக்கேன்” என்றேன்.
    “சரி ஓகே குட் நைட்.” என்றார்.
    “எப்போ எழும்புவீங்க” என்றேன்..
    “5.3o க்கு ”

    நாளை காலை அவருக்கு surprise கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்..
    அனால் கடவுள் அதற்கும் மேலே எழுதி வைத்திருப்பார் என்று அந்த இரவில் எனக்கு தெரியவில்லை.

    நண்பர்களே… இது என் சொந்த அனுபவம் ஆதலால்… நான் ரசித்து அனுபவித்த விஷயங்களை நீங்களும் ரசித்து அனுபவிக்கவே நினைக்கிறேன்… இந்த கதை பல பாகங்களாக எழுதுவேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

    தங்களுடைய கருத்துக்களை [email protected] அனுப்புங்கள்.

    Leave a Comment