கனா கண்டேனடா 3 (Kana Kandenada 3)

This story is part of the கனா கண்டேனடா series

    கனா கண்டேனடா… part 3

    ஒன்பது மணிக்கு tata sumo வில் எங்கள் பயணம் தொடர்ந்தது.
    முன்னிருக்கையில் அப்பா, நடுவில் நாங்கள், பின்னிருக்கைகளில் அம்மாவும், பாட்டியும்.
    வழிநேடுகவே அம்மாவும் பாட்டியும் அவரிடம் கேள்வி கேட்டும் காமெடி என்ற பெயரில் ஏதோ சொல்லி சிரித்தும் என்னை பேசவிடாமல் பண்ணி விட்டனர்.

    ஒரு மணி நேரத்தில் கோவில் வந்தடைந்தது. கோவில் ஒரு மலை மேல் இருந்தது. அப்பா கோவில் குருக்களை பார்க்க வேண்டும் என்று கடகடவென்று ஏறி விட்டார். நானும், என்னவரும், பாட்டியும், அம்மாவும் மெல்ல ஏற ஆரம்பித்தோம். அவருடன் பேச ஆசையாக இருந்ததால் அவர்களை முன்னே ஏற விட்டு, நான் மெல்ல பின்வாங்கினேன். அந்த மரமண்டைக்கு புரிந்ததாக தெரியவில்லை. என்னவென்றே தெரியாமல் முழித்தான்.

    அம்மாவும், பாட்டியும், “என்ன காவ்யா” என்று கேட்க, “கஷ்டமா இருக்குமா” என்று இவரை பார்த்துக்கொண்டே சொன்னேன். இப்போது புரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
    “நான் கூட்டிட்டு வரட்டுமா அத்தை” என்று அவர் என் அம்மாவிடம் கேட்க. “சரி தம்பி, நீங்க பொறுமையா வாங்க” என்று சொல்லிவிட்டு மெல்ல மேல்நோக்கி நடந்தனர்.

    நான் ஏற கஷ்டபடுவதை போல பாவ்லா காட்டி, பாசமாக அவனை பார்க்க. தன் கைகளை அவன் நீட்டினான். சின்ன தயக்கத்தோடு அவன் கைகளை பிடிக்க, என்னை கை பிடித்து அழைத்து சென்றான்.
    இனி காதல் ஆரம்பம்…

    நான் மெல்ல ஆரம்பித்தேன்… “நீங்க இந்த மாதிரி மலை எல்லாம் ஏறி இருக்கீங்களா?”
    “ஹ்ம்ம்.. நாங்க friends சேந்து அடிக்கடி ட்ரெக்கிங் போவோம், பட் அது காட்டுக்குள்ள போவோம்.”
    “ஓஹோ.. அப்போ அது தான் உங்க fitness ரகசியமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க..
    “ஓஹ்.. அப்போ பிட் ஆ இருக்கேனா?” மெல்லிய புன்னகையோடு என் கண்களை பார்த்துக்கொண்டே கேட்க.. நான் திரும்பவும் clean bowled..

    படிகளை பார்த்துக்கொண்டு வெட்கத்தில் சிரித்துக்கொண்டே நடந்த என்னிடம், அடுத்த கேள்வி கேட்டார்..
    “என்னை பிடிச்சிருக்கா?”
    ஒரு கணம் நின்று ஓரக்கண்ணால் பார்த்தேன்.. என் முகத்தையே கூர்மையாக பார்த்தான்..
    “ஹ்ம்ம்..” தலைகுனிந்தே தலையாட்டினேன்.

    ஒரு நிமிட மௌனம்.. படிகளை பார்த்தே நடந்தோம் இருவரும்.. நான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்று அவனுக்கு நான் சொல்லாமலேயே புரிய வேண்டும் என்று மனம் ஏங்கியது.
    என் கைகளை இறுக்க பிடித்தான்.. அவன் கண்களை பார்த்தேன்.. “உன்னை முதல் தடவ பாக்கும்போதே எனக்கு உன்ன பிடிச்சு போச்சு காவ்யா”
    எனக்குள் கலவையான உணர்ச்சிகள்.. கோவில்.. நமக்கு பிடித்த ஆண்.. நம்மை விரும்புவது. வானில் பறப்பது போன்று இருந்தது.

