Tamil Hot Stories – அவ்வளவுதான்..!! அவர் பட்டென அமைதியானார். அவர் கூறியதற்கும், நான் கூறியதற்கும் என்ன வித்தியாசம் என்று தீவிரமாக யோசித்தார் போல தெரிந்தது. அந்த வித்தியாசம் புரிந்தால் என்னுடைய மனநிலையையையும் அவரால் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்று எனக்கு தோன்றியது. புரிந்து கொண்டாரா என எனக்கு புரியவில்லை. ஆனால் புரிந்த மாதிரியான குரலில் சொன்னார்.
“ம்ம்.. புரியுது பவி.. இனிமே.. உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.. சரியா..?”
“தேங்க்ஸ்ப்பா..!!”
நான் சொல்ல, அவர் என் நெற்றியில் முத்தமிட்டார். பின்பு சற்றே கேலியான குரலில் சொன்னார்.
“ஓகே.. நீ ஒரு மொக்கை ப்ளாஷ்பேக் சொன்னேல..? நானும் ஒரு மொக்கை ப்ளாஷ்பேக் சொல்றேன்..!! எது பெஸ்ட் மொக்கைன்னு பாக்கலாம்..!!”
“ஹ்ஹஹ்ஹ்ஹா… சொல்லுங்க..!!” என்றேன் நானும், இப்போது மனம் இலகுவானவளாய்.
“நான் சின்னப் பையனா இருக்குறப்போ.. எனக்கு வெவரம் தெரிய ஆரம்பிச்ச புதுசுல.. அப்பாவுக்கு கோயம்புத்தூர் பக்கம் ட்ரான்ஸ்ஃபர் ஆயிடுச்சு.. நாங்கலாம் மதுரைலதான் இருந்தோம்..!! அப்பா மாசம் ஒரு தடவை.. ரெண்டு தடவை வந்துட்டு போவாரு..!!”
“ம்ம்..”
“மிச்ச நாள்லாம்.. வீட்டுல அம்மா.. அக்கா.. குட்டித்தங்கச்சி.. பாட்டின்னு எல்லாருமே பொண்ணுகதான்.. நான் மட்டுந்தான் பையன்..!!”
“ஓஹோ..?”
“அதுமில்லாம.. அப்பாவுக்கு எக்கச்சக்கமா அக்கா, தங்கச்சி.. எல்லா அத்தைங்களுக்கும் எக்கச்சக்கமா பொண்ணுக..!! இப்டி.. பொண்ணுக மத்திலதான் நான் வளர்ந்ததே..!!”
“கண்ணன் மாதிரி..?”
“ஹ்ஹ்ஹ்ஹா.. ஆமாம்..!! அதனாலையோ என்னவோ.. பொண்ணுகளுக்கும் எனக்கும் அவ்ளோ ராசி..!! எக்கச்சக்கமான பொண்ணுக பிரண்ட்ஸ்..!! எல்லாம் மொய்க்கிறாங்க.. நான் என்ன பண்றது..?”
“ம்ம்ம்.. என்ன பண்றதா..? அப்டியே போட்டன்னா..? கல்யாணத்துக்கு முன்னாடி எப்டி வேணா இருந்துட்டு போகட்டும்.. இப்போத்தான் நான் வந்துட்டேன்ல..? இனிமே நான் மட்டும் போதும் உங்களுக்கு..!!”
நான் பொய்க்கோபத்துடன் கையை உயர்த்த, அவரும் போலியாக ஒரு பயத்தை வெளிப்படுத்தினார். அப்புறம் அப்படியே என்னை வாரி அவருடைய மார்புடன் அணைத்துக் கொண்டார்.
அடுத்த நாள் காலை கொடைக்கானலில் இருந்து மதுரை கிளம்பினோம். அதற்கு அடுத்த நாள் இரவு, மதுரையிலிருந்து அனைவரும் இரண்டு காரில் சென்னை கிளம்பினோம். அதிகாலை செங்கல்பட்டு சென்று அம்மாவையும் அப்பாவையும் பிக்கப் செய்து கொண்டு, ஏழு, எட்டு மணி வாக்கில் சென்னை சேர்ந்தோம்.
புதுவீட்டில் பால்காய்ச்சி குடியேறினோம். வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரட்டைப் படுக்கை அறைகள், ஹால், கிச்சன், பூஜை அறை கொண்ட குட்டியான.. ஆனால் அழகான ஃப்ளாட்..!! எங்கள் இரண்டு வீட்டினரும், இரண்டு நாட்கள் எங்களுடன் தங்கி இருந்துவிட்டு, வீட்டை ஓரளவு செட்டில் செய்து கொடுத்துவிட்டு, இனி உங்கள் பாடு என்று எங்களை தனியாக விட்டுச் சென்றார்கள்.
