நெஞ்சோடு கலந்திடு – 29 (Tamil Hot Stories - Nenjodu Kalanthidu 29)

Tamil Hot Stories – அசோக் செல்வாவை விடாமல் துளைத்தெடுத்தான். செல்வா கொஞ்ச நேரம் தயங்கினார். அப்புறம் தொண்டையை கனைத்துக்கொண்டு மெல்லிய குரலில் சொன்னார்.

“நானும் கண்மணியும் கல்யாணம் பண்ணிக்க போறோம் அசோக்..”

“அண்ணா.. என்னண்ணா சொல்றீங்க.. நெஜமாவா..?” அசோக் ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் கேட்டான்.

“ஆமாம் அசோக்.. நாளைக்கு அவளோட மாமா ஒருத்தர் ஊர்ல இருந்து வராராம்.. அவர் என்னை பார்த்து பேசணும்னு ஆசைப்படுறாராம்.. அதான் காலைல வீட்டுக்கு வாங்கன்னு.. இப்போ வந்து சொல்லிட்டு போறா..!!”

“என்னண்ணா நீங்க.. எவ்வளவு சந்தோஷமான விஷயம்.. ஏண்ணா இத்தனை நாளா எங்கிட்ட சொல்லலை..?”

“ஒருவாரமா இந்த மேட்டரை உன்கிட்ட சொல்லனும்னுதான் நானும் நேரம் பாத்துட்டு இருந்தேன் அசோக்.. ஆனா நீ எந்த நேரமும் திவ்யாவை நெனச்சுக்கிட்டு சோகமா இருக்குற.. அதான் சொல்லலை..”

“இதுல என்னண்ணா இருக்கு..?”

“எப்படி அசோக்.. நீ கஷ்டத்துல இருக்குறப்போ.. நான் எப்படி உன்கிட்ட வந்து ‘நான் சந்தோஷமா இருக்குறேன்’னு சொல்ல முடியும்..?”

“அடப்போங்கண்ணா.. எனக்கு என்ன கஷ்டம்.. நான் நல்லாத்தான் இருக்குறேன்..!! அதுசரி.. கண்மணியை எப்படி சம்மதிக்க வச்சிங்கன்னு சொல்லவே இல்லையே..?”

“கண்மணி ரொம்ப பாவம் அசோக்..”

“என்னண்ணா சொல்றீங்க..?”

“அவ சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகி.. புருஷனை இழந்தவ அசோக்..!! பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க.. ஒரே வருஷத்துல அவ புருஷன் மஞ்சகாமாலை வந்து இறந்து போயிட்டான்..!! கிராமத்துல இருக்குறவங்க ‘அதிர்ஷ்டம் கெட்டவ.. புருஷனை முழுங்கிட்டா..’ அப்படின்னு கண்மணியை பேசிருக்காங்க.. அந்த பேச்சை தாங்கிக்க முடியாம.. எல்லாத்தையும் காலி பண்ணிட்டு இங்க வந்து மெஸ் ஆரம்பிச்சிருக்காங்க..!!”

“ஓ..!!”

“எனக்கே இப்போ ரெண்டு வாரம் முன்னாடிதான் தெரியும்..!! அவளே அடக்கிக்க முடியாம.. எல்லாத்தையும் எங்கிட்ட கொட்டிட்டா..!! நான்தான் முன்னாடியே உன்கிட்ட சொல்லிருகேன்ல.. அவளுக்கு ஆரம்பத்துல இருந்தே என் மேல ப்ரியம் அசோக்.. ஆனா.. அவ நெலமையை நெனச்சுக்கிட்டு.. அவளோட காதலை என்கிட்டே இருந்து மறைச்சுட்டா..!! போன வாரம் எனக்கு எல்லா மேட்டரும் தெரிஞ்சு போச்சு.. அவ அம்மாகிட்டயே போய் நேரடியா பேசிட்டேன்.. ஆரம்பத்துல அவங்க தயங்குனாங்க.. அப்புறம் ஒத்துக்கிட்டாங்க..!! அடுத்த மாசம் கல்யாணம் வச்சுக்கலாம்னு பேசி முடிச்சிருக்கோம்..!!”
“ம்ம்ம்.. இவ்வளவு மேட்டர் நடந்திருக்கு.. எல்லாத்தையும் எங்கிட்ட இருந்து மறைச்சுட்டீங்களே..?”

“என்ன அசோக்.. நான்தான் ஏன் சொல்லலைன்னு சொன்னேன்ல..?”

