Tamil New Sex Stories – அசோக் கெஞ்சலாக சொன்னான். பாலா இப்போது அதிர்ச்சியில் அமைதியாகிப்போனார். கண்ணாடியை கழற்றி டேபிளில் வைத்துவிட்டு, ‘உஷ்ஷ்ஷ்..’ என்று சலிப்பு மூச்சு விட்டார். ‘இது என்ன புது குழப்பம்..?’ என்று தலையை சொறிந்தார். இந்த குழப்பத்தை எப்படி தீர்ப்பது என்று நெற்றியை சொறிந்தவாறு சில வினாடிகள் யோசித்தார்.
அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவராய், மீண்டும் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டார். அசோக்கை ஏறிட்டு தெளிவான குரலில் சொன்னார்.
“ஸீ அசோக்.. நீ செஞ்சது தப்புதான்.. ஆனா பிரச்னைக்கு நீதான் காரணம்னு என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியாது..!! கோட் செக்கின் பண்றதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணனும்ன்றது பேசிக்கான விஷயம்.. டெஸ்ட் பண்ணாம அவ செக்கின் பண்ணதாலதான் இவ்வளவு பிரச்னையும்..!! ஸோ.. அவதான் எல்லாத்துக்கும் காரணம்..!!”
“நான் கோட் மாடிஃபை பண்ணிருக்குறது அவளுக்கு எப்படி தெரியும் பாலா..?? ஏற்கனவே டெஸ்ட் பண்ணி ரெடியா வச்சிருந்திருப்பாளா இருக்கும்.. திரும்ப டெஸ்ட் பண்ணுவான்னு எப்படி எதிர்பார்க்க முடியும்..??”
“நோ அசோக்.. நோ.. ஐ கான்ட் அக்சப்ட் திஸ் எக்ஸ்க்யூஸ்..!! ஸீ.. இட்ஸ் வெரி சிம்பிள்.. மேனேஜ்மன்ட்டை பொறுத்தவரை அக்கவுண்டபிலிட்டிதான் முக்கியம்.. இந்த வொர்க்கு அவதான் அக்கவுண்டபில்.. கோட் டெஸ்ட் பண்ணி செக்கின் பண்ண வேண்டியது அவளோட ரெஸ்பான்ஸிபிலிட்டி.. அவ அதை பண்ணல.. அதுதான் எல்லாத்துக்கும் ரூட்காஸ்..!! ஸோ.. நடந்த தப்புக்கு அவ பொறுப்பு ஏத்துக்குறதுதான் சரி.. அதைத்தான் அவளும் இப்போ பண்ணிருக்குறா..!! நீ தேவை இல்லாம உன்னை இன்வால்வ் பண்ணி.. இதைப்போட்டு குழப்பிக்காத.. சரியா..?? அடுத்து என்ன செய்யலாம்னு பேசலாம்.. அதுதான் இப்போ இம்பார்டன்ட்..!!”
“எனக்கு இதுதான் இம்பார்டன்ட் பாலா..!!” அசோக் பிடிவாதமாக சொல்ல, பாலா எரிச்சலானார்.
“இப்போ என்னை என்ன பண்ண சொல்ற..?? அவளை ரிஸைன் பண்ண நான் ஃபோர்ஸ் பண்ணல.. அவளா பண்ணிட்டு போறா.. அதுக்கு நான் என்ன பண்றது..??”
“அவளை கூப்பிட்டு பேசுங்க பாலா.. நடந்த தப்புக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லன்னு மேனேஜ்மன்ட்டை கன்வின்ஸ் பண்ணுங்க.. அவளுக்கு சப்போர்ட்டிவா இருங்க.. ப்ளீஸ்..!!”
“என்னால அது முடியாது அசோக்.. தப்பு பண்ணிட்டு போனவளை திரும்ப கூட்டிட்டு வந்து.. என்னால கெஞ்சிட்டு இருக்க முடியாது..!!”
“ப்ளீஸ் பாலா..!!”
“முடியாது அசோக்.. வேற எதாவது இருந்தா பேசு.. இல்லனா வெளில போ..!!”
