ஐ ஹேட் யூ பட் – 22 (Tamil Kamakathaikal - I Love U But 22)

Tamil Kamakathaikal – வந்த வேலை வெற்றிகரமாக முடிந்த திருப்தியில், அன்று இரவே செண்பகம் சென்னைக்கு கிளம்பினாள். அசோக்தான் அவளை மடிவாலா சென்று பஸ் ஏற்றிவிட்டு, வழியனுப்பி வைத்தான். அசோக்கும் செண்பகமும் மடிவாலாவில் ஒரு ப்ரைவேட் ட்ராவல்சில் நின்றுகொண்டிருந்தபோது, ப்ரியாவும் வரதராஜனும் அவர்கள் வீட்டில் அசோக்கைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று நடந்த சம்பவம் பற்றி மகளிடம் உரைத்த வரதராஜன், அசோக் பற்றி மிக பெருமையாக பேசினார். எல்லாம் கேட்ட ப்ரியா அதிசயித்துப் போனாள்.

“ச்ச.. இந்தக்காலத்துல கூட இந்த மாதிரிலாம்.. தன்மையான பசங்க இருக்காங்களா..?? ரொம்ப ஆச்சரியமா இருக்கு டாடி..!! க்ரேட் கேரக்டர்..!!!!” என்று அந்தப்பையன் அசோக் என்று தெரியாமல் அவனை புகழ்ந்தவள், அடுத்த நொடியே..

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எங்க டீம்லயும்தான் ஒன்னு இருக்குது.. சரியான தறுதலை..!!” என்று தெரிந்தே அவனை திட்டினாள்.

அசோக்கிற்கும் ப்ரியாவிற்குமான பிரச்சினை நாளொரு மோதலும், பொழுதொரு சண்டையுமாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. அவர்கள் சண்டையுடன் சேர்ந்து அவர்களுடைய டீம் டெவலப் செய்த மென்பொருளும் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டது. செண்பகம் வந்து சென்ற இரண்டாவது நாள்.. முதல் கட்டமாக சில அடிப்படை அம்சங்கள் கொண்ட மென்பொருளை க்ளயண்டிற்கு டெலிவர் செய்தார்கள். க்ளையன்ட் நிர்ணயித்திருந்த காலக் கெடுவுக்குள்ளேயே அதை செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடைய கம்பெனி அதை பெரும் வெற்றியாக கொண்டாடியது. க்ளையன்ட் அந்த மென்பொருளின் தரத்தில் மகிழ்ந்து போய் அனுப்பிய வாழ்த்து செய்தி, அவர்களுடைய சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது. அந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இரண்டு பேரை குறிப்பிட வேண்டும்.

முதல் காரணம் ப்ரியா..!! அசோக் அவளுடைய ஈகோவை தூண்டி விட்டிருந்ததில் அவள் ஒரு வேகம் கொண்டிருந்தாள். இந்த ப்ராஜக்டை வெற்றிகரமாக முடித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு வெறியில் இருந்தாள். அவள் ஆன்சைட் சென்றதால் கிடைத்த க்ளையன்ட் கம்பனி பிசினஸ் டீமின் அறிமுகம், ப்ராஜக்டை கையாள்வதில் அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எந்த தயக்கமும் இல்லாமல் மிக இயல்பாக, அவர்களை இங்கிருந்து அவளால் அணுக முடிந்தது. அதே மாதிரி இங்கே டீமில் இருப்பவர்கள் அனைவரும் தனது நண்பர்கள் எனினும், வேலை விஷயத்தில் ரொம்பவே அக்ரஸிவாக நடந்து கொண்டாள். குவாலிட்டி, டெட்லைன் என்ற இரண்டு விஷயங்களிலும் மிக கடுமையாக நடந்து கொண்டாள். ‘யு ஆர் டூயிங் எ குட் ஜாப் ப்ரியா..!!’ என்று பாலகணேஷ் தனது கட்டை விரலை உயர்த்தி அவளை அடிக்கடி பாராட்டுவார்.

