மலரே என்னிடம் மயங்காதே – 3 (Tamil Kama Stories - Malarae Ennidam Mayangathae 3)

Tamil Kama Stories – “பாத்து இறங்கும்மா..”

என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதேதான் அது நடந்தது. ஒரு நொடிதான்..!!!!! கால் இடறியதோ.. புடவை தடுத்ததோ.. கயல் தடுமாறிப் போனவளாய்.. பொத்தென்று நிலைகுலைந்து விழுந்தாள். ‘அம்மாஆஆஆ…!!!!’ என்று அவள் அலற ஆரம்பிக்கும் முன்பே, அந்த குறுகலான படிகளில் சரிந்து.. ‘கட கட கட’வென கீழ் நோக்கி உருள ஆரம்பித்தாள். பதறிப்போன நான் சுதாரிக்கும் முன்பே, பாதி தூரம் உருண்டு சென்று விட்டாள். ‘கயல்…!!!!’ என்று நான் பெருங்குரலில் கத்தியவாறு, துணிகளை போட்டுவிட்டு படிகளில் இறங்கி ஓட.. கயல் ஒவ்வொரு படியாக.. உருண்டு உருண்டு உருண்டு… கீழே… கடைசிப் படிவரை…!!! அம்பு தைத்த அன்னப்பறவையாய் சொத்தென்று தரையில் போய் வீழ்ந்து கிடந்தாள்..!!

1

“கயல்ம்மா.. கயல்ம்மா.. கயல்ம்மா..”

நான் காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டே ஓடிச்சென்று, கீழே கிடந்த என் மனைவியை தூக்க முயன்றேன். அவள் முகத்தில் சிறு கீறல் கூட இல்லை..!! மேலே வானில் நின்ற வட்ட நிலவின் அதே பிரகாசம்..!! கண்கள் ஒருமாதிரி நிலைகுத்திப் போனது போல.. என்னையே மலங்க மலங்க பார்த்தாள்..!! உதடுகள் படபடவென துடித்துக் கொண்டிருந்தன..!! இமைகள் பரிதாபமாய் வெட்டிக் கொண்டன..!! அவள் அணிந்திருந்த புடவை, இப்போது இடுப்புக்கு கீழே முழுவதும் ஈரமாகி சொதசொதத்து போயிருந்தது..!! அவளுடைய நிலையை பார்த்த என் கண்களில்.. உடனே ஒரு கண்ணீர் ஆறு உற்பத்தியாகி, போல பொலவென கொட்ட ஆரம்பித்தது..!!

“ஐயோ… கயல்ம்மா.. என்னம்மா நீ..??? பா..பாத்து…”

சொல்லிக்கொண்டே அவளை தூக்கலாம் என்று எனது இடது கையை அவளது பின்னந்தலைக்கு கொடுக்க, அந்த கையில் பெயின்ட் மாதிரி பிசுபிசுப்பாய் ஏதோ ஒட்டியது..!! அது என்ன என்று என்று கையை எடுத்து பார்க்க… என் உள்ளங்கை முழுவதும்.. சிவப்பாய்… ரத்தம்…!!!! என் கண்மணியின் ரத்தம்..!!!!! குலை நடுங்கிப் போனது எனக்கு..!! மிரண்டு போனேன் நான்..!!!!

“ஆஆஆஆஆஆஆ…. ஐயோ….!!!!!”

என்று என் மார்பில் ‘படார்.. படார்.. படார்..’ என இரண்டு கையாலும் அறைந்துகொண்டு அலறினேன்..!!! பக்கத்து தெருவின் செண்டை மேளங்கள் இப்போது ‘டம்.. டம்.. டம்..’ என இடிபோல் முழங்கின..!! வான வெடிகள் ‘டமால்.. டமால்..’ என வெடித்து சிதறி காதைப் பிளந்தன..!! எனது அலறல் கேட்டு, பால்கனி வழியாக எட்டிப் பார்த்த பக்கத்து வீட்டு மாமி, ‘ஐயய்யோ… கடவுளே…!!!!!’ என்று அதிர்ந்து போய் கத்தினாள். அவசரமாய் அவளுடைய கணவரை அழைத்துக்கொண்டு, என் வீட்டிற்கு ஓடி வந்தாள்.

