Tamil Sex Story – உணர்சிகள் அற்றுப்போய்.. உயிருமற்ற ஜடம் போலே.. வெறித்த பார்வையும், வெந்து போன மனதுமாய்.. நந்தினி அந்த ஆபீஸை விட்டு வெளியே வந்தாள். உள்ளே செல்லும்போது தெளிவாயிருந்த வானம், இப்போது மேகக்குழப்பங்களுடன் காணப்பட்டது. அவளுடைய உள்ளத்தில் அடிப்பது மாதிரியே ஒரு பலத்த காற்று, இப்போது வெளியிலும் சுழன்றடித்தது. காற்றில் கூந்தல் பறக்க, காரில் ஏற மறந்து போய், கடந்து சென்றவளை பார்த்ததும், கதவை திறந்து கொண்டு கீழிறங்கினார் ராமண்ணா.
“நந்தினிம்மா.. நந்தினிம்மா.. கார் இங்க இருக்கு..!!”
பதட்டமாய் அவர் அழைத்ததும், நந்தினிக்கு ஓரளவு சுயநினைவு வந்தது. ஓரிரு வினாடிகள் மலங்க மலங்க விழித்தவள், பிறகு திரும்பி நடந்து வந்து காருக்குள் ஏறிக்கொண்டாள். ட்ரைவர் சீட்டில் அமர்ந்த ராமண்ணா, பின்னால் திரும்பி, நந்தினியை ஒருமுறை பாவமாக பார்த்தார். பின்பு சாவி திருகி காரை கிளப்பினார். ஸ்டியரிங் வளைத்து சாலையில் செலுத்தினார்.
நந்தினியின் பார்வை எங்கோ சூனியத்தில் நிலைத்திருந்தது. இதயம் சோகமாய் துடித்து ஓலமிட்டது. கணவன் பேசிய வார்த்தைகளே அவளுடைய காதுக்குள் ஊசி செருகிக்கொண்டிருந்தன. காருக்குள் மாமனார் இல்லாததை தாமதமாகவே கவனித்தாள்.
“மா..மாமா.. மாமா எங்க..?”
“ஐயா வேற டாக்ஸி புடிச்சு வீட்டுக்கு போயிட்டார்மா..!!”
“ம்ம்..”
“என்னாச்சும்மா.. ஏதும் பிரச்னையா..?? ஐயா மொகமே வாடி போய் போறாரு..??”
“ம்ம்.. பிரச்னைதான்.. பெரிய பிரச்னை..!!”
நந்தினி இறுக்கிப்போன குரலில் சொல்ல, அப்புறம் ராமண்ணா அவளை எதுவும் கேள்வி கேட்கவில்லை. அவள் இருக்கும் மனநிலையை ஓரளவு அவர் புரிந்து கொண்டார். கேள்வி கேட்பது அவளுடைய மனதை மேலும் நோகடிக்கும் என்று எண்ணியவர், அமைதியாக காரை வீடு நோக்கி விரட்டினார்.
திருவான்மியூர் தாண்டுகையில், வெளியே மழை பிடித்துக் கொண்டது. சிறு தூறலாய் ஆரம்பித்த மேகம், சில வினாடிகளிலேயே சடசடவென நீரை வாரி, பூமி நோக்கி இறைக்க ஆரம்பித்தது. நந்தினி தனது தலையை கார்க்கண்ணாடியில் சாய்த்துக்கொண்டு, வெளியே வழிந்தோடும் நீரையே உள்ளிருந்து வெறித்துக் கொண்டிருந்தாள். காருக்கு முன்பிருந்த வைப்பர்கள் ‘தடக்.. தடக்..’ என அடித்துக் கொண்டு, போகும் சாலையை தெளிவாக காட்ட முயற்சித்துக் கொண்டிருந்தன. நந்தினியின் மனமும் அவ்வாறே அடித்துக்கொண்டது. ஆனால் அவளுடைய வாழ்க்கைப்பாதை எங்கே செல்லும் என்றுதான் அதனால் தெளிவாக ஒரு வழி காட்ட முடியவில்லை.
‘உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நந்தினி..’ – கெஞ்சினானே..?? அவன் கெஞ்சலை கொஞ்சம் மதித்திருக்க வேண்டுமோ..??
