நெஞ்சோடு கலந்திடு – 1 (Tamil Sex Story - Nenjodu Kalanthidu 1)

‘நெஞ்சோடு கலந்திடு..’ ஒரு மென்மையான காதல் கதைதான். புதுமையான கதை என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால்.. சொல்லும் விதத்தில் வித்தியாசப்படுத்தி காட்டமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஐந்தாறு பாகங்களாக.. இதமான போக்கிலேயே கதையை செலுத்த திட்டமிட்டிருக்கிறேன். எனது முயற்சிகள் எல்லாவற்றிற்கும் உற்சாகம் தரும் நண்பர்கள், இந்தக்கதைக்கும் அதே உற்சாகத்தை தருவார்கள் என்று நம்புகிறேன். நன்றி..!!

Nenjodu2

அத்தியாயம் 1

பதினைந்து வருடங்களுக்கு முன்பு..!!

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்.. சிலைமானை தாண்டியதும் இடப்பக்கமாக முதலில் வருகிற அந்த சிறிய கிராமம்தான் வேப்பங்குளம்..!! சாலையின் இருபுறமும்.. நீர்குடித்து நாளாகி.. தாகத்தில் தகித்திருந்த.. காய்ந்து போன வயல்நிலங்கள்..!! வானத்தை வாய்பிளந்து பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தன..!! அவற்றின் ஊடே.. ஆங்காங்கே கருவேல மரங்கள் மட்டும் பச்சை நிறத்தில் கெக்கலிப்புடன் தலையாட்டிக் கொண்டிருந்தன..!!

வயல் வரப்புகளில் வளர்ந்திருந்த கோரைப்புற்களை கடித்து, பசி தீர்த்துக் கொள்ளும் ஒரு ஆட்டுக்கூட்டம்..!! அந்த ஆட்டுக்கூட்டத்திற்கு சற்று தள்ளியே அந்த ஆள் நின்றிருந்தான். அழுக்கேறியும் கசங்கியும் போயிருந்த வேஷ்டியை, அவன் உயர்த்தி கட்டியிருக்க, உள்ளே அணிந்திருந்த சிவப்புநிற கால்சட்டை, பளிச்சென வெளியே தெரிந்தது. உச்சி வெயில் மண்டையை பொசுக்காமல் இருக்க.. தலையை முழுவதுமாய் மறைத்து.. துண்டு போர்த்தியிருந்தான். அவனுடைய ஒரு கையில்.. நீளமான தடிமனான ஒரு கம்பு. இன்னொரு கையில்.. இன்னும் சிறிது நேரத்தில் அவனுடைய வயிறை குளிர்விக்கப்போகும்.. பழைய சாதம் அடங்கிய தூக்குச்சட்டி..!!

நிதானமாக மதமதப்பாக புல் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள், திடீரென மிரண்டு போய், ‘பே…!!!!’ என்று கத்தியவாறு, பேய்பிடித்துக் கொண்டமாதிரி நாலாபுறமும் சிதறி ஓடின. குழப்பத்தில் ஆடுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள, அவற்றின் கழுத்தில் கட்டியிருந்த மணிகளின் ‘கிணிகிணி’ ஓசை, அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்தது. ஆடுமேய்ப்பவன் காரணம் புரியாமல் திகைத்துப் போய் நின்றிருக்க, ஆட்டுக்கூட்டத்தை அந்தமாதிரி சிதறி ஓட செய்த அந்த சிறுவனும், அந்த சிறுமியும் ஒரே நேரத்தில் வரப்பை தாண்டிக் குதித்தவாறு ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

“ஏய்ய்ய்ய்… எடுப்பட்ட பய புள்ளைகளா..!! என்ன பண்றேன் பாரு உங்களை…!!”