“ம்ம்ம்.. அந்த கண்மணியை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குண்ணா.. உங்க காதலை புரிஞ்சுக்கிட்டு உங்ககிட்ட வந்து சேர்ந்துட்டாளே.. ரியல்லி கிரேட்ணா..!! எனக்குந்தான் ஒருத்தி வந்து வாச்சிருக்குறாளே..? லூசு சிறுக்கி.. என்ன பண்ணு.. எவ்வளவு சொல்லு.. ஒன்னும் அவ மண்டைல ஏறாது..!!”

“விடு அசோக்.. அதெதுக்கு இப்போ..?”

“சரி விடுங்க..!! ரொம்ப ஹெப்பியான ந்யூஸ் சொல்லிருக்கீங்க.. ஐயோ.. இப்போ இதை நாம செலப்ரேட் பண்ணியே ஆகணுமே..!! அந்த பாட்டிலை எடுங்கண்ணா..!!”

“சொன்னா கேளு அசோக்.. போதும்..”

“ப்ளீஸ்ண்ணா..”

“ம்ஹூம்.. நான் அல்லோ பண்ண மாட்டேன்..”

“சரி.. பாட்டில்தான் தர மாட்டேன்றீங்க.. பாட்டாவாது போடுங்க…. எனக்கு டான்ஸ் ஆடனும் போல இருக்கு..”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. பத்துநாளா அந்த பாட்டை திருப்பி திருப்பி போட்டு.. சிடியே தேஞ்சு போச்சு அசோக்..”

“பரவாலண்ணா போடுங்க.. ப்ளீஸ்..”

செல்வா அந்த சிடியை எடுத்து செருகி, பாடல் செலக்ட் செய்து வால்யூம் அதிகரித்தார். அசோக் அந்தப் பாடலின் தாளத்துக்கு தகுந்தவாறு குத்தாட்டம் போட ஆரம்பித்தான்.

“காதல் எங் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாழான நெஞ்சு இப்ப வெண்ணீருல

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல”

1

கொஞ்ச நேரம் அறைக்குள்ளேயே ஆடியவன், அப்புறம் வெளியே ஓடினான். பதறிப்போன செல்வா அவனுக்கு பின்னாலேயே ஓடினார். அறைக்கு வெளியில் எரிந்த குண்டு பல்பு, அந்த மொட்டை மாடி முழுதும் வெளிச்சம் பரப்பியிருந்தது. அசோக் மொட்டை மாடியின் மையமாக சென்று நின்றுகொண்டு, மனம் போன போக்கில் ஆட ஆரம்பித்தான். செல்வா அவனை சமாளித்து உள்ளே அழைத்து செல்ல முயன்றார்.

“அசோக்.. என்ன அசோக் இது… உள்ள வா..”

“விடுங்கண்ணா.. நான் டான்ஸ் ஆடனும்..”

“ஆடு.. ரூமுக்குள்ள வந்து ஆடு..”

“இல்ல இல்ல.. நான் இங்கதான் ஆடுவேன்..”

செல்வா எவ்வளவோ முயன்றும் அசோக் கேட்காமல் அடம்பிடித்து, அங்கேயே நின்று ஆடிக்கொண்டிருந்தான். செல்வாவும் ஒரு கட்டத்தில் சலித்துப் போய் அவனை ஆடட்டும் என்று விட்டுவிட்டார். கைகளை கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டார். காதல் வேதனை தாங்காமல், கையை காலை அசைத்து குத்தாட்டம் போடுகிற அசோக்கையே, கண்களில் நீர் துளிர்க்க பார்த்துக் கொண்டிருந்தார்.

அத்தியாயம் 30

சித்ரா அப்போதுதான் சமையலை முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள். ‘அவரும் இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலை.. இந்த திவ்யா கழுதையும் இன்னும் ஆளைக்காணோம்..’ என்று சலிப்பாக மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். ஆண்பாவம் பார்க்கலாம் என்று டிவியை போட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடம் பார்த்திருப்பாள். அதற்குள் அவளது செல்போனுக்கு பொறுக்கவில்லை. சிணுங்கியது. அப்பாதான் ஊரில் இருந்து கால் செய்தார்.

“ஹலோ.. சொல்லுங்கப்பா..”

“ஹலோ..”

“ம்ம்.. சொல்லுங்கப்பா..”

“ஹலோ.. நீ பேசுறது கேக்கலைம்மா.. நான் பேசுறது கேக்குதா..?”

“ஒரு நிமிஷம் இருங்கப்பா.. வெளில வரேன்..” சித்ரா செல்போனில் சிக்னல் ஐகானை கவனித்துக்கொண்டே, கதவை திறந்து வீட்டுக்கு வெளியே வந்தாள்.

“ம்ம்.. சொல்லுங்கப்பா.. இப்போ கேக்குதா..?”

“ம்ம்.. இப்போ கேக்குதும்மா..”