“ஐயோ.. பனிக்குடம் உடைஞ்சிடுச்சு தம்பி… உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்.. தூக்குப்பா…!!”

அவள் பதட்டமும் பரிதவிப்புமாய் சொல்ல, நான் என் தேவதையை தூக்கி இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டேன்.

“கார் சாவி எங்க இருக்கு அசோக்..?”

“உ..உள்ள ஸார்.. ஹால்ல.. டே..டேபிள்…” எனக்கு பேசுவதற்கு நாவே எழவில்லை.

அவர் ஓடிச்சென்று கார்சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை தாழிட்டு விட்டு வந்தார். என்னுடைய காரை ஸ்டார்ட் செய்ய அவர் முன்னால் ஓட, நான் கயல்விழியை தூக்கிக்கொண்டு வேகமாக பின்னால் நடந்தேன்.

என்னை எப்போதும் மயக்கும் என் மனைவியின் மதி முகத்தை, நீர் கோர்த்த என் விழிகளுடன் பார்த்தேன். அவளும் என் முகத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடல் கிடுகிடுவென கிடந்து நடுங்கியது. அவளது கண்கள் என்னையே காதலும், பரிதாபமுமாய் பார்த்தன. மூக்கு விம்மியது..!! உதடுகள் துடித்தன.. எதுவோ சொல்ல முயன்றன.. ஆனால் சிறு சப்தம் கூட வெளிவரவில்லை..!! சப்தம் வராவிட்டாலும்.. அவளது உதட்டசைவில் இருந்தே.. அவள் என்ன சொல்ல முயலுகிறாள் என்று என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது..!!

“அசோக்..!!!!!!”

2

எபிஸோட் – II

சரியாக ஒரு வருடம் கழித்து..!!

அதிகாலை..!! இதமான குளிருக்கு கதகதப்பாய், இழுத்து மூட போர்வை தேடும் அதிகாலை..!! இமைகள் பிரிக்க, மிகவும் இன்னல் பட வேண்டிய அதிகாலை..!! மூன்றாம் வீட்டின் தாளிக்கும் வாசனை வந்து, மூக்கை துளைக்கிற அதிகாலை..!! காகத்தின் கரைச்சலோ, காரின் இரைச்சலோ, காதுக்கு எரிச்சலாய் தோன்றும் அதிகாலை..!!

நான் இப்போதெல்லாம் காலையில் எழுந்து கொள்ள அலாரம் வைப்பதில்லை. பக்கத்து வீட்டில் தினமும் காலை டிபன், இட்லி அல்லது தோசைதான். அதற்கு தொட்டுக்கொள்ள தினமும் தேங்காய் சட்னிதான். சரியாய் ஏழு மணிக்கெல்லாம் பக்கத்து வீட்டு வனஜா மாமி, மிக்ஸியில் சட்னி அரைப்பாள். மிக்ஸியின் முரட்டு ப்ளேடுகளுக்குள் சிக்கி, தேங்காய் சில்லுகள் அரைபடும் கரகர ஒலி, காற்றில் மிதந்து வந்து என் காதுகளில் மோதும். அந்த மாதிரி ஒரு ஒலி செவிப்பறையில் விழ நேர்ந்தால், அவன் கும்பகர்ணனாய் இருந்தாலும், அதற்கு மேலும் தூங்குவது சாத்தியமில்லாத ஒன்று.

இன்றும் அப்படித்தான்..!! மிக்ஸி சத்தம் என் உறக்கத்தை கலைத்தது. இமைகளை பிரிக்கும் முன்பாக, நான் என் இடது கையை நகர்த்தி எதையோ தேடினேன். தேடியது சிக்கியதும் என் விழிகளை மெல்ல திறந்தேன். வெண்முத்து பற்கள் தெரியுமாறு, புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த கயல்விழி, காணக் கிடைத்தாள். கொஞ்ச நேரம் அவளது அழகு முகத்தை ஆசையாய் பருகியவன், பின்பு எனது விரல்களால் அவளது கன்னத்தை மெல்ல வருடினேன்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு.. இதே தினத்தில்தான் கயல் எங்களை விட்டு பிரிந்தாள். அவள் கணித்த மாதிரியே, ஒரு ஆண் குழந்தையை பத்திரமாய் பெற்றுப் போட்டுவிட்டு, அன்றே நிரந்தரமாய் தன் விழிகளை மூடிக் கொண்டாள். அபிஷேக் என்று குழந்தைக்கு பெயரிட்டிருக்கிறோம்.