வெற்றிக்கு இரண்டாவது காரணம் வேறு யாரும் அல்ல.. அசோக்கேதான்..!! அவனுக்கு ப்ரோமோஷன் கிடைக்காதது அவனிடம் ஒரு கோவத்தை உண்டு பண்ணியிருந்தாலும், அந்த கோவத்தை அவன் வேலையில் காட்டவில்லை. எப்போதும் போலவே சின்ஸியராக வேலை பார்த்தான். அவனுடைய மாட்யூலை மேற்பார்வையிட்ட கிறிஸ்டோஃபர் ‘இட்ஸ் ப்ரில்லியன்ட் மேன்..!!’ என்று மனமுவந்து பாராட்டினான். ப்ரியா லீட் ஆனது அசோக்கிற்கு ஒரு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், ‘அவள் தோற்க வேண்டும்’ என்று குறுக்கு புத்தியுடன் அவன் நடந்து கொள்ளவில்லை. டீம் ஸ்ப்ரிட் அவனை விட்டு விலகவில்லை. ப்ரியாவைத் தவிர மற்றவர்கள் உதவி என்று வருகையில், எப்போதும் போலவே புன்னகையுடன் உதவி செய்தான். வேலையை முடிக்க முடியாமல் மற்றவர்கள் திணறும்போது, கைகொடுத்தான்..!!

சுருக்கமாக சொல்லப்போனால்.. ப்ரியாவின் டீம் மேனேஜ்மன்ட் திறமையும்.. அசோக்கின் டெக்னிக்கல் அறிவுமே.. ப்ராஜக்டின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக தாண்ட வைத்தன..!!

டீமில் இருக்கும் அனைவரையும் பாராட்டி கம்பனி மேனேஜ்மென்ட் வாழ்த்து சொன்னது. ப்ரியாவுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாராட்டு..!! முதல் இன்னிங்ஸிலேயே செஞ்சுரி அடித்த திருப்தி ப்ரியாவிற்கு..!! ஆனால் வழக்கம்போல சிறுபிள்ளை மாதிரி அவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கவில்லை.. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை..!! அசோக்கிடம் கற்றுக்கொண்ட பாடம், அவளிடம் ஒரு முதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்..!! அவ்வளவு சந்தோஷத்திலும் கால்கள் தரையில் பட நிற்பது ப்ரியாவிற்கு ஒரு புதுவித உணர்வை கொடுத்தது..!! பிடித்திருந்தது அவளுக்கு அந்த உணர்வு..!!

‘”எல்லாம் டெவலப் பண்ணினது நாம.. இவளுக்கு மட்டும் ஓவர் பாராட்டு..!!”

என்று அசோக் ஹரியிடம் சொல்லி கிண்டல் செய்தது காதில் விழுந்தும், விழுந்த மாதிரி காட்டிக்கொள்ளவில்லை அவள். தலையை குனிந்தவாறே அவர்களை கடந்து சென்றாள். தனது அறைக்கு சென்று.. கண்ணாடி முன் நின்று.. தனிமையில்.. தன்னைத்தானே பார்த்து.. ‘கலக்குறடி ப்ரியா..!!’ என்று மட்டும் சொல்லிக்கொண்டாள்.

இரண்டாவது கட்ட டெவலப்மன்ட் வேலைகளை ஆரம்பித்தபோதுதான், க்ளயன்ட்டிடம் இருந்து ஒரு புதுவித இம்சை வந்தது..!! கடலை எண்ணையை ஊற்றிக்கொண்டு இருக்கும்போதே ‘நல்லெண்ணைதான..?’ என்று கேட்பார்கள் என்று சொன்னேன் அல்லவா..?? அது மாதிரியான இம்சை..!! ஒப்பந்தத்தில் இருந்த அவர்களது தேவைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.. புதிதாக சில அம்சங்களை சேர்க்க விரும்பினார்கள்..!! ‘பார்வதி ஓமனக்குட்டன் பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிற மாதிரி ஒரு ஃபைட் இருந்தா நல்லா இருக்கும்’ என்பது மாதிரி..!! ரெகயர்மன்ட் சேஞ்ச்..!!