பாலா உறுதியான குரலில் மறுத்தார். அவருடைய முகத்தில் ஒரு அதீத எரிச்சல். அசோக் இப்போது கண்களை இடுக்கி அவரை முறைத்தான். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் அவசரமாய் தனது செல்போனை பாக்கெட்டில் இருந்து எடுத்தான். படபடவென ஏதோ டைப் செய்தான். பாலா எதுவும் புரியாமல் அவனையே பார்த்தார். ‘என்ன பண்ற அசோக்..?’ என்று கேட்டார். அசோக் அவருக்கு பதில் சொல்லாமல், டைப் செய்வதிலேயே கவனமாய் இருந்தான். அரை நிமிடத்திற்குள்ளாகவே டைப் செய்து முடித்தான். முடித்ததும் பாலாவை நிமிர்ந்து பார்த்து சொன்னான்.
“உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பிருக்கேன் பாலா.. பாருங்க..!!”
“எ..என்ன மெயில்..??”
பாலா குழப்பத்தில் திளைத்தவராகவே தனக்கு முன்பிருந்த லேப்டாப்பில், தனது மெயில் பாக்ஸ் செக் செய்தார். அசோக் அனுப்பிய மெயிலை திறந்து பார்த்தார். பார்த்ததுமே அவருக்கு விஷயம் புரிந்து போனது. அசோக்கும் தனது வேலையை ராஜினாமா செய்வதாக மெயில் அனுப்பியிருந்தான். பாலா இப்போது உச்சபட்சமாய் ஒரு எரிச்சலுக்கு உள்ளானார்.
“வாட் இஸ் திஸ் அசோக்..??” என்று கோவமாக கேட்டார்.
“ஸாரி பாலா.. எனக்கு வேற வழி தெரியலை..!!”
“அவ செஞ்ச தப்புக்கு அவ ரிஸைன் பண்றா.. நீ எதுக்கு தேவை இல்லாம ரிஸைன் பண்ற..??”
“தப்பு செஞ்சது நான்னு சொல்றேன்.. அதையே நீங்க புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க..!!”
“அசோக் ப்ளீஸ்.. திஸ் இஸ் நாட் கிட்ஸ் ப்ளே.. வீ ஆர் இன் சீரியஸ் பிசினஸ் ஹியர்..!! ப்ராஜக்ட் க்ரிட்டிக்கலான ஸ்டேஜ்ல இருக்கு.. இந்த ப்ராஜக்ட் பத்தி எல்லாம் தெரிஞ்சவங்க நீங்க ரெண்டு பேருந்தான்.. ஒரே நேரத்துல நீங்க ரெண்டு பேருமே இப்படி ரிஸைன் பண்ணினா..என்ன அர்த்தம்..?? கம்பனிக்கு இதனால பெரிய ப்ராப்ளம் ஆகும் அசோக்.. உன் மேல ஸ்ட்ரிக்ட் ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்..!!”
“என்னவேணா செஞ்சுக்கங்க பாலா.. எனக்கு கவலை இல்லை..!!” அலட்சியமாக சொன்னவாறே அசோக் எழுந்து கொண்டான். கதவை திறந்து ஆத்திரமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அதன்பிறகு ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து..
எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து சில்க்போர்ட் செல்லும் சாலையில் ப்ரியா தனது வண்டியில் சென்றுகொண்டிருந்தாள். காலையில் இருந்து கொந்தளித்துக் கொண்டிருந்த அவளது மனம் இப்போது அமைதியடைந்திருந்தது. வேலையை இழந்ததற்காக ஒரு சிறு கவலை கூட அவளிடம் இல்லை. அசோக்கின் நினைவைத்தவிர, மற்றபடி சலனமற்ற மனதுடன் நிதானமாக தனது ஸ்கூட்டியை செலுத்திக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு பின்னால் இருந்து ‘கீங்.. கீங்..’ என திரும்ப திரும்ப அலறும் ஹார்ன் சத்தத்தை ஆரம்பத்தில் அவள் கவனிக்கவில்லை. அப்புறம் கவனித்ததும், தனது ரியர்வ்யூ மிரரை பார்த்தாள். ஏதோ மின்னல் வெட்டுவது மாதிரி பளிச் பளிச்சென்று ஒளியை சிதறியது கண்ணாடி. ப்ரியாவிற்கு சிலவினாடிகள் எதுவும் புரியவில்லை. அப்புறம் அந்த மின்னல் தீர்ந்து, அவளுக்கு பின்னால் பைக்கில் வருகிற அசோக் தெரிந்தான். தனது இடது கையை உயர்த்திக் காட்டியபடி, ஒரு கையால் பைக்கை செலுத்திக் கொண்டு வந்தான். அவன் உயர்த்தி காட்டிய கையில் அந்த கடிகாரம்.