‘அந்த அசிங்கத்தை மறக்க நெனைக்கிறேன்.. விட மாட்டீங்களா..??’ – அவசரப்பட்டு விட்டேனோ..?? அவன் மனதில் இருப்பதை அறிந்து கொண்டிருக்க வேண்டுமோ..??
‘இல்ல.. அ..அது.. நான் ஒரு கப்ஃயூஷன்ல அப்படி சொல்லிட்டேன்..!!’ – என்ன குழப்பம் என்று கூட நின்று கேளாமல் ஓடி விட்டேனே..?? நிதானித்திருந்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதோ..??
‘ப்ளீஸ் நந்தினி.. நீயாவது நான் சொல்றதை கொஞ்சம் கேளு..’ – கதறினானே..?? அவனுடைய கதறலுக்கு காது கொடுத்திருக்க வேண்டுமோ..??
‘நடந்தது அதுதான் நந்தினி.. நீ நம்பித்தான் ஆகணும்..!!’ – என்னை நம்பு என்று ஏன் அவன் கெஞ்ச வேண்டும்..?? எனது நம்பிக்கையை அவன் மதித்திருக்கிறான் என்றுதானே அர்த்தம்..??
‘அடுத்தவங்க மனசை பத்தித்தான் உனக்கு எந்த அக்கறையும் இல்லையே..??’ – எவ்வளவு நொந்து போயிருந்தால் இப்படி சொல்லியிருப்பான்..?? அந்த அளவிற்கா அவனை நான் காயப் படுத்திவிட்டேன்..??
‘எல்லாத்தையும் விட்ரலாமான்னு கூட நேத்துல இருந்து யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்..!!’ – வெண்ணை திரண்டு வருகையில் தாழியை உடைத்து விட்டேனோ..?? வெறும் பிடிவாதத்தால் என் கணவனின் அன்பு கைநழுவி போக விட்டேனோ..??
‘உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. போ..!!’ – என்ன செய்யப் போகிறேன்..?? இனி நான் என்ன செய்யப் போகிறேன்..??
யோசிக்க யோசிக்க, நந்தினிக்கு தான் செய்த தவறு புரிந்தது. முறுக்கிக்கொண்டு திரிந்தவன், இறங்கிவர எண்ணுகையிலேயே, அவனை வளைத்துப் போட்டிருக்க வேண்டும்..!! குத்திக்காட்டி அவன் மனதை வாட்டியதற்கு பதிலாக, விட்டுக்கொடுத்து அவன்மீது அன்பு காட்டியிருந்தால், ஒட்டுமொத்தமாய் அவனை எனக்கு சொந்தமாக்கியிருக்கலாம்..!! இப்போது அவன் முன்பை விட முறுக்கிக்கொண்டானே..?? தும்பை விட்டு வாலை பிடித்த கதை ஆகி விடுமோ..??
நந்தினியின் மனம் வேதனையிலும், விரக்தியிலும் துடித்துக்கொண்டே இருக்க.. வீடு வந்து சேர்ந்தது. காரை விட்டு நந்தினி இறங்குவதற்கு முன்பே, அவள் நனைந்து விடாமல் இருக்க, கௌரம்மா குடையுடன் ஓடி வந்தாள். கௌரம்மாவின் இறுகிப்போன முகத்தை ஏறிட்ட நந்தினி, அவளுக்கு மஹாதேவன் மூலமாக ஏற்கனவே செய்தி சென்று சேர்ந்தாயிற்று என்பதை புரிந்து கொண்டாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல், ஒன்றாகவே வீட்டுக்குள் நுழைந்தார்கள். ஹாலில் கிடந்த சோபாவில் மஹாதேவன் இன்னும் கோபம் குறையாதவராய் கொதிப்புடன் அமர்ந்திருந்தார். நந்தினியை பார்த்ததும்,
“இங்க வாம்மா நந்தினி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றார் இறுக்கமான குரலில். ஒருகணம் திகைத்த நந்தினி பிறகு மெல்ல நடந்து அவரை நெருங்கினாள்.
“சொ..சொல்லுங்க மாமா..”
“இப்படி உக்காரு..”
