கண்ணாமூச்சி ரே ரே – 60 (Tamil Kama Stories - Kannamoochi Rae Rae 60)

Tamil Kama Stories – புயலடித்து ஓய்ந்த பூமியென ஆகிப்போயிருந்தது ஆதிராவின் பூப்போன்ற நெஞ்சம்.. சேதாரத்தின் சுவடுகள் ஏராளமாய் காணப்பட்டாலும், அதையும் தாண்டி ஒரு அமைதியையும் அவளால் உணர முடிந்தது..!! மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் இப்போது மறைந்து மங்கிப்போயிருக்க.. இனி செய்வதற்கென்று இருப்பது ஒன்றே ஒன்றுதான் என்பது தெளிவாக அவளுக்கு தெரிந்தது.. அந்த தெளிவுதான் அவளது மனதில் நிலவிய அந்த மயான அமைதிக்கும் காரணம்..!!

10

இறந்துபோன தங்கையுடன் இறுதியாய் ஒரு விளையாட்டு விளையாடிப் பார்ப்பதைத் தவிர.. தொலைந்துபோன கணவனை உயிருடன் மீட்பதற்கு வேறேதும் வழியிருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை.. வேதனையுடன் தங்கையின் அந்த சவாலை ஏற்றிருந்தாள்..!! என்ன மாதிரியான சவால் என்றெல்லாம் அவளுக்கு புரியவில்லை.. எதுவாயிருந்தாலும் அதை சந்தித்தே தீரவேண்டும் என்று மனதுக்கு மட்டும் வலுவேற்றிக் கொண்டிருந்தாள்..!!

நிலைகுத்திப்போன பார்வையுடன்.. உயிரும் உணர்வுமற்ற ஜடம் போல.. அசைவேதுமின்றி படுக்கையில் அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தாள் ஆதிரா..!! அவளது மூளை மட்டும் இன்னொருபக்கம் சுறுசுறுப்பாய் ஏதேதோ யோசித்துக்கொண்டிருக்க.. ஆவியென அலைந்து திரிகிற தாமிராவின் எண்ணத்தினையும், விருப்பத்தையும்.. அவளால் இப்போது ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது..!!

‘தாமிராவுக்கு என்மீதும், என் கணவர்மீதும் நிச்சயமாக கோபமிருக்கிறது.. அது நியாயமான கோபம்தான் எனலாம்..!! தனது உயிரை பலிகொடுத்துவிட்டு.. இவர்கள் மட்டும் இன்பம் சுகிக்கிறார்களே என்பது மாதிரியான கோபமாக அது இருக்கலாம்..!! எனக்கும் அவருக்கும் திருமணமாகி ஒருமாதம்வரை அமைதியாக இருந்தவள்.. அவருடன் நான் முதலுறவு கண்டு புதுவாழ்க்கை தொடங்கிய அன்றே.. கார் மீது காகத்தை ஏவிவிட்டு அந்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கலாம்..!!’

‘விபத்தை விளைவிப்பது அவளது நோக்கமாக இருந்திருக்காது.. அதேநேரம், விபத்தினால் எனது நினைவுகள் தொலைந்துபோனபோது, என்னுடன் விளையாடிப் பார்க்கலாம் என்றொரு விபரீத எண்ணம் அவளுக்குள் பிறந்திருக்கவேண்டும்..!! என்னுடன் விளையாடுவதுதான் அவளுக்கு மிகவும் பிடிக்குமே..?? என்னை சீண்டி பார்ப்பதில் அவளுக்கு எப்போதும் ஒரு அலாதி ஆனந்தம்தானே..?? சிறுவயதில் இருந்தே அப்படிப்பட்ட ஒரு குறும்புக்காரத் தங்கைதானே என் தங்கை..?? ஆவியான பிறகும் அந்த விளையாட்டு புத்தி அவளைவிட்டு போகவில்லை போலிருக்கிறது..!!’