க்ளையன்ட் ப்ரபோஸ் செய்த ரெகயர்மன்ட் சேஞ்ச் கொஞ்சம் கிரிட்டிகலான விஷயம்..!! இவர்கள் ஏற்கனவே டெவலப் செய்திருந்த மென்பொருளின் பல அம்சங்களை பாதிக்க கூடியது..!! கவனமாக கையாளப்பட வேண்டியது..!! க்ளையண்டின் யோசனையை இம்ப்ளிமன்ட் செய்வதற்கு முன்பான இம்பாக்ட் அனலைஸிசும்.. இம்ப்ளிமன்ட் செய்ய எந்தவிதமான அணுகுமுறையை பின்பற்றுவது என்பதை முடிவு செய்வதும்.. ப்ரியாவின் தலையில் வந்து விழுந்தது..!! திறமைக்கு சவாலான இந்த புதுவித வேலை ப்ரியாவை திணற வைத்தது..!! உதவிக்கு முதலில் அசோக்கிடம்தான் ஓடி வந்தாள்..!!

“ஹேய்.. இந்த இம்பாக்ட் அனலைஸிஸ்ல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா.. ப்ளீஸ்..!!” ப்ரியா கெஞ்சலாக கேட்க,

“ஹ்ஹ.. என்ன.. உன் வேலையை என் தலைல கட்டப்பாக்குறியா..?? அடுத்தவங்க வேலையை பாக்குறதுக்கு.. எனக்கு என்ன எக்ஸ்ட்ரா சம்பளமா தர்றாங்க..??” அசோக் பிகு செய்தான்.

“ஏன்.. உனக்கு எக்ஸ்ட்ராத்தான தர்றாங்க..??”

“என்ன சொல்ற..??”

“ஆமாம்.. நான் டெக்லீட்னு பேர்தான்.. என்னை விட உனக்குத்தான ஸாலரி அதிகம்..??”

“அதுலாம் நீ சொல்லப்படாது..!! என்னதான் ஸாலரி அதிகமா இருந்தாலும்.. டெக்லீட்ன்ற அந்த கெத்து வருமா..?? எல்லாரையும் என்ன மெரட்டு மெரட்டுற..??”

“ப்ச்.. இதுல என்ன கெத்து இருக்குது..?? உனக்கு குடுத்த வேலையை நீ பாக்குற.. எனக்கு குடுத்த வேலையை நான் பாக்குறேன்..??”

“ஹ்ம்ம்.. நானும் அதைத்தான் சொல்றேன்..!! போ.. உனக்கு குடுத்த வேலையை நீயே பாரு.. என் வேலையை நான் பாக்குறேன்..!!” என்று கூலாக சொன்ன அசோக்,

“ஏற்கனவே ஹெல்ப் பண்ணதுக்கே நான் படுற பாடு பத்தாதா ..” என்று வாய்க்குள் முனகினான்.

அவன் என்ன முனகினான் என்பதை ப்ரியாவால் தெளிவாக கேட்க முடியவில்லை. ஆனால் என்ன சொல்லியிருப்பான் என்று ஓரளவு அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. கண்களை இடுக்கி அவனையே முறைத்துப் பார்த்தாள்.

“ஓகே.. நானே பாத்துக்குறேன்.. எனக்கு எவன் ஹெல்ப்பும் வேணாம்..!!”

