அவளும் பெண் தானே – 1 (Avalum Pen Thane)

This story is part of the அவளும் பெண் தானே series

    ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் சமர். மீண்டும் ஒரு தொடர் கதையுடன் வந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த தொடர் நான் எழுதியதிலே மிகவும் வித்தியாசமானது மற்றும் என்னை மிகவும் கவரந்ததாக இருக்கிறது. படிக்கும் உங்களுக்கும் அந்த சுகம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இந்த தொடரில் வரும் ஒவ்வொரு பகுதியையும் மேலோட்டாக படித்தால் அது சாதரணமாக தான் தெரியும். சாதாரண நடைமுறை வாழ்க்கையில் நடப்பது போல் தான் இருக்கும்.. ஆழந்து, ரசித்து படித்தால் மட்டுமே அதன் முழுபலனை அடைய முடியும்.

    நான் வாழ்வில் இழந்த, என் சந்தோஷத்தில் இருந்து எப்படி மீண்டு வர போகிறேன் தெரியவில்லை.. அந்த சந்தோஷத்தை மீட்டு எடுக்க முடியுமா? தெரியவில்லை.. இதை எல்லாம் நினைத்துக் கொண்டே இரண்டாவது பீர் பாட்டிலை காலி செய்தேன்.. எனக்கு போதே தலைக்கு ஏறி இருந்தது.

    அந்த நிலையிலும் அடுத்த சிகரெட் பற்ற வைத்து தட்டு தடுமாறி புகை இழுத்து விட்டு கொண்டிருந்தேன். மிச்சம் இருந்த ஒரு பாட்டிலையும் காலி செய்தேன். எந்திரித்து நடக்க முடியாத அளவுக்கு போதையில் இருந்தேன். ஆற்றை கடந்து அந்த பக்கத்தில் யாரோ ஒருவர் நான் மறக்க நினைக்கும் “அகல்யா” என்ற அந்த பெயரை சொல்லி யாரையோ அழைத்தனர்.

    நானும் போதையில் அகல்யா அகல்யா புலம்ப ஆரம்பித்தேன். நீ செய்ததற்கு நிம்மதியாக புலம்ப கூடாது என்று நினைத்த வருண பகவான் மழையாக பொழிய ஆரம்பித்தார். என்னால் எந்திரித்து செல்ல முடியாத அப்படி ஒரு நிலைமை. செய்ததற்கு தண்டையாக மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன்.

    தண்டனை அளவு (மழையின்) குறைந்ததும் தட்டு தடுமாறி எழுந்து நடக்க ஆரம்பித்தேன். நிலையில்லாமல் நடந்து எப்படியோ மேட்டில் ஏறி நடக்கும் ரோட்டுக்கு வந்தேன். மழை பெய்து கொண்டே தான் இருந்தது..

    தட்டு தடுமாறி கால்கள் பின்னி பிணைந்து மெதுவாக நடந்து அந்த மழையில், அந்த ஒத்தையடி பாதையில் இடது பக்கம் தனியாக இருந்த ஒரு ஓட்டு வீட்டின் சுவரை பிடித்தும் நடக்க முடியாமல் தள்ளாடி அந்த வீட்டின் கதவை தட்டியதும் திறந்த வேகத்தில் உள்ளே போய் விழுந்தேன்…

    இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை அடுத்தடுத்து வரும் பகுதியில் சொல்கிறேன். அதுவரை காத்திருக்கவும்..

    அவள் இனியும் வருவாள்….

    இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected] சொல்லுங்கள்…

    கதை பற்றி சிறு முன்னோட்டம் :

    இந்த கதை முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய ஒரு தொடர்.. ஆண்களின் பார்வையில் பெண்கள் எப்படி எல்லாம், எந்தெந்த கோணத்தில், எந்தெந்த விதத்தில், எல்லாம் பார்க்கிறார்கள் என்பது தான் கதையின் கரு. அப்படி வித்தியாசம் வித்தியாசமாக பல கோணங்களில், பல உறவு முறைகளில் ஆண்களின் பார்வையில் தெரிந்தாலும், பெரும்பாலோனாரின் பார்க்கும் பார்வையின் எண்ணம் ஒன்றே ஒன்றுக்கு தான் இருக்கிறது. அது காமத்திற்க்காக மட்டுமே..