‘அந்த விளையாட்டு புத்தியால்தான், அகழி வந்த என்னுடன் இத்தனை நாளாய் கண்ணாமூச்சி ஆடியிருக்கிறாள்.. கண்டுபிடி பார்க்கலாம் என்றொரு கபடநாடக புதிர் விளையாட்டு..!! அந்த மெமரி சிப்பை என் கையில் சிக்கவைத்தது.. அந்த ஆட்டோக்ராஃப் புக்கை எனது கவனத்துக்கு கொண்டுவந்தது.. அவ்வப்போது அவள் நினைவுபடுத்திய அந்த ‘கண்ணாமூச்சி ரே ரே’.. மகிழம்பூவின் மயக்கும் வாசனை, மர்மமான கைபேசி அழைப்பு, மாறாத தொலைக்காட்சி அலைவரிசை..!! எல்லாமுமே.. என்னையும், எனது தளர்ந்துபோன மூளையையும் சீண்டிப் பார்க்கிற வகையிலான புதிர் விளையாட்டுக்கள்..!!’

‘குறிஞ்சி பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை எனது கவனத்துக்கு கொண்டுவருவது கூட.. அவளது முக்கிய நோக்கமாக இருந்திருக்காது..!! அவளுக்கும் அவருக்குமான காதலை எனது நினைவுக்கு கொண்டுவருவதுதான்.. அவளது முழுமுதற் நோக்கமாக இருந்திருக்கும்..!! என் மனதை ஒருகணம் தடுமாற வைத்து, அவளது உயிரிழப்பிற்கு நான் காரணமாகிப்போக, அவளுடைய அந்தக் காதல்தானே மூல முகாந்தரம்..??’

‘என்னுடன் இந்தமாதிரி விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்து போயிருக்க வேண்டும்..!! அதனால்தான்.. அவளது எதிர்பார்ப்புக்கு புறம்பாக நான் அகழியில் இருந்து கிளம்ப எத்தனிக்கையில்.. எனது கணவரை அவள் தூக்கி சென்றிருக்கவேண்டும்..!! அதன்மூலமாக அகழியிலேயே என்னை தங்கிப்போக வைப்பதற்கு.. தனது விளையாட்டை இன்னும் என்னுடன் தொடர்வதற்கு வசதியாக..!!’

ஆதிராவுக்கு இப்போது தங்கையின் மீது ஒரு சிறு எரிச்சலும் பிறந்தது.. தன்னை பழிவாங்க சிபியை ஒரு பகடைக்காயாக தாமிரா உபயோகப்படுத்தியதால் பிறந்திருந்த எரிச்சல் அது..!!

‘ஏன் இப்படி செய்தாள்..?? என் மீது கோபம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே.. என் உயிரை கூட பறித்திருக்கலாமே..?? என் கணவரை எதற்காக தூக்கி செல்லவேண்டும்..?? அவர் என்ன பாவம் செய்தார்.. என்மீது இரக்கமுற்று எனக்கொரு புதுவாழ்க்கை அமைத்து தந்ததை தவிர..?? என்னை மணந்த பாவத்திற்காக.. அவரது உடலுக்கோ உயிருக்கோ எந்த சேதாரமும் நேர்ந்துவிடக்கூடாது கடவுளே..!!’

11

கணவனின் நிலையை பற்றி நினைக்க நினைக்க.. ஆதிராவுக்கு கண்களில் கண்ணீர் சுரந்து ஓட ஆரம்பித்தது..!! பிறகு.. மனதுக்குள் ஒரு தீர்க்கமான முடிவெடுத்தவள்.. கன்னத்தில் வழிந்த கண்ணீர் துளிகளை அழுந்த துடைத்துக் கொண்டாள்..!!

‘எது எப்படியோ என் கணவரை இப்போது மீட்டாக வேண்டும்.. அந்த முயற்சியில் எனது உயிரை தொலைத்தாலும்கூட எனக்கு அணுவளவும் கவலையில்லை..!! விளையாடலாம் வாவென்று அழைக்கிறாள்.. என்ன திட்டம் வைத்திருக்கிறாளோ தெரியவில்லை..!! அவளது திட்டம் எதுவாயினும்.. எனது கணவரை அவளுடைய பிடியில் இருந்து விடுவிப்பதில்தான்.. எனது கவனமும் தீவிரமும் முழுமையாக இருந்திடவேண்டும்..!!’