ஆத்திரத்துடன் பல்லைக் கடித்து கத்திய ஆடு மேய்ப்பவன், சிறுவர்களை வளைத்து பிடிக்க இரண்டு எட்டு எடுத்து வைத்தான். அதற்குள் ஆடுகள் கன்னாபின்னாவென சிதறி தூரமாய் ஓட ஆரம்பிக்க, சிறுவர்களை பிடிக்கும் முயற்சியை கைவிட்டு, ஆடுகளை விரட்டிக்கொண்டு ஓடினான். நாக்கை வளைத்து வாய்க்குள் அடக்கி,

“கெக்கெக்கெக்கெக்கெக்…”

என்று ஒருவித வினோத ஒலியை எழுப்பியவாறு.. கையில் இருந்த கம்பை சுழட்டியவாறு.. வேகமாகவும், அதே நேரம் தூக்குச்சட்டியின் மூடி திறந்துவிடாமல் கவனமாகவும்.. செருப்பில்லா கால்களுடன் ஆடுகளின் பின்னால் ஓடினான்.

அவனுடைய திட்டையும், ஆடுகளின் பின்னால் அவனுடைய ஓட்டத்தையும்.. சுத்தமாக கண்டு கொள்ளாமல் அந்த சிறுவனும், சிறுமியும் ஒவ்வொரு வரப்பாக தாண்டி தாண்டி குதித்து ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஒரு ஐந்தாறு வரப்புகளை அந்த மாதிரி தாண்டிக் குதித்ததுமே, அவர்கள் செல்ல நினைத்த இடம் வந்து சேர்ந்தது.

வயல்வெளிகளுக்கு நடுவே ஆறடி உயரத்திற்கு அந்த அகலமான மணல் மேடு..!! அதன் மையத்தில் ஒரு பெரிய கருவேல மரம், அந்த மேடுமுழுக்க நிழல் பரப்பியிருந்தது..!! இரண்டு கைகளையும் ஊன்றி, இருவரும் மெல்ல கவனமாக அந்த மேட்டில் ஏறினார்கள். உச்சியை அடைந்ததும், ‘ஹே.. ஹே.. ஹே..’ என்று.. அரை நிமிடத்துக்கும் மேலாக இருவரும் மூச்சிரைத்தார்கள். பின்பு தலையை திருப்பி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒரே நேரத்தில் இதழ்களை விரித்து அழகாக புன்னகைத்தார்கள். பின்பு அந்தப்புன்னகை.. வெண்பற்கள் வெளியே தெரியும் அளவிற்கு பெரும் சிரிப்பாய் மாறியது. சிறுவன்தான் மூச்சிரைப்புடனே முதலில் பேசினான்.

“நீ கூ..கூட ஓடி வர்றப்போ.. உன் கால் கொ..கொலுசு.. ஜல்ஜல்னு.. கே..கேக்க நல்லாருக்கு திவ்யா..”

“என் கொ..கொலுசை உனக்கு பிடிச்சிருக்கா அசோக்..?”

கேட்டுக்கொண்டே திவ்யா தன் பாவாடையை மெல்ல மேலே உயர்த்தி, காலில் அணிந்திருந்த கொலுசை அசோக்கிற்கு தெளிவாக காட்டினாள். அசோக்கும் திவ்யாவின் வெளுத்த கால்களை கவ்வியிருந்த அந்த வெள்ளிக்கொலுசுகளை ஆசையாக பார்த்தான்.

“ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு திவ்யா.. புதுசா..?”

“ஆமாம்.. எங்கப்பா நேத்து மதுரை போயிருந்தார்ல..? வாங்கிட்டு வந்தாரு..”

“உன் காலுக்கு.. நல்லா.. அழகா இருக்கு திவ்யா..”

“நல்லா பளபளன்னு மின்னுதுல..?”

“ஆ..ஆமாம்..”

இருவரும் கொஞ்ச நேரம் அந்த கொலுசுகளிலேயே பார்வையை பதித்திருந்தார்கள். பின்பு அசோக் மெல்ல கைநீட்டி, அவளது வலது கால் கொலுசை தொட்டான். அப்புறம் மெல்ல கையை கீழிறிக்கி அவளது பிஞ்சு பாதத்தை தடவினான். உடனே திவ்யா உயர்த்தி பிடித்திருந்த பாவாடையை படக்கென்று கீழே நழுவவிட்டாள். தன் முன் மண்டியிட்டிருந்த அசோக்கின் முகத்தை பார்த்து அழகாக புன்னகைத்தாள். அசோக்கும் அவளைப்பார்த்து மெலிதாக புன்னகைத்துவிட்டு, அப்புறம் பேச்சை மாற்றும் விதமாக சொன்னான்.