அவள் உயிரோடிருக்கையில் தினமும் காலையில் அவளது முகத்தில்தான் விழிப்பேன். காபி கலந்து எடுத்து வந்து, கண்மூடி தூங்கும் என்னருகே வாசனையாய் அமர்ந்து, தலை மயிர் கோதிவிட்டு, நெற்றியில் இச்சென்று இதழ் ஒற்றி எடுத்து, என் காதோரமாய் ‘டைமாச்சுப்பா.. எந்திரி..’ என்று கிசுகிசுப்பாள்..!! நான் கண்கள் திறந்து அவளது மலர்ந்த முகத்தை நோக்குவேன். அப்போது உடலெங்கும் ஒரு உற்சாகம் பரவும் பாருங்கள்.. அடுத்த நாள் அதிகாலை வரை அந்த உற்சாகம் எனக்குள் தங்கியிருக்கும்..!!

அவள் இந்த மண்ணை விட்டு போன பிறகும், அதிகாலையில் அவள் முகம் பார்க்கும் பழக்கம், இன்னும் என்னை விட்டு போக வில்லை. அவளுடைய புகைப்படத்தில்தான் தினமும் விழிக்கிறேன். அவள் முகத்தில் விழிக்காத தினம், ஒரு தினமாகவே என் கணக்கில் வராது.

“எந்திரிச்சுட்டீங்களா அத்தான்..??”

குரல் கேட்டு நான் பார்வையை திருப்பினேன். வாசலில் மலர்விழி நின்றிருந்தாள். கயலின் தங்கை..!! ஒரு வருடம் முன்பு வரை.. துறுதுறு பெண்ணாய் துடிப்புடனும்.. இளமைத் துள்ளலுடனும்.. விளையாட்டுத்தனமாய் திரிந்தவள். அக்கா சென்ற பிறகு நிறைய மாறிவிட்டாள். எக்கச்சக்க பொறுப்பு வந்துவிட்டது அவளுக்கு. அபிஷேக்கை அவள்தான் முதல் நாளிலிருந்து கவனித்துக் கொள்கிறாள். அவனுக்கு ஒரு பொறுப்பான அம்மாவாகவே மாறி விட்டாள்.

மெத்தையில் குப்புறப்படுத்திருந்த நான் இப்போது புரண்டேன். கண்களை இப்போது நன்கு அகலமாக திறந்து மலர்விழியை பார்த்தேன். மென்மையான குரலில் சொன்னேன்.

“ம்ம்.. எந்திரிச்சாச்சு மலர்..”

“காபி எடுத்துட்டு வரவா..?”

“ம்ம்..”

அவள் கிச்சன் பக்கம் திரும்பி நடந்தாள். நான் மேலும் சிறிது நேரம், புகைப்படத்திலிருந்த கயலின் முகத்தை பார்த்துவிட்டு, படுக்கையில் இருந்து எழுந்தேன். பாத்ரூமுக்குள் புகுந்து ப்ரஷ் செய்தேன். வெளியே வந்ததும் ஆவி பறக்கும் காபி தம்ளரை மலர் நீட்டினாள். வாங்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். செய்தித்தாளை மேய்ந்தவாறே, காபியை உறிஞ்சினேன்.

காபி குடித்து முடித்தபோது, மலர் ஹாலுக்குள் நுழைந்தாள். அவள் கையிலிருந்த அபிஷேக்கை ‘டேய் கண்ணா.. வா வா…’ என்று ஆசையாக நான் வாங்கிக் கொண்டேன். ‘அபிக்குட்டி.. அபிக்குட்டி..’ என்று செல்லம் கொஞ்சியவாறு, அவன் இடுப்பில் விரல் வைத்து கிச்சு கிச்சு மூட்டினேன். அவன் பொக்கை வாய் திறந்து ‘கெக்கக்கக்கே…’ என்று அழகாக சிரித்தான். மகனுடன் மனம் லயித்து நான் விளையாடிக் கொண்டிருக்க, அதையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த மலர், பின்பு மெல்லிய குரலில் என்னை அழைத்தாள்.

“அத்தான்..”

“ம்ம்..” நான் நிமிராமலே கேட்டேன்.