ப்ரியா வீராப்பாக சொல்லிவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தாள். ‘ஹேய்.. ப்ரியா..’ என்று அசோக் அழைத்ததை மதியாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

‘எவன் ஹெல்ப்பும் வேணாம்..’ என்று ப்ரியா அசோக்கிடம் சொல்லியிருந்தாலும், அவளால் தனியாக அந்த வேலையை முடிக்க இயலவில்லை. வேறு டீம்களை சார்ந்த டெக்லீட்ஸ் சில பேரிடம் ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டிருந்தாள். அவர்களுடைய நட்பை இப்போது நாடினாள். இந்த மாதிரியான வேலையில் கவனமாக செய்ய வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பதை தெளிவாக கேட்டு அறிந்து கொண்டாள். அதில்லாமல் இவர்கள் ஏற்கனவே டெவலப் செய்த மென்பொருளைப் பற்றிய முழு அறிவும் அவளுக்கு தேவைப்பட்டது. வீட்டுக்கு சென்றும்.. இரவில் பலமணி நேரங்கள் தனியாக லேப்டாப் முன்பு அமர்ந்து.. அடுத்தவர்கள் எழுதிய கோடை அனலைஸ் செய்து அண்டர்ஸ்டாண்ட் செய்து கொண்டாள்..!!

அந்த ஆராய்ச்சி வேலையை முடிக்க அவளுக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டன. நான்கு நாட்களின் முடிவில்.. ஒரு அதிகாலை நேரத்திலேயே.. பெரிய அளவிலான ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ப்ரியா தனது அனலைசிஸ் பற்றியும், பின்பற்ற போகிற அப்ரோச் பற்றியும் எல்லோருக்கும் விளக்குவதற்காக ஒரு பிரசன்டேஷன் தயார் செய்திருந்தாள். அதை எல்லோருக்கும் அவள் விளக்கி சரியான அணுகுமுறை என்று சர்டிபிகேட் வாங்க வேண்டும்..!!

சற்றே பிரம்மாண்டமான மீட்டிங் ஹால் அது..!! ப்ரியாவால் லீட் செய்யப்படுகிற டெவலப்மன்ட் டீம் மட்டும் இல்லாமல்.. QA டீம்.. பிசினஸ் டீம்.. ஆர்க்கிடெக்ட்ஸ் டீம்.. அந்தந்த டீம்களின் மேனேஜர்ஸ்.. எல்லாவற்றிற்கும் தலையான பாலகணேஷ் என.. ஹாலில் எக்கச்சக்கமான பேர் இருந்தனர்..!! இதில்லாமல்.. யூ.எஸ்சில் இருந்து களயன்ட் கம்பனியின் சில முக்கியமான புள்ளிகளும்.. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக.. அந்த மீட்டிங் அட்டன்ட் செய்தனர்..!!

ப்ரியா ஒரு மணி நேரத்துக்கு அந்த பிரசண்டேஷன் கொடுத்தாள். தன்னுடைய ஆய்வை பற்றியும்.. க்ளயன்ட்டின் விருப்பத்தை செயல்படுத்த எளிமையான அணுகுமுறையாக தான் கருதுவதையும்.. தெளிவாக.. நிதானமாக.. அழகிய ஆங்கிலத்தில் எடுத்துரைத்தாள்..!! அனைவரும் அமைதியாகவும், கூர்மையாகவும் அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள்..!! அசோக் மட்டும் அசுவாரசியமாய் காட்சியளித்தான்..!!

பிரசண்டேஷன் முடிந்து.. ‘எல்லோருக்கும் புரிந்ததா.. அனைவருக்கும் இதில் சம்மதம்தானா.. வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறாதா..??’ என ப்ரியா உதட்டில் ஒரு புன்னகையுடன் ஃபார்மலாக கேட்ட போதுதான் அசோக்..

“ஐ கெஸ் தேர் இஸ் ஸம் ஃப்ளா இன் திஸ் அப்ரோச்..!!”

என்று குரல் கொடுத்துக்கொண்டே எழுந்தான்.. ‘உங்கள் பாட்டில் பிழை இருக்கிறது..!!’ என்று நக்கீரர் எழுந்த மாதிரி..!! அவன் அவ்வாறு எழுந்ததுமே ப்ரியாவிற்கு அடிவயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது.

“என்ன ஃப்ளா..??” என்று உதறலாக கேட்டாள்.

“லெட் மீ எக்ஸ்ப்ளயின்..!!”