‘நான் நினைப்பது நடக்குமா.. என் கணவரை மீட்க முடியுமா.. ஆவியுடன் போட்டியிட்டு வெல்ல முடியுமா என்னால்..?? ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் எனக்கு சாதகமென இருப்பதாக படுகிறது.. தாமிராவுக்கு என்னதான் என்மீது கோபம் இருந்தாலும், அவள் என்னிடம் வைத்திருந்த அன்பு என்னவோ இன்னும் முழுதாக வற்றிப் போகவில்லை என்றே தோன்றுகிறது..!! தனது சாவுக்கு காரணமாக இருந்திருந்த போதிலும், அக்கா இன்னொரு மிருகத்திடம் சிக்கி சீரழிவதை தாமிரா விரும்பவில்லை.. அந்த மிருகத்திடம் இருந்து என் உயிரையும், மானத்தையும் காப்பாற்றி இருக்கிறாள்..!!’

‘அப்படியானால்.. அவளுக்கு இன்னும் என்மீது அன்பிருக்கிறது என்றுதானே அர்த்தம்..?? என் கணவரை மீட்கிற முயற்சியில் அது பயன்படும்தானே..?? அவள் என் மீது வைத்திருக்கிற அந்த அன்புதான் எனது துருப்புச்சீட்டு..!!’

அப்படி ஒரு எண்ணம் தோன்றியதுமே.. ஆதிராவின் மனதுக்குள் அவளையும் அறியாமல்.. தங்கைமீது ஒரு பெருமிதமும், தன்மீது ஒரு சுயவெறுப்பும் ஊற்றாக உருவாகி.. குபுகுபுவென பொங்கிப் பெருக ஆரம்பித்தது..!!

‘கொல்ல நினைத்த அக்காவை, ஒரு கொடூர மிருகத்திடம் இருந்து காப்பாற்றி இருக்கிறாளே.. அவளைப்போல ஒரு தங்கை இங்கு யாருக்கேனும் கிடைப்பார்களா..?? அன்பே உருவான தங்கையை, அந்தரத்தில் நழுவவிட்டு ஆற்றுக்குள் வீழச்செய்தேனே.. என்னைப்போல ஒரு இழிபிறவி இவ்வுலகில் வேறாரும் இருப்பார்களா..??’

‘சின்னவயதில் இருந்தே சுயநலம் பிடித்த ஒரு அற்பப்பதராய்த்தானே வாழ்ந்து வந்திருக்கிறேன்.. எதுவானாலும் எனக்கே எனக்கென்று பொசுக்கென ஆசைப்பட்டுவிடுவது..!! உள்ளுக்குள் வளர்ந்துவந்த அந்த சுயநலக்கிருமி, ஒருநாள் விஸ்வரூபம் எடுத்து நின்று.. என்மீது அத்தனை பாசமாயிருந்த எனது தங்கையின் உயிரையே குடித்துவிட்டதே.?? என்னால்தானே.. என் சுயநல புத்தியால்தானே..??’

‘தாமிரா மட்டுமல்ல.. என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே என்மீது அன்பை பொழிந்திருக்கிறார்கள்..!! அம்மா, அப்பா, அத்தான், திரவியம் அங்கிள், வனக்கொடி அம்மா.. எல்லோருமே நான் செய்த பாவத்தை மன்னித்து, எனக்கொரு புதுவாழ்வை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்..!! அதுமட்டுமல்லாமல்.. அந்த விபத்தின் பிறகு.. எனது ஞாபகங்கள் தொலைந்துபோனபிறகு.. எல்லாமும் தெரிந்துகொண்டு இத்தனை நாளாய் எல்லோரும் என்னிடம் நாடகமாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.. என் மீதிருக்கிற அன்பினால், நான் மனம் வாடிப் போய்விடக் கூடாது என்பதற்காக, எல்லாவற்றையும் மறந்துவிட்டு இந்த புதுவாழ்வில் நான் மகிழ்ந்திருப்பதற்காக..!! எல்லோரும் என்மீது இத்தனை அன்பாயிருந்திருக்க.. நான் மட்டும் ஏன் இப்படி இருந்திருக்கிறேன்..??’

நினைக்க நினைக்க ஆதிராவுக்கு இதயம் குமுறி கொந்தளித்தது..!! தனது மனக்குமுறலை அன்றே தணிகைநம்பியிடமும், வனக்கொடியிடமும் கொட்டித் தீர்த்தாள்.. மறந்துபோனவை திரும்பவும் ஞாபகம் வந்துவிட்டதை அவர்களிடம் சென்று சொன்னாள்..!! அவர்கள் முதலில் அதிர்ந்துதான் போனார்கள்.. ஆரம்பத்தில் ஏதோ பொய் சொல்லி அவளை சமாளிக்க முயன்றார்கள்.. பிறகு, அத்தகைய பொய்யால் எந்த பலனுமில்லை என்பதை புரிந்துகொண்டு, தடுமாற்றத்துடன் உண்மையை ஒப்புக் கொண்டார்கள்..!!