“ம்ம்.. சரிசரி.. வா.. வந்த வேலையை பார்ப்போம்.. அதை வெளில எடு..”

“இரு அசோக்.. எடுக்குறேன்..”

திவ்யா கையில் இருந்த பையை பிரித்தாள். உள்ளே கைவிட்டு அந்த நான்கு முட்டைகளை வெளியே எடுத்தாள். சற்றுமுன் அவள் தன்வீட்டில் இருந்து திருடிக்கொண்டு வந்த முட்டைகள். அடைகாத்த கோழியை அடித்து விரட்டிவிட, அதன் அடியில் கிடந்த முட்டைகள். அவைகளை அசோக்கின் கையில் கொடுத்தாள். அதை வாங்கி கீழே வைத்த அசோக், தன்னுடைய பிஞ்சு கைகளால் மண்ணை தோண்டி குழி பறிக்க ஆரம்பித்தான். அவன் செய்வதையே கவனமாய் பார்த்துக்கொண்டிருந்த திவ்யா அப்பாவியாய் கேட்டாள்.

“நெஜமாவே மரம் வருமா அசோக்..?”

“ம்ம்.. வரும் திவ்யா.. பெரிய மரம் வரும்..!!”

“முட்டை காய்க்குமா..?”

“ம்ம்.. பெருசு பெருசா.. தேங்கா மாதிரி காய்க்கும்..!!”

“அவ்ளோ பெருசாவா..? நெஜமாவா சொல்ற..??”

“நெஜந்தான் திவ்யா.. நான்தான் சொல்றேன்ல..?”

“ம்ம்.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!! நம்ம மரத்துல காய்க்கிற முட்டையை வேற யாருக்கும் குடுக்க கூடாது அசோக்.. நம்ம ரெண்டு பேருக்கு மட்டுந்தான்.. சரியா..?”

“சரி திவ்யா..!! நாம சாப்டது போக மிச்ச முட்டையை வச்சு.. முத்தலிபு பாய் ஜவுளிக்கடை பக்கத்துல.. நாம ஒரு முட்டைக்கடை ஆரம்பிக்கலாம்.. நெறய சம்பாதிக்கலாம்..”

“நெஜமாவா சொல்ற..??” திவ்யா கண்களில் கனவு பளபளக்க கேட்டாள்.

குழி ஓரளவு பெரிதானதும், அசோக் அந்த நான்கு முட்டைகளையும் உடைத்து உள்ளே ஊற்றினான். மண்ணை தள்ளி மூடினான். இருவரும் எழுந்து நின்றார்கள். மூடப்பட்ட குழியையே கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்தார்கள். திவ்யா மெல்ல கேட்டாள்.

“மரம் வளர எத்தனை நாள் ஆகும் அசோக்..?”

“ஒரு மாசம் ஆகும்..”

“அவ்ளோ பெரிய மரம்.. ஒரு மாசத்துல வளர்ந்திடுமா..?” திவ்யா சற்றே நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.

“வளர்ந்திடும் திவ்யா.. நான்தான் சொல்றேன்ல..?”

“ம்ம்.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!!”

இப்போது திவ்யாவின் குரலில் புதிதாக நம்பிக்கை பிறந்திருந்தது. முட்டைகளை புதைத்த இடத்தையே திவ்யா ஆசையும், கனவுமாக பார்த்துக் கொண்டிருக்க, அசோக் மட்டும் சற்றே தூரமாய் பார்வையை வீசியிருந்தான்… அந்த ஆட்டுக் கூட்டம் மீது..!!