செங்கல்பட்டுக்கு அருகிலான கிராமத்தில் வளர்ந்த நான் சென்னை சூழலுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வது சற்று சிரமமாகவே இருந்தது. அடுத்த வீட்டில் அணுகுண்டு வெடித்தாலும் அசைந்து கொடுக்காத ஜனங்கள்..!! எங்கு ஓடுகிறோம், எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலேயே வாழ்வின் இன்பத்திலிருந்து வெகுதூரம் ஓடிவிட்ட கால்கள்..!! அப்பார்ட்மண்ட்ஸ் மாடியிலிருந்து இருந்து விழுந்த பிஸ்ஸா துணுக்கை, குடிசை வீட்டின் கூரையில் வைத்து கொத்தி தின்னும் காக்கைகள்..!! சாலை கடக்கும் முடவனுக்கு மரணபயம் ஏற்படுத்தி விரையும் மாருதி எஸ்டீம்கள்..!! கருணை இருந்தும், இரக்கம் இருந்தும், காட்டலாமா வேணாமா என குழம்பும் மனங்கள்..!! சென்னை..!!
ஆனால்.. நாங்கள் வசிக்கும் வீடு இருந்த சூழல் தேவலாம்..!! மொத்தம் மூன்றடுக்குகளும், ஆறே ஆறு ஃப்ளாட்களும் கொண்ட குட்டி அப்பார்ட்மண்ட்ஸ்..!! நாங்கள் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்..!! எங்களுக்கு எதிர் ப்ளாட்டில் ரேணுகா குடியிருந்தாள். அவளைப் பற்றி அப்புறம் சொல்கிறேன். மேலே இருந்த ஃப்ளாட்கள் ரெண்டிலும் இரண்டு பேச்சலர் க்ரூப்கள் தங்கியிருந்தன. கீழே.. ஒரு ப்ளாட்டில் ஒரு வயதான தம்பதி. இன்னொரு ப்ளாட்டில் அதிகம் வெளியே வராத அந்த நாற்பது வயது ஆள்..!! அனைவருமே பிரச்னை இல்லாத ஆட்களாகவே தெரிந்தார்கள்.. ரேணுகாவை தவிர..!!
சூழல் மட்டும் புதிதாய் தெரியவில்லை. சென்னை வந்த பிறகு அசோக்கும் கூட நிறைய விஷயங்களில் புதிதாக தெரிந்தார். மதுரையில் எட்டு மணி வரை எழ மறுப்பவர், சென்னையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து காபி கேட்டார். எதிலும் நிதானமான அசோக்கையே அது வரை பார்த்து வந்தவளுக்கு, சென்னை வந்ததும் பரபரவென பறக்கும் அசோக்கைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. மாமாவிடம் மதுரைத்தமிழில் பேசும் அசோக்கிற்கும், லேப்டாப் ஹெட்போனில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் அசோக்கிற்கும் நிறையவே வித்தியாசங்கள்..!!
எனக்கு அன்றாட வேலைகளும் ஒன்றும் கடினமானதாக இருக்கவில்லை. காலையில் அவருக்கு முன்பே எழுந்து காபி போட்டுக் கொடுப்பதில் இருந்து ஆரம்பிக்கும்..!! அவருக்கு டிபன் செய்து கொடுத்து, மதிய சாப்பாடு ஹாட் பாக்ஸில் போட்டுக் கொடுத்து, அவரை ஆபீஸ் கிளப்பி விடும் வரை பரபரப்பாக இருக்கும். அப்புறம் இரவு அவர் வீடு திரும்பும் வரை, நேரம் நத்தை போல் நகரும்..!! கொஞ்ச நேரம் வீட்டு வேலைகள்.. கொஞ்ச நேரம் டிவி.. கொஞ்ச நேரம் தூக்கம்.. கொஞ்ச நேரம் பார்க்கில் நடப்பது.. என நேரம் கடத்துவேன்.