அவ்வளவுதான்..!! அதைப்பார்த்ததுமே ப்ரியா அப்படியே பூரித்துப் போனாள். வாழ்வில் அதுமாதிரி ஒரு சந்தோஷம் எப்போதும் அவளுடைய மனதை நிறைத்ததில்லை. நெஞ்செல்லாம் பூந்தோட்டமாய் பூத்துக் குலுங்குவது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு. படக்கென்று தலையை திருப்பி பார்த்தாள். இப்போது அசோக் ஹெல்மட் கண்ணாடியை உயர்த்திவிட்டு, இவளை பார்த்து புன்னகைத்தான்.
ப்ரியா வண்டியின் வேகத்தை குறைத்து, இடது புறமாய் ஒதுங்கி, சாலையோரமாய் நின்றிருந்த ஒரு மரநிழலில் சரக்கென்று ப்ரேக் அடித்து நின்றாள். அவள் நின்ற அடுத்த நொடியே அவளுக்கு பக்கவாட்டில் அசோக் தனது பைக்குடன் வந்து நின்றான். இருவரும் ஹெல்மட் கழற்றி பைக் விட்டு இறங்கினார்கள். இறங்கியவர்கள் சிறிது நேரம் எதுவும் பேச தோன்றாதவர்களாய், ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவர் உதட்டிலுமே மெலிதான ஒரு புன்னகை. அசோக்கின் புன்னகையில் மட்டும் ஒருவித குறும்பு கலந்திருந்தது.
“ஐ லவ் யூ..!!” என்றான் அசோக் திடீரென.
“ஹ்ஹ.. நீ ஒன்னும் சொல்லத்தேவை இல்ல.. எனக்கு தெரியும்..!!” ப்ரியா குறும்புடன் சொன்னாள்.
“ஓ.. அப்புறம் எதுக்கு அன்னைக்கு கழுத்துல கத்தி வச்சு மிரட்டுனியாம்..??” அசோக் அவளை மடக்க,
“அ..அது.. அது.. சும்மா..” ப்ரியா வழிந்தாள்.
“ஹாஹாஹாஹா..!!”
அசோக் அழகாக, வசீகரமாக சிரித்தான். இப்போது ப்ரியா தயங்கி தயங்கி தனது வலது கையை உயர்த்தி, அசோக்கின் கன்னத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். இதமாக வருடினாள். அப்புறம் அவனது இடது கையை பற்றினாள். அந்தக்கையை சுற்றியிருக்கும், கடிகாரத்தை பூரிப்புடன் பார்த்தாள். அவனுடய கைவிரல்களுடன் தனது கைவிரல்களை கோர்த்துக் கொண்டாள். அசோக்கின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். அவன் இன்னும் இவளுடைய முகத்தையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ப்ரியா இப்போது சற்றே தைரியமுற்றவளாய் அவனுடைய கையை மெல்ல உயர்த்தினாள். தனது முகத்துக்கருகே எடுத்து சென்றாள். அசோக்கின் முகத்தை பார்த்துக்கொண்டே.. சிறிது தயக்கத்துடனே.. தன் உதடுகளை குவித்து.. ‘இச்ச்…!!’ என்று கடிகாரம் அணிந்த அவனுடைய கைக்கு முத்தமிட்டாள். அவளுடைய செய்கைகளை எல்லாம் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்த அசோக், இப்போது குறும்பாக சொன்னான்.
“இந்த வாட்சை நீ வாங்கிட்டு வந்த அன்னைக்கே இது தெரியாம போச்சு.. இல்லனா அன்னைக்கே வாங்கி கைல கட்டிருந்திருப்பேன்..!!”
“எது தெரியாமப் போச்சு..??”
“வாட்ச்சை கைல கட்டிக்கிட்டா.. அந்த ஹனி லிப்ஸால ஒரு ஸ்வீட் கிஸ் கெடைக்கும்னு..!!” அசோக் சொல்ல, ப்ரியா வெட்கத்தில் முகம் சிவந்து போனாள்.
“ச்சீய்.. போடா..!!”
என்று சிணுங்கியவாறே, மெல்ல அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். ப்ரியாவின் ஸ்பரிசம் அசோக்கிற்கு இதமாக இருந்தது. அவளுடய தளிர் மேனி பட்டும் படாமல் அவன் மீது உரசியதற்கே, அவனுடைய இதயம் படபடக்க ஆரம்பித்திருந்தது. மனதுக்குள் ஒரு ஆசை எழ, தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தான். அவ்வப்போது சீறிப்பறக்கும் வாகனங்களை தவிர வேறு ஆள்நடமாட்டம் ஏதும் இல்லை. தைரியம் பெற்றவனாய், மெல்ல குனிந்து அவளுடைய நெற்றியில் ‘இச்..!!’ என்று இதழ்கள் பதித்தான்.
ப்ரியா அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஷாக் அடித்தது மாதிரி பட்டென அவனிடம் இருந்து விலகிக் கொண்டாள். அவசரப்பட்டு முத்தமிட்டு நெருக்கத்தை இழந்துவிட்டோமே என அசோக் தன்னைத்தானே திட்டிக் கொண்டான். முத்தமிட்டதன் அதிர்ச்சி ஓரிரு வினாடிகள்தான் ப்ரியாவின் முகத்தில் தங்கியிருந்தது. அப்புறம் சிவப்பாய் ஒரு வெட்கம் வந்து அப்பிக்கொண்டது. அசோக்கின் குறும்பு கொப்பளிக்கும் கண்களை நேருக்கு நேர் பார்க்க தடுமாறினாள். அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய், பேச்சை மாற்றும் விதமாக கேட்டாள்.
“அது சரி.. என்ன.. நீயும் பின்னாடியே கெளம்பி வந்துட்ட..??” ப்ரியா கேட்க, அசோக் குரலில் ஒருவித குறும்பு தொனிக்க சொன்னான்.
“எனக்கும் காலைல இருந்து ஒரே தலைவலி.. அதான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு..”
“லீவ் போட்டுட்டியா..??”
“இல்ல.. ரிசைன் பண்ணிட்டேன்..!!” அசோக் கூலாக சொல்ல, ப்ரியா அதிர்ந்து போனாள்.
“ஹேய்.. ரிசைன் பண்ணிட்டியா..?? என்னடா சொல்ற..??”
“ஆமாம் ப்ரியா.. பாலாட்ட போய் பேசுனேன்.. ‘தப்புலாம் என் மேலதான்.. என் மேல ஆக்ஷன் எடுங்க.. ப்ரியாவோட ரெசிக்னசேஷனை அக்சப்ட் பண்ணாதீங்க..’ன்னு கெஞ்சினேன்..!!”
“ஓ..!! அவர் என்ன சொன்னாரு..??”
“முடியாதுன்னாரு..!! சரி.. ஒன்னுக்கு ரெண்டா வச்சுக்கங்கன்னு.. நானும் பேப்பர் போட்டுட்டு வந்துட்டேன்..!!”
“ஐயோ.. அறிவு இருக்கா உனக்கு..?? ஏன் அப்படி பண்ணின..??”
“வேற என்ன பண்ண சொல்ற..?? சொல்ல சொல்ல கேட்காம நீயும் ரிஸைன் பண்ணிட்டு வந்துட்ட..?? எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..!!”
“ப்ச்.. அதுக்காக..?? நீ எதுக்கு..”
“நீ இல்லாத இடத்துல நானும் இருக்க மாட்டேன் ப்ரியா..!!”
அசோக் மிக இயல்பாகவே அப்படி சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் ப்ரியாவின் மனதில் அசோக் மீதான காதலை பீறிட்டு கிளம்ப செய்தது. நேற்று இந்த வார்த்தைகளை கோவிந்த் சொன்னபோது, நேத்ராவின் மீது அவளுக்கு ஒரு பொறாமை வந்தது. இன்று தனது காதலனும் அதே வார்த்தைகளை சொல்ல.. சொன்னது மட்டுமில்லாமல் அதை செய்துவிட்டு வேறு வந்து நிற்க.. ப்ரியாவுக்கு அப்போதே அவனை அப்படியே இறுக்கி அணைத்து.. அவனுடைய முகமெல்லாம் முத்தமிட்டு நனைக்கவேண்டும் போலிருந்தது..!! நடுச்சாலையாய் போயிற்றே என்று அந்த உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“இல்ல.. என்னதான் இருந்தாலும்.. நீ செஞ்சது தப்பு..!!” என்று நேற்று நேத்ரா சொன்ன மாதிரியே ப்ரியாவும் சொன்னாள்.
“ஒரு தப்பும் இல்ல..!! இந்த கம்பனி இல்லனா வேற கம்பனி..!! ஆனா.. எந்த கம்பனியா இருந்தாலும்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணாதான் இன்டர்வ்யூ போறோம்.. ஒண்ணாதான் ஜாயின் பண்றோம்..!! ஓகேவா..??”
“ஹாஹா.. ஓகே..!! ஒரே கம்பனில அவ்வளவு ஈசியா வேலை கெடைக்குமா..??”
“கெடைக்கலைன்னா ஜாயின் பண்ண வேணாம்..!! வேணுன்னா அவங்களுக்கு ஒரு ஆஃபர் கொடுக்கலாம்..!!”
“என்ன ஆஃபர்..??”
“எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல செலக்ட் பண்ணினா.. சம்பளம் கம்மியா கொடுத்தா போதும்னு..!!
“ஹ்ம்ம்.. நல்லாத்தான் இருக்கு ஆஃபர்..!! ஹாஹா..!!”
ப்ரியா அவ்வாறு சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான், அசோக்கின் செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தான். பாலா கால் செய்தார். இவன் கால் பிக்கப் செய்து,
“ஹாய் பாலா..!!” என்றதுமே,
“எங்க இருக்குற..??” அவர் இறுக்கமான குரலில் கேட்டார்.
“இங்க பக்கத்துலதான்..!!” என்றான் அசோக் சன்னமான குரலில்.
“அவ..??”
“அவளும் பக்கத்துலதான்..!!”
“ஹ்ம்ம்..!! சரி.. ரெண்டு பேரும் கெளம்பி வாங்க.. பேசணும்..!!”
“என்ன பேச..” அசோக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே,
“கெளம்பி வாங்கன்னு சொல்றேன்ல..??” பாலா எரிச்சலாக சொல்லிவிட்டு காலை கட் செய்தார்.
“என்ன சொல்றார் பாலா..??” ப்ரியா அசோக்கிடம் கேட்டாள்.
“கெளம்பி வாங்க.. பிரச்னையை பேசி தீர்த்துக்கலாம்னு சொல்றார்..!!”
“என்ன பண்ணலாம்..??”
“இது என்ன கேள்வி.. போய் பேசிப்பாக்கலாம்..!! என்ன சொல்ற..??” அசோக் கேட்க, ப்ரியா ஒரு சில வினாடிகள் யோசித்தாள். பிறகு
“ம்ம்.. ஓகே..!!” என்று சம்மதித்தாள்.
அசோக்கும் ப்ரியாவும் பாலாவை சந்தித்து பேசினார்கள். பாலாவுக்கு இந்த ப்ராஜக்ட்டை நல்லபடியாக முடிக்கவேண்டும் என்று கவலை. அசோக்கும் ப்ரியாவும் இல்லாமல் அது சாத்தியம் இல்லை என்பது அவருக்கு மட்டுமே புரிகிற விஷயம். இருவருடைய ராஜினாமாவையும் திரும்ப பெற்றுக்கொள்ள சொன்னார். க்ளயன்ட்டையும், மேனேஜ்மன்ட்டையும் தானே பேசி சமாளித்துக் கொள்வதாக சொன்னார். அசோக்கையும், ப்ரியாவையும் ஒரு அப்பாலஜி மெயில் அனுப்ப சொன்னார். ‘இனிமேயாவது சின்னப்புள்ளைத்தனமா நடந்துக்காம… கொஞ்சம் சீரியஸா நடந்துக்கங்க..’ என்று அறிவுரை சொன்னார். ‘போய் வேலையை பாருங்க.. போங்க..!!’ என்று விரட்டினார்.
“தேங்க்ஸ் பாலா..!!” அசோக் புன்னகையுடன் சொன்னான்.
“சிரிக்காத நீ.. உனக்கு அடுத்த வருஷமும் ப்ரமோஷன் கெடயாது..!!” பாலா வெறுப்பாக சொன்னார்.
“ப்ளீஸ் பாலா.. அப்படி மட்டும் சொலலதீங்க..!!” ப்ரியா இடையில் புகுந்து கெஞ்சலாக சொல்ல,
“அவனுக்கு நீ சிபாரிசா..?? உனக்கு இந்த வருஷ போனஸ் கட்..!!”
“பரவால பாலா.. இட்ஸ் ஓகே ஃபார் அஸ்..!! தேங்க்யூ.. தேங்க்யூ வெரி மச்..!!”
அசோக்கும் ப்ரியாவும் கோரசாக சொல்லிவிட்டு, சந்தோசம் அப்பிய முகத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள். Sunni Oombum Tamil New Sex Stories
– தொடரும்