ஒன்று சேர்ந்து ஒழுங்காய் புல் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள், இப்போது மீண்டும் முன்புபோலவே சிதறி எல்லாத்திசைகளிலும் ஓடின. இந்தமுறை அவைகளை சிதறி ஓடச்செய்தது இன்னுமிருவர். திவ்யாவின் அம்மா பத்மாவும், அசோக்கின் அக்கா சித்ராவும். இருவரும் ஓட்டமும், நடையுமாக அந்த மணல்மேட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். பத்மாவின் கையில் ஒரு பிரம்பு. ஆடுகள் கலைந்து ஓடியதற்காக சலித்துக்கொண்ட ஆட்டுக்காரனுக்கு, ‘போடா கிறுக்குப்பயலே..’ என்று அந்த பிரம்பால் ‘சுளீர்…!!’ என ஒரு அடி கிடைத்தது. பார்க்கும்போதே பயங்கர கோவத்துடன் வருகிறாள் என்று தெளிவாக தெரிந்தது. அசோக் பதறிப்போய் திரும்பி கத்தினான்.

“திவ்யா.. திவ்யா..”

“ச்சீய்.. பக்கத்துலதான நிக்கிறேன்.. ஏண்டா கத்துற..?”

“உன் அம்மா வர்றாங்க திவ்யா.. குச்சி வச்சிருக்காங்க.. ஓடிடு..”

திவ்யா அதிர்ந்து போனாள். கையில் பிரம்புடன் கோவமாக வரும் அம்மாவையே திகைப்பாய் பார்த்தாள். சுதாரித்துக்கொண்டு அவள் ஓடுவதற்கு முன்பே அவர்கள் இருவரும் மணல் மேட்டை நெருங்கியிருந்தார்கள். சித்ரா திவ்யாவை நோக்கி கை நீட்டி, பத்மாவிடம் கத்தினாள்.

“இவதான் அத்தை முட்டையை திருடிட்டு ஓடி வந்தா..”

“ஏண்டி.. இவ சொல்றது உண்மையா..? எங்கடி முட்டையை..?” பத்மா தன் மகளை பார்த்து கேட்டாள்.

“கு..குழி தோண்டி.. முட்டையை உடைச்சு ஊத்தி.. மூடிட்டோம்..!! நாங்க.. மு..முட்டை மரம் வளர்க்க போறோம்..” திவ்யா நடுக்கமான குரலில் சொன்னாள்.

“அடக் கூறுகெட்ட பய மவளே.. நானே ஒத்தைக்கோழி என்னைக்கு பத்துக்கோழியா மாறும்னு கனவு கண்டுக்குட்டு கெடக்கேன்.. இப்படி இருந்த முட்டையெல்லாம் உடைச்சு மண்ணுல ஊத்திருக்கியே..? என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு..? ஏய்.. சித்ரா.. புடிடி அந்த திருட்டுக்கழுதையை..”

ஆத்திரத்துடன் அவளுடைய அம்மா கத்த, திவ்யா மிரண்டு போய் ஓட ஆரம்பித்தாள். சித்ரா அவளை வளைத்து பிடித்து கோழிக்குஞ்சு மாதிரி அமுக்கினாள். ‘விடுடி.. முண்டக்கண்ணி.. விடுடி..’ என்று திவ்யா கிடந்து துடிக்க, சித்ராவோ உடும்புத்தனமாய் அவளை பிடித்திருந்தாள். இழுத்து சென்று அவள் அம்மாவிடம் ஒப்படைத்தாள்.

“களவாணிச்சிறுக்கி.. வீட்டுல ஒரு பொருளை நம்பி வைக்க முடியுதா..? அதைத்திருடி இதைத்திருடி.. அடக்கோழி முட்டையையும் திருடிட்டு வந்திருக்குறியே..?”

“எங்க மரம் வளர்ந்ததும் உன் முட்டையை திருப்பி குடுத்துர்றேன்..”

“எதுத்தாடி பேசுற.. எடுபட்ட சிறுக்கி..!! எவ்வளவு கொழுப்பு உனக்கு ..? என்ன பண்ணுறேன் பாரு உன்னை..!! உன் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போடுறனா இல்லையான்னு பாரு..”