“குளிச்சுட்டு கொஞ்சம் சீக்கிரம் கெளம்புறீங்களா..? கோயிலுக்கு போயிட்டு வந்துடலாம்..!!”

“கோயிலுக்கா..? எதுக்கு..? என்ன விசேஷம் இன்னைக்கு..??” நான் இப்போது குழப்பமாய் மலரை ஏறிட்டேன்.

3

“என்னத்தான்.. மறந்துட்டீங்களா..? இன்னைக்கு அபிக்கு பர்த்டே..!!”

அவள் ஆச்சரியமான குரலில் கேட்க, எனக்கு நெஞ்சுக்குள் சுருக்கென எதுவோ குத்துவது மாதிரி இருந்தது. இன்று என் மனைவியின் நினைவு நாள் என்பது, மனதில் ஆழமாய் பதிந்து போயிருந்த எனக்கு, என் மகனின் பிறந்த நாளும் கூட என்ற நினைவு ஏன் வரவில்லை..?? ‘அபி வந்த சந்தோஷத்தை விட.. கயல் சென்ற துக்கம்தான் உனக்கு பல மடங்கு அதிகம்’ என்று என் மூளை எனக்கு பட்டவர்த்தனமாக உணர்த்தியது.

‘டா..டாக்டர்..!! கொழந்தைக்கு என்ன ஆனாலும் பரவால்ல.. என் வொய்ஃபை எப்டியாவது காப்பாத்திடுங்க.. அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா.. என்னால தாங்கிக்க முடியாது..!! ப்ளீஸ் டாக்டர்..!!’

அன்று ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் நின்று, அழுகிற விழிகளுடன் அரற்றியது.. இப்போது என் மனதில் பளீரென மின்னல் மாதிரி வெட்டியது..!! மூளை நரம்புகள் அனைத்திலும் இப்போது பலவித குழப்ப எண்ணங்கள், குறுக்கும் நெடுக்குமாய் ஓடின..!! கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். தலையை இருகையாலும் அழுத்தி பிடித்துக் கொண்டேன். குழப்பத்தில் இருந்து விடுபடாமலேயே குழந்தையை மலரிடம் நீட்டினேன். அவள் வாங்கிக்கொண்டதும், சோபாவில் இருந்து எழுந்தேன். முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, வறண்டு போன குரலில் சொன்னேன்.

“நா..நான் வரலை மலர்.. நீ போயிட்டு வா..”

“ஏன்த்தான்..?”

“ப்ச்.. வரலைன்றேன்ல..? விடு..”

“அதான் ஏன்னு கேக்குறேன்..?”

“எ..எனக்கு மனசு சரியில்ல மலர்.. நான் வரலை..”

“அக்காவும் இன்னைக்குத்தான் நம்மை விட்டு போனாளேன்னா..?”

“……” நான் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றேன்.

“பேசுங்கத்தான்..”

“என்ன பேச சொல்ற..?”

“ஓ..!! அப்போ இன்னைக்கு பூரா இப்படித்தான் இருக்கப் போறீங்களா..?”

“என்னால முடியலை மலர்.. கண்ணை தொறந்தாலும் மூடுனாலும்.. கயல்தான் வந்து நிக்கிறா..!!”

“இங்க பாருங்கத்தான்.. அக்கா இறந்தது ரொம்ப கொடுமைதான்..!! இல்லைன்னு சொல்லலை.. ஆனா அதுக்காக அபியை நீங்க பழி வாங்குறது என்ன நியாயம்..??” அவளுடைய குரல் என்னை குற்றம் சாட்டுவது போலிருக்க,

“என்ன சொல்ற நீ..? நான் என்ன பழி வாங்குறேன்..?” நான் இப்போது சூடாக கேட்டேன்.

“பின்ன என்ன..? இவன் முகத்தை பாருங்கத்தான்.. இவன் என்ன பாவம் பண்ணினான்..? இன்னைக்கு இவனோட ஃபர்ஸ்ட் பர்த்டே.. இன்னைக்கு போய்.. நீங்க இப்படி அழுது வடிஞ்சுட்டு உக்காந்திருக்குறது.. கொஞ்சங்கூட நல்லால்ல..!! இவனோட அப்பா நீங்க.. கோயிலுக்கு போய் இவன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணனும்னு கூட உங்களுக்கு தோணலையா..? அக்கா இறந்தது உங்களுக்கு சோகமா இருக்கலாம்.. ஆனா.. அந்த கோவத்தை தயவுசெஞ்சு அபிகிட்ட காட்டாதீங்க..!!” அவள் படபடவென பொரிந்தாள்.

“எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல மலர்..!! என் மேலதான் எனக்கு கோவம்..!!”

“ஏன்..?”

“கயல் இறந்ததுக்கு காரணமே நான்தான..?”

“ஐயோ.. ஏன்த்தான் இப்டிலாம் பேசுறீங்க..?”

“உண்மைதான..? அன்னைக்கு நான் மொட்டை மாடில அவ்ளோ நேரம் வேடிக்கை பாத்துட்டு நிக்கலைன்னா.. உன் அக்கா மாடிக்கே வந்திருக்கமாட்டா.. அப்படி ஒரு கொடூரமும் நடந்திருக்காது..!!”

“என்ன பேசுறீங்க நீங்க..? அக்கா இறந்தது ஒரு ஆக்சிடன்ட்..!! ஆக்சிடன்ட்னாலே யார் மேலயும் எந்த தப்பும் இல்லைன்னுதான அர்த்தம்..?? நீங்க ஏன் உங்களை காரணமா நெனச்சுக்கிறீங்க..?? அப்படி பாத்தா.. அன்னைக்கு.. ‘காஞ்ச துணிலாம் எடுத்து வச்சுட்டு போடீ..’ன்னு அக்கா எங்கிட்ட சொன்னா.. நான்தான் ஊருக்கு கெளம்புற அவசரத்துல மறந்துட்டு போயிட்டேன்..!! அப்போ.. அக்கா இறந்ததுக்கு காரணம் நாந்தான்னு நான் சொல்லிக்கவா..?? இல்ல.. ஊர்வலத்தை பாத்துட்டுத்தான அவ்ளோ நேரம் மாடில நின்னீங்க..? உங்களை அவ்ளோ நேரம் அங்க நிக்க வச்ச.. அந்த சாமியை குத்தம் சொல்லலாமா..??”

அவள் சற்றே காட்டமாக கேள்விக் கணைகளை என் மீது வீச, நான் பேச்சிழந்து போனேன். தலையை குனிந்தவாறு அமைதியாக நின்றேன். மலர் சில வினாடிகள் என்னையே பாவமாக பார்த்தாள். அப்புறம் மிக மிக சாந்தமாக தன் குரலை மாற்றிக் கொண்டு சொன்னாள்.

“அத்தான்.. அக்காவை மறக்குறது.. எங்களுக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குது..!! ஆனா.. அதையே மனசுல போட்டு கொழப்பிக்கிட்டு.. நீங்க ஒவ்வொரு நாளும் உருகி உருகி..!! உங்களை நெனச்சாத்தான் எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்கு..!! இப்போவே ஒரு வருஷம் ஆகிப் போச்சு.. இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே இருக்கப் போறீங்க..?”

“…..”

“நான் சொல்றதை கேளுங்கத்தான்.. கொஞ்சம் கொஞ்சமா மனசை மாத்திக்க முயற்சி பண்ணுங்க.. அக்காவை மறந்துட்டு.. அடுத்து என்னன்னு யோசிங்க..!! அபியை கொஞ்சம் நெனச்சு பாருங்கத்தான்.. அவனுக்காகவாவது நீங்க மாறித்தான் ஆகணும்..!! இன்னைல இருந்து ஆரம்பிங்க.. கெளம்புங்க.. கோயிலுக்கு போயிட்டு வரலாம்..!!”

மலர் நீளமாய் பேசி முடிக்க, நான் உடலில் இருந்த ஜீவன் எல்லாம் வற்றி போனவனாய் பொத்தென்று சோபாவில் அமர்ந்தேன். அபி என்ன நினைத்தானோ, திடீரென வீறிட்டு அழ ஆரம்பித்தான். எனக்கும் மலருக்கும் இடையில் நிலவிய ஒரு இறுக்கமான சூழ்நிலை.. அவனையும் பாதித்திருக்க வேண்டும். அழுகிற குழந்தையை, ‘ச்சோ.. ச்சோ.. ச்சோ..’ என்று முதுகில் தட்டிக்கொடுத்து சமாதானப் படுத்தியவாறே, மலர் நான் எடுக்கப் போகும் முடிவுக்காக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எனது மனம் அவள் சொன்ன வார்த்தைகளையே தீவிரமாய் அசை போட்டுக் கொண்டிருந்தது. அவள் பேச்சிலிருந்த நியாயம் மனதை உறுத்த.. லேசாய் வலித்தது..!!