    ஆண்களின் பார்வையில் பெண்கள் ஒரு அம்மாவாக, அக்காவின், தங்கையாக, அண்ணியாக, சித்தியாக, பெரியம்மாவாக, அத்தையாக, முறை பொண்ணாக ஏன் சில பெண்கள் தாசியாக கூட தெரிகிறார்கள். இப்படி பலவறாக தெரிந்தாலும் பெரும்பாலானோர் இப்போது பார்க்கும் எண்ணம் நம்மில் பலருக்கு ஒரே ஒருவிதமாக இருக்கிறது.

    அது காம எண்ணோத்தோடு பார்ப்பது… காமத்திற்காக ஒரு தாசியிடம் சென்றாலும் காசு குடுக்கிறோம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக பொதி சுமக்கும் கழுத்தையை விட அதிகமான சுமையை ஏற்றிவிடுகிறோம். சில திருமணமான பெண்களின் நிலைமை இதை விட இன்னும் மோசமானதாக இருக்கும். இன்றும் அப்படி தான் இருக்கிறது..

    இந்த நிலைமையை இந்த தொடர் மாற்றியமைக்கும் என்று நம்புகிறேன்..

    குறிப்பு :

    மேலே சொன்ன சில விஷயங்களை எல்லாம் வைத்து ஆண்களை இழிவாகவும், பெண்களை உயர்வாகவும் எழுத போகிறேன் என்று நினைக்க வேண்டாம். காமத்தில் ஆண்களின் பார்வை பெண்களின் மீது எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எழுதுகிறேன்… அவர்களின் மன எண்ணங்களை புரிந்து நடந்து கொள்வது ஆண்களின் ஆண்மை மற்றும் அழகும் கூட… சரி கதைக்கு போலாம்…

    இந்த தொடரும் முழுக்க முழுக்க ஒரு கற்பனை காவியம் தான்…

    அத்தியாயம் 1

    வாழ்க்கையில் வரும் சில நாட்கள் அல்லது குறிப்பிட்ட ஒரு நாள் சிலருக்கு சந்தோஷத்தை தரலாம். சிலருக்கு துக்கத்தை தரலாம். இன்னும் சிலருக்கு ஏன் அந்த குறிப்பிட்ட நாள் நம் வாழ்வில் வருகிறது என்று அதிகபடியான வேதனை கூட தரலாம்.

    நானும் அந்த கடைசி ரகத்தை சேர்ந்தவன் தான். என் வாழ்வில் அந்த குறிப்பிட்ட ஒரு நாளை நான் இருக்கும் இடத்தில் எதிர் கொள்ள முடியாமல் சொந்த ஊரான மதுரைக்கு வந்து கொண்டு இருக்கும் சிறிய அளவிலான கான்செஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் ஒரு தனி மனிதன்..

    மே மாதம் 23ம் நாள்..

    இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை எல்லா மனிதர்களையும் போல நானும் என் வாழ்வில் யாரும் அனுபவித்திராத எல்லா மனிதரும் பொறாமை படுக்கிற அளவுக்கு உச்சகட்ட சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருந்த ஒரு அதிசய மனிதரில் நானும் ஒருவன். அதுவும் ஒரு பெண்ணினால் கிடைத்தது அந்த சந்தோஷம், மகிழ்ச்சி, இன்னும் எத்தனை வார்த்தை இருக்கிறதோ அத்தனையும் பொருந்தும்.

    ஒரு பெண்ணால் ஒரு ஆண் மகனுக்கு, தான் மனதில் இடம் கொடுத்து, அவனை மனத்துக்குள் நிலை நிறுத்திய பின், அவனுக்கு எல்லா விதத்திலும் மகிழ்ச்சியையும், சுகத்தையும் எப்படி அவன் நினைத்து பார்த்திராத அளவுக்கு கொடுக்க முடிகிறது.. என் வாழ்விலும் அந்த மகிழ்ச்சியை, சுகத்தை திகட்ட திகட்ட அள்ளி கொடுத்தாள் அவள்.. ஆனால் இப்போது எனக்கு அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை..