“சொல்லுங்கப்பா.. நல்லாருக்கீங்களா.. அம்மா நல்லாருக்காங்களா..?”

“நாங்க நல்லா இருக்குறது இருக்கட்டும்.. இந்த அசோக்கு பயலுக்கு என்னாச்சு..?”

“ஏன்ப்பா.. என்ன பண்ணுனான்..?”

“வாரம் ஒரு தடவையாவது ஃபோன் பண்ணுவான்.. ரெண்டு வாரமா அதுவும் பண்ணலை.. நான் பண்ணுனாலும் எடுக்கவே மாட்டேங்குறான்.. சாயந்திரம் ஃபோன் பண்ணினேன்.. எடுத்தான்.. ரெண்டு வார்த்தைதான் பேசுனான்.. எப்படிடா இருக்கேன்னு கேட்டேன்.. படக்குன்னு கட் பண்ணிட்டான்..!! இப்போ அரை மணிநேரமா அடிச்சு அடிச்சு பாக்குறோம்.. எடுக்கவே மாட்டேன்றான்..!! இப்போ அடிச்சா சுச் ஆப்புன்னு வருது..!! ஏன் இப்டிலாம் பண்ணுறான்.. என்னம்மா ஆச்சு அவனுக்கு..??”

“அது.. அது வந்து..”

“சொல்லும்மா.. என்னாச்சு..??”

“ஒன்னுல்லப்பா.. அவன் ஆபீஸ்ல ஏதோ பிரச்னைன்னு சொல்லிட்டு இருந்தான்.. அதான் அப்படி இருக்கான் போல..”

“என்ன பிரச்னையாமாம்..?”

“தெரியலைப்பா.. நான் கேட்டுக்கலை..!!”

“என்னம்மா நீ.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசிட்டு இருக்குற..?” அவர் சித்ராவை திட்டிக் கொண்டிருக்கும்போதே, லிஃப்ட் கதவு திறந்து கொள்ள திவ்யா வெளிப்பட்டாள்.

“ஐயோ.. அப்டிலாம் இல்லப்பா..”

“உன்னை நம்பித்தான அவனை அங்க விட்டுருக்கோம்..? அக்கா இருக்கா.. அம்மா மாதிரி பாத்துப்பான்னுதான அனுப்பி வச்சோம்..?”

“ஆமாம்ப்பா..”

“அப்புறம் நீயே இப்படி சொன்னினா..? அவனுக்கு எதுனா பிரச்னைன்னா.. மொதல்ல நீயே அதை சரி பண்ணிருக்கணும்..? உன்னால முடியலைன்னா.. எங்கிட்டயாவது சொல்லிருக்கணும்..!! எதுவுமே பண்ணலைன்னா எப்படி..?”

திவ்யா சித்ராவை ஏறிட்டு கூட பார்க்காமல், தலையை குனிந்தவாறே அவளை கடந்து சென்றாள்.

“இல்லப்பா.. நான்..”

“நீ எதுவும் சொல்ல வேணாம் சித்ரா.. போய் அவன்கூட பேசு.. அவனுக்கு என்ன பிரச்னைன்னு பாரு.. உன்னால முடியலைன்னா அப்பாக்கு போன் அடி.. புருஷன், நாத்தனார்னு அவுகளையே கவனிச்சுட்டு இருக்காத.. தம்பியையும் கொஞ்சம் பாத்துக்க..”

“ம்ம்.. சரிப்பா..”

“மொதல்ல அவனை போன் அடிக்க சொல்லு.. உன் அம்மா இங்க கெடந்து பொலம்பிட்டு இருக்கா.. ‘என் புள்ளைக்கு என்னாச்சோ.. ஏதாச்சோ’ன்னு.. ‘அழுவாதடி.. அவனுக்கு ஒன்னும் ஆவாது’ன்னு சொன்னாலும்.. கேட்டுத் தொலைய மாட்டேன்றா.. எழவெடுத்தவ..!! போய் உடனே அவனை போன் அடிக்க சொல்லு..!!”

“சரி சொல்றேன்..”

“வச்சிடவா..?”

“ம்ம்ம்..”

சித்ரா இப்போது சற்றே எரிச்சலுற்றாள். ‘இந்த அசோக் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்..? அப்பாவிடம் இப்படி திட்டு வாங்க வைத்துவிட்டான்..? அந்த திவ்யா போய் தொலைந்தால்தான் என்ன..? வேறு பொண்ணா கிடைக்காது இவனுக்கு..? ச்சே.. எல்லாம் என் நேரம்.. எனக்குன்னு வந்து வாச்சிருக்குதுக பாரு எல்லாம்..!!’