    “நீயும் ரொம்ப அழகா இருக்க காவ்யா….. உன்கிட்ட பிடிச்சதே உன் சிரிப்பும் குழந்தைத்தனமும் தான்”..
    இந்த வார்த்தைகளுக்கு உலகில் ஈடே இல்லை..
    முதன்முதலாக அவன் கைகளை காதலால் மென்மையாக இறுக்கினேன்…

    கொஞ்ச நேரத்தில் மலை உச்சியில் போய் சேர்ந்தோம். அங்கே சென்று சேரும் வரையில் அவர் கைகளை நான் விடவில்லை. அங்கே அம்மாவும், அப்பாவும், பாட்டியும் எங்களுக்காக காத்திருந்தனர். தண்ணீர் வைத்திருந்தனர். முதலில் எனக்கு வாங்கி தந்தான், பின்னர் எனக்கு தந்தான். ஒவ்வொரு கணத்திலும் என்னை உருக வைத்துக்கொண்டிருந்தான்..

    சாமி கும்பிட்டு கீழே இறங்க முயலும் போதும். “நாம லாஸ்ட் ஆ போலாமா?” இம்முறை உரிமையோடு கேட்டேன்.
    “சரி காவ்யா, எனக்கும் உன்கூட பேச சான்ஸ் கெடச்ச மாதிரி இருக்கும். பெரியவங்களை பாத்துகிட்ட மாதிரியும் இருக்கும்” என்றார்.

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடன் பேச வாய்ப்புக்காக ஏங்குபவனை பார்த்து மகிழ்வதா? இல்லை.. என் வீட்டு பெரியவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நல்லெண்ணத்தை நினைத்து மகிழ்ந்து பெருமை கொள்வதா?

    அவருடைய கல்லூரி கதைகள், என்னுடைய கல்லூரி கதைகள் எல்லாம் பேசி மலையிலிருந்து கீழே இறங்கியபோது எனக்கு அவர் மேல், காதலை தாண்டி அன்பும், அன்யோன்யமும், மரியாதையும் அதிகரித்திருந்தது. இவர் நமக்காக எது வேண்டுமானாலும் செய்வார். நம் மேல் அன்பும், நம் குடும்பத்தினர் மேல் மரியாதையும் வைத்திருக்கிறார் என்று ஒரு நம்பிக்கை உருவானது. வீட்டிற்கு திரும்ப வந்தபோது வண்டியில் அசதியில் தூங்கி போனேன்.

    வீட்டிற்கு வந்து சேர்ந்த போது தான், நான் அவர் தோளிலேயே தூங்கிப்போயிருந்ததை அறிந்தேன். எனக்கு வெட்கம் ஒரு புறம் பெருமிதம் ஒரு புறம். அவரிடம் “sorry..” என்றேன்.. மென்மையாக சிரித்து… “எதுக்கு” என்றார்.. நான் மனதுக்குள் ‘அடப்பாவி’ என்று நினைத்து. “சும்மா” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டேன்.
    மனம் முழுக்க சந்தோசமாக இருந்தது.

    அசதியில்.. சேலையுடனேயே உறங்கிப்போனேன்.. கண்விழித்தபோது மணி 4.00. வியர்வையாலும் பட்டுசேலையாலும், கச கச வென்று இருக்க. உடல் அலுப்பு தீர குளிக்க சென்றேன். வெதுவெதுப்பான நீரில் குளியல் போட்டு, என்னிடமிருந்த வான் நீல காட்டன் சுடியும், அதற்கு matching ஆக வெள்ளை நிற bra வும், அடர் நீல panties ம், சிம்மீஸ் ம் அணிந்துகொண்டேன். வெள்ளை நிற shawl அணிந்து கொண்டு ஹால் க்கு வந்தேன்.

    அம்மா அழைத்தாள், “காவ்யா, மாப்ளைக்கு coffee குடு டி”.. இதற்காகவே காத்திருந்தது போல “சரி ம்மா” என்று மகிழ்ச்சியாக coffee வாங்கிக்கொண்டு எங்கள் அறையை நோக்கி நடந்தேன். ஆம் இனிமேல் அது எங்கள் அறை என்று தோன்றியது. கதவை தட்டினேன். தாழ் போடப்படவில்லை. தள்ளினேன்.. திறந்துகொண்டது. அவர் பனியன் அணிந்து தூங்கிக்கொண்டிருந்தார். நல்ல அழகான புஜங்கள். உள்ளே சென்று கதவை தாழ்பாள் போடாமல் சாத்தினேன். சத்தம் கேட்டு எழும்பி விட்டார். என்னை பார்த்து மென்மையாக சிரித்தார்.

    “coffee” என்றேன் நானும் ஒரு மென் புன்னகையோடு. அவர் கட்டிலில் எழும்பி அமர்ந்தார். அவர் சொல்லாமலேயே கட்டிலின் மறுபக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன். இப்போது அவரை பார்க்கும்போது பயம் இல்லை, மாறாக ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தது. படபடப்பு இல்லை, ஆனால் ஒரு தோழமை இருந்தது. என்ன ஆனாலும் இவர் நம்மை கை விடமாட்டார் என்று நம்பிக்கை வந்தது.
    “ஒரு நிமிஷம் காவ்யா..” என்று எழுந்து bathroom சென்றார். பெட் ஐ சீர்படுத்தி வைத்தேன்.. வெளியே வந்தவர்.
    “நீ coffee சாப்டியா” என்றார்.