அவர் எதிரே கிடந்த சோபாவை கைநீட்ட, நந்தினி தயங்கியவாறே சென்று அமர்ந்து கொண்டாள். அவ்வளவு நேரம் வாசலுக்கருகே நின்றிருந்த கௌரம்மா, இப்போது மெல்ல நடந்து வந்து மஹாதேவன் அமர்ந்திருந்த சோபாவுக்கு பக்கத்தில், அவருக்கு பக்கவாட்டில் நின்றுகொண்டாள்.
“எ..என்ன மாமா..??” நந்தினியின் குரலில் லேசான பதற்றம் இருந்தது.
“என்னம்மா நடக்குது இந்த வீட்டுல..??” மஹாதேவனின் குரலில் ஒருவித வேதனை தென்பட்டது.
“எ..என்ன கேக்குறீங்க.. எனக்கு புரியலை..!!”
“சரி.. புரியிற மாதிரி கேக்குறேன்..!! அசோக்கை பத்தி எல்லாம் சொல்லித்தான, இந்தக்கல்யாணத்துக்கு உன்கிட்ட சம்மதம் கேட்டேன்..??”
“ம்ம்..”
“அப்போ உன்கிட்ட நான் என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா..?? அவனை ஒரு நல்ல மனுஷனா மாத்த.. உன்னால முடியும்னு நம்பித்தான்.. உன்னை நான் என் மருமகளா தேர்ந்தேடுத்தேன்னு சொன்னேன்..!!”
“ம்ம்.. ஞா..ஞாபகம் இருக்கு மாமா..!!”
“ஆரம்பத்துல அவன் சில விஷயங்கள்ல மாறினப்போ.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. கூடிய சீக்கிரம் முழுசா மாறிடுவான்னு நெனச்சேன்..!! ஆனா இப்போ.. முன்னை விட ரொம்ப கெட்டு போயிட்டான்னு தோணுது.. இத்தனை நாளா பயந்து பயந்து தப்பு செஞ்சவன்.. இன்னைக்கு பட்ட பகல்ல.. ஆபீஸ்லேயே ஆரம்பிச்சுட்டான்..!! நீ அவன் பொண்டாட்டி.. நாக்கை புடுங்கிக்கிற மாதிரி அவனை நாலு கேள்வி கேட்பேன்னு பாத்தா.. அவனுக்கு சோறு ஊட்டிவிட்டு வர்ற..?? ஒன்னு.. அவன் மொரண்டு புடிக்கிறப்போ நீயும் மொரண்டு புடிக்கிற.. இல்லனா.. தட்டிக் கேக்குற நேரத்துல தடவிக் கொடுத்துட்டு வர்ற..?? ஏன்மா இப்படிலாம் பண்ற..?? என்னம்மா நடக்குது இங்க..?? உங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்னதான் பிரச்னை..?? என் பையன் போற போக்கை பாத்தா.. எனக்கு ரொம்ப கவலையா இருக்குதும்மா.. உனக்கு அந்த கவலை இருக்கா இல்லையான்னே எனக்கு புரிய மாட்டேன்னுது..!!”
மஹாதேவன் தனது வேதனையை கொட்டி தீர்க்க, நந்தினிக்கு இப்போது தலை சுற்றுவது மாதிரி இருந்தது. இவ்வளவு நேரம் அந்த பிரச்சினையை அவளுடைய நிலையில் இருந்து மட்டுமே பார்த்தாளே ஒழிய, மஹாதேவனின் பார்வையில் இந்தப்பிரச்னை எந்த மாதிரி தெரியும் என்று இப்போதுதான் அவளுக்கு உறைத்தது. சற்றே பரிதாபமான குரலில் அவருக்கு பதிலுரைத்தாள்.
“எ..என்னால எதுவும் செய்ய முடியாத நெலமைல நான் இருக்கேன் மாமா..”
அவளுடைய பதிலில் மஹாதேவன் சற்றே அதிர்ந்து போனார். மருமகளை அப்படியே திகைப்பாக பார்த்தார்.
“என்னம்மா இப்படி சொல்ற..?? இப்படி ஒரு பதிலை நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்ல..!! உன்னை என் மருமகளா, நான் தேர்ந்தெடுத்த முடிவு சரியான்னே இப்போ எனக்கு சந்தேகம் வருது..!!”