“ஏன்ப்பா இப்படி பண்ணுனிங்க.. ஏன் இத்தனை நாளா எங்கிட்ட இருந்து உண்மையை மறைச்சுட்டிங்க..??”

ஆதிரா கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு.. தணிகைநம்பி தனது கண்ணாடியை கழற்றி கையில் எடுத்தவாறே நிதானமாக பதில் சொன்னார்..!!

“எல்லாம் உன்னோட நல்லதுக்குத்தான்மா..!! தாமிரா போனதுல இருந்து ஆறுமாசம், ஒருவருஷம்.. நீ என்ன மாதிரி நெலமைல இருந்த, எவ்வளவு கஷ்டப்பட்டன்னு நாங்க கண்கூடா பாத்திருக்குறோம்..!! ஒருவருஷம் கழிச்சு ஓரளவுக்கு நீ பழைய ஆதிராவா மாறியிருந்தப்பதான்.. ஆக்சிடன்ட்ல உனக்கு நடந்ததுலாம் மறந்துபோச்சு..!! அதெல்லாம் திரும்ப உனக்கு ஞாபகப்படுத்தி.. மறுபடியும் ஒரு மோசமான நெலமைக்கு உன்னை தள்ள நாங்க விரும்பலை.. அதான்..!!”

13

“ம்ம்..!!”

“அந்த ஆக்சிடன்ட்ல உனக்கு பழசெல்லாம் மறந்துபோனது.. ஆரம்பத்துல எங்களுக்கு அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு.. அப்புறந்தான்.. அதுவும் ஒருவகைல நல்லதுக்குன்னு தோணுச்சு..!! அதேநேரம்.. அதெல்லாம் உனக்கு திரும்ப ஞாபகத்துக்கு வந்தா.. நீ எந்த மாதிரி நடந்துப்பியோன்ற பயமும் எங்களுக்கு இருந்துச்சு..!!”

” பு..புரியுது..!!”

“உன்னை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற அன்னைக்கு.. மைசூர்ல உனக்கு ட்ரீட்மன்ட் குடுத்த அந்த டாக்டர்ட்ட.. நானும், சிபியும் இதைப்பத்தி பேசினோம்மா..!! ‘இந்த மாதிரி ஒரு விஷயத்தை மறந்துட்டா.. அதை திரும்ப ஞாபகப் படுத்தலாமா?’ன்னு கேட்டோம்.. அவர் வேணாம்னு சொல்லிட்டாரு..!! ‘அது உனக்கு தெரியாம இருக்குறதே நல்லது, திரும்ப ஞாபகம் வந்தா, பழைய மாதிரி ஆகக்கூட சான்ஸ் இருக்கு’ன்னு சொன்னாரு..!! எங்களுக்கும் வேற வழியில்ல.. மறைச்சுட்டோம்..!!”

“ம்ம்..!!”

“எல்லாம் நல்லபடியாத்தான்மா போயிட்டு இருந்துச்சு.. நீங்க அகழி வர்ற வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்ல..!! ஹ்ம்ம்ம்ம்ம்.. ஆரம்பத்துலயே சிபிட்ட நான் சொன்னேன்.. ‘அகழிக்கு போகவேணாம், அது எனக்கு நல்லதா படல’ன்னு..!! அவன் கேக்கல.. ‘அஞ்சுநாள்தான மாமா.. ரொம்ப அடம்புடிக்கிறா.. கூட்டிட்டு போகலன்னா சந்தேகம் வந்துடும்’னு சொல்லி என்னை சமாளிச்சுட்டான்..!!”

பேச்சுவாக்கில் தணிகைநம்பி அவ்வாறு சொல்லிவிட, ஆதிரா இப்போது சற்றே அதிர்ந்துபோய் அப்பாவை ஏறிட்டு பார்த்தாள்.. ‘அப்படியானால், நாங்கள் அகழி வந்தது உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா..?’ என்பது மாதிரியான ஒரு அதிர்ச்சி பார்வை..!! அவளது பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட தணிகைநம்பியோ, அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து பேசினார்..!!