    “இல்ல கிட்சேன் ல இருக்கு” என்றேன் மரமண்டையாக.
    “பரவால்ல.. நாம இத ஷேர் பண்ணிக்கலாம்” என்றார்.
    ‘அட.. இத முதல்லையே சொல்லியிருந்தா, வீட்ல coffee யே இல்ல ன்னு சொல்லி இருப்பனே’ என்று தோன்றியது.

    அவர் ஒரு சிப், நான் ஒரு சிப் என்று coffee உடன் காதலையும் சேர்ந்து பருகினோம்.
    பத்து நிமிடம் பருகியிருப்போம்.. coffee குறைந்தாலும் எங்களுக்குள் காதல் பெருகியிருந்தது.
    பின்னர்.. “ஒரு நிமிஷம்” என்று அவர் trolley ஐ திறந்தார். “இது உனக்காக” என்று ஒரு கவர் ஐ தந்தார். கவர் க்குள் எட்டிப்பார்த்தேன். நான்கு kitkat சாக்லேட். ஒரு நோக்கியா மொபைல் போன். ஒரு அழகான பிங்க் நிற பட்டு சேலை இருந்தது.

    எனக்கு கண்ணீர் முட்டியது. முதல்முறையாக, ‘இவன் அன்பிற்கு நான் தகுதியானவளா’ என்று என்னையே கேட்டேன். நா எழாமல் இருந்த என்னை பார்த்து. என்ன என்றார்.
    கவர் க்குள் கை விட்டு kitkat ஐ மட்டும் எடுத்துக்கொண்டு, “எனக்கு இது போதும்” என்றேன்.
    “ஏன்?” என்றார்.
    “அப்பா திட்டுவாங்க..”

    “புருஷன் வாங்கித்தந்தா கூடவா…?”
    அவனை அப்படியே கட்டிக்கொள்ளலாம் போல இருந்தது. மென்மையாக சிரித்தேன். ‘ஆமாம்’ என்று தலையாட்டினேன். “அப்பா முன்னாடி வச்சு தாங்க வாங்கிக்கறேன்” என்றேன்.
    என் கண்ணில் இருந்து நீர் வருவதற்குள் அங்கிருந்து நகர்ந்துவிட வேண்டும் என்று தோன்றியது.
    “சரிங்க நான் கீழ போறேன்” என்று சொல்லி கீழே அம்மாவின் அறைக்குள் வந்து பாத்ரூமுக்குள் நுழைந்து கண்ணாடியை பார்த்தேன்.

    ஒரு துளி நீர் என் கன்னம் வருடி கீழே இறங்கியது. மனதில் பாரம் இல்லை. மாறாக மனம் முழுக்க அவர். மனம் முழுக்க மகிழ்ச்சி. என்னை விட இந்த உலகத்தில் கொடுத்து வைத்தவள் யாரும் இல்லை என்று மனம் கர்வம் கொண்டது. முகம் கழுவி, துண்டைக்கொண்டு துடைத்தேன். பவுடர் போட்டுக்கொண்டு. shawl அணிந்து கொண்டேன். அவர் கீழே வரும் சத்தம் கேட்க, என்னை அழைக்க காத்திருந்தேன்.

    “காவ்யா, இங்க வாம்மா” அப்பா அழைத்தார். “தோ.. வரேன் பா”.. ஹால் க்கு சென்றேன்.
    “மாப்ள, உனக்கு செல்போன் ம், சேலையும் வாங்கி வச்சிருக்காராம், வாங்கிக்கோம்மா” என்றார்.
    “நான் புன்னகையோடு அவர் கண்களை நேராக பார்த்து வாங்கினேன்”, மீண்டும் கண்களை பார்த்து புன்னகைத்தார்.

    ‘எனக்காக நீ பிறந்தால், உனக்காக எத்தனை ஜென்மத்திலும் நானே பிறப்பேன்’ என்று மனதில் தோன்றியது.
    நண்பர்களே… இது என் சொந்த அனுபவம் ஆதலால்… நான் ரசித்து அனுபவித்த விஷயங்களை நீங்களும் ரசித்து அனுபவிக்கவே நினைக்கிறேன்… இந்த கதை பல பாகங்களாக எழுதுவேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

    தங்களுடைய கருத்துக்களை [email protected] அனுப்புங்கள்.

    Leave a Comment