மஹாதேவன் தளர்ந்து போனவராய் சொல்ல, நந்தினி இப்போது தலையை பிடித்துக் கொண்டாள். அவருடைய வேதனையை அவளால் முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தனது நிலையை எப்படி அவருக்கு எடுத்துரைப்பது என்று தடுமாறினாள். ஒரு இக்கட்டான நிலையில் தான் சிக்கியிருப்பதை உணர்ந்து கொண்டாள். ஆனால் மஹாதேவன் அவளையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருக்க, வாயை திறப்பதை தவிர அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை.
“எ..என்னை மன்னிச்சுடுங்க மாமா..” என்றாள் தழதழத்த குரலில்.
“ம..மன்னிப்பா..?? எதுக்குமா..?”
“அவரை மாத்திடலாம்ன்ற நம்பிக்கைலதான் இந்த வீட்டுக்குள்ள நான் அடி எடுத்து வச்சேனே ஒழிய.. மாத்திக்காட்டனும்ன்ற வைராக்கியத்தோட இங்க வரலை..!!”
“எ..என்னம்மா சொல்ற..?? புரியலை..!!”
“நா..நான் தப்பு பண்ணிட்டேன் மாமா.. உங்ககிட்ட நெறைய விஷயத்தை மறைச்சுட்டேன்..!!”
“எ..என்ன மறைச்சுட்ட..?” மஹாதேவன் திகைப்பாய் கேட்க, நந்தினி சொல்ல ஆரம்பித்தாள்.
“ஆறு வருஷத்துக்கு முன்னாடியே அவரை எனக்கு நல்லா தெரியும் மாமா.. காலேஜ்லேயே எங்களுக்குள்ள நல்ல பழக்கம்..!! இப்போ இவருக்கு இத்தனை பொண்ணுகளோட சகவாசம் இருக்கு.. ஆனா அப்போ.. காலேஜ்ல.. அந்த நாலு வருஷத்துல.. அவர் வாயை தொறந்து ஒரு பொண்ணுட்ட பேசினார்னா.. அது எங்கிட்ட மட்டுந்தான்..!!”
“ந..நந்தினி..”
“அவரு என்னை காதலிச்சாரு.. கல்யாணம் பண்ணிக்க நெனைச்சாரு..!! நான்தான் அப்போ அவரோட நல்ல மனசை புரிஞ்சுக்காம.. காயப்படுத்தி அனுப்பிச்சுட்டேன்..!!”
நந்தினி சொல்ல மஹாதேவனும், கௌரம்மாவும் அதிர்ந்து போனார்கள். மஹாதேவனுக்கு நம்பவே முடியாத மாதிரி ஒரு அதிர்ச்சி என்றால்.. கௌரம்மாவுக்கு ஆச்சரியம் கலந்த ஒரு அதிர்ச்சி..!! இருவரும் பேச வார்த்தை இல்லாமல், திக்கித்துப்போய் நந்தினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்புறம் கொஞ்ச நேரம் நந்தினி மட்டுந்தான் பேசினாள். ஆரம்பத்தில் இருந்து நடந்ததை எல்லாம் ஒவ்வொன்றாக.. பொறுமையாக.. தெளிவாக அவர்களுக்கு எடுத்துரைத்தாள்..!! அசோக்குக்கும் நந்தினிக்கும் ஏற்பட்ட அறிமுகம்.. அப்புறம் அவர்கள் பெங்களூர் சென்றிருக்கையில் ஏற்பட்ட நெருக்கம்.. இவள் அவனிடம் கனிவாக பேசியது.. அதை அவன் காதலென உணர்ந்தது.. தன் காதலை இவளிடம் வெளிப்படுத்தியது.. இவள் காயப்படுத்தி திருப்பி அனுப்பியது.. அப்புறம் ஆறு வருடங்களில் இருவருடைய மாற்றம்.. அவளுக்கு வந்த திருமண வாய்ப்பு.. அசோக் போட்ட அக்ரீமன்ட்.. திருமணதிற்கு அப்புறம் நடந்தவை.. என.. அந்த முத்த விவகாரம் தவிர்த்து மொத்த விவகாரத்தையும் நந்தினி கொட்டிவிட்டாள்.