“ஆமாம்மா.. நீங்க இங்க வந்தது அன்னைக்கே எனக்கு தெரியும்.. சிபி சொல்லிட்டான்..!! நீங்க இங்க வந்ததுல இருந்து.. நான், சிபி, திரவியம், வனக்கொடி நாலு பேரும்.. உன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு டெயிலி ஃபோன்ல பேசிப்போம்..!!” தணிகைநம்பி சொல்ல சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதிராவிடம் இப்போது பட்டென ஒரு விரக்தி.

“ஓ..!! எல்லாரும் எல்லாமும் தெரிஞ்சுக்கிட்டேதான் எங்கிட்ட நடிச்சிருக்கிங்க இல்ல..??”

“சேச்சே.. அப்படி இல்லமா.. உன்கிட்ட நடிக்கனும்னு இல்ல..!!”

“எனக்குத்தான் எதுவும் தெரியல..!! நானே என் தங்கச்சியை கொன்னுட்டு.. பைத்தியக்காரி மாதிரி.. யாரை யாரையோ சந்தேகப்பட்டுக்கிட்டு..” ஆதிரா சொல்லும்போதே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, ஆதரவாக அவளது தோளை பற்றினாள் வனக்கொடி.

“இப்படிலாம் பேசாத ஆதிராம்மா..!! நீ செஞ்சது தப்புதான்.. ஆனா.. தப்பு செய்யாத மனுஷங்க இங்க யாரு இருக்கா.. எல்லாருந்தான் தப்பு செய்றோம்..!! நீ வேணும்னே திட்டம் போட்டு எதையும் செய்யல.. ஒருநொடி உனக்கு புத்தி பிசகிப்போய் அப்படி செஞ்சிட்ட.. அது நம்ம தாமிரா உசுருக்கு வெனையா போய்ருச்சு.. அது அவ தலையெழுத்து.. அவ்வளவுதான்..!!”

“ம்ம்..!!”

“நீ செஞ்ச தப்பை நெனச்சு நெனச்சு.. உன் உசுரையும் உடம்பையும் உருக்கிக்கிட்டு, ஒருவருஷம் நீ பட்ட கஷ்டமே போதும்மா.. இனிமேலயும் அது வேணாம்.. இன்னொருமுறை அந்த மாதிரி ஒரு நெலமைல உன்னை பாக்குறதுக்கு.. எங்க யாருக்குமே திராணி இல்லம்மா..!!”

“ம்ம்..!!”

“ஹ்ம்ம்.. நாம நெனச்சது ஒன்னு, நடக்குறது ஒன்னா என்னன்னவோ ஆய்ப்போச்சு.. இனிமேயும் நீ இங்க இருக்குறது நல்லதில்ல ஆதிராம்மா.. அப்பாவோட ஊருக்கு கெளம்பு..!! சிபித்தம்பி எந்தக்குறையும் இல்லாம நம்மட்ட திரும்ப வரும்னு எல்லாருமா நம்புவோம்.. நீ இங்க இருக்கவேணாம்.. கெளம்பு..!!”

“இல்லம்மா.. நான் இங்கதான் இருக்கனும்.. நான் மட்டுந்தான் இருக்கனும்.. அப்பத்தான் அவரை காப்பாத்த முடியும்..!!” ஆதிரா அவ்வாறு தீர்க்கமாக சொல்ல, மற்ற இருவரும் அவளை சற்றே திகைப்பாக பார்த்தனர்.

“எ..என்னம்மா சொல்ற.. எனக்கு புரியல..!!” குழப்பமாய் கேட்டார் தணிகைநம்பி.

“சொல்றேன்ப்பா..!!”

தனக்கு வந்த மர்மமான தொலைபேசி அழைப்பு பற்றியும், அதில் ஒலித்த ‘GGGGGame or SSSSShame..??’ பற்றியும் அவர்களிடம் கூறினாள்.. அதைத்தொடர்ந்து தன் மனதில் எழுந்த திட்டத்தையும், இறுதியாக எடுத்த முடிவையும் விளக்கி சொன்னாள்.. ஆவியாகிப்போன தங்கையுடன் இறுதியாக ஒரு விளையாட்டு விளையாடிப் பார்க்கப்போகிறேன் என்றாள்..!! அவள் சொன்னதை கேட்க கேட்க.. தணிகைநம்பியும், வனக்கொடியும் அப்படியே அவளை மிரண்டு போய் பார்த்தார்கள்..!!