என்றவாறு அசோக் மேடை மீது ஏறினான். ப்ரியா கலங்கிப் போனாள். ஹாலில் அமர்ந்திருப்பவர்களுக்கு முதுகு காட்டி அவன் பக்கமாய் திரும்பினாள். மேடையில் நின்ற அசோக்கின் முகத்தை பரிதாபமாக பார்த்தாள். அவனுக்கு மட்டுமே கேட்க கூடிய குரலில் கெஞ்சலாக சொன்னாள்.

“ப்ளீஸ்டா அசோக்.. வேணாண்டா..!!”

a-6

அவளுடைய கெஞ்சலுக்கு பதிலாக அசோக் ஒரு வசீகர புன்னகையை மட்டுமே கொடுத்தான். கையில் ஒரு மார்க்கர் எடுத்துக்கொண்டு வொயிட் போர்டை நெருங்கினான். அவ்வளவு நேரம் ப்ரியா விளக்கியவற்றை சுருக்கமாக மீண்டும் சொன்னவன், அதில் தான் பிழையாக கருதும் விஷயத்திற்கு உடனடியாக வந்தான். அவன் எந்த விஷயத்தை குறிப்பிடுகிறான் என்று தெரிந்ததுமே, ப்ரியாவிற்கு அதில் தான் செய்திருக்கிற தவறும் பட்டென புரிந்து போனது.. அவளுடைய நெஞ்சுக்குழியை பக்கென எதுவோ கவ்வியது போல இருந்தது.. பதறிப்போனாள்..!!

“அசோக் ப்ளீஸ்.. வேணாண்டா.. எல்லாரும் இருக்காங்க.. என் மானத்தை வாங்கிடாத..!!”

என்று ரகசியமாக அவனிடம் இறைஞ்சினாள். அசோக் கண்டுகொள்ளவே இல்லை. தான் சொல்ல வந்ததை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு நேரம் ப்ரியா சொன்னதை சரி என்றே கருதிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும், இப்போது அசோக்கின் பேச்சில் ஆர்வமாகி.. அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை உன்னிப்பாக காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். ப்ரியா மட்டும் மிரண்டு போனவளாய், எல்லோரையும் பரிதாபமாக தலையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ப்ளீஸ்டா.. ப்ளீஸ்டா..’ என்று சன்னமான குரலில் அசோக்கை கெஞ்சிக்கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்தில்.. அசோக் தனது கெஞ்சலுக்கு காது கொடுப்பான் என்ற நம்பிக்கை ப்ரியாவிற்கு போயிற்று..!! ‘இன்னும் கொஞ்ச நேரம் விட்டால்.. இவன் எனது தவறை எல்லார் முன்பும் வெளிச்சம் போட்டு காட்டி விடுவான்.. ப்ரியாவின் திறமை இவ்வளவுதானா என்று எல்லோரும் என்னை கேலியாக பார்ப்பார்கள்.. இப்போது என்ன செய்வது..??’ என்று அவசரமாக யோசித்தாள். அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. அசோக் பேசிக்கொண்டிருக்கையிலேயே இடையில் புகுந்து,

“ஹேய்.. ஸாரி டூ இன்டரப்ட்.. ஆக்சுவல்லி.. வீ ஆர் ரன்னிங் அவுட் ஆஃப் டைம்.. ஷேல் வீ டேக் திஸ் ஆஃப்லைன்..??” (குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.. இந்த மீட்டிங்கிற்கான நேரம் முடிந்து விட்டது.. நாம் இதை தனியே பேசி தீர்வு காணலாமா..??)

என்று புன்னகை தவழும் முகத்துடன், ஸ்டைலான ஆங்கிலத்தில் எல்லோரையும் பார்த்து கேட்டாள். அவள் அவ்வாறு திடீரென கேட்டதும் அசோக் உட்பட அத்தனை பேரும் இப்போது அமைதியாயினர். எல்லா டீம்களின் மேனஜர்களும் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அனைவரும் கான்ஃபரன்ஸ் காலில் இருக்கும் க்ளையன்டின் விருப்பத்தை எதிர்பார்த்தார்கள். ஒரு சில வினாடிகள் யோசித்த க்ளையன்ட் டீமும் ‘ஓகே..!!’ என்று ஒருமனதாக கரகர குரலில் ஸ்பீக்கரில் சொல்ல.. ப்ரியா இப்போது கண்கள் மூடி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

ஓரிரு விநாடிகள்தான்..!! அப்புறம் படக்கென தலையை திருப்பி.. அசோக்கை ஒரு உஷ்ணப்பார்வை பார்த்தாள்..!! அவனோ உதட்டில் கசியும் அழகான ஒரு புன்னகையுடன் இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்..!!