    இதையெல்லாம் நினைத்து கொண்டே அன்று இரவு என் வீட்டிலிருந்து கிளம்பி சென்னை கோயம்பேடு பக்கத்தில் இருக்கும் எஸ் ஆர் எஸ் டிராவல்ஸ் மதுரை போவதற்கு சிக்கெட் புக் பண்ணியிருந்தேன். நான் அந்த இடத்துக்கு சரியாக 8.45மணிக்கு வந்து சேர்ந்தேன்.

    நான் புக் செய்திருந்த என் டிக்கெட் காட்டி 4s சீட்டில் ஏறி உட்காந்தேன். அது ஒருவர் மட்டும் படுக்கும் sleeper சீட். பஸ் கிளம்ப இன்னும் 15நிமிஷம் இருந்தது. அதற்குள் என் மனம் மறுநாள் உன்னுடைய நாளை எப்படி எதிர்கொள்ள போகிறாய்? என்ற கேள்வியை கேக்க ஆரம்பித்தது. இதை எல்லாம் நினைக்காமல் இருக்க ஏற்கெனவே ஒரு தூக்க மாத்திரை கை வசம் கொண்டிருந்தேன்..

    அதை போட்டுகிட்டேன். பஸ் கிளம்ப ஆரம்பித்தது. நானும் அதை பற்றி நினைக்காமல் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே அந்த பயணத்தை தொடங்கினேன்.. சென்னையை தாண்டியதும் எனக்கும் தூக்கம் வந்தது. நானும் அந்த நிகழ்வை மறந்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் தூங்க ஆரம்பித்தேன். நல்ல வேலை இடையில் முழிப்பு எதுவும் வரவில்லை.

    பஸ் மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்ட் நெருங்க இன்னும் சில நிமிடங்கள் இருந்த சமயத்தில் தான் முழிப்பு வந்தது. நான் எழுந்து கீழே இறங்கி ஆள் இல்லாத சீட்டில் உட்காந்து கொண்டேன். பஸ் மாட்டுதாவணிக்கு காலை 6.30 மணிக்கு வந்தது..

    மாட்டுதாவணியில் பஸ் விட்டு இறங்கி என் கிராமத்திற்கு செல்வதற்கு அடுத்த பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். பஸ் வர ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆனது. அதுவரை, அங்கிருந்த மக்கள் தங்கள் வியாபாரத்தை காலையில் சுறுசுறுப்பாக பார்த்து கொண்டிருந்தனர்.

    காபி மற்றம் டீ கடையில் ஆட்கள் கூட்டமாக இருந்த வண்ணமாக தான் கண்ணில் பட்டனர். நானும் அவர்களில் ஒருவனாக போய் அங்கிருந்த சுறு சுறுபான மனிதர்களை பார்த்து கொண்டே ஒரு காபி வாங்கி குடித்தேன்.

    காபி குடித்து முடித்த சில நிமிடங்களிலே நான் செல்ல வேண்டிய பேருந்து வந்து நின்றது. அதில் ஏறி உட்காந்தேன். அந்த பேருந்தும் நேரம் எடுக்காமல் சீக்கிரம் கிளம்பியது. நானும் என் கிராமத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கி அன்றைய நாளை எதிர் கொள்ள தயாராக இருந்தேன்..

    இதுவரை எல்லாம் நன்றாக தான் இருந்தது.. ஆனால் நாம் ஒரு விசயத்தை தைரியத்தோடு எதிர் கொள்ள தயாராக இருந்தாலும் இடையில் விதி புகுந்து வீணை வாசித்து கெடுத்து விடும். அது தான் என் வாழ்விலும் நடந்தது.

    நான் என் வாழ்வில் எந்த பெயர் இடம் பெற்றிட கூடாது இருந்தேனோ அந்த பெயர் ஊருக்கு சென்று சேருவதற்குள் மூன்று முறை இந்த முறையும் உனக்கு இந்த நாள் சரியாக அமையாது என்று நடுமண்டையில் அடித்து தீர்ப்பு சொன்னது போல் என் காதில் வந்து விழுந்தது..