இரவு அவர் வருவதற்கு சிறிது நேரம் முன்பாக, என்னை அலங்கரித்துக் கொள்ள ஆரம்பிப்பேன். உடை மாற்றி.. முகம் கழுவி.. கூந்தல் வாரி.. கொஞ்சமாய் பவுடர் பூசி.. முடிந்தால் கொஞ்சம் மல்லிகை சூடி..!! அவர் வந்ததும் என் அலங்காரத்தை பார்த்து.. சில சமயம் வாரி அணைத்து முத்தமிடுவார்.. சில சமயம் முத்தத்தமிடுவதுடன், படுக்கையறைக்கு அள்ளிச்சென்று கட்டில் யுத்தம் புரிவார்.. சில சமயம் கண்டு கொள்ளாமலே கடந்து சென்று விடுவார்.. பாழாய்ப்போன ஆபீஸ் டென்ஷன்..!!
ம்ம்ம்ம்.. ரேணுகாவைப் பற்றி சொல்கிறேன் என்றேன் அல்லவா..? இப்போது சொல்கிறேன். ரேணுகா அசோக் வேலை பார்க்கும் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள். அவருக்கு பாஸ்.. ப்ராஜக்ட் மேனேஜர்..!! முப்பத்தைந்து வயதை நெருங்கியிருப்பாள் என்று நினைக்கிறேன். அவளுடைய கணவர் ஒரு வருடத்திற்கும் மேலாக அவளைப் பிரிந்து ஆன்சைட்டில் இருக்கிறார். இப்போதைக்கு இவள் மட்டுந்தான் இந்த ஃப்ளாட்டில் தனியாக தங்கியிருக்கிறாள்.
அவளுடைய உதவியால்தான் அசோக் இந்த ஃப்ளாட்டை பிடித்திருக்கிறார். புதுமனைவியோடு குடித்தனம் நடத்த வீடு தேடும் இம்சையை இவள் பொறுப்பில் விட்டுவிட்டார் போலிருக்கிறது. முதல் நாள் அவளிடம் சாவி வாங்க நாங்கள் இருவரும் சென்றபோதே என்னிடம், ‘அசோக் மாதிரி ஒரு சூப்பரான ஆளை கட்டிக்க.. நீ கொடுத்து வச்சிருக்கணும்..’ என்ற ரேணுகாவை.. பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு பிடிக்காமல் போனது. என் புருஷனை சூப்பர் ஆளு என்று சொல்வதற்கு இவள் யார்..??
அசோக்கும் அந்த ரேணுகாவும் சகஜமாய் சிரித்து பழகியது, எனக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரே ஆபீசில் நான்கைந்து வருடங்களாக வேலை பார்த்ததால் வந்த நெருக்கம். மிகவும் உரிமையுள்ளவள் மாதிரி எங்கள் வீட்டிற்குள் வளைய வருவாள். மிகவும் இயல்பாக அவரை தொட்டுப் பேசுவாள். சில சமயங்களில் நான் ஒருத்தி இருப்பதையே கண்டுகொள்ளாமல், இருவரும் ஆபீஸ் விஷயங்களை மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். எனக்கு அப்படியே பற்றிக் கொண்டு வரும்.
எல்லாவற்றையும் விட எனக்கு அதிக எரிச்சலை மூட்டியது.. ரேணுகாவிடம் இருந்த ஒரு பழக்கம்தான்..!! மிகவும் கெட்ட பழக்கமாக நான் கருதியது..!! அது.. அடிக்கடி அசோக்கையும் அவளுடைய கணவரையும் கம்பேர் செய்து அவள் பேசுவது..!! சில சம்பவங்களை சொல்கிறேன்.. நீங்களே புரிந்து கொள்வீர்கள்..!!
ஒருமுறை.. அவளை எங்கள் வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்திருந்தோம். அவள் வீட்டுக்குள் நுழையும் வேளையில், நானும் அசோக்கும் கிச்சனில் இருந்தோம். அவர் எனக்கு சமையலில் உதவிக் கொண்டிருந்தார். தொல்லை செய்து கொண்டிருந்தார் என்று கூட சொல்லலாம். உள்ளே வந்ததுமே மிகவும் ஆச்சரியமான குரலில் கேட்டாள்.
“ஹேய் அசோக்.. கிச்சன்ல என்ன பண்ணிட்டு இருக்குற..?”
“ஹ்ஹ்ஹா.. ச்சும்மா ரே..ரேணு.. பவிக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு..”
“வாவ்..!! பரவாலையே.. பொண்டாட்டிக்கு கிச்சன்லலாம் ஹெல்ப் பண்ணுவியா நீ..? கிரேட்..!! ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்.. என் வீட்டுக்காரரும்தான் இருக்காரே.. இதுவரை பசிக்காக கூட அவர் ஒருநாளும் கிச்சன் பக்கம் ஒதுங்குனது இல்ல..!! ஹ்ஹஹ்ஹ்ஹா…!!”