நந்தினி சொல்லி முடித்துவிட்டு இருவரையும் ஏறிட்டு பார்த்தாள். இருவருமே ஒரு திகைத்த பார்வை பார்த்தபடி பேச்சிழந்துபோய் இருந்தார்கள். அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை உள்வாங்கியதில், சற்றே ஆடிப்போய் அமைதியாக இருந்தார்கள். முதலில் மஹாதேவனிடம்தான் சலனம் தெரிந்தது. ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவர், திடீரென சொன்னார்.
“தேங்க்ஸ்மா நந்தினி..!!”
“தே..தேங்க்ஸா..?? எதுக்கு மாமா..??” நந்தினியின் குரலில் ஒரு குழப்பம்.
“இத்தனை நாளா.. என் பையன் எதனால இப்படி மாற ஆரம்பிச்சான்னு.. எனக்கு காரணமே தெரியாம இருந்தது.. இன்னைக்கு அதை தெரிஞ்சுக்கிட்டதுல எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு..!!”
“எ..என்னை மன்னிச்சுடுங்க மாமா.. அப்போ எனக்கு எதுவும் புரியாத வயசு.. யார்கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியாது.. உடம்பு பூரா திமிரு.. அதான் அப்படிலாம் வார்த்தையை கொட்டிட்டேன்..!! அதுக்கான பலனை இப்போ நல்லா அனுபவிச்சுட்டு இருக்கேன்..!!”
“ம்ம்.. எனக்கு புரியுதும்மா.. எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்ல.. எங்கிட்ட நீ மன்னிப்பெல்லாம் கேக்க வேணாம்..!! அப்போ உன் வயசையும், இப்போ அதுக்காக நீ வருத்தப்படுறதையும் வச்சு பாத்தாலே.. உன் மேல என்னால கோவப்பட முடியலை..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்… எனக்கு என் பையன் மேலதான் கோவம், வருத்தம், கவலை எல்லாம்..!! இப்படி ஆபீஸுக்கே கூட்டிட்டு வர ஆரம்பிச்சுட்டானேன்னு.. ரொம்ப கவலையா இருக்கு..!!”
“இல்ல மாமா.. அவர் கூட்டிட்டு வரலை.. அந்தப்பொண்ணு தானா வந்திருக்கா.. அவ காரியத்தை சாதிச்சுக்குறதுக்காக அந்த மாதிரி பண்ணிருக்கா..!! அது நாம நெனைச்ச மாதிரி இல்ல மாமா.. நீங்களும் அவசரப்பட்டு அவரை திட்டிட்டீங்க.. நானும் அவசரப்பட்டு வார்த்தையை கொட்டிட்டேன்..!!” நந்தினி அவ்வாறு சொன்னதும், மஹாதேவன் இப்போது அவளை வியப்பாக பார்த்தார்.
“எ..என்னம்மா சொல்ற நீ..??”
“ஆமாம் மாமா.. அங்க நடந்தது ஒரு ஆக்ஸிடன்ட்.. அவர் மேல எந்த தப்பும் இல்ல..!!”
“எ..எப்படி நீ அதை அவ்வளவு உறுதியா சொல்ற..?”
“எனக்கு புரிஞ்சது மாமா.. அவர் கெஞ்சுன கெஞ்சல்ல இருந்து புரிஞ்சது..!! நான் அவரை நம்பலைன்னதும்.. அவர் கொதிச்ச கொதிப்புல இருந்து புரிஞ்சது..!! ஆனா.. எல்லாமே லேட்டாத்தான் புரிஞ்சது..!!”
“எ..எனக்கு புரியலைம்மா நந்தினி..!!”