    மறக்க நினைத்தாலும் விதி விடாது… அந்த சம்பவம் மீண்டும் என் மனதில் கிளற ஆரம்பித்தது. நானும் அந்த சம்பவத்துக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பித்தேன். கண்டக்டர் ஊரின் பெயரை சொன்னதும் தான் கொஞ்சம் சுதாரித்து வெளியே வந்து பஸ்ஸை விட்டு இறங்கினேன்.

    இன்று மே 24.

    வாழ்வில் இந்த நாள் ஏன் வருகிறது என்று யோசிக்கும் அளவுக்கு என் வாழ்க்கை ஒரே ஒரு நொடியில் மாற்றிவிட்டது. இந்த நாளை, சென்னையில் என் வீட்டில் எதிர் கொள்ள முடியாமல் தான் இங்கு வந்திருக்கிறேன். இங்கு வந்திறங்கும் போதும் அவ்வளவு துக்கம், சோகம், ஏமாற்றம், அழுகை, வருத்தம், இழப்பு ஏன் வியப்பாக கூட தான் இன்னும் இருக்கிறது. அதை வியப்பு என்று சொல்வதா? அல்லது ஏமாற்றம் என்று எடுத்து கொள்வதா? இழப்பு என்று எடுத்து கொள்வதா? தெரியவில்லை.

    இந்த நாள் என் வாழ்வில் ஒரு கருப்பு நாள் கூட சொல்லலாம். என் ஒட்டு மொத்த வாழ்க்கை புரட்டி போட்ட நாள். என் வாழ்க்கையின் சந்தோஷத்தை பறித்து கொண்ட நாள். அந்த சந்தோஷம் பறி போக சூழ்நிலை மட்டும் காரணம் இல்லை நானும் கூட தான்.

    இன்னும் சொல்ல போனால் நான் தான் அந்த வாய்ப்பை சூழ்நிலைக்கு கொடுத்தேன் என்று சொல்லலாம்… அந்த குற்ற உணர்வு தான் என்னை இன்னும் அந்த நாளை எதிர் கொள்ள முடியாமல் செய்கிறது என்று நினைக்கிறேன்.

    காலை 11 மணி…

    இந்த ஒரு கொடிய நாளில் நடந்த அந்த சம்பவம் என்னை வாட்டியது. இங்கு வந்தும் என்னால் அந்த நிகழ்வை மறக்க முடியவில்லை. வீட்டில் இருந்து கிளம்பி நேராக ஆத்துக்கு செல்லும் பாதையில் வண்டியை விட்டேன். அந்த பாதையில் கடைசியில் இருந்த ஒரு ஒயின் ஷாப் வண்டியை நிறுத்தி 3பீர் வாங்கினேன்.

    ஏற்கெனவே சென்னையில் இருந்து கொண்டு வந்த ஒரு புல் ரெட் ஒயின் இருந்தது. அதையும் எடுத்து கொண்டு அந்த ஊரின் வழியே செல்லும் வைகை ஆற்றின் கரையில் போய் உட்காந்தேன்…

    ஆற்றில் சித்திரை திருவிழாவுக்காக மற்றும் பாசத்திற்க்காக திறந்து விட்ட நீர் சலசலவென்று ஓடி கொண்டிருந்தது. அந்த நீர் எந்த மாசு இல்லாமல் எவ்வளவு தூய்மையாக போய் கொண்டிருந்தது. ஆனால் என் மனசு அப்படி தூய்மையாக இல்லை.

    அது மட்டுமில்லாமல் எந்த திசையில் காற்று அடித்தாலும் அந்த திசைக்கு ஏற்ப அசைந்து வளைந்து கெடுக்கும் நாணல் புல், அங்கு துணியை துவைத்து உலர வைக்கும் பெண்கள், அங்கிருந்த புல்லை உண்டு பசியை அமர்த்தும் ஆடு, மாடுகள், அந்த ஆற்றை கடந்து அடுத்த ஊரில் வேலை பார்க்க செல்லும் வேலையாட்கள், ஆற்றில் நீந்தி விளையாடும் சிறுவர்கள்.. சரக்கு அடிக்கும் நம் குடிமகன்கள்.. அவர்கள் பேசும் அவர்களுக்கான ஒரு பாஷை.. பார்க்க ரசிக்க இவ்வளவு இருந்தும் என் மனம் எதிலும் செல்லவில்லை..