எதோ பெரிய ஜோக் சொன்னமாதிரி அவள் சிரிக்க, ‘ஆரம்பிச்சுட்டாளா..??’ என நான் கடுப்பானேன். நான்தான் கடுப்பானேனே ஒழிய, அசோக் அவளுடன் சிரிப்பில் கலந்து கொண்டார். அப்புறம் அந்த ரேணுகாவும் கிச்சனுக்குள் நுழைந்து ஹெல்ப் செய்ய ஆரம்பித்தாள். எனக்கல்ல.. என் கணவருக்கு..!!!!!
மூன்று பேரும் பேசிக்கொண்டே சமைத்து முடித்தோம். டைனிங் டேபிளில் எல்லாம் எடுத்து வைத்தேன். சாம்பார், ரசம், மோர், உருளைக்கிழங்கு பொரியல், பூசணிக்காய் கூட்டு, அப்பளம் என சாதாரண மதிய சமையல்தான்..!! அவர்களை அமர்ந்து சாப்பிட சொல்லிவிட்டு, நான்தான் இருவருக்கும் பரிமாறினேன். கொஞ்ச நேரம் அமைதியாக சாப்பிட்ட ரேணுகா, அப்புறம் அப்பளத்தை கடித்தவாறு ஆரம்பித்தாள்.
“பவி.. உன்னை ரொம்ப நாளா நான் ஒன்னு கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்..”
“என்ன..?”
“இன்னும் எத்தனை நாளைக்குத்தான்.. இப்டி வீட்டுல உக்காந்து அப்பளம் சுட்டுக்கிட்டு இருக்கப் போற..?”
“அப்புறம்..?”
“MCA படிச்சிருக்கேல..? நீயும் வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கலாம்ல..?”
“ஹ்ஹா.. அப்படி என்ன எங்களுக்கு இப்போ பணத்தட்டுப்பாடு வந்துடுச்சு..? ஒருவேளை நாளைப்பின்ன.. அப்டி பணத்தேவை வந்துச்சுனா.. நானும் வேலைக்கு போறேன்..!! அதுவரை அவர் மட்டும் வேலைக்கு போகட்டும்.. நான் அவரையும் வீட்டையும் பாத்துக்குறேன்..”
“அதுக்கில்ல பவி.. உனக்குன்னு ஒரு ஐடென்டிட்டி வேணாமா..?”
“என் ஹஸ்பண்டுக்கு நான் நல்ல வொய்ஃப்னு ஒரு ஐடன்டிட்டி இருந்தா போதும்க்கா எனக்கு..!!”
நான் மெல்லிய குரலில் சொல்லி முடிக்க, அசோக் சற்றே பெருமிதமாக என்னைப் பார்த்து புன்னகைத்தார். ரேணுகாவும் புன்னகைத்தாள். ஆனால் அந்த புன்னகையில் இருந்தது பெருமிதமா அல்லது கேலியா என்று எனக்கு புரியவில்லை. நான் முகத்தில் சலனமில்லாமல், அவளுடைய ப்ளேட்டை பார்த்தபடி சொன்னேன்.
“உருளைக்கெழங்கு நல்லாருக்காக்கா.. இன்னும் கொஞ்சம் வைக்கவா..?”
“ம்ம்..”
நான் பொரியல் அள்ளி அவளுடைய ப்ளேட்டில் வைக்க, அவள் எடுத்து ருசி பார்த்தாள்.
“நல்லாருக்கு.. ஆனா..” என்று தயங்கினாள்.
“என்ன..?”
“அசோக்குக்கு கொஞ்சம் காரசாரமா இருந்தாதான் புடிக்கும்ல.. இதுல சுத்தமா காரமே இல்ல..?”
“அவருக்கு புடிச்சா.. அப்டியே பண்ணிடனுமா..?” நான் சற்றே எள்ளலான குரலில் கேட்டேன்.
“பின்ன..? புருஷனுக்கு எது பிடிச்சிருக்கோ.. அதை பண்றவதான நல்ல பொண்டாட்டி..??” அவளும் கேலியாகவே கேட்டாள்.
“புருஷனுக்கு எது புடிச்சிருக்குன்றதை விட.. எது நல்லதுன்னு பாத்து பண்றவதான் நல்ல பொண்டாட்டி..!!”