நந்தினி அவருக்கு புரிவது மாதிரி எடுத்து சொன்னாள். அவர் சென்ற பிறகு, ஆபீஸ் அறைக்குள் அவளுக்கும் அசோக்குக்கும் ஏற்பட்ட விவாதம் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தாள். அவள் சொல்ல சொல்ல.. மஹாதேவன் தன் நெற்றியை கீறியவறே.. தீவிர சிந்தனையில் இருந்தார். எல்லாம் சொல்லி முடித்த நந்தினி,
“இப்போ சொல்லுங்க மாமா.. அவர் மேல தப்பு இருக்கும்னு நீங்க நெனைக்கிறீங்களா..?? அவர் நெனச்சிருந்தா.. கல்யாணம் ஆன நாள்ல இருந்து இத்தனை நாளா.. எப்போ வேணா என்னை குத்திக்காட்டி பேசிருந்திருக்கலாம்..!! ஆனா.. இன்னைக்கு அப்படி பேசிருக்கார்னா.. அவர் எந்த அளவு மனசு வேதனைப்பட்டிருந்தா அப்படி பேசிருப்பாரு..?? அவர் மேல தப்பு இருக்கும்னு எனக்கு தோணலை மாமா..!!”
“ம்ம்ம்ம்ம்ம்.. நீ சொல்றது சரிதான்மா.. நாமதான் கொஞ்சம் அவசரப் பட்டுட்டோம்னு நெனைக்கிறேன்..!!”
“ஆனா.. ஆனா அவர்.. கடைசியா.. இப்படி சொல்லிட்டாரே மாமா.. ‘நான் இப்படித்தான் இருப்பேன்.. உன்னால என்ன செய்ய முடியும்..’னு கேட்டுட்டாரே..?? என் அவசர புத்தியால.. எல்லாத்தையும் கெடுத்துட்டேனோன்னு நெனைக்கிறேன் மாமா.. இனிமே அவரை மாத்துறது ரொம்ப கஷ்டம்னு தோணுது..!!” கண்களில் நீர்துளிர்க்க நந்தினி சொல்ல, இப்போது மஹாதேவன் இறுக்கம் தளர்ந்து மருமகளைப் பார்த்து புன்னகைத்தார்.
“ஹாஹா.. என்னம்மா நீ..?? இனிமேதான் அவனை மாத்துறது ரொம்ப ஈஸின்னு எனக்கு தோணுது..!!” அவர் அப்படி சொல்ல, நந்தினி இப்போது அவரை திகைப்பாக பார்த்தாள்.
“எ..என்ன மாமா சொல்றீங்க..??”
நந்தினி அவ்வாறு கேட்டதும், அவளுக்கு எவ்வாறு விளக்கம் சொல்வது என்று மஹாதேவன் சற்றே தடுமாறினார். அவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த கௌரம்மா, அவருடைய தடுமாற்றத்தை உடனே புரிந்து கொண்டாள். முகத்தில் ஒரு மலர்ச்சியும் புன்னகையுமாய், இப்போது நந்தினிக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டாள். நந்தினியின் தலையை இதமாக தடவியவாறே கேட்டாள்.
“ஐயா சொல்றது உனக்கு புரியலையா நந்தினிம்மா..??”
“இ..இல்ல..”
“சரி.. நான் புரியிற மாதிரி சொல்றேன்..!! இத்தனை நாளா தான் செய்றது தப்புனே ஒத்துக்காத அசோக்கு.. இன்னைக்கு ‘நான் இப்படி இருக்குறதுக்கு காரணம் நீதான்..’னு கோவப்பட்டுருக்குன்னா.. அதுக்கு என்ன அர்த்தம்..?? அசோக்கோட அடிமனசுக்கு இந்த மாதிரி இருக்குறது அதுக்கு புடிக்கலைன்னுதான அர்த்தம்..?? ரெண்டு வாரமா வேற எந்த பொண்ணையுமே நெனைக்காம.. உன்னையே நெனச்சுட்டு இருந்ததா அசோக் தம்பி சொல்லிருக்கே.. அதுக்கு என்ன அர்த்தம்..?? அது மனசுல நீ ஆழமா புகுந்துட்டேன்னுதானே அர்த்தம்..?? உன்கிட்ட அவ்வளவு கோவப்பட்டு பேச என்ன காரணம் தெரியுமா..?? ‘ நாம இவளை இவ்வளவு நேசிக்கிறோம்.. இவ நம்மள நம்ப மாட்டேன்றாளே’ன்னு வந்த கோவம் அது..!! உரிமையும், பிரியமும் இருக்குற இடத்துலதான் இந்த மாதிரி கோவம் வரும் நந்தினிம்மா.. உனக்கு அசோக் தம்பி மேல வந்த கோவத்துக்கும் அதுதான் காரணம்.. அசோக் தம்பிக்கு இப்போ உன் மேல வந்திருக்குற கோவத்துக்கும் அதுதான் காரணம்..!!”