    நான், என் வாழ்வில் நடந்த சோகமான அந்த நிகழ்வை மறக்க இப்படி தான் ஒவ்வொரு வருடமும் எனக்குள்ளாகவே போராடி கொண்டிருக்கிறேன். ஆனாலும் என்னால் அதில் வெற்றி காண முடியவில்லை. என் வாழ்வில் அந்த சம்பவத்திற்கு பிறகு தினமும் நரக வாழ்வாக தான் இருந்தது.

    சென்ற வருடம் இதே நாள் சென்னையில் இருந்தேன். அங்கே இருந்ததால் அது எனக்கு மிகவும் நரகமாகவே இருந்தது. அந்த நிகழ்வை மறக்க நினைத்து நான் என்னையே மறந்து சுயநினைவை இழக்கும் அளவுக்கு குடித்து எங்கையோ ஒரு ரோட்டுல விழுந்து கிடந்தேன். அதன் பிறகு என்னுடன் வேலை செய்பவர்கள் தான் என்னை வீட்டில் சேர்த்தனர்.

    என்னை வீட்டில் சேர்த்த பிறகு நான் சுயநினைவு வந்த போது எல்லாரும் அவர் அவர் பாணியில் அட்வைஸ்ஸாக பண்ணினார்கள். இருந்தாலும் என் காதில் ஒரு வார்த்தை கூட போகவில்லை. என் மனதில் இருந்த அந்த ஆறாத ரண வடு இன்னும் இருக்கதான் செய்கின்றது..

    அதை நானே கொஞ்சம் கொஞ்சமாக மறக்க நினைத்தாலும் இந்த சமுதாயம் நமக்கு திரும்ப திரும்ப ஏதோ ஒரு வகையில் அதை நமக்கு நினைவூட்டி கொண்டே தான் இருக்கும். அது எழுதபடாத ஒரு விதி. அதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இல்லையெனில் அதை மறக்க வேற ஏதோ ஒன்றை நினைத்து கொள்ள வேண்டும். அதை செய்ய தவறினால் என்னை மாதிரி மறக்க முடியாமல் தவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உங்கள் வாழ்வில் ஏற்படலாம்..

    இதையெல்லாம் நினைத்து கொண்டே நான் ஒரு சிகரெட் பற்ற வைத்து புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்ற போராட ஆரம்பித்தேன். வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்த போது ஆற்றின் நீரின் நுரை போல் பொங்கி வழிந்து ஓடியது. அதையும் ஒரே மூச்சில் பாதி பாட்டிலை காலி செய்து அதனுடன் இருந்த ஒயின் கலந்து குடிக்க ஆரம்பித்தேன்.

    அங்கிருந்த சில ஆண்கள் பெண்கள் அவரவர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அதை பார்த்து ரசிக்க மனம் இல்லாமல் மீதி இருந்த பாட்டில் இருந்த சரக்கை 10நிமிடத்தில் காலி செய்தேன். பற்ற வைத்த சிகரெட்டும் கருகி முடிந்து போய் இருந்தது. என் வாழ்க்கையும் அந்த பற்ற வைத்த சிகரெட் மாதிரி தான் நினைக்க தோன்றியது..

    அடுத்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த பீரை நுரை வெளியேற கூட விடாமல் குடிக்க ஆரம்பித்தேன்.. மூச்சு விடாமல் குடித்து என் மூக்கு வழியே புரை ஏற ஆரம்பித்தது. என் தலையை ஏதாவது கை தொடுகிறதா என்று தான் பார்த்தேன். இல்லை..

    மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். இழந்தது எதுவும் அப்படியே கிடைத்துவிடாது. உங்கள் வாழ்வில் பாக்கியம் ஏதாவது செய்து இருந்தால் வேற ஏதாவது வழியில் கிடைக்க வாய்ப்பு உள்ளதே தவிர. இழந்தது, இழந்தது தான். இழந்ததை மீட்டு எடுக்க முடியாது.. நான் என் வாழ்வில் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் (ஒரு பெண்ணை) இழந்துவிட்டேன்.