அபிக்காகவாவது மலர் சொல்வது போல நான் மாறித்தான் ஆகவேண்டும் என்று தோன்றியது. என் மனைவி இறந்ததன் பாதிப்பு என்னோடு போகட்டும். என் மகனுக்கு அந்த பாதிப்பு வேண்டாம். அபி பெரியவனாகும் போது.. ‘தன்னுடைய பிறந்த நாள் என்பது.. தன் தாயின் இறந்த நாளும் கூட..’ என்ற உண்மை அவனுக்கு தெரிய வந்தால், அது எவ்வளவு மோசமான பாதிப்பை அவனுக்குள் ஏற்படுத்தும்..? அவன் பிறந்த தினத்தை அவனே வெறுத்து ஒதுக்குவது எவ்வளவு கொடுமையான விஷயம்..? இல்லை.. அந்த உண்மை அவனுக்கு இறுதி வரை தெரியவே கூடாது..!! ஒரு முடிவுக்கு வந்தவனாய் சோபாவில் இருந்து எழுந்தேன்.

“ரெடியாயிரு.. ஒரு அரை மணி நேரத்துல கெளம்பலாம்..” நான் சொல்லிவிட்டு விடுவிடுவென உள்ளே நடந்தேன்.

“தேங்க்ஸ்த்தான்..” என் முதுகுக்கு பின்னால் மலரின் குரல் சந்தோஷமும், நன்றியும் சரிவிகிதத்தில் கலந்து ஒலித்தது.

அடுத்த அரை மணி நேரம் கழித்து, மூவரும் கோயிலுக்கு கிளம்பினோம். அருகிலேயே இருக்கும் ஒரு விநாயகர் கோயில். காரை விடுத்து நடந்தே சென்றோம். அபியின் பெயரில் அர்ச்சனை செய்தோம். கோயிலில் இருந்த பதினைந்து நிமிடமும், கயல் பற்றிய எண்ணங்கள் என் கவனத்தை சிதைக்காமல் பார்த்துக் கொண்டேன். அபி எந்தக்குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வேண்டும் என்று மனமுருக ஆனைமுகத்தானிடம் வேண்டிக் கொண்டேன். கோயிலை விட்டு வெளியே வந்த போது,

“ஸார்.. வூட்டுக்கார அம்மாவுக்கு ஒரு மொழம் மல்லிப்பூ வாங்கி கொடு ஸார்..”

சொல்லிவிட்டு வெள்ளந்தியாய் சிரித்தாள், அந்த பூ விற்கும் பெண்மணி. நான் சற்றே அதிர்ந்து போனேன். என்னையும் மலரையும், மலர் கையில் இருக்கும் குழந்தையையும் பார்த்து.. நாங்கள் இருவரும் கணவன் மனைவி என்று நினைத்து விட்டாள் போலிருக்கிறது. நான் இப்போது திரும்பி மலரை பார்த்தேன். அவள் ஒரு மாதிரி அவஸ்தையாய் நெளிந்து கொண்டிருந்தாள். எந்த மாதிரி ரியாக்ட் செய்வது என்று கூட புரியாதவள் மாதிரி காட்சியளித்தாள். ஓரிரு வினாடிகள். அப்புறம் நான் மலரை பார்த்து மெலிதாக புன்னகைக்க, இப்போது அவளும் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தாள்.

“பூ வாங்கிக்கிறியா..?” நான் மலரிடம் இயல்பாக கேட்க,

“இல்லத்தான்.. வேணாம்..” அவள் தயங்கினாள்.

“வெள்ளிக்கெழமையும் அதுவுமா புஷ்பத்தை வேணான்னு சொல்லக் கூடாது தாயி..” பூவை எப்படியும் விற்று விட வேண்டும் என்று, புதிதாய் லாஜிக் எல்லாம் தயாராக வைத்திருந்தாள் பூக்காரி. Mulai Tamil Kama Stories

– தொடரும்