உடனடியாய் அசோக்கை சென்று பார்க்கவேண்டும் என்று சித்ராவிற்கு தோன்றியது. அடுத்த முறை அப்பாவிடம் இருந்து கால் வந்தால், இவ்வளவு பொறுமையாக பேசிக்கொண்டு இருக்க மாட்டார். திவ்யாதான் வந்துவிட்டாளே.. கதவை கூட சாத்தாமல்.. காலில் மட்டும் செருப்பை அணிந்து கொண்டு சித்ரா கிளம்பி விட்டாள்.

ஒரு பத்து நிமிடத்தில் அடுத்த தெருவில் தம்பி வசிக்கும் வீட்டை சென்றடைந்தாள். பக்கவாட்டில் தெரிந்த படிக்கட்டை அடைந்து பொறுமையாக மேலேறினாள். மொட்டை மாடியை அடைந்தவள், அங்கே தன் தம்பி நின்றிருந்த கோலத்தை கண்டதும் அப்படியே அதிர்ந்து போனாள்.

அறைக்கு உள்ளே ஏதோ பாட்டு ஓடிக்கொண்டிருக்க, வெளியே அசோக் பைத்தியக்காரன் மாதிரி ஆடிக் கொண்டிருந்தான். செல்வாவோ கைகளை கட்டி சுவற்றில் சாய்ந்தவாறு அவன் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். உடன் பிறந்த தம்பியை அந்த கோலத்தில் கண்டதும், சித்ராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடினாள்.

“டேய்.. அசோக்.. என்னடா பண்ணிட்டு இருக்குற..?”

“ஹேய்.. டான்ஸ்க்கா.. தெரியலை..?”

“என்ன செல்வாண்ணா.. இவன் பாட்டுக்கு இப்படி ஆடிட்டு இருக்கான்.. நீங்களும் பாத்துட்டு இருக்கீங்க..?”

“நான் சொன்னேன்மா.. கேக்க மாட்டேன்றான்..”

“டேய்.. ஆடுனது போதும் நிறுத்துடா..” சித்ரா சென்று அசோக்கின் கைகளை பற்ற,

“விடுக்கா.. நான் அப்படித்தான் ஆடுவேன்..!! அண்ணா.. இன்னும் கொஞ்சம் சவுண்டு வைண்ணா..”

“அசோக்.. இப்போ ரூமுக்குள்ள போகப் போறியா இல்லையா..?”

“முடியாது.. என்ன பண்ணுவ..?”

“உள்ள போடா..” அவள் கத்தினாள்.

“ம்ஹூம்..”

அவ்வளவுதான்..!! சித்ரா பொறுமை இழந்தாள்..!! அசோக்கின் கன்னத்திலேயே ‘பளார்.. பளார்..’ என அறைந்தாள்.

“ஐயோ.. என்னம்மா நீ.. விடும்மா.. அடிக்காத அவனை..” செல்வா வந்து சித்ராவை தடுக்க முயன்றார்.

“விடுங்க செல்வாண்ணா.. என்ன நெனச்சுட்டு இருக்குறான் இவன்..?”

செல்வாவின் பிடியில் இருந்து விடுபட்டு, சித்ரா அசோக்கின் கன்னத்தில் இன்னும் ரெண்டு அறை விட்டாள். இப்போது அசோக்கின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அழுதுகொண்டே பெரிய குரலில் கத்தினான்.

“அடிக்கா.. அடிச்சே என்னை கொன்னுடு.. நான் நிம்மதியா செத்து போயிடுறேன்..” அசோக் கத்த, சித்ரா இப்போது ஸ்தம்பித்து போனாள்.

“ஏண்டா இப்படி எல்லாம் பண்ற..?”

“என்னால முடியலைக்கா..”

“இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு இந்த ஆட்டம் ஆடுற..?”

“இன்னும் என்ன ஆகணும்..?”

“என்ன ஆச்சுன்னு சொல்லு..”

“இன்னைக்கு நான் ஒரு ஷாப்பிங் மால் போயிருந்தேன்க்கா.. இவளும் அந்த திவாகரும் அங்க சாப்பிட வந்திருந்தாங்க.. நான் அவங்களை கவனிக்கலை.. அந்த பாடு என் செல்லுக்கு கால் பண்ணி சொல்லுறான்க்கா.. ‘உன் ஆளு மேல கையை போடப் போறேன்.. பாத்துட்டு போடா பன்னாடை’ன்னு.. என் முன்னாடியே அவன் அவ மேல கைபோட்டு என்னை நக்கலா பாக்குறான்க்கா.. என்னால ஒரு மசுரும் புடுங்க முடியலை..!! நான்லாம் ஏன் இன்னும் இருக்குறேன்..?” Pundai Nakkum Tamil Hot Stories

– தொடரும்

Leave a Comment