“வெல்டன் ப்ரியா.. கலக்குற போ..!!” என்று சன்னமாக சொன்னவாறே கையில் இருந்த மார்க்கரை ஓரமாக தூக்கிப் போட்டான்.

மீட்டிங் ஹாலில் இருந்த அனைவரும் கொத்து கொத்தாய் எழுந்து அந்த ஹாலை விட்டு வெளியேறினர். அனைவரும் ப்ரியாவை கடக்கையில் ‘தேங்க்ஸ் ப்ரியா..’ என்றனர். மேனேஜர்கள் ‘குட் செஷன் ப்ரியா..’ என்று பாராட்டினர். எல்லோருக்கும் ப்ரியா அழகாக ஒரு புன்னகையை பரிசளித்துக் கொண்டிருந்தாள். அசோக் மட்டும் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான்.

எல்லோரும் வெளியேறியதும், ப்ரியாவின் முகம் பட்டென இறுகிப் போனது. ஓரிரு வினாடிகள் அசோக்கை திரும்பி முறைத்தவள், அப்புறம் தனது லேப்டாப் நோக்கி விடுவிடுவென நடந்தாள். அதில் செருகியிருந்த நெட்வொர்க் கேபிள் எல்லாம் ஆத்திரமாக பிடுங்கி எறிந்தாள். கீ போர்டை கோபத்துடன் படபடவென தட்டினாள். அவளுடைய செய்கை அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. மெல்ல நடந்து அவளை நெருங்கியவன்..

“இப்போ என்னாச்சுன்னு இவ்ளோ டென்ஷன் ஆகுற..??” என்று கூலாக கேட்டான்.

“பேசாத..!! நெனச்சதை சாதிச்சுட்டல நீ..??” ப்ரியா சூடாக சொன்னாள்.

“ஹாஹா.. நான் என்ன நெனச்சேன்..??”

“எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப் படுத்தனும்னு நெனச்ச.. இன்னைக்கு பண்ணிட்ட..!! இப்போ சந்தோஷம்தான.??”

“ப்ச்.. அதான் அழகா எஸ்கேப் ஆயிட்டியே.. அப்புறம் என்ன..?? அதில்லாம.. இதுல என்ன அசிங்கம் இருக்கு..??”

“ஓஹோ..?? வெளையாட்டா இருக்குல உனக்கு இது..?? ஒருநாள் உனக்கு இது நடந்தாத்தான் உனக்கு புரியும்..!! நான் அவ்வளவு கெஞ்சியும்.. உனக்கு கொஞ்சம் கூட என் மேல இரக்கம் வரலைல..?? ஹ்ம்ம்.. பாத்துக்குறேன்.. எனக்கும் நேரம் வரும்.. அப்போ பாத்துக்குறேன்..!!”

அவளுடைய எச்சரிக்கை அசோக்கை எரிச்சலடைய செய்தது. கூலாக இருந்தவன் பட்டென டென்ஷன் ஆனான்.

“ஒய். என்ன மெரட்டுறியா..?? உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. அப்படி பண்றேன்னு நானும் பாக்குறேன்..!!”

என்று எகத்தாளமாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். ப்ரியா அவன் முதுகையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முறைப்பின் விளைவு அடுத்த நாளே வெளிப்பட்டது..!!