பத்மா கையில் வைத்திருந்த பிரம்பால், ‘சுளீர்.. சுளீர்..’ என, திவ்யாவின் கால்களில் இரண்டு இழுப்பு இழுக்க, ‘ஆஆஆ.. !! ஆஆஆ…!!’ என திவ்யா அலறி துடிக்க ஆரம்பித்தாள்.

“வீட்டுக்கு வா.. கரண்டியை காய்ச்சி திருடுற கைல சூடு வைக்கிறேன்.. இனிமே உனக்கு ஜென்மத்துக்கும் திருட்டு நெனைப்பே வரக்கூடாது..”

சொன்ன பத்மா, திவ்யாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து செல்ல ஆரம்பித்தாள். திவ்யா அழுது அரற்றிக்கொண்டும், அவளுடன் வரமாட்டேன் என்று அடம்பிடித்து துள்ளி குதித்துக்கொண்டுமே சென்றாள். அவர்கள் கொஞ்ச தூரம் சென்றதும், அசோக் தன் அக்காவை நெருங்கினான். வெறுப்பாக முறைத்தான்.

“ஏன்டி சொல்லிக்குடுத்த..?”

“ம்ம்ம்.. நான் என்ன பண்ண..? அவ அம்மா ‘நீதான் திருடினியாடி’ன்னு என்னல்ல கேக்குறா..?”

கொஞ்ச நேரம் தன் அக்காவையே முறைத்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் திவ்யாவும் அவள் அம்மாவும் சென்ற திசையில் திடுதிடுவென ஓட ஆரம்பித்தான்.

இழுத்து செல்லப்பட்ட திவ்யா, ஒரு புதர் தடுக்கி கால் இடறி கீழே விழுந்தாள். விழுந்தவளை ‘எந்திரிடி சனியனே..’ என்று அவள் அம்மா ஒரு கையை பிடித்து கொத்தாக மேலே தூக்கினாள். மீண்டும் தரதரவென அவளை இழுத்து செல்ல ஆரம்பித்தாள்.

அவர்களுக்கு பின்னால் ஓடிவந்துகொண்டிருந்த அசோக், திவ்யா கால் இடறி விழுந்த இடத்தை அடைந்ததும், ப்ரேக் அடித்தமாதிரி அப்படியே நின்றான். மெல்ல குனிந்தான். திவ்யாவுடைய ஒற்றைக்கால் கொலுசு அங்கே கழண்டு விழுந்து கிடந்தது. ஒருகையால் அந்த கொலுசை எடுத்தான். ஓரிரு வினாடிகள் அந்த கொலுசையே பாவமாக பார்த்தான். அப்புறம் கைக்குள் வைத்து அந்த கொலுசை இறுகப் பற்றிக்கொண்டு மீண்டும் வேகம் எடுத்து ஓட ஆரம்பித்தான்.

திவ்யாவின் வீட்டை அசோக் அடைந்தபோது, அவளது அழுகுரல் மட்டும் பெரிதாக வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. ‘வேணாம்மா.. வேணாம்மா..’ என்ற திவ்யாவின் பரிதாபமான குரல் அசோக்கின் பிஞ்சு மனதை பிசைந்தது. வீட்டுக்கு முன்பிருந்த திண்ணையில் ஏறினான். உடலை எக்கி மரத்திலான அந்த ஜன்னல் கதவை திறந்தான். மிரட்சியாய் ஒரு பார்வையை உள்ளே வீசினான்.

முதலில் அவன் பார்வையில் சிக்கியது திவ்யாவின் அண்ணன் கார்த்திக்தான். ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். அவனுடைய வாய் அசைபோட்டுக் கொண்டிருந்தது. அவன் கையில்.. சென்ற வாரம் திருவிழாவிற்கு செய்த பணியாரம். வாய் இயங்கிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை மட்டும் அசையாமல் ஓரிடத்தில் நிலைத்திருந்தது.

– தொடரும்

Leave a Comment