நான் பட்டென அப்படி சொன்னதும், ரேணுகா சற்றே திகைப்பாக என்னைப் பார்த்தாள். அப்புறம் எதுவும் பேச வாய் வராதவளாய், அமைதியாக அப்பளம் கடிக்க ஆரம்பித்தாள். அசோக் இப்போது இன்னும் பெருமிதமாக என்னைப் பார்த்தார். ஒருகையால் சோற்றையும், ஓரக்கண்ணால் என்னையும் விழுங்கியவாறு மெல்லிய குரலில் சொன்னார்.
“காரம் கொறைச்சலா இருந்தாலும்.. டேஸ்ட்ல ஒன்னும் கொறை இல்ல பவி..!!”
இப்போது நானும் அவரை காதலாக பார்த்தேன். கண்களாலேயே அவருக்கு நன்றி சொன்னேன். அதை பார்த்த ரேணுகா அவரிடம்,
“பார்டா..!! பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க மாட்டேன்ற..? ம்ம்ம்.. நடத்து நடத்து..!! பவி கொடுத்து வச்சவதான்..!! எனக்கும் ஒருத்தர் வாச்சிருக்காரே.. நான் சமைச்சதை சாப்பிட்டு.. நல்லால்லைன்னு சொல்லக்கூட இதுவரை வாயைத் தெறந்தது இல்ல..!!”
அவள் மறுபடியும் என் அசோக்கோடு அவள் கணவரை கம்பேர் செய்ய.. ‘ம்ம்ஹஹ்ம்ம்.. இவளை திருத்த முடியாது..’ என்று நான் மனதுக்குள் அவளை திட்டினேன். இவள் எப்போதும் இப்படித்தான்.. கொஞ்ச நேரம் கூட வாயை வைத்துக் கொண்டு சும்மா இர இயலாது..!! இந்த மாதிரி என் கணவருடன் அவள் கணவரை ஒப்பிட்டு பேசுவது எனக்கு எரிச்சலையே வரவழைக்கும். அதிலும் அந்த ஒப்பிடுதலில் எப்போதும் என் கணவரையே உயர்வாக அவள் சொல்வது.. எரிச்சலை இருமடங்காக்கும்..!! ‘அசோக்கை இவள் ரசிக்கிறாளோ..? அவர் மாதிரி தன் கணவர் இல்லை என்று எண்ணுகிறாளோ..? அசோக் கிடைத்திருந்தால் நன்றாயிருக்கும் என்று ஏங்குகிறாளோ..?’ என என் உள்மனம் என்னென்னவெல்லாமோ எண்ணம் கொண்டு குமையும்..!!
அவளோ அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.. அந்த மாதிரி பேசுவது என் மனதை எப்படி பாதிக்கும் என்ற அறிவும் இல்லை..!! நாளுக்கு நாள் அவளுடைய பேச்சு என் எரிச்சலை அதிகமாக்கிக் கொண்டே சென்றது. எத்தனை நாள்தான் நானும் பொறுப்பது..? ஒரு நாள் நேரிடையாகவே சொல்லிவிட்டேன்.
அன்று சண்டே.. அசோக்குக்கும் அவளுக்கும் ஆபீஸ் விடுமுறை..!! அதிகாலையிலேயே எழுந்திருந்த அசோக், மேல் ஃப்ளாட் பேச்சிலர் பையன்களுடன்.. எங்கள் அப்பார்ட்மன்ட்சுக்கு எதிரே இருக்கும் அந்த குட்டி மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார். நான் முதல் மாடி பால்கனியில் இருந்து என் கணவர் பேட்டிங் செய்யும் அழகை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இவள் வந்து சேர்ந்தாள். அசோக் அடித்த ஷாட் ஒன்றிற்காக, உற்சாகமாக கத்திக்கொண்டே வந்தாள்.
“வாவ்…. ஷாட்…!!!!!!!!!”
வாயெல்லாம் பல்லாக வந்தவளை பார்த்து நான் மெலிதாக புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தவாறு, கையில் இருந்த இரண்டு கப்களில் ஒன்றை என்னிடம் நீட்டிக்கொண்டே சொன்னாள்.
“பால் கொஞ்சம் மிச்சம் இருந்தது பவி.. ரெண்டு காபியா போட்டுட்டேன்.. இந்தா..”
“ஓ.. தேங்க்ஸ்க்கா..!!” நான் வாங்கிக் கொண்டேன். வாய் வைத்து கொஞ்சமாய் உறிஞ்சினேன்.
“கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கும் பரவாலையா..? அசோக்குக்கு காபி ஸ்ட்ராங்கா இருந்தாதான் புடிக்கும்.. அந்த நெனப்புலேயே போட்டுட்டேன்.. உன் டேஸ்ட் என்னன்னு தெரியலை..!! ஓகேவா..?”
அவள் சொல்ல.. எனக்கு பட்டென்று அவள் மீது எப்போதும் வரும் அந்த எரிச்சல் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. என் புருஷனுக்கு என்ன புடிக்கும்னு இவளுக்கு என்ன அக்கறை..??? ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், மெல்லிய ஆனால் தீர்க்கமான குரலில் சொன்னேன்.
“அவருக்கு என்ன புடிக்குமோ.. அதுதான் எனக்கும் புடிக்கும்..!!”
“தேட்ஸ் நைஸ்..” என்று இளித்தவள், மைதானத்தில் பார்வையை வீசி கொஞ்ச நேரம் கிரிக்கெட் பார்த்தாள். அப்புறம் மீண்டும் ஆரம்பித்தாள்.
“ஹேய்.. பவி.. அசோக் போட்டிருக்குற அந்த டி-ஷர்ட் பாத்தியா..?”
“ம்ம்..”
“நல்லாருக்கா..?”
“ம்ம்.. நல்லாருக்கு.. ஏன்க்கா கேக்குறீங்க..?”
“அது என்னோட சாய்ஸ் தெரியுமா..? நானும் அவனும் போய்தான் அந்த டி-ஷர்ட் எடுத்தோம்..”
அவள் பெருமையாக சொல்ல, அவர் அந்த டி-ஷர்ட்டை கழட்டிப் போட்டதும் முதல் வேலையாக அதை எங்காவது தூரமாக தூக்கிப் போட வேண்டும் என்று நான் மனதுக்குள் முடிவு கட்டினேன். அவளோ என் மனநிலையை உணர்ந்தவளாக தெரியவில்லை. மேலும் எரிச்சல் மூட்டினாள்.
“என் வீட்டுக்காரருக்கு டி-ஷர்ட் போடுறதே புடிக்காது.. ‘போட்டுக்குங்க.. உங்களுக்கு நல்லாருக்கும்’னு.. எவ்ளோ கெஞ்சு.. ம்ஹூம்… முடியாதுன்னா முடியாது..!!”
அவள் சொன்னதைக்கேட்டு நான் புகைந்து கொண்டிருக்கும்போதே, கழுத்து வரை எழும்பி வந்த பந்தை அசோக் மட்டையால் ஓங்கி அறைய.. இவள் கிடந்தது இங்கு துள்ளினாள்.
“வாவ்… சூப்பர் ஷாட்.. இல்ல பவி..?”
“ம்ம்ம்..” என்றேன் நான் பற்களை கடித்துக்கொண்டு.
“அசோக்குக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்ல..? நல்ல இன்ட்ரஸ்ட் இல்ல..?”
“ம்ம்ம்..”
“நான் கூட என்னவோ நெனச்சேன்.. நல்லாவும் ஆடுறான்..!!”
“ம்ம்ம்..”
“அசோக்குக்கு கிரிக்கெட் மட்டும் இல்ல.. எல்லா ஸ்போர்ட்சுமே ரொம்ப இன்ட்ரஸ்ட்.. ஸ்போர்ட் பத்தி பேசுனா.. ரெண்டு பேரும் நேரம் போறது தெரியாம பேசிட்டு இருப்போம்..!!”
“ஓஹோ..?”
“ஹ்ஹாஹ்ஹா.. என் ஹஸ்பண்டுக்குத்தான் இதுலலாம் சுத்தமா இன்ட்ரஸ்டே கெடயாது.. ‘வெளையாட்டுலாம் சும்மா வெட்டி வேலை’ன்னு சொல்லுவார்.. நான் தலையில அடிச்சுக்குவேன்..!! அசோக் அந்த வகைல பெஸ்ட்பா..!!”
அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் என்னால் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இருக்க முடியவில்லை. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்..??? கேட்டு விட வேண்டியதுதான்.. ஆனால் நேரிடையாக, அவள் முகத்தில் அடிப்பது மாதிரி வேண்டாம் என்று தோன்றியது . எரிச்சலை மனதுக்குள் போட்டு அடைத்துக்கொண்டு, முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் கேட்டேன். Chinna Mulai Tamil Hot Stories
– தொடரும்