“இ..இல்லம்மா.. இது சரியா வரும்னு எனக்கு தோணல..!! சொல்றதை கேளு.. வா.. நாம இங்க இருந்து கெளம்பிடலாம்..!!”

தணிகைநம்பி மகளின் மனதை மாற்ற முயன்றார்.. ஆனால், ஆதிராவோ அவளது முடிவில் மிக உறுதியாக இருந்தாள்..!!

“நான் வரமாட்டேன்ப்பா.. அவர் இல்லாம இங்க இருந்து நான் கெளம்ப மாட்டேன்..!! நமக்கு வேற வழி இல்ல.. அவர் திரும்ப வேணும்னா இதை நான் செஞ்சுதான் ஆகணும்..!!”

உரம் வாய்ந்த குரலில் திடமாக பேசிய ஆதிரா.. தணிகைநம்பியையும், வனக்கொடியையும் தனது திட்டத்துக்கு சம்மதிக்க வைத்தாள்..!! அவளை எதிர்த்து பேசி சமாளிக்கவும் அவர்களுக்கு வேறு ஏதும் உபாயம் இருக்கவில்லை.. மனதில் ஒருவித கலக்கத்துடனே சம்மதித்து இருந்தார்கள்..!! அவர்களது கலக்கத்தை போக்கும் வகையில் ஆதிராவே அவர்களுக்கு நம்பிக்கையும் ஊட்டினாள்..!!

அடுத்த நாள் மாலை.. அகழியின் வானத்தை அடர்ந்த மேகங்கள் சூழ்ந்திருந்தன..!! எந்தநேரமும் மழை பொத்துக்கொள்ளலாம் என்பதுமாதிரியான ஏகாந்த வானிலை..!! வீசுகிற காற்றிலே ஈரப்பதமும் திசைவேகமும் ஏராளமாய் கூடியிருந்தன.. எதிர்ப்படுகிற மரங்களையும் மனிதர்களையும் சிலுசிலுவென வருடி, எங்கேயோ விரைந்துகொண்டிருந்தது அந்த குளிர்காற்று..!!

தணிகைநம்பி அகழியில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார்..!! கதவை திறந்து காருக்குள் ஏறப்போனவர் ஒரு கணம் நின்று.. கவலை வழிகிற கண்களுடன் மகளை ஒருமுறை ஏறிட்டார்..!!

“எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கும்மா ஆதிரா.. எதுக்கும் இன்னொரு தடவை நல்லா யோசிம்மா..!!”

“இனி யோசிக்கிறதுக்கு எதுவும் இல்லப்பா.. இது ஒன்னுதான் வழி..!! நீங்க எதுவும் கவலைப்படாதீங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. உங்க மாப்ளையோட நான் மைசூருக்கு திரும்ப வரத்தான் போறேன்..!! இப்போ தைரியமா கெளம்புங்க..!!”

“ஹ்ஹ்ம்ம்ம்ம்…!!!!!!”

நீளமாக ஒரு பெருமூச்சை உதிர்த்த தணிகைநம்பி, காரில் ஏறி கதவை சாத்திக்கொண்டார்.. இஞ்சின் ஒரு கனைப்புடன் ஸ்டார்ட் ஆகிக்கொள்ள, வண்டி மெல்ல நகர ஆரம்பித்தது..!! கையசைத்து அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ஆதிரா.. சமையலறைக்குள் இருந்து வெளிப்பட்ட வனக்கொடியிடம்..

“நீங்களும் கெளம்புங்கம்மா..!!” என்றாள்.

“நா..நான் மட்டுமாவது கூட இருக்கேனே ஆதிராம்மா.. ஒத்தைல உன்னை விட்டுட்டு போக எனக்கு ‘திக்கு திக்கு’ன்னு இருக்குது..!!”

“ப்ச்.. புரியாம பேசாதிங்கம்மா.. நான் மட்டும் இருந்தாத்தான் அவ வருவா.. நாம நெனச்சதும் நடக்கும்..!!” Pundai Nakkum Tamil Kama Stories

“பு..புரியுதும்மா.. ஆனா..”

“என்ன ஆனா..??”

– தொடரும்

NEXT PART

1 thought on “கண்ணாமூச்சி ரே ரே – 60 <span class="desi-title">(Tamil Kama Stories - Kannamoochi Rae Rae 60)</span>”

Leave a Comment