அந்த வார இறுதியில்.. அசோக்கின் கல்லூரி நண்பன் ஒருவனுடைய திருமணம் இருந்தது..!! அந்த திருமணத்திற்கு செல்வதற்காக இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் என்று அசோக் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தான். ப்ரியாவும் அதை அப்ரூவ் செய்திருந்தாள்..!! அன்று காலையில் அசோக் ஆபீஸ் வந்து தனது மெயில் பாக்ஸ் திறந்து பார்த்தபோது அந்த அப்ரூவல் ப்ரியாவால் கேன்சல் செய்யப்பட்டிருந்தது..!! அந்த மெயில் பார்த்ததுமே அசோக்கிற்கு ப்ரியா மீது சுருக்கென்று கோவம் வந்தது..!! ‘மேரேஜுக்கு சென்று.. பழைய நண்பர்களை எல்லாம் பார்த்து.. நான்கு நாட்கள் களிப்புடன் கழிக்கலாமே..’ என்ற தனது திட்டத்திற்கு ஆபத்து வந்துவிட்டதே என்ற கோவம்..!! ப்ரியாவின் அறைக்குள் புகுந்து அவளுடன் சண்டையிட்டான்..!!

“இப்போ எதுக்கு தேவை இல்லாம என் லீவை கேன்சல் பண்ணின..??” என்று காட்டமாக கேட்டான்.

“தேவை இல்லாமலாம் ஒன்னும் பண்ணல.. அந்த என்ஹான்ஸ்மன்ட் உடனே முடிச்சு குடுக்கனும்னு க்ளையன்ட் கேட்டிருக்காங்க..!!” ப்ரியா பொறுமையாக பதில் சொன்னாள்.

“கேட்டா முடிச்சு குடு..!! அதுக்கு ஏன் என்னோட லீவை கேன்சல் பண்ணின..??”

“நீதான் அந்த என்ஹான்ஸ்மன்ட் பண்ணி முடிக்கணும்..!!” ப்ரியா சொல்ல, அசோக் அதிர்ந்தான்.

“என்ன வெளையாடுறியா..?? கோவிந்த்க்கு அந்த வேலையை குடுக்குற மாதிரிதான ப்ளான்..??”

“ஆமாம்.. அப்படித்தான் ப்ளான் பண்ணிருந்தோம்..!! நீ அன்னைக்கு மீட்டிங்ல வாய் வச்சுட்டு சும்மா இருந்திருந்தா.. அவனுக்குத்தான் போயிருக்கும்..!! அன்னைக்கு நீ பெரிய புடுங்கியாட்டம் பேசினல.. இப்போ இந்த என்ஹான்ஸ்மன்டை முடிக்க நீதான் சரியான ஆள்னு க்ளையன்ட் ஃபீல் பண்றாங்க..!!”

“க்ளையன்ட் ஃபீல் பண்றாங்களா..?? இல்ல.. இந்த வேலையை அசோக்குக்கு குடுக்கலாம்னு நீயா பேசி கன்வின்ஸ் பண்ணி.. அவங்களை அப்படி ஃபீல் பண்ண வச்சியா..??”

“ஏதோ ஒன்னு..!! எனக்கும் இந்த என்ஹான்ஸ்மன்ட்டோட க்ரிட்டிக்காலிட்டி இப்போத்தான் புரியுது..!! இதை பர்ஃபக்டா பண்ணி முடிக்க எனக்கும் உன்னை விட்டா வேற ஆள் இல்ல..!! சேலஞ்சிங்கான வேலை வேணும்னு சும்மா சும்மா வந்து குதிப்பியே.. திஸ் இஸ் யுவர் ஆப்பர்ச்சூனிட்டி.. யூஸ் பண்ணிக்கோ..!! நேத்ராவையும் ஹரியையும் சேர்த்துக்கோ.. ஒன் வீக்ல இதை முடிக்கணும்..!! இது முடிஞ்சாத்தான்.. நெக்ஸ்ட் ஃபேஸ் டெவலப்மன்ட் நாம ஸ்டார்ட் பண்ண முடியும்..!! ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் த சீரியஸ்னஸ்..!!”