கௌரம்மா சொல்ல சொல்லவே.. நந்தினிக்கு நெஞ்சுக்குள் படபடவென பட்டாம்பூச்சி பறப்பது மாதியான ஒரு உணர்வு..!! கௌரம்மா சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேன் துளிகளாய் அவளுடைய காதுகளில் சிந்தின..!! ‘நிஜம்தானா..?? நிஜமேதானா..?? ஆமாம்.. அப்படித்தான் இருக்க வேண்டும்.. அதைத்தான் ‘சொல்ல வேண்டும்.. சொல்ல வேண்டும்..’ என்று அப்படி துடித்தானா..?? என்னை இழுத்துப் பிடித்து வைத்து, உதட்டை வர்ணித்து பேசினானே..?? அது காதல்தானோ..?? முத்தமிட்டதற்கு காரணம் வேறு என்று எதுவோ சொல்ல வந்தானே..?? காதல்தான் அந்த காரணமோ..?? இப்போது அவன் என்னை காயப்படுத்தியதற்கும் மூல காரணம் அந்த காதல்தானா..??’
நந்தினிக்கு இப்போது நம்பிக்கை வந்தது. கணவனுக்கு தன் மீது காதல் பூத்திருக்கிறது என்று புரிந்தது. ஆனால் அதை அவன் காதல் என்று உணராமல் இருக்கிறான் என்று தோன்றியது. ‘காதலே வேண்டாம் என்று இருந்தவனுக்கு வந்த இந்த காதல், அவனுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த குழப்பத்துக்கு தீர்வு காணவே என்னை அணுக முயன்றிருக்கிறான். நான்தான் அது புரியாமல் அவனை தவிக்க விட்டிருக்கிறேன். ஆனால்.. இப்போது.. இப்போது அவன்..??’ அசோக் இறுதியாக சொன்ன வார்த்தைகளை எண்ணி நந்தினி மருகிக்கொண்டிருக்க, கௌரம்மா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
“………… நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினாலே.. இப்போ எல்லா பிரச்னையும் தீந்துரும் நந்தினிம்மா..!! இனிமேயும் நீ அசோக் தம்பிட்ட.. பதிலுக்கு பதிலுன்னு பண்ணிட்டு இருக்காத.. பொண்ணுன்னா கொஞ்சம் நெளிவு சுளிவாத்தான் போக தெரிஞ்சிருக்கணும்..!!”
“அ..அது சரி.. ஆனா..”
“என்ன ஆனா..??”
“இ..இப்போ.. எ..என் மேல இருக்குற கோவத்துல.. ‘நான் மாற மாட்டேன்.. இப்படியே தான் இருப்பேன்’னு சொல்லிட்டாரே..?” நந்தினி தவிப்பும் தடுமாற்றமுமாய் சொன்னாள்.
“அதெல்லாம் சும்மாம்மா.. அசோக் தம்பி மனசார அப்படி சொல்லிருக்காது.. வீம்புக்கு சொன்ன மாதிரிதான் தோணுது.. ஆம்பளைல..? அந்த வீராப்பு..!!” கௌரம்மா சற்றே ஏளனமாக சொல்ல, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மஹாதேவன் இப்போது வாய் திறந்தார்.
“கரெக்டா சொன்ன கௌரம்மா.. நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்..!!”
“இ..இல்ல மாமா.. உங்களுக்கு அவரை பத்தி எதுவும் தெரியாது.. அ..அவருக்கு புடிவாதம் ரொம்ப ஜாஸ்தி..!!”
ஏக்கமும், தவிப்புமாய் நந்தினி தன் மாமனாரிடம் சொன்னாள். தனது மகனைப் பற்றி தனக்கே எதுவும் தெரியாது என்று சொல்கிற மருமகளை மஹாதேவன் புன்னகையுடன் பார்த்தார். அவளுடைய வார்த்தைகளில் பொதிந்திருந்த மகன் மீதான அன்பை, அவர் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட புன்னகை அது..!! Kai Adichu Vidum Tamil Sex Story
– தொடரும்