“எனக்கு எதைப்பத்தியும் கவலை இல்ல..!! எனக்கு அப்ரூவ் பண்ணின லீவ்.. எனக்கு வேணும்..!!”

“ப்ச்.. சும்மா சின்னப்புள்ளையாட்டம் அடம் புடிக்காத..!! இந்த வேலையை முடிச்சு குடுத்துட்டு.. ரெண்டு நாளுக்கு பதிலா அஞ்சு நாள் கூட லீவ் எடுத்துக்கிட்டு என்ஜாய் பண்ணு..!! என்ன.. புரியுதா..??” ப்ரியாவின் பதிலில் அசோக் எரிச்சலானான்.

“என் ஃப்ரண்டோட மேரேஜ் நாளன்னிக்குடி.. அது முடிஞ்சப்புறம் நான் அஞ்சு நாள் லீவ் எடுத்து என்ன பண்றது..?? வீட்ல தனியா உக்காந்து.. என்னமாத்தான் வருது..??”

“ஃப்ரண்டோட மேரேஜ்தான.. அதுக்கு ஏன் இப்படி குதிக்கிற.. என்னவோ உன் மேரேஜ்க்கே லீவ் தராதது மாதிரி..??”

“என்ன இவ்ளோ கூலா சொல்ற..?? இப்படி எவன் மேரேஜ்ம் அட்டன்ட் பண்ணலைன்னா.. அப்புறம் என் மேரேஜ்க்கு எந்தப்பய வருவான்..?? நானும் பொண்ணும் ஐயரும் மட்டுந்தான் உக்காந்திருக்கணும்..!!”

அவ்வளவு காரசார விவாதத்திலும் அசோக்கின் அந்தப்பேச்சு ப்ரியாவிற்கு சிரிப்பை வரவழைத்தது. அடக்கமுடியாமல் சிரித்து விட்டாள். அந்த சிரிப்பில் அவளுடைய மனசு பட்டென லேசாகி போனது. அசோக்கிடம் எப்போதும் அவளுக்கு இருக்கும் நட்புணர்வு இன்ஸ்டண்டாய் அவளுக்கு திரும்பி வந்தது. ஆனால் அசோக் இன்னும் சீரியசாகத்தான் தன்னை முறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாதவளாய்..

“ஹாஹா.. உனக்கு மேரேஜ்லாம் நடக்கும்னு வேற உனக்கு ஆசை இருக்கா..?? உன்னல்லாம் எவ கட்டிப்பா..??”

என்று கிண்டலாக சொல்லிவிட்டாள். சொல்லிவிட்டு அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவன் முகம் இன்னும் இறுகிப் போய், தன்னையே முறைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும்தான் ‘தவறாக பேசிவிட்டோமோ’ என்ற நினைவு அவளுக்கு தாமதமாக வந்தது. முகத்தை உடனடியாய் சீரியசாக மாற்றிக்கொண்டு..

“ஹேய்.. ஸாரி அசோக்.. நான் ஏதோ வெளையாட்டுக்கு..” அவள் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“பேசாத.. என்னை எவ்வளவு கேவலமா நெனச்சுட்ட நீ..?? எவளும் என்னை கட்டிக்க மாட்டாளா..??” அசோக் சீற்றமாக சொன்னான்.

“ஹேய்.. நான் வெளையாட்டுக்கு சொன்னேன்.. நாம இந்த மாதிரி சொல்லி அடிக்கடி கிண்டல் பண்ணிக்கிறதுதான..??”

“இத்தனை நாளா சொன்னது வேணா வெளையாட்டா இருக்கலாம்.. ஆனா இன்னைக்கு நீ சொன்னது அப்படி இல்ல..!! என்னை ஹர்ட் பண்ணனும்னேதான் சொல்லிருக்குற..!!”

“ப்ச்.. இல்லடா.. நான்தான் சொல்றேன்ல..??” ப்ரியா இப்போது கெஞ்சலாக சொன்னாள். Koothi Tamil Kamakathaikal

– தொடரும்

ஐ ஹேட் யூ பட் – 